உலக அகரங்களின் பிறப்பு

கனி விமலநாதன் B.Sc


ழுத்துக்களின் பிறப்பு: 13.6 பில்லியன் ஆண்டு முன்னர், பிக்பாங்கில் இருந்து, புள்ளியின் புள்ளிப் பருமனில் இருந்து எங்களின் புடவி (பிரபஞ்சம்) தோன்றுகிறது. தோன்றிய கணத்தில் இருந்தே புடைத்துக் கொண்டே சென்ற  புடவியுள் மெதுமெதுவாக எல்லாம் தோன்றத் தொடங்கின. அந்த வகையில் 4.6 பில்லியன் ஆண்டு முன்னர் எங்களின் ஞாயிறு (சூரியன்) எங்களின் புவி போன்ற தனது கோள்களுடன் தோன்றுகிறது. 

இவ்வண்ணமாகத் தோன்றிய புவியில் 3.7 பில்லியன் ஆண்டு முன்னர், நுண்ணுயிர்கள் தோன்றுகின்றன. இந்த  நுண்ணுயிரிகளில் இருந்து கால ஓட்டத்தில் நீரில் உயிரினங்கள் தோன்றிப் பின்னராக உலகின் பல்வகை உயிரினங்களும் உயிரியற் கூர்ப்பின் வழியில் தோன்றிப் புவியினை நிரப்பிக் கொள்கின்றன. பொதுவாகவே, சூழலில் இருந்து சக்தியைப் பெற்றுத் தன்னைத் தக்க வைத்துக் கொள்வதுடன் தன்னினத்தையும் பெருக்கும் வல்லமை கொண்டும் இருப்பதையே உயிரினமொன்றின் அடையாள இயல்பாகக் கூறுவர். அதனால் சூழலில் இருந்து சக்தியைப் பெறுதல் என்பது உயிரினங்களிடையே பெரும் போட்டியாக இருந்து விட, தக்கது தங்கும் என்ற கூர்ப்பின் அடிப்படையுடன், வல்லது வாழும் என்ற நிலையும் வர, கால ஓட்டத்தில் பல உயிரினங்கள் மறைந்தும் போயின.

இப்படியான புவியின் உயிரின வரலாற்றில் புவியில் ஏற்பட்ட காலநிலை மாற்றங்களும் முக்கிய பங்கு கொண்டிருந்தன. அந்த வகையில்தான் ஒருகாலத்தில் புவியினை ஆக்கிரமித்திருந்த டைனோசர்கள் போன்ற பாரிய விலங்கினங்கள் உட்படப் புவியின் 90 வீதமான உயிரினங்கள் 63 மில்லியன் ஆண்டு முன்னர் அழிந்து போக, எஞ்சிய உயிரினங்களில் இருந்து அடுத்த தலைமுறை உயிரினங்கள் கூர்ப்படைந்து மீண்டும் உயிரினங்கள் புவியை நிரப்பிக் கொள்ளத் தொடங்கின. அந்த வகையில் 35, 40 மெய்யிரம் ஆண்டு முன்னர் வாழ்ந்த பழைய உலகக் குரங்குகள் என்ற உயிரினத்தில் இருந்து மனிதக் குரங்குகள், சிம்பன்சிகள், கொரில்லாக்கள் என்பவற்றுடன் மனிதர்களின் இனக்குடும்பத்தின் ஆரம்பமான 'கோமினிட்' (hominids)  களும் தோன்றுகின்றன. இவற்றைப் பொதுவிலே 'கோமினோய்டை' ((hominoidea)  என்பர்.

அருகில் மனிதக் கூர்ப்பின் எளிமையான படம்.

கோமினிட்டுகளின் தொடர்ந்த கூர்ப்புப் பாதையில் ஆஸ்ரலோபிதிக்கஸ் என்கிற 4அடி உயரமான உயிரினம் தோன்றுகிறது. அதிலிருந்து 6 அடி உயரமான, நிமிர்ந்த கோமோ இரெக்சஸ் என்கிற ஆதிமனிதர் 1.8 மெய்யிரம் ஆண்டு முன்னர் தோன்றுகின்றனர். இந்த ஆதிமனிதரில் இருந்து தோன்றிய பல மனித இனங்களுள் ஒன்றாகக் கிட்டத்தட்ட 200,000 ஆண்டு முன்னர் புத்திசாலி மனிதர் என்று கூறப்படுகிற கோமோ சேப்பியன்களாகிய நாங்கள் தோன்றுகிறோம். கோமோ சேப்பியன்கள் என்கிற எம்மின முன்னவர்களில் 70,000 ஆண்டு முன்னர் அறிவாற்றல் மிக்கவராக மாறிவிட, மனிதரின் தொடர்பாடல் வலு அதிகரித்துப் போட்டியான மற்ற மனிதவினங்களை அழித்து விடுகின்றனர்.

புவியை ஆளத் தொடங்கிய மனிதர், தொடர்பாடல்களுக்காத் தம்மிடையே மெதுமெதுவாகக் கட்டமைப்பான மொழிகளைத் தோற்றுவித்தனர். இப்படிப் பிறந்த மொழிகளின் ஊடான தொடர்பாடல் முறையின் அடுத்த கட்டமாகப் பொருட்கள், செய்கைகள், நடத்தைகள் என்பவற்றைப் படங்களை வரைந்து தங்கள் கருத்துக்களைத் தங்களுக்கும் அடுத்த அடுத்த தலைமுறைகளுக்ககும் தூர இடங்களுக்கும் கடத்திக் கொள்ள ஆரம்பிக்கிறார்கள். அதாவது மொழியின் தொடர்பாடல் வழியானது சித்திர எழுத்துகளாக வெளிப்படத் தெடங்குகின்றது. இப்படியாக மொழி ஒன்றிற்;கான எழுத்துருவம் ஒன்று பிறக்கின்றது. 

தங்களது தொடர்பாடற் சொற்களில் சில ஒரே மாதிரியான ஒலிகளை எழுப்புவதைப் பார்க்கிறார்கள். காட்டாக, அம்மா, அப்பா, அழகு, அடுப்பு, அம்பு போன்ற சொற்கள' '' என்ற சத்தத்துடன் ஆரம்பிப்பதைக் கூறலாம். அதனால் தங்களின், சொற்களைப் படமாக்கும்; விடயத்தை இலகுவாக்குவதற்காக, இப்படி ஒரே மாதிரியான ஒலிகளுக்குத் தனியான சிறப்பான குறியீடுகளை வரைந்து சித்திர எழுத்துக்களைச் செழிமைப் படுத்துகிறார்கள். இதன் தொடர்ச்சியாக எல்லா ஒலிகளுக்குமான தனித்தனிக் குறியீடுகள் வந்து ஈற்றில் சித்திர எழுத்துகள் இல்லாமலே போகின்றன. இனி, இந்தக் குறியீட்டு எழுத்துகள், எழுதப்படுகையில் எழுதுபவரின் எமுதுகிற வேகம், எழுதுகிற, எழுதப்படுகிற பொருளின் தன்மை என்பவற்றிற்கு ஏற்பச் சில எழுத்துகள் அசைவுகளைப் பெறக் கூடியனவாக இருந்தன. அதனால் அவற்றினை அசை எழுத்துகள் என்றும் கூறுபவர்கள் உண்டு. கால ஓட்டத்தில் இவ்வெழுத்துகள் எழுதப்படுகையில் அசைவுகள் பெற்றுப் புதுப்புது வடிவங்கள் பெற்றுவிட்டன. அவைதான் இன்றுள்ள எழுத்துக்களாக மிளிர்கின்றன. இப்படியாகத்தான் இன்றுள்ள எழுத்துகள் எல்லாம் பிறந்தன என இந்நாட்களின் அறிஞர்கள் பொதுவாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இதன் அடிப்படையிலேயே உலக அகரங்களின் பிறப்பினைச் சில வரலாற்று நிகழ்வுகளினூடாகப் பார்ப்போம்.

 

உலக அகரங்களின் பிறப்பு

 

சென்ற தடவையில் சுமேரியர்கள் பற்றிப் பார்த்தோம் அல்லவா. ஆதன் தொடர்ச்சியாகவே உலக அகரங்களின் பிறப்பும் அமைகின்றது. 4000 ஆண்டு காலத்திற்கும் மேலாக சுமேரியர்கள் பல்வகைச் செழிப்போடும் இருந்ததினால், அவர்களது சித்திர எழுத்துகளும் அவை எழுதப்பட்ட களிமண் தகடுகளும் அப்பகுதி மக்களிடையே மெதுமெதுவாகச் சென்றடைகின்றது. இவர்கள் சுமேரியர்களுடனும் கலப்புற்று, அக்காடியர், பாபிலோனியர், அசீரியர், மேவியர், எபிரேயர், கானானியர் எனப் பல இன மக்களாகித் தமக்குத் தமக்கென ஒவ்வொரு இலக்கணச் செழிப்பான மொழிகளை உருவாக்குகின்றார்கள். இவர்களைப் பொதுவில் செமிரிக் மக்கள் (Semitic People) என்பர். பிந்நாளில் இவர்களுடன் அரேபியர், பினீசியர், எத்தியோப்பியர் என்போரையும் இந்த மொழிக் குடும்பத்துள் சேர்த்துக் கொண்டார்கள். அப்படியாக வந்த ஒரு மொழிகளில் ஒன்றுதான் இயேசுக் கிறித்து பேசிய, அசீரியர்களின் 'அரமைக்' (Armaic) என்பது. கி.மு. 2300களின் பின்னர், காலத்திற்குக் காலம் அப்பகுதியில் வௌவேறு இனத்தவர் எழுச்சியுற்று மாறி மாறி பேரரசுகளை அமைக்கத் தொடங்கினர். இவர்கள் எல்லாம் வலிமை பெற்றதற்கு முக்கிய காரணம் ஒழுங்கான, சித்திர எழுத்துருக் கொண்ட மொழிகள் அவர்களிடையே இருந்ததுதான். 

சுமேரியரின் காலத்திலேயே நைல் நதியை அண்டிய எகிப்தும் நாகரிக உயர்ச்சி பெறுகின்றது. இங்கும் எகிப்திய மக்களிடையே வந்து சேர்ந்த மக்களினாலேயே இவ்வெழுச்சி எற்பட்டது என்கிறார்கள். எகிப்தியரின் நாகரீக வளர்ச்சியிற்கும் அவர்களின் மொழியின் சிறப்பான தொடர்பாடல்தான் முக்கிய காரணமாக அமைகிறது. எகிப்தியர்களும் பட எழுத்துகளையே தங்களின் தொடர்பாடல்களுக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கையில், கி.மு.20ம் நூற்றாண்டளவில் பீனீசியர் என்றொரு சிறு குழுவினர் எகிப்தியரிடையே வந்து சேர்கிறார்கள்.

பினீசியரின் வருகையால் எகிப்தியரின் பட எழுத்துக்களிற் சில, குறியீட்டு வடிவம் பெறுகின்றன. குறியீட்டு வடிவ எழுத்து முறை அறிவுடன்தான் பினீசியர்கள் எகிப்துள் வந்தனரோ தெரியவில்லை, ஆனால் எகிப்தில் உள்ள பினீசியரின் எழுத்துக்கள் எனக் கூறப்படும் எழுத்துகளில் சித்திர எழுத்துக்களும் குறியீட்டு எழுத்துக்களும் கலந்து இருந்தன. Proto - Sinaitic எனக் கூறிப்படும் இதனைத்தான் உலகின் அகர எழுத்துகளின் பிறப்பு எனக் கூறி, இந்த அகர எழுத்துகளைத் தந்தவர்கள் பினீசியர் எனக் கூறும் ஆய்வாளர்கள் உள்ளனர். இந்த சித்திரகுறியீட்டு எழுத்து முறை அப்பகுதி மக்கள் எல்லாரிடமும் செல்வாக்குப் பெறுகிறது. அவர்களும் இந்த எழுத்து முறைத் தங்களது மொழிகளுக்கும் பாவிக்கத் தொடங்கினர். அதனால்; செமிரிக் மக்கள்தான் அகர எழுத்துக்களை முதன் முதலில் உலகிற்கு அறிமுகப்படுத்தினார்கள் எனப் பொதுப்படையாகக் கூறுகின்றனர்.

இப்படியாக இருக்கையில் மெசப்பத்தேமியப் பகுதிகளில் அசீரியர்கள் கி.மு.2000களில் வலிமை பெற்றுப் பேரரசு அமைக்கிறார்கள். இவர்களும் தங்களது களிமண் தகடுகளில், சித்திர எழுத்துகளிற் குறியீடுகளைப் பாவிக்கத் தொடங்குகின்றார்கள். கி.மு. 1500 களில் அசீரியர்கள் சற்றே வலிமை குன்றினாலும் மீண்டும் கி.மு. 800களில் ஆதிக்கம் பெறுகின்றார்கள். இக்காலத்தில் அவர்கள் சுமேரியர்களினதும், எகிப்தியரினதும் மொழிகளின் எழுத்தமைப்புகளுக்கு ஒப்பாகத் தங்களது 'அரமைக்' மொழியிற்கு, சித்திர எழுத்துக்கள் இல்லாத, புதிய, ஆங்கிலத்தில் உள்ள எழஎநட எழுத்துகள் இல்லாத, 22 எழுத்துகளைக் கொண்ட, முழுமையான அகர வடிவினைக் கொண்டு வருகின்றார்கள். இதுதான் உலகின் முதலாவது முழுமை பெற்ற அகர வரிசை எனப்படுகிறது.   

 

அகர எழுத்து வடிவப் பரம்பல்

 

அரமைக் அகர எழுத்துக்களின் வலிமை அப்பகுதியில் இருந்த மக்களிடையே பரவ அகர வரிசை எழுத்து வடிவம் அப்பகுதியில் இருந்த எல்லா மொழிகளிலும்; பரவத் தொடங்கியது. கிரேக்கர்களும் அரமைக்கை அடியொட்டித் தங்களுக்கான அகரத்தை அமைத்துக் கொண்டார்கள். ஆத்துடன் தங்களுக்குத் தேவையான எழஎநட களையும் கி.மு. 6ம் நூற்றாண்டளவில் இணைத்துக் கொண்டார்கள். இதேவேளை, ஏற்கனவே இலக்கணச் செழிப்பு நிறைந்த பினீசியரின் அகர வரிசையும் அரமைக்கின் செல்வாக்கால் முழுமை பெற்ற போதிலும் சிறு குழுவான பினீசியர்கள் வலிமையிழந்து எகிப்தில் இருந்தும் வெளியேறி, இத்தாலியின் ஒரு சிறிய இடத்துள் ஒடுங்கினர். அங்கே அவர்கள் தங்கள் மொழியின் இலக்கண வடிவினை vovel I இணைத்து இலத்தீன் வடிவிற்கு மெருகேற்றுகிறார்கள். இந்நிலையில் கிரேக்கர்களுடன் போட்டி போட்டுக் கொண்டிருந்த உரோமர் இலத்தீனின் இலக்கணச் செழிமையினைக் கண்டு அதனைத் தம்மொழிக்குள் சேர்க்கின்றார்கள். உரோமர்களின் இலத்தீனில் இருந்து ஐரோப்பிய மொழிகளுக்கான அகர வரிசைகள் ஒவ்வொன்றாகப் பிறந்தன என்ற வரலாறு அமைகிறது. ஆக, கி.மு. 8ம், அல்லது 6ம் நூற்றாண்டுகளிலேயே உலகின் முழுமையான அகர எழுத்துக்கள் தோன்றின என்கிறார்கள்.

உலக அகரத்தின் பிறப்பு மெசப்பத்தேமியப் பகுதியில்தான் தோன்றியது என்றாலும் அது பற்றி இரண்டு கருத்துகள் உள்ளன. அகரங்களின் ஆரம்பத்திற்கான காரணர்கள் அசீரியர் என்பர் சிலர். வேறுசிலரோ பினீசியர்கள் என்பர். இதிலே ஆச்சரியமான ஒரு விடயம் என்னவெனில், இருவகைக் கருத்துகளிலும் எபிரேயரையும் இணைத்து அரமைக் - எபிரேய எழுத்துகள், பினீசியர் எபிரேயர் எழுத்துகள் எனக் கூறுகின்றனர். 

இவ்வேளையில் சிந்து நதிப் பகுதியிலும் சிறப்பான நாகரீகம் ஒன்று கி.மு. 7000 ஆண்டு முன்னர் தோன்றி வளமாக இருந்திருக்கிறது. இவர்களும் தமது தொடர்பாடலுக்குச் சித்திர எழுத்துகளையே பாவித்து வந்திருக்கிறார்கள். ஆச்சரியப்படும் விதமாக, எகிப்து, சுமேரியா, சிந்து ஆகிய மக்களிடையே தொடர்பும் இருந்திருக்கின்றது. கி.மு. 500களில் இருந்து, பாரசீக, கிரேக்கப் படையெடுப்புகளும் ஆக்கிரமிப்புகளும் இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளிற் பெரிய அளவில் இருந்திருக்கின்றன. இக்காரணங்களினால் அரமைக், கிரேக்கம் ஆகியவற்றின் செல்வாக்கு, வட இந்தியாவையும் விடவில்லை. இதன் வெளிப்பாக, அந்நாளில் பிராகிருதம், கரோஸ்தி, கிரேக்கம், அரமைக் என்பவை இந்தியாவின் வடக்கில் வழக்கில் இருந்தன.

கி.மு. 3ம் நூற்றாண்டில் மௌரிய அரசனான அசோகன் தனது பகுதியில் வழக்கில் இருந்த பிராகிருத மொழியிற்கு பிராமி வரி வடிவத்தைக் கொடுக்கிறார். அதில் அரமைக்கில் இருந்து பிராகிருதத்திற்குப் பிராமி எழுத்துகளை அசோகன் பிறப்பித்தார். இதற்குச் சான்றாக, அரமைக்கின் 'அனன்' (அல்லது அனஸ்) என்ற எழுத்தே பிராமி எழுத்தின் '' என வடிவு பெறுவதை கே. பி. றே என்ற மொழி வல்லுனர் எடுத்துக் காட்டுகிறார். பின்னர் இந்த அசோகனின் பிராமியில் இருந்தே தமிழ் உட்பட, இந்திய மொழிகள் எல்லாவற்றிக்குமான அகரங்கள் பிறந்தன எனவும் கூறுப்படுகிறது.

இவை இப்படியிருக்க, அரமைக்கின் அகர எழுத்துகளின் பிறப்பில் இன்னொரு இரகசியமும் மறைவாக உள்ளது. அசீரியர்களின் பகுதியை புதைபொருள் ஆய்வாளர்கள் ஆய்வு செய்த வேளையில் சுமேரியர்களின் களிமண் தகடுகளில் 240 க்கும் அதிகமான எழுத்துகளை இனம் கண்டார்கள். ஆனால் கி.மு.2000 - 1800 ஆண்டு பழமையானவை எனக் காலங் கணிக்கப்பட்ட அக்களிமண்தகடுகளில் இருந்த அவ்வெழுத்துகள் உண்மையில் 12 எழுத்துக்களும், 18 எழுத்துக்களும் கொண்ட இரண்டு தொகுதிகளுக்குள் அடங்குவதை ஆய்வாளர்கள் பின்னர் கண்டு கொண்டார்கள். இவ்வெழுத்துகளே அரமைக் எழுத்துகளின் பிறப்பிற்கு அடிப்படையாக இருந்திருககுமோ என எண்ணிய ஆய்வாளர்கள் அவ்வெழுத்தமைப்பினை அவர்களுக்குத் தெரிந்த உலகின் மொழிக் குடும்பங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தார்கள். ஒன்றுடனும் அவை பொருந்தி வாரததால், அது பற்றிக் கரிசனை எடுப்பதை நிறுத்திக் கொண்டார்கள்.

அருகில் எழுத்தும் முறையின் பரவலைக் குறிக்கிற படம் காட்டப்பட்டுள்ளது.

2018ம் ஆண்டின் முதற்பகுதிகளில் கூகிளில் உலகின் முதல் அகர எழுத்துக்கள் என்ற தலைப்பில் தேடிய வேளையில் தோன்றிய இதனை வாசித்த வேளையில் நான் அடைந்த வியப்பிற்கு அளவில்லை. எனக்கு முதலில் மூளையிற் பொறி தட்டியது தொல்காப்பியத்தின் 1ம், 8ம் 9ம் நூற்பாக்கள்தான். அதைவிட அவ்வெழுத்துக்களை ஆய்ந்தவர்கள் தமிழையோ அல்லது தொல்காப்பியத்தையோ தெரிந்திருக்கவில்லை என்பது அந்நேரத்தில் மனவருத்தத்தைத் தந்தது. அவ்வல்லுனர்கள் இந்திய மொழிகளுக்கான மூலம் சமஸ்கிருதம் என எண்ணியதாலோ என்னவோ, சமஸ்கிருதத்துடன் மட்டும் ஒப்பிட்டுப் பார்த்துவிட்டு, அப்படியே விட்டுவிட்டார்களோ என எண்ணத் தோன்றியது. அதே தலைப்பில் இப்போது கூகிளில் தேடிய வேளையில் அவ்வளவு தரவுகளும் இல்லாது போய், நான் இப்போது கூறியபடியான பொதுமைத் தனத்தில் எழுதியிருந்தார்கள். ஆழமான தேடலில் அரமைக்கின் விடயத்தினை நீங்கள் அறிந்து கொள்ளக் கூடியதாக இருப்பினும் சுமேரியர்களின் களிமண் தகடுகள் பற்றிய விபரங்கள் முற்றாகவே இல்லாதிருந்தன. ஆனாலும் உலகின் எங்கோயோ ஒரு மூலையில் இருந்து என்றோ ஒருநாள் அக்களிமண்தகடுகள் வெளிப்படும் என்ற நம்பிக்கை மனதின் ஒரு மூலையில் இருந்து கொண்டே இருக்கிறது.

இவ்வளவு தெரிதல்களுடன் எங்கள் மட்டில் ஒரு அலசலைப் பார்ப்போம். சுமேரியரின் அந்தப் 12, 18 எழுத்துத் தொகுதிகள் தொல்காப்பியர் கூறிய எங்களின் உயிரெழுத்துகளும் மெய்யெழுத்துகளும்தான். இவைகளில் இருந்துதான் அரமைக்கின் அடிப்படை எழுத்துகள் பிறந்திருக்க வேண்டும். எப்படி எனப் பாருங்கள். அரமைக்கிற்கோ மற்ற மொழிகளுக்கோ எழுத்தில் மாத்திரைகள் இல்லை. எனவே, அங்கு அனாவும் ஆவன்னாவும் ஒன்றுதான். இப்படியாக , ஒள தவிர்ந்த 10 எழுத்துகளும் 5 ஆக அடங்கிவிடும் ''யும் 'ஒள'வும் இணைஉயிர் உயிரெழுத்துகளாதலால் அவையும் இல்லாது போயின. ஆக, எங்களின் உயிரெழுத்துகளில் இருந்து 5 எழுத்துகள் அரமைக்கிற்குத் தேறியிருக்கும். இனி மெய்யெழுத்துகள் பக்கம் பார்த்தால் அங்கே எல்லா மொழிகளுக்கும் சிக்கல் தந்த, தருகிற ''கரம் இல்லாது போக மொத்தம் 17 ஆக வருகின்றது. இப்போது அரமைக் அகரத்திலோ அல்லது அதனில் இருந்து வந்த மற்ற மொழிகளின் அகர எழுத்துகளுக்கோ இருக்கக் கூடிய மொத்த எழுத்துகள் உயிர் ஐந்தினதும் மெய் பதினேழினதும் சேர்க்கை 22 என் ஆகிறது அல்லவா. ஆரமைக்கிலோ அல்லது அது தொடர்பான மற்ற மொழிகளின் எழுத்துகளிலோ அப்பொழுது  ஏழறநடள இருக்கவில்லை. எழறநடள இல்லாத அந்த 22 எழுத்துத் தொகுதியை அப்யட் (யுடிதயன) எழுத்துகள் எனக் கூறுவர்.

சரி, எங்களின் உயிரெழுத்துகளும் மெய்யெழுத்துகளும் எப்படி சுமேரியாவிற்குள் போயிருக்கும் என்ற கேள்விக்குப் பதில் காண்போம். சித்திர எழுத்துக்களைப் படைத்த குமரிக் கண்டம் கடல்கோளால் நீருள் மூழ்கிறது. தப்பியவர்கள் காலத்திற்குக் காலம் எஞ்சிய குமரிக்கண்ட இடங்களில் இருந்து இடம்பெயர்கிறார்கள். அப்படியாக இடம்பெயர்ந்த இடங்கள்தான் சிந்துவெளி, ஈஸ்ரர்தீவு, எகிப்து, சுமேரியா, இன்னமும் மாயன் பிரதேசங்கள் போன்ற இடங்கள். அப்படியாகச்  சென்றவர்கள் தங்களுடன் சித்திர எழுத்துக்களைக் கொண்டு செல்கின்றனர். இடம்பெயர்ந்த காலவேறுபாடுகள், அவர்கள் சென்ற இடங்களின் செல்வாக்குகள் என்பன அச்சித்திர எழுத்துகளில் சிற்சில வேறுபாடுகளை உண்டாக்கியிருக்கலாம். ஆனாலும் உயிர், மெய் எழுத்துக்களுடன்தான் செல்கிறார்கள். அவைதான் அசீரியப் பகுதிகளில் இருந்த சுமேரியரின் இனம் காண முடியாத 12ம், 18ம் ஆன எழுத்துத் தொகுதிகள்.

இனி, அடுத்த கட்டமாக நடந்த நகர்வினைப் பார்ப்போம். சில காலத்தின் பின்னராக எகிப்துக்குள் இன்னொரு சிறிய குழுவினராகப் பினீசியர்கள் வந்து சேர்கிறார்கள். இவர்கள்தான் சில குறியீடுகளை எகிப்தியரின் சித்திர எழுத்துகளுக்குள் புகுத்தியவர்கள். அபடியாயின் எழுத்துக்கள் பற்றிய அறிவு அவர்களிடமும் இருந்திருக்கிறது. அதுவுமல்லாமல், அக்குறியீட்டு எழுத்துகள் சித்திர எழுத்துக்களுடன் இணைக்கக் கூடியதாகவும் இருக்கின்றது. எனவே, எகிப்திக்கு முன்னவர்கள் எங்கிருந்து வந்தார்களோ, அந்த இடத்தில் இருந்துதான் பினீசியர்களும்;, வந்திருக்க வேண்டும், சில சித்திர எழுத்துகள் குறியீட்டு எழுத்துகளாக வளர்ச்சியுற்றதன் பின்னராக. அதனால் அவர்களை லெபனானிய ஆதிக்குடிகளாகக் கருதுவது பொருத்தமாக இருக்காது. எனவே எகிப்துக்குள் முற்காலத்தில் வந்த பினீசியர் எனக் கூறப்படுபவர்களும் முதலாம் கடல்கோளில் இருந்து தப்பிய குமரிக்கண்ட மக்கள்தான் எனக் கூறலாம்.

இவற்றை எல்லாம் தொகுத்துப் பார்க்கையில், இன்று உலக வழக்கில் இருக்கும் மொழிகளின் அகர வரிசையின் மூலம் என்பதைத் தமிழ்; எனக் கூறலாம், கூற வேண்டும்.

புரிதற் தொடர்புகளுக்கும் உற்சாகப்படுத்தல்களுக்கும் தமிழ்ஆதேர்ஸ்டொட்கொம் உடனோ அல்லது என்னுடனோ (647 782 2827) தொடர்பு கொள்ளுங்கள்.

நன்றி,

அன்புடன்,

கனி விமலநாதன்.

 




 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்