|
 |
|
ராஜம்கிருஷ்ணன்:
பெயர்: ராஜம் கிருஷ்ணன்
பிறப்பிடம்: முசிறி, திருச்சி, தமிழ்நாடு
(1925) |
|
படைப்பாற்றல்:
சிறுகதை, நாவல்,குறுநாவல், நெடுங்கதை, கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்பு
படைப்புகள்:
- வேருக்கு நீர்தான்
- மண்ணகத்துப் பூந்துளிகள்
- குறிஞ்சித் தேன்
- கரிப்பு மணிகள்
- உயிர் விளையும் நிலங்கள் -
கடைசிப் புத்தகம் (இதில் 25 க்கும் மேற்பட்ட கட்டுரைகள்
இடம்பெறுகின்றன. குடும்பக் கட்டுப்பாடு மற்றும் அதை பெண்கள்
எதிர்நோக்கும் விதம் குறித்தும் இக்கட்டுரைகள் பேசுகின்றன.)
விருதுகள்:
- வேருக்கு நீர்தான் – சாகித்திய
அகாடமி விருது
- நேரு விருது (1973)
- கலைமகள் விருது (1991)
- பாரதிய பாஷா விருது
- கலைமகள் நாராயணசாமி அய்யர்
நினைவுப் பரிசு – நாவல்களுக்காகப் பெற்றவர் - 1953, 1987
- சரஸ்வதி நஞ்சன் கூடு திருமலாம்பா
விருது
- இலக்கியச் சிந்தனைப் பரிசு
- அக்கினி அக்சர விருது
- ஸ்ரீராம் டிரஸ்ட்டின் விருது
- புத்தகப் பதிப்பாளர் சங்கத்தின்
விருது
- திரு. வி.க விருது ஆகிய அனைத்து
விருதுகளும் பெற்றவர்.
- 1050 இல் புகழ்பெற்ற நியூயோர்க்
ஹெரால்ட் டிரிபியூனின் சர்வதேச விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் இவர்
ஒருவர்தான்.
இவர் பற்றி:
- இவர் பிராமண
குடும்பத்தைச் சேர்ந்தவர். தமிழின் மிகச் சிறந்த பெண் எழுத்தாளர்.
இடதுசாரி சிந்தனைகளுடன், மக்களின் யதார்த்த வாழ்க்கையை முற்போக்கான 50க்கும் மேற்பட்ட நாவல்கள், 100 க்கும் அதிகமான சிறுகதைகள்,
கட்டுரைகளைத் தந்தவர். இவருடைய படைப்புக்கள் பள்ளிகளிலும், கல்லூரி,
பல்கலைக்கழகங்களிலும் பாடநூல்களாக சேர்க்கப்பட்டுள்ளன. இவரது கதைகள் ஆங்கிலத்திலும், பல்வேறு இந்திய
மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இன்றும் தன் எழுத்துப் பணியைத்
தொடர்கிறார்.
|
|
 |
|
|