|
 |
அஸ்மின்:
பெயர்: அஸ்மின் உதுமாலெவ்வை
புனைபெயர்: ஈழநிலா, பொத்துவில் அஸ்மின்
பிறந்த இடம்: பொத்துவில் (அம்பாறை)
தொடர்புகளுக்கு:
முகவரி:
U.L.M.Asmin,
ITN, Vasantham TV,
Wickramasinghepura,
Battaramulla, Srilanka.
தொலைபேசி இல: 1094 771600795
மின்னஞ்சல்:
vtvasmin@gmail.com,kavingerasmin@yahoo.com
|
|
படைப்பாற்றல்:
கவிதை, பாடலியற்றல், சிறுகதை, பத்தி எழுத்து
படைப்புக்கள்:
கவிதைத் தொகுப்புகள்:
- விடைதேடும் வினாக்கள் -
2001
- விடியலின் ராகங்கள் -
2002
விருதுகள்:
- ஜனாதிபதி விருது - 2001
- பேராதனை பல்கலைகழகத்தின்
தங்கப்பதக்கம் - 2003
- சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய
விருது - 2010
இவர் பற்றி:
- கவிஞர் அஸ்மின் ஈழத்தில் மரபுக்
கவிதை எழுதி வரும் இளம் கவிஞர்களுள் முக்கிய கவிஞராகவும், பாடலாசிரியராகவும்,
தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் அறியப்பட்டு வருகிறார்.
இவரது கவிதை, சிறுகதை, பத்தி எழுத்துக்கள், நேர்காணல்கள்,
இலங்கையின் தேசிய பத்திரிகைகள் மற்றும் புதிய 'ழ', காற்று வெளி
போன்ற சர்வதேச தமிழ் சஞ்சிகைகளிலும்,இணைய சஞ்சிகைகளிலும், தமிழக
இதழ்களிலும் ஈழநிலா,பொத்துவில் அஸ்மின் உதுமாலெவ்வை, பொத்துவிலூர்
அஸ்மின், கவிஞர்அஸ்மின் எனும் பெயர்களில் பிரசுரம் பெற்றுள்ளன.
கவிஞர் ஜீவகவி தொகுத்த 'முகவரி தொலைந்த முகங்கள்' கவிதை நூலிலும்
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக தமிழ்சங்கத்தின் 'அடையாளம்' கவிதை
நூலிலும் இவரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இவர் 'தேடல்' எனும் கலை,
இலக்கிய மாசிகையின பிரதம ஆசிரியராகவும் 'சுடர் ஒளி' வாரவெளியீட்டின்
உதவி ஆசிரியராகவும் இருந்திருக்கின்றார். இவர் எழுதிய 'ஈழநிலாவின்
உணர்வுகள்' பத்தி எழுத்துக்கள் பாகம் ஒன்றும் 'ரத்தம் இல்லாத
யுத்தம்' கவிதை நூலும் மிக விரைவில் வெளிவர இருக்கின்றன.
இலங்கையிலிருந்து ஒளிபரப்பாகும் சர்வதேச தமிழ் தொலைக்காட்சியான டான் TV
யின் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், டான்தமிழ் ஒலி வானொலியில்
செய்திவாசிப்பாளராகவும் சிறிது காலம் பணிபுரிந்த இவர் தற்பொழுது
இலங்கை வசந்தம் TVயின் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும்,
தொகுப்பாளராகவும் கடமைபுரிந்து வருகின்றார். இலங்கையின்
சக்திTVயினால் நடாத்தப்பட்ட'இசை இளவரசர்கள்'போட்டி நிகழ்ச்சியில்
பல்லாயிரக்கணக்கான போட்டியாளர்களுக்குள் தேர்வான 16
பாடலாசிரியர்களுள் இவரும் ஒருவர்.
|
|
 |

|