ரமேஷ்-பிரேம்:

பெயர்கள்: ரமேஷ் - பிரேம்

படைப்புக்கள்:

குறுநாவல்கள்:

  • சொல் என்றொரு சொல்
  • ஆபீதனின் இதிகாசம்

கவிதை தொகுப்புகள்:

  • உப்பு
  • பேரழகிகளின் தேசம்
  • கருப்பு வெள்ளைக் கவிதை
  • இருபது கவிதைகளும் இரண்டாயிரம் ஆண்டுகளும்
  • சக்கரவாகக் கோட்டம்

கட்டுரைகள்:

  • பேச்சும் மறுபேச்சும்

நாடகங்கள்:

  • ஆதியிலே மாம்சம் இருந்தது
  • இரண்டு பிரெஞ்சு நாடகங்கள்

இவர் பற்றி:

  • பின்னவீனத்துவ எழுத்தாளர்களில் முக்கியமானவர்கள். ரமேஷ், பிரேம் இருவரும் இணைந்து ரமேஷ் - பிரேம் என்ற பெயரில் இயங்கிவருகின்றனர். இவர்கள் நவீன இரட்டையர் என அறியப்படுகின்றனர். கவிதை, கட்டுரை, குறுநாவல், நாவல, நாடகங்கள் என்று தமிழின் பல்வேறு தளங்களில் பங்களிப்பு செய்கிறார்கள். பின் நவீனத்துவ தத்துவங்கள், விமர்சனக் கோட்பாடுகள், படைப்புகள் ஆகியவற்றைத் தமிழில் அறிமுகம் செய்து, அது குறித்த விவாதங்களை உருவாக்கி, தமிழ் அறிவுலக விமர்சனப் போக்கை ஆக்கபூர்வமானதாக மாற்றியவர்களாகவும் அறியப்படுபவர்கள். இதுவரை 15 நூல்களையும், 4 மொழிபெயர்ப்பு நூல்களையும் வெளியிட்டுள்ளனர். இவர்களுள் ரமேஷ் என்பவர் முழுநேர எழுத்தாளராக பாண்டிச்சேரியில் வசித்து வருகிறார். பிரேம் டெல்லி பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக உள்ளார்.



Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamilauthors (தமிழ் ஆதர்ஸ்).