கவிஞர் அறிவுமதியின் படைப்புலகத்தில் நட்பு

பேரா. செ.யசோதா
 

முன்னுரை

னித வாழ்வில் விலைமதிக்க இயலாதது நட்பு. உடலுக்கும் உறுதுணையாகி இன்ப துன்பங்களிலே கூட்டுறவு கொள்ளும் மனப்பான்மை நட்பு ஆகும். இவ்வுலகில் பிறந்த எல்லா உயிர்களும் அன்பு என்னும் நிலையில் பின்னிபிணைக்கப்பட்டுள்ளார்கள். சாதி மத வேறுபாடு இன்றி அனைவரும் தோழமையுடன் இருப்பது நமது நாட்டின் வளர்ச்சி நிலையைக் காட்டுகிறது.

நட்பு

ஓரறிவுடைய உயிரினங்களில் இருந்து ஆறறிவுடைய மனிதன் வரை பல கோடிக்கணக்கான உயிரினங்கள் வாழ்கின்றன. இதில் தனியாக வாழும் உயிரினங்களும் கூட்டமாக வாழும் உயிரினங்களும் வாழ்கின்றன. மனிதன் கூட்டமாக வாழும் உயிரினத்தின் ஒரு இனமாக இருக்கிறான். மனிதன் தன் திறமையை மட்டும் நம்பி வாழ முடியாது ' பிறர் உதவி கொண்டே வாழ முடியும்'

எந்த ஒரு தனிமனிதனுக்கும் தனக்குப் பயன்படும் பொருட்கள் அனைத்தையும் தானே உருவாக்க முடியாது. பலரும் பல நாட்டவரும் பங்கிட்டு கொண்டு தான் வாழ வேண்டும் ஆகையால் உடல் நலமும் மனவளமும் மனித வாழ்வுக்கு மிகவும் முக்கியம் என்பது போல நட்பும் மிக அவசியமானதாகும். பிறரது உணர்வுகளை மதிக்காமல் இருப்பது அவரவர்களுக்குத் துன்ப உணர்வுகளை உண்டாக்கும.; எனவே நட்பு நலம் பாதுகாக்கப்பட பிறரது தேவைகளையும் உணர்வுகளையும் மதித்துப் பழக வேண்டும்.

இயற்கை சமுதாயம் மனிதன் என்ற மூன்றின் இணைப்புத் தான் வாழ்க்கை ஆகையால் அந்த மூன்றிணைப்பில் இணக்கம் இருந்தால் தான் நட்பு நலம் இருக்கும்.

இன்முகம் இனியசொல்

நாம் பழகுகின்ற ஒவ்வொருவரோடும் நட்பு காத்து வாழுகின்ற பண்பை நமது இயல்பாக கொண்டு வளர்க்க வேண்டும். அதற்காகவே யாரைப் பார்த்தாலும் மனமார வாழ்த்தி முகத்திலே ஓர் இனிமை இருக்க வேண்டும் இன்முகமாய் இ;ருப்பதோடு நாம் பிறரிடம் பேசும் பேச்சும் இனிய பேச்சுகளாக அமைவது முக்கியம் என்பதனை

'இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று'


என்ற குறளைக் சிந்தித்து இனிய சொற்களையே பேசி நட்புப் பழக வேண்டும்.

இலக்கியத்தில் நட்பு

தமிழ் இலக்கியங்களில் நட்பின் பெருமை பறைச்சாற்றும் வகையில் புலவர்கள் பாடியுள்ளார்கள். நம் முன்னோர்கள் சங்ககாலம் முதல் நட்பிற்கு தனிஇடம் கொடுத்து வாழ்ந்து வருகின்றனா.; புறநானூற்றில் பாரியின் மீது கொண்ட நட்பை கபிலர் தன் பாடலில்

'வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ்சுவல்
கார்ப் பெயர் வலித்த பெரும் பாட்டு ஈரத்துப்'


என்னும் பாடலில் நட்பின் இலக்கணத்தை கபிலர் சுட்டிக்காட்டியுள்ளார்

மேலும் நட்பிற்கு அதியமானையும் ஒளவையும் கூறலாம் ஏனெனில் தமிழுக்காக தன் நட்பை உயர்த்திக் கொண்டவர்கள.; அதே போல நட்பு என்றதும் பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழன் என்னும் நண்பர்கள் நினைவுக்கு வருவார்கள். கோப்பெருஞ்சோழன் இறந்தச் செய்திக் கேட்ட பிசிராந்தையார் வடக்கிருந்து உயிர் நீத்தார். நட்புக்காக தன் உயிர் துறந்தவர் என்பது நட்பின் பெருமையை பறைசாற்றுகிறது.

இதனை

'புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்'


நட்புச் செய்வதற்குத் தொடர்பும் பழக்கமும் வேண்டியதில்லை. ஓத்த உணர்ச்சியே நட்பு ஏற்படுத்துவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும் என்பது திருவள்ளுவரின் கூற்று.

பள்ளிப்பருவ நட்பு


தோள்களில் கைப்போட்டு ஒன்றாக சுற்றி திரிந்து பள்ளிப் பாடங்களை விளையாட்டாக கற்றுக் கொண்டோம். கடலை மிட்டாயின் சுவையை காக்கா கடி கடித்துக்கொண்டு எவ்வித கவலையுமின்றி பழகிய நாட்கள் குழந்தைப் பருவ பூஞ்சோலைகள். பள்ளியில் படிக்கும் நாட்களில் மற்றவரோடு சண்டைப்போட்டு நான்கு நாள் பேசாமல் இருந்துவிட்டு மீண்டும் ஐந்தாவது நாள் எதுவுமே நடக்காதது போல் பழகும் நட்பு வாழ்க்கையின் சொர்க்கம் என தனது கவிதையில் அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார்.

சுன்னல் இல்லாத விடுதி அறையும் அட்டவணைப்போட்ட சமையலையும் அதையும் ஒரே தட்டில் பகிர்ந்து ஒன்றாக சாப்பிட்ட அந்த நட்பு கல்லூரி முடிந்து வீட்டிற்கு சென்று அம்மாவின் கையில் சாப்பிடும் உணவுக்கு சமம் என்று நட்பின் ஆழத்தை கூறுகிறார்.

'உயிர் வாழ தேவை
உணவு
உடை
இருப்பிடம் மட்டும் அல்ல
உன்னை போன்ற
நல்ல நண்பனும் தான்'

அறிவுமதியின் நட்புக்காலம்

காதல் என்பது கடல்போன்றது. ஆனால் கடலே சிறுதுளியாக மாறிவிடும் நட்புக் கொண்டால் என்பதை தனது நட்புக்காலத்தில் கூறுகிறார்.

'துளியே கடல்
என்கிறது
காமம்
கடலும் துளி
என்கிறது
நட்பு'

என தனது உள்ள உணர்வை கூறுகிறார்.

உன் வாழ்வில் வெற்றி பெற வேண்டுமானால் நட்புக்கொள் வெற்றி உன்னைக் கொள்ளும்.நண்பனை மட்டும் நேசிக்காதே உன் எதிரியையும் நேசி நண்பன் நீ வெற்றி பெற உன்னோடு கைக்கோர்ந்து துணைநிற்பான். உன் எதிரி அந்த வெற்றிக்கு காரணமாக இருப்பான். எதிரியம் உன் நண்பன்தான். ஆகவே உன்னைச் சுற்றி இருப்பவர்கள் எல்லாரும் உன்னநண்பர்கள் தான் என்பதை எப்பொழுதும் உன்மனதில் வைத்துக்கொள் என்கிறார்.

இதனை

'நண்பனையும் நேசி
எதிரியையும் நேசி
நண்பன் வெற்றிக்கு
துணையாக இருப்பான்.....
எதிரி வெற்றிக்கு
காரணமாக இருப்பான்'......


உறக்கத்திலிருந்து எழுந்துவிட்டால் கனவுகள் கலைந்துவிடும். அன்பு குறைந்தால் காதல் கரைந்துவிடும். பாசம் குறைந்தால் பண்பு குன்றிவிடும் ஆனால் நட்புமட்டும் எந்த காரணச் சூழ்நிலையிலும் கடைசிஉயிர் மூச்சு உள்ளவரை நட்பு என்பது தொடரும் என்று அனுபவங்களை கூறியுள்ளார்.

நண்பன் என்பவன் இறைவனால் கொடுக்கப்பட்;ட உறவு. தனக்கு பிடித்ததை நண்பனிடம் கொடுத்துவிட்டு நண்பனுக்கு பிடித்ததை தான் எடுத்துக் கொண்டு வாழ்க்கை முழுவதும் ஒன்றாக இருந்து விட்டுக்கொடுத்து வாழும் வாழ்க்கை தேவலோகத்தில் இருக்கும் தேவர்களின் வாழ்க்கைக்கு ஒப்பாக கூறியுள்ளார்.

'காரணம் இல்லாமல்
களைந்து போக இது
கனவும் இல்லை
காரணம் சொல்லி பிரிந்து
போக இது காதலும் இல்லை
உயிர் உள்ளவரை தொடரும்
உண்மையான நட்பு'


கடற்கரைகரையில் முகம் தெரியாத இரவுகளில் நம்மைப் பார்க்கும் அனைவரும் பொறாமைப்படும் வண்ணம் நமது நட்பு கடல் அலைப் போல தொடரும் என உள்ளத்தில் எற்படும் உணர்வுகளை நம்மிடையே பகிர்ந்துக் கொள்கிறார்.

நட்புக் கொள்ளுதல் ஒருவரோடு ஒருவர் கேர்ந்து சிரித்து மகிழ்ந்து ஊரைச் சுற்றிக் கொண்டு காலத்தை கழிப்பதல்ல. தனது நண்பன் நெறி கடந்து போகும் போது அவனை நல்வழிப்படுத்த செய்பவனே உண்மையான நண்பன். நண்பன் என்பவன் எந்த இரத்தசொந்தமின்றி சாதி மதம் இல்லாத இனவேறுபாடு இல்லாமல் அன்பினால் மட்டுமே பிணைக்கப்பட்டு உயிர் போல் இறுதி நாட்கள் வரை ஒன்றாக இருப்பது நட்பாகும்.

முடிவுரை:


குடும்பத்தில் சமுதாயத்தில் நாட்டில் உலகில் எல்லா மக்களிடையே நட்பு நலம் காக்க வேண்டியது மனித இனவாழ்வுக்கு மிகவும் அவசியமான ஒன்று என்பதை

'எல்லோரும் இன்புற்றிருக்க
நினைப்பதுவே யல்லாமல்
வேறொன் றறியேன் பாரபரமே'

என்ற தாயுமானவரின் சத்தியம் நம்மில் என்றென்றும் தழைதோங்கட்டு.

 

பேரா. செ.யசோதா
சிறப்பு விரிவுரையாளர்
பெரியார் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும்
அறிவியல் கல்லூரி
எடப்பாடி.


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்