மருதூர்க் கொத்தன்:

பெயர்: வி.எம். இஸ்மாயில்
புனைபெயர்கள்: மருதூர்க் கொத்தன், அபூ ஹபீனா. நுpதானன்
பிறந்த இடம்: கலாவௌ, அனுராதபுரம்
(06.06.1935)

படைப்பாற்றல்: சிறுகதை, நாடகம், கவிதை, கட்டுரை

படைப்புக்கள்:

  • காவியத் தலைவன் - 1976
  • மருதூர்க் கொத்தன் கதைகள் - சிறுகதைத் தொகுப்பு – 1986
  • இலக்கிய நயப்புக் கட்டுரைகள்

விருதுகள்:

  • இலக்கிய வேந்தர் - முஸ்லிம் விவகார ராஜாங்க அமைச்சு – 1993
  • கலாபூஷணம் - பௌத்த சாசன சமய விவகார அமைச்சு – 1996
  • வாழ்வோரை வாழ்த்துவோம் விருது – 1993
  • ஆளுநர் விருது – வடக்கு கிழக்கு கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சு - 1999

இவர் பற்றி:

  •  இவர் கல்முனை பிரதேச முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவராகவும், கல்முனை தமிழ் எழுத்தாளர் சங்க செயலாளராகவும், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க உறுப்பினராகவும் பணியாற்றியவர். தினகரன், வீரகேசரி, ஈழநாடு, நவமணி, தாமரை, மல்லிகை, அஞ்சலி, கற்பகம், காலரதம், புதுமை இலக்கியம், களம் ஆகிய பத்திரிகைகளிலும் இதழ்களிலும் மலர் வெளியீடுகளிலும் இவரது கதை, கவிதை, நாடகம், நாட்டாரியல் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. இலங்கை முற்போக்கு சங்கத்தில் மார்க்சியத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் பலர் இருந்தனர். வ.அ.இராசரத்தினம், அ.ச.அப்துல்ஸமது, மருதூர் கொத்தன் போன்றவர்கள் அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
     

Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.