வள்ளிநாயகம்.ஏ.பி:

பிறந்த இடம்: ஆறுமுகநேரி, காயல்பட்டினம், தூத்துக்குடி.

படைப்புக்களில் சில:
  • புரட்சியாளர் அம்பேத்கர்
  • பவுத்தம் ஓர் அறிமுகம்
  • மானுடம் நிமிரும் போது
  • மானுடத்தில் அழகானவர்கள் தீண்டத்தகாதவர்கள்
  • அடிமைகளின் தலைவர் அய்யன்காளி
  • சமநீதிப் போராளி இம்மானுவேல் சேகரன்
  • இந்துத்துவ வேரறுக்கும் உயிராயுதமும் முதற்குடிகளும்
  • மகாத்மா புலேவுக்கு முன் மகராசன் வேதமாணிக்கம்

விருதுகள்:

  • பாலம் தலித் முரசு இலக்கிய விருது 2007 - இவர் மறைவுக்குப் பின் வழங்கப்பட்டது.

இவர்பற்றி:

  •  எழுத்தாளர்  ஏ.பி.வள்ளிநாயகம் ஒடுக்கப்பட்டோர் விடுதலையும், பவுத்தமும், பெண்ணியமும், சமூக நீதி விழுமியங்களும் இவரது எழுத்தின் அடிநாதமாக அமைந்தது. தன்னலமற்ற, கொள்கை சமரசமற்ற, சுயமரியாதை வீரராகவும் சமூக மனிதராகவும் வாழ்ந்தவர். தமிழகம் எங்கும் சுற்றுப் பயணம் செய்து 'நாங்கள் இந்துக்கள் அல்லர்'என்ற விழிப்புணர்வுப் பிரச்சாரப் பயணத்தை வெற்றிகரமாக நடத்தியவனார். கடந்த இருபது வருடங்களாக சமூக மாற்றத்திற்கான அவாவுடன் பவுத்தம், அம்பேத்காரியம், பெரியாரியம் ஆகிய கொள்கைகளைத் தன்னுடைய உயிர் மூச்சாகக் கொண்டு, களப்பணியாற்றியதோடு, 25 நூல்களை தலித் இயக்கத்திற்கான கொள்கைப் படைக்கலன்களாக கொண்டு எழுதியிருக்கிறார். இவர் 2007 இல் காலமானார்.


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.