|
|
நிழற்படம் இல்லை |
சுப்ரமணியம்.க.நா:
பெயர்: க.நா.சுப்ரமணியம்
பிறந்த இடம்: வலங்கைமான், தஞ்சை மாவட்டம் (1912) |
|
படைப்பாற்றல்:
நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, விமர்சனம்
படைப்புகள்:
நாவல்கள்:
- சர்மாவின் உயில்
- பசி
- வாழ்வும் தாழ்வும்
- சக்தி விலாசம்
- ஏழுபேர்
- ஒருநாள்
- புழுதித்தேர்
- மால்தேடி
- நடுத்தெரு
- கோபுரவாசல்
- பொய்த்தேவு
- அசுரகணம்
- பித்தப்பூ
சிறுகதைத் தொகுப்புகள்:
- மணிக்கூண்டு
- ஆடரங்கு
- கருகாத மொட்டு
விமர்சன நூல்கள்:
- விமர்சனக் கலை
- படித்திருக்கிறீர்களா?
- உலகத்துச் சிறந்த நாவல்கள்
- இலக்கிய விசாரம்
மொழிபெயர்ப்புகள்:
- அன்புவழி - ஸ்வீடிஸ் நாவல்
- தபால்காரன் - பிரெஞ்சு நாவல்
- மதகுரு - ஸ்வீடிஸ் நாவல்
- நிலவளம் - நார்வேஜியன் நாவல்
- மிருகங்கள் பண்ணை – ஆங்கில நாவல்
விருதுகள்:
- தினமணி பத்திரிகையில் வெளிவந்த
கோதை சிரித்தாள் என்ற நாவல் - தமிழக அரசின் விருது
- 1986 ஆம் ஆண்டுக்கான சாகித்திய
அகாதமி விருது
- 1979 - இவரது கவிதைகளுக்கு –
மலையாள இலக்கியப் பரிசான குமாரன் ஆசான் நினைவு விருது
- புதுவைப் பல்கலைக்கழகம் இவரை
சிறப்புப் பேராசிரியராக நியமித்து கௌரவித்தது.
இவர் பற்றி:
- தயவு தாட்சண்யம் இல்லாத
கண்டிப்பான விமர்சனத்துக்கு பெயர்போனவர். அண்ணாமலைப்
பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பட்டதாரி. சூறாவளி, சந்திரோதயம்,
இலக்கிய வட்டம் ஆகிய இதழ்களின் ஆசிரியராக விளங்கியவர். இவரது முதல்
நாவல் பசி. மறைந்த எழுத்தாளர் (16.12.1988).
பல மொழி இலக்கியங்களில் பாண்டித்தியம் பெற்றவர்.
|
|
|
|
|