பொன்னீலன்:

பெயர்: ஸ்ரீகண்டேஸ்வர பக்தவத்ஸலன்
பிறந்த இடம்: குமரிமாவட்டம், நாகர் கோயில்
(1940)
தொடர்புகளுக்கு:
முகவரி:
மணிகட்டிப் பொட்டல் -
629 501
ஈத்தாமொழி வழி,  கன்னியாகுமரி மாவட்டம்

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல்

படைப்புக்கள்:

சிறுகதைத் தொகுதிகள்:

  • ஊற்றில் மலர்ந்தது – 1978
  • புதிய மொட்டுக்கள்
  • தேடல்
  • இடம் மாறிவந்த வேர்கள்
  • திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன
  • உறவுகள்
  • புல்லின் குழந்தைகள்
  • அன்புள்ள
  • நித்யமானது

நாவல்கள்:

  • கரிசல் - 1976
  • புதிய தரிசனங்கள் - இரண்டு பாகங்கள் - 1992
  • கொள்ளைக்காரர்கள்

கட்டுரைத் தொகுப்புக்கள்:

  • புவி எங்கும் சாந்தி நிலவுக
  • தற்காலத் தமிழிலக்கியமும் திராவிட சித்தாந்தங்களும்
  • முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்
  • சுதந்திர தமிழகத்தில் கலை இலக்கிய இயக்கங்கள்
  • சாதி மதங்களைப் பாரோம்
  • தாய்மொழிக் கல்வி
  • தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற வரலாறு

வாழ்க்கை வரலாறுகள்:

  • ஜீவா என்றொரு மானுடன்
  • தவத்திரு குன்றக்குடி அடிகளார் தமிழகத்தின் ஆன்மீக வழிகாட்டி
  • தெற்கிலிருந்து
  • வைகுண்டர் காட்டும் வாழ்க்கை நெறி

விருதுகள்:

  • சாகித்திய அக்காதமி விருது – புதிய தரிசனங்கள் நாவலுக்கு - 1994
  • தமிழக அரசின் பரிசு - உள்ளிட்ட பல கௌரவங்களைப் பெற்றுள்ளார்.

இவர்பற்றி:

  • இளவயது முதல் மார்க்ஸிய சிந்தனை கொண்டவர். இவரது உறவுகள் என்ற சிறுகதை பூட்டாத பூட்டுக்கள் என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்தது. இவர் 7 நாவல்கள், 5 வாழ்க்கை வரலாற்று நூல்கள், ஒரு பயணநூல், இரு கவிதைத் தொகுதிகள், இரு விமர்சன நூல்கள், 4 மொழிபெயர்ப்பு நூல்கள் ஆகியவற்றோடு பல கட்டுரைகளும் எழுதியுள்ளார்.