நிழற்படம் இல்லை

கிருஷ்ணசாமி.க  (1940):

பெயர்: க.சிருஷ்ணசாமி
புனைபெயர்கள்: திருநம்பி, பாண்டியன், தென்னவன்
 

படைப்பாற்றல்: சிறுகதை, கட்டுரை, நாடகம், கவிதை

படைப்புகள்:

சிறுகதைத் தொகுப்புகள்:

  • உள்ளக் கோயில்
  • இலக்கியத் தேடல்

கட்டுரை நூல்கள்:

  • இளைஞர் ஆற்றல்

விருதுகள்:

  • சங்க நாதம்இ தமிழ்த் தென்றல்இ இளைஞர் திலகம் மற்றும் சில விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
  • மலேசிய இளைஞர் மன்றம் - "Tokoh Belia" விருது
  • தமிழ் நாடு மக்கள் இலக்கியக் கழகம் - 'முத்தமிழ்ச் சுடர்' விருது
  • அரசாங்கம் AMN விருது வழங்கியுள்ளது.

இவர் பற்றி:

  • இவர் 1957 முதல் எழுதி வருகிறார். ஏறக்குறைய 80 சிறுகதைகள், 30 கட்டுரைகள், 100 ஓரங்க, முழுநீள நாடகங்கள், சில கவிதைகள் எழுதியுள்ளார். கம்பீரமான பேச்சாளர். அதற்காக 'சங்க நாதம்' என்னும் அடைமொழியும் பெற்றுள்ளார். இந்திய இளைஞர்களின் பிரதிநிதியாக அரசாங்கக் குழுக்கள் பலவற்றில் அங்கம் வகித்துள்ளார். பல நாடுகளுக்கும் பேராளராகச் சென்று வந்துள்ளார். மாஜு ஜாயா என்னும் இளைஞர் கூட்டுறவுக் கழகத்தைத் தோற்றுவித்தவர்களில்தொருவர். இப்போது சூரியா பதிப்பகத்தை நடத்தி வருகிறார்.