நா. ஆண்டியப்பன்:

வசிப்பிடம்: சிங்கப்பூர்
தொடர்புகளுக்கு:

BLK 723 # 13-149
YISHUN STREET 71
SINGAPORE
760723
தொடர்பு எண்கள் : 67548436 (இல்)
97849105 (கை)
மின்னஞ்சல்:
aavanna19@gmail.com

பெயர் :  நா. ஆண்டியப்பன்

பிறந்த தேதி :
 19 செப்டம்பர் 1947

பிறந்த இடம் :  இராங்கியம், புதுக்கோட்டை
மாவட்டம், தமிழ் நாடு, இந்தியா

பெற்றோர் பெயர் :  அ. நாராயண பிள்ளை – பாப்பாத்தி
அம்மாள் (இருவரும் அமரர்)

உடன் பிறந்தோர் :  ஓர் அக்காள், ஒரு தம்பி (அமரர்)

திருமணம் :
 1968

மனைவி :  மீரா

பிள்ளைகள் : ஒரு மகன், இரு மகள்கள்

படித்த பள்ளிகள் : 

ஸ்ரீ சிவகாமி அம்பாள்
வித்யாசாலை, இராங்கியம்

ஆங்கிலோ-சீனத் தொடக்கப் பள்ளி
தெலுக் ஆன்சன், பேரா, மலேசியா
செயிண்ட் அந்தோணி பள்ளி
தெலுக் ஆன்சன், பேரா, மலேசியா
தியாகராசர் கல்லூரி, மதுரை (புகுமுகு வகுப்பு)
தூய வளனார் கல்லூரி, திருச்சி
(செயிண்ட் ஜோசப் கல்லூரி) (பட்டப் படிப்பு – இளங்கலை அறிவியல்)

கல்வித் தகுதிகள் :

சீனியர் கேம்பிரிட்ஜ் சான்றிதழ், மலேசியா
இளங்கலை அறிவியல்
(B.Sc.),சென்னைப் பல்கலைக்கழகம்

பணிகள் :
 
1972 – 1976 : நிர்வாகி, தனியார் நிறுவனம், சிரம்பான், மலேசியா

1976 – 1983 : மலேசியாவில் வெளிவந்த தமிழ் மலர், தினமணி ஆகிய நாளிதழ்களில் துணையாசிரியர், செய்தி ஆசிரியர், உதவி நிர்வாக ஆசிரியர்

1983 – 2011 :சிங்கப்பூர் ஒலிபரப்புக் கழகம் (Singapore Broadcasting Corporation), சிங்கப்பூர்த் தொலைக்காட்சி நிறுவனம் (Telivision Corporation of Singapore), மீடியாகார்ப் (MediaCorp), ஆகியவற்றில் தமிழ்ச் செய்திப் பிரிவின் ஒலிபரப்புச் செய்தியாளர், மூத்த ஒலிபரப்புச் செய்தியாளர், செய்தி ஆசிரியர், துணைத் தலைவர் ஆகிய பதவிகளை வகித்த பின் 2009ல் ஓய்வு – அதே ஆண்டு மறுநியமனம் – 2011ல் ஓய்வு

செய்தித் துறை, நடப்பு விவகாரங்களில்
35 ஆண்டு அனுபவம்

பொது வாழ்க்கை :

1993 : சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தில் உறுப்பினராகச் சேர்தல்

1995 – 2005 : மதிப்பியல் செயலாளர், சி.த.எ.க.

2005 – இன்றுவரை: தலைவர், சி..த.எ.க.

செயலாளர் பொறுப்பில் இருந்தபோது தொடங்கி தற்போது வரை பல நிகழ்வுகளை நடத்தி எழுத்தாளர் கழகத்தை உன்னத நிலைக்கு உயர்த்தப் பாடுபட்டு வருகிறார்.

முத்தமிழ் விழா :

சிங்கப்பூர் எழுத்தாளர் ஒருவருக்குத் தமிழவேள் விருது வழங்குவதற்காக
1996ஆம் ஆண்டு இவ்விழா இவரால் தொடங்கப்பட்டது. பின்னர் இவ்விழாவை ஒட்டி மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் போட்டிகள் நடத்தப்பட்டன. அவை இன்று வரை தொடர்கின்றன.

தமிழவேள் விருது :

தமிழ் முரசு நிறுவனரும் சிங்கப்பூர்த் தமிழர் தலைவருமான தமிழவேள் கோ. சாரங்கபாணி பெயரில்
1996ஆம் ஆண்டுக்குமுன் மொத்தம் 4 விருதுகள் வழங்கப்பட்டன. அதை முறைப்படுத்தி ஆண்டுக்கு ஒருவருக்கு விருது வழங்குவது என முடிவு செய்து அதற்காக முத்தமிழ் விழாவைத் தொற்றுவித்து, விருதுக்குரியவரைத் தேர்வு செய்ய ஒரு குழுவை அமைத்து ஆண்டுதோறும் முறையாக 4 பவுனில் அவ்விருதை வழங்க ஏற்பாடு செய்தார். தமிழவேள் விருது மிகப் பெரிய மதிப்பையும் எதிர்பார்ப்பையும் எழுத்தாளர்களிடம் ஏற்படுத்தி இருக்கிறது.

கண்ணதாசன் விழா:

பாரதி, பாரதிதாசனுக்குப் பிறகு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் கவியரசு கண்ணதாசன். அவரை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் அவருக்கு விழா எடுக்க ஏற்பாடு செய்தவர். கண்ணதாசன் விழாவை ஒட்டி அவரது திரைப்பாடல்களை இன்றைய இளம் தலைமுறைக்கு அறிமுகப்படுத்த கண்ணதாசன் பாட்டுத திறன் போட்டி இரண்டு பிரிவுகளாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கண்ணதாசன் விருது :

இளம் எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் ஊக்கப்படுத்தும் வகையில்
40 வயதுக்குக் கீழ்ப்பட்டோருக்கு 2 பவுன் தங்கத்தில் இவ்விருதை கவியரசு கண்ணதாசன் விழாவில் வழங்க ஏற்பாடு செய்துள்ளார்

கம்பன் விழா :

கவிச்சக்கரவர்த்தி கம்பனுக்கு
2014ஆம் ஆண்டு முதல் விழா எடுத்து நடத்தி வருகிறார். கம்பன் விழாவை ஒட்டி அந்த மாபெரும் கவிஞரின் பாடல்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் நொக்கில் போட்டியும் நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.

புத்தகப் பரிசு : சிங்கப்பூர் ஆனந்த பவன் உணவகத்தின் உரிமையாளர் திரு. மு.கு. இராமச்சந்திரா மறைந்த பிறகு தமிழுக்காக வாரி வழங்கிய அவர் நினைவாக அந்த உணவகத்தின் ஆதரவுடன்
2,000 வெள்ளி புத்தகப் பரிசு வழங்கும் திட்டத்தைக் கொண்டுவந்து செயற்படுத்தி வருகிறார்.

கவிச் சோலையும் கதைக் களமும் :

மாதாந்திர நிகழ்ச்சியாக நடைபெற்ற கவிச் சோலை நிகழ்ச்சிக்குப் பதிலாக கதைக் களம் எனும் நிகழ்ச்சியை எழுத்தாளர் கழகத்தின் மூலம் நடத்தி வருகிறார். சிறுகதை எழுதுவதற்கு பயிற்சியும் வாய்ப்பும் இந்த நிகழ்ச்சி மூலம் வளரும் எழுத்தாளர்களுக்குக் கிடைக்கிறது.

உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு :


2011
ஆம் ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை முதல் முறையாக நடத்தி பெருமை சேர்த்தவர். மூன்று நாள் மாநாட்டின் சிறப்பையும் நடத்தப்பட்ட நேர்த்தியையும் உலகம் முழுதுமிருந்து மாநாட்டில் கலந்து கொண்ட 300க்கும் மேற்பட்ட பேராளர்கள் பாராட்டினர்

எழுத்தாளர் விழா:

சிங்கப்பூர் அரசாங்கம் ஆண்டுதோறும் ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் ஆகிய நான்கு அதிகாரத்துவ மொழிகளின் எழுத்தாளர்களை உலகம் முழுவதிலும் இருந்து அழைத்து
10 நாட்களுக்கு எழுத்தாளர் விழாவை நடத்துகிறது- அதில் ஆண்டுதோறும் ஒரு நிகழ்ச்சி நடத்த தமிழ் எழுத்தாளர் கழகத்திற்கு வாய்ப்பளிக்கப்படுகிறது.

அதில் 2015ல் முதல் முறையாக நான்கு அதிகாரத்துவ மொழிகளிலும் இலக்கியக் கருத்தரங்கு நடத்தி அனைவரின் வரவேற்பையும் பெற்றார்.

பொன்விழா கருத்தரங்கு & நூல் வெளியீடுகள் :

சிங்கப்பூர் சுதந்திரம் பெற்ற
50 ஆண்டுப் பொன் விழாவை ஒட்டி சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வளர்ச்சியைத் திரும்பிப் பார்க்கும் நோக்கில் ஒரு முழு நாள் ஆயவரங்கத்திற்கு எற்பாடு செய்தார். அந்த ஆயவரங்கத்தின் நிறைவில் இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டன. 50 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பும் 50 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பும் அவை. ஆயவரங்கத்திற்கும் நூல்களுக்கும் அரசாங்கம் மானியம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

அரசாங்க ஆதரவு :

முத்தமிழ் விழா, கம்பன் விழா, சிங்கப்பூர் எழுத்தாளர் விழா ஆகியவை ஆண்டுதோறும் அரசாங்க மானியத்துடன் நடைபெறுவதும் இவரது நிர்வாகத் திறனுக்குக் கிடைத்துள்ள பெருமை.

நூல்கள் :

மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவர் எழுதிய பாஞ்சாலி சபதம் சிறு காப்பியத்தை “பாரதியின் பாஞ்சாலி சபதம்” எனும் தலைப்புடன் நாடக வடிவில் எழுதி
1985ல் வெளியிட்டார்

கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய இராமாயணத்தை நாடக வடிவமாக்கி “வெற்றித் திருமகன்” எனும் தலைப்பில் நூலாக
1993ல் வெளியிட்டார். இந்நூலுக்கு வாரியார் சுவாமிகள் சாற்றுக் கவியும் மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் அணிந்துரையும் வழங்கியுள்ளனர். இது நூலுருப் பெறுதவற்குமுன் மலேசியாவின் தினமணி ஞாயிறு இதழில் 85 வாரங்களுக்குத் தொடராக வெளிவந்தது

தன் வாழ்க்கை வரலாற்றை “திரைகடலோடி” எனும் தலைப்பில் நூலாக 2007ல் வெளியிட்டுள்ளார்.

இந்த மூன்று நூல்களும் தமிழகம், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய மூன்று நாடுகளிலும் சிறப்பான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றன.

நாலாவது நூலாக “மீசை முளைக்காத காதல்” எனும் கவிதைத் தொகுப்பை 2014ல் வெளியிட்டார். சிங்கையிலும் தமிழகத்திலும் இந்நூல் பாராட்டைப் பெற்றது.

எழுத்தாளர் கழகத்திற்காக எட்டு மலர்கள் தயாரித்து வெளியிட்டார்

  • வெள்ளி விழா மலர்

  • 30ஆம் ஆண்டு விழா மலர்

  • கவியரசு கண்ணதாசன் முத்து விழா மலர்

  • உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டு மலர்

  • முனைவர் சுப. திண்ணப்பன் பவள விழா மலர்

  • மு.வ. நூற்றாண்டு விழா மலர்

  • தமிழ் வள்ளல் திரு. நாகை தங்கராசு பவள விழா மலர் (இது கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோவுடன் இணைந்து தயாரித்தது)

  • மகளிர் தின நூற்றாண்டு மலர்


13 எழுத்தாளர்கள் எழுதிய “சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் – ஒரு பார்வை” எனும் நூலின் தொகுப்பாசிரியர்களில் ஒருவர்

“சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்கள்” எனும் நூலைத் தொகுத்து வெளியிட்டார்

சிங்கப்பூரின்
35வது தேசிய நாளை ஒட்டி 2000ஆம் ஆண்டில் அரசாங்க ஏற்பாட்டில் மரினா பேயில் எழுத்தாளர் கழகம் நடத்திய கவியரங்கக் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து நூலாக வெளியிட்டார்

“தமிழ் வளர்த்த சான்றோர்” எனும் தலைப்பில்
40 தமிழ்ச் சான்றோர்களின் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாக மாணவர்களுக்காக எழுதி வெளியிட்டார்.

“சே.வெ. சண்முகம் சிறுகதைகள்” நூலைத் தயாரித்து வெளியிட்டார். கதைகளைத் தெரிவு செய்து கொடுத்தவர் எழுத்தாளர் திரு. பொன். சுந்தரராசு.

தந்தையின் நூற்றாண்டு :

மறைந்த தமது தந்தையின் நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி அதனை முன்னிட்டு அவருடைய இந்திய தேசிய ராணுவ மற்றும் இலக்கியத் தொடர்புகளைத் தொகுத்து அருமையான மலர் ஒன்றையும் வெளியிட்டார். அனைவரின் பாராட்டையும் அது பெற்றது.

பல மாநாடுகளிலும் ஆய்வரங்கங்களிலும் பங்கேற்று தமிழ் மொழி, இலக்கியம் குறித்து ஆய்வுக் கட்டுரைகள் படைத்துள்ளார்.

விருதுகளும் பட்டங்களும் :

  • 1993 : “வெற்றித் திருமகன்” நூல் வெளியீட்டின்போது “இலக்கிய வேந்தன்” எனும் பட்டத்தை சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் வழங்கியது.
     

  • 2012 : “தமிழ்ப் பணிச் செம்மல்” பட்டத்தை தி.மு.க. இலக்கிய அணி வழங்கியது.

    சிங்கப்பூரில் இயங்கும் தமிழ் மொழி பண்பாட்டுக் கழகம் “பாரதி இலக்கிய விருதை” வழங்கியது.
     

  • 2013 : “செந்தமிழ் செம்மல் திலகம்” பட்டத்தை பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் தலைமையில் இயங்கும் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சென்னையில் வழங்கியது.
     

  • சென்னைத் தமிழ் எழுத்தாளர் கழகம் பாராட்டுப் பத்திரம் வழங்கிச் சிறப்பித்தது.
     

  • 2014 : ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை பாராட்டுப் பத்திரம் வழங்கிச் சிறப்பித்தது.
     

  • 2015 2015 ஏப்ரல் மாதம் ஜமால் முகமது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் இவரது தமிழ்ப் பணியைப் பாராட்டி “ஜமாலியன் விருது” வழங்கிச் சிறப்பித்தது.
     

  • 2015 செப்டம்பரில் இவரது தமிழ்ப் பணிக்கு மேலும் சிறப்பளிக்கும் வகையில் அமரர் வாசீக கலாநிதி கி.வா.ஜ. இலக்கிய விருதினை அவரது பெயரில் சென்னையில் இயங்கும் அறக்கட்டளை சிங்கப்பூரில் இவருக்கு வழங்கியது.
     

  • 2015 டிசம்பர் மாதம் புதுச்சேரி விடுதலைப் போராட்ட வீரர் இரத்தினவேலு-வேங்கசேடன் அறக்கட்டளை அயலகத் தமிழ் அறிஞரகளுக்கு வழங்கப்பெறும் பேராசிரியர் க.ப. அறவாணர் தமிழ் விருதினை புதுச்சேரிக்கு வரவழைத்து வழங்கிச் சிறப்பித்தது.
     

  • 2015 டிசம்பரில் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் இவரது தமிழ்த் தொண்டினைப் பாராட்டி “நற்றமிழ்ச் செல்வர் – நயன்மிகு நற்றமிழோன்” எனும் பட்டம் வழங்கியது-
     

  • 2016 பிப்ரவரியில் திருச்சி பன்னாட்டு அரிமா சங்கங்கள் 324A2 மாவட்டத்தின் எழுத்தறிவித்து இறைவனாவோம் அறக்கட்டளை, ஶ்ரீரங்கம் அரிமா சங்கம், தமிழ் இதழியல் இயக்கம் ஆகியவை இணைந்து மிகப் பெரிய பாராட்டு விழாவுடன் “செந்தமிழ் வேந்தர்” எனும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தன.


     


 

Copyright© 2009, Tamilauthors.com. All Rights Reserved.