முரசு நெடுமாறன்:

பெயர்:கணேசன்
புனைபெயர்:நெடுமாறன்
பிறந்த இடம்: கேரிதீவு
(14.01.1937)

படைப்பாற்றல்:சிறுவர் பாடல்கள், நாடகம், சிறுகதை, கட்டுரை

படைப்புக்கள்:

  • தமிழும் தமிழரும் - 2007

தொகுப்பு நூல்கள்:

  • மலேசியத் தமிழ்க் கவிதை களஞ்சியம் -  40 ஆண்டுகால முயற்சியின் பயனாக  1887 – 1987 வரையான மலேசியக் கவிதைகளைத் தொகுத்து வெளியிடப்பட்டது.

விருதுகள்:

  • மலேசியத் தமிழ்க் கவிதை களஞ்சியம் - வெ.மாணிக்கவாசகம் புத்தகப் பரிசு (5000 மலேசிய வெள்ளி)
     - 1997
  • பாவேந்தர் பாரதிதாசன் விருது
  • தமிழவேள் விருது – சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம்

இவர் பற்றி:

  • புதுவைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். உலகத்தமிழாராய்ச்சு நிறுவனம் இவரை வருகைதரு பேராசிரியராக 2001 இல் அமர்த்திப் பெருமை செய்தது. மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பேராசிரியராகவும் பணியாற்றியவர். தன் தாத்தா வழியாக முரசு பாடல் பாடுவது, நடிப்பது போன்ற கலைகளைக் கைவரப்பெற்றவர். இவர் ஒரு நாடகக் குழுவையும் நடத்தி வந்தார். தமிழகத்தில் நடந்த பல ஆய்வரங்குகள், கருத்தரங்குகளிலும் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளார்.
     

Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors (தமிழ் ஆதர்ஸ்)