அநுத்தமா:

பெயர்: ராஜேஸ்வரி பத்மநாபன்
பிறந்த இடம்: நெல்லூர், ஆந்திரா
(1922)
தொடர்புகளுக்கு:
முகவரி:
1, முதல்தெரு, லலிதா நகர், பாபநாசம் சிவன் சாலை அருகில் சாந்தோம், சென்னை – 
600 004

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், நாடகம், சிறுவர் இலக்கியம்

படைப்புக்கள்:

  • லக்சுமி
  • கௌரி
  • நைந்த உள்ளம்
  • சுருதி பேதம்
  • முத்துச் சிப்பி 1, 2
  • பூமா
  • ஆல மண்டபம்
  • ஒன்றுபட்டால்
  • தவம்
  • ஒரே ஒரு வார்த்தை
  • வேப்பமரத்து பங்களா
  • கேட்ட வரம்
  • மணல் வீடு
  • ஜயந்திபுரத் திருவிழா – நாவல்
  • துரத்தும் நிழல்கள்
  • சேவைக்கு ஒரு சகோதரி
  • ருசியான கதைகள்
  • அற்புதமான கதைகள்
  • பிரமாதமான கதைகள்
  • படு பேஷான கதைகள்
  • அழகான கதைகள்

விருதுகள்:

  • 'அங்கயற்கண்ணி' என்னும் சிறுகதை – கல்கி சிறுகதைப் போட்டி – 2 ஆவது பரிசு
  • 'மணல்வீடு' என்னும் நாவல் - கலைமகள் நாராயணசாமி ஐயர் விருது – 1949
  • மாற்றாந்தாய் என்னும் சிறுகதை – ஜகன் மோகினி இதழின் சிறந்த சிறுகதைப் போட்டிக்கான தங்கப் பரிசு
  • தமிழ்  அரசின் சிறந்த நாவல் பரிசு
  • தமிழ் வளர்ச்சிக் கழகப் பாராட்டுப் பத்திரம்

இவர் பற்றி:

  • எழுத்தாளர்  அநுத்தமா இதுவரை சுமார் 300 சிறுகதைகள், 22 நாவல்கள், 15 க்கும் மேற்பட்ட வானொலி நாடகங்கள் எழுதியுள்ளார். ஒரே ஒரு வார்த்தை என்னும் இவரது நாவல் மனோதத்துவ ரீதியில் தமிழில் வெளிவந்த முதல் நாவலாக கணிக்கப்படுகிறது. கேட்டவரம் - நாவல், மாற்றாந்தாய் - சிறுகதை என்பன குறிப்பிடத்தக்கன. இவர் பறவை இனங்களைப் பற்றி ஆராய்ந்து சிறுவர் இலக்கியமாக நான்கு புத்தகங்களை எழுதியுள்ளார்.  இவர் ஒரு சிறந்த மொழிபெயர்ப்பாளரும் ஆவார். 



Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors (தமிழ் ஆதர்ஸ்).