|
|
சுந்தரம்.எஸ்.டி:
பெயர்: எஸ்.டி. சுந்தரம்
பிறந்த இடம்: ஆத்தூர், சேலம் ஜில்லா. (1921 -
1979) |
|
படைப்பாற்றல்: நாடகம், கவிதை,
பாட்டு
விருதுகள்:
- தேசிய நாடகாசிரியர் விருது –
1973
இவர் பற்றி:
- இவர் தனது 15
வயதில் நவாப் டி.எஸ். இராஜமாணிக்கம் நாடகக் கம்பெனியில் இணைந்தவர்.
இவரது கவியின் கனவு நாடகம் புகழ்பெற்றது. சக்தி நாடக சபையைத்
தொடங்கி நடத்திவந்தார். மாயவலை (கர்ணன் கதை). தாஜ்மஹால்,
மகாபுத்திசாலி, நம்தாய், மனிதனும் மிருகமும், பரமாத்மா,
அணையாவிளக்கு ஆகியன இவரது புகழ்பூத்த நாடகங்களில் சில. இவரது 'வீர
சுதந்திரம்' என்னும் நாடகம் விடுதலை வரலாற்றுப் பெட்டகம். பல
திரைப்படங்களுக்கு கதைவசனம், பாடல்கள் எழுதியுள்ளார். கள்வனின்
காதலி, கப்பலோட்டிய தமிழன், சாரங்கதாரா என்பன இவர் வசனம் எழுதிய
திரைப்படங்கள்.
|
|
|
|