சிவசங்கரன்.தி.க:
(தி.க.சி):

பெயர்: தி.க.சிவசங்கரன்
புனைபெயர்: தி.க.சி
பிறந்த இடம்: திருநெல்வேலி
(1921)
 

படைப்பாற்றல்: கட்டுரை, விமர்சனம்

படைப்புக்கள்:

  • தி.க.சி கட்டுரைகள் - பகுதி 1, 2
  • விமர்சனத் தமிழ்

விருதுகள்:

  • சாகித்திய அகாதெமி விருது – 2000
  • தமிழக அரசின் இலக்கிய விருது - 2002
  • பாரதிய இலக்கிய விருது
  • தமிழ்ச் சான்றோர் பேரவை விருது
  • லில்லி தேவசிகாமணி விருது
  • சிந்து பதிப்பக அறக்கட்டளை விருது

இவர் பற்றி:

  • சிறந்த இலக்கிய விமர்சகர். சிறுவயதிலேயே வல்லிக்கண்ணனுடன் இணைந்து முற்போக்கு இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபட்டவர். ப.ஜீவானந்தத்தால் இலக்கிய வழிகாட்டுதல் பெற்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இலக்கிய இதழான தாமரையில் 1960 – 1964 வரை பணியாற்றினார். 1964 இல் சோவியத் கலாச்சார நிலையத்தில் செய்தித் துறையில் சென்னையில் பணியாற்றி  ஓய்வுபெற்றார். கடுமையான விமர்சனங்களை முன்வைத்து விவாதிப்பவர். ஈழத்தமிழரின் படைப்புக்களை உரிய முறையில் வெளியிட்டு, தமிழின் தீவிரமான வாசக அக்கறைக்கு அவற்றைக் கொண்டு சென்ற பெருமை இவரையே சாரும்.  கைலாசபதி, சிவத்தம்பி, அகஸ்தியர், சாந்தன், டொமினிக் ஜீவா போன்ற பலரையும் தாமரையில் எழுதச் செய்து, இலங்கைத் தமிழ் எழுத்தும் விவாதங்களும் தமிழ்; கலாசார உலகின் மைய நீரோட்டத்தின் பிரிக்க முடியாத அங்கம் என்ற உணர்வைப் பதிய வைத்தவர் இவர். இவரது மகன் வண்ணதாசன் சிறந்த சிறுகதை எழுத்தாளர். இவரைப் பற்றி ஒரு ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த முதுபெரும் இலக்கியப் பேரறிஞருக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனை பாராட்டு விழா நடைபெற்றது. அத்துடன் தி.க.சி ஆவணப்படம் ஒன்றும் வெளியிடப்பட்டது.
     


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors (தமிழ் ஆதர்ஸ்).