சுவாமி விபுலானந்தரின் வரலாறு துல்லியமாக வெளிக்கொண்டு வரப்பட வேண்டும்.


ஏ.பீர் முகம்மது (இலங்கை)
 

(சுவாமி விபுலானந்தரின் 128 வது பிறந்த தினத்தை (27.03.2020) முன்னிட்டு இக்கட்டுரை எழுதப்படுகின்றது.)





தமிழுலகப் பெரியார்கள் வரிசையிலே சுவாமி விபுலாந்தர் முக்கியமானவர். இலங்கைப் பல்கலைக் கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராக மேலெழுந்து நின்றவர். கிழக்கு மாகாணப் பண்பாட்டின் குறியீடாக இனங்காணப்பட்டவர். ஆழ்ந்த புலமையும் விஞ்ஞான அணுகுமுறையும் கொண்டவர். தனது மதத்திலும் சமூகத்திலும் பற்றுக் கொணடிருந்த அதேநேரம் பிற மதங்களையும. சமூகத்தவர்களையும் சமமாக மதித்தவர். அவரது வாழ்வியல் துல்லியமாக இதுவரை வெளிக்கொண்டு வரப்படவில்லை என்பது கவலையான விடயமாகும். இது தொடர்பிலேயே இக்கட்டுரை பேசுகின்றது.

சோற்றுப் பதமாக விபுலாநந்தருக்கு எத்தனை மொழிகள் தெரியும் என்ற விடயத்தைக் கையிலெடுக்கலாம்.

விபுலாநந்தர் பன்மொழி ஆற்றல் கொண்டவர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் எத்தனை மொழிகளை அவர் அறிந்திருந்தார் ?
 
தீர்க்கமான கருத்து இதுவரையும் இல்லை. ஆளுக்கொரு தகவல் தரும் நிலையே காணப்படுகின்றது.

இலங்கை அரசு இரண்டாம் பதிப்பாக
2007 ம் ஆண்டு வெளியிட்ட 'தமிழ் மொழியும் இலக்கியமும்' என்ற ஆறாம் தரத்துப் பாடநூலில் விபுலாநந்தர் தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகிய மொழிகளில் புலமையும் இலத்தீன், மலையாளம், சிங்களம் ஆகிய மொழிகளில் அறிவும் பெற்றிருந்தார் எனக் குறிப்பி;ட்டுள்ளது.

விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச் சபைத் தலைவராக இருந்த க.தியாகராஜா அவர்கள் எழுதிய கட்டுரைகளில் அடிகளார் தமிழ், ஆங்கிலம், வடமொழி, இலத்தீன், கிரேக்கம், யவனம், அறபு ஆகிய மொழிகளை நன்கு கற்றவர் என்று குறிப்பிட்டுள்ளார். இங்கு ஏழு மொழிகள் கொண்ட வேறொரு தொகுதிபற்றிப் பேசப்படுகின்றது.

பேராசிரியர் சி.மௌனகுரு அவர்கள் 'விபுலாநந்த அடிகளாhரின் சமூக, கலை, இலக்கிய நோக்கு' என்ற நூலில் தமிழ்,ஆங்கிலம் இவடமொழி, இலத்தீன், கிரேக்கம் இவங்காளம், பாளி, சிங்களம் அரபு ஆகிய ஒன்பது மொழிகள்பற்றி எழுதியுள்ளார்.

அருள் செல்வநாயகம் விபுலாநந்தர் தொடர்பிலான பல அரிய நூல்களை வெளியிட்டவர். விபுலாந்தரின் மாணவன். அவர் 'விபுலாநந்த ஆராய்வு' என்ற நூலில் அடிகளின் பன்மொழி அறிவு தொடர்பில் தமிழ் இஆங்கிலம்இவடமொழிஇஇலத்தீன்இயவனம்இவங்காளம்இசிங்களம்இபாளிஇஅறபு மொழிகளில் திறமை பெற்றிருந்தார் எனப் பதிவு செய்துள்ளார்.


மேலுள்ள விடயங்களைத் தொகுத்து நோக்கும்போது விபுலாநந்தர் அறிந்த மொழிகளின் தொடையில் பதினொரு மூலகங்கள் இருப்பது தெரிய வரும்.


இங்கு இரண்டு விடயங்கள் வெளிச்சத்துக்கு வருகின்றன.


ஒன்று விபுலாநந்த அடிகள் தமிழ்இஆங்கிலம்இவடமொழிஇஇலத்தீன்இகிரேக்கம்இ யவனம்இவங்காளம்இபாளிஇமலையாளம் இசிங்களம்இஅறபு ஆகிய பதினொரு மொழிகளைத் தெரிந்திருந்தார் என்பது.


இரண்டாவது விபுலாநந்தர் அறிந்திருந்த மொழிகள் தொடர்பில் எவரும் ஒருமித்த கருத்துநிலையில் இல்லை என்பது விபுலாநந்தர் தெரிந்திருந்த பதினொரு மொழிகளில் வாசிக்க மட்டும் தெரிந்த மொழிகள்இபேசமட்டும் தெரிந்த மொழிகள்இஎழுதவும் பேசவும் தெரிந்த மொழிகள்இ கிரகிக்கக் கூடிய மொழிகள் என்றவாறாக வகைப்படுத்தப்படல் வேண்டும். இச்செயற்பாடு காலத்தின் தேவையாகும்.


மொழிகள் பற்றிய கருத்து வேறுபாடுகள் போலவே இன்னும் பல விடயங்களிலும் தெளிவின்மை உண்டு.


விபுலாநந்தரின் பிறந்த திகதி தொடர்பில் 27.03.1892 எனவும் 03.05.1892 எனவும் பிரிந்து நிற்கின்றனர். மறைவுத் திகதி 19.07.1947 அல்ல 20.07.1947 என திருத்தம் சொல்கின்றனர். அடிகளார் படிவமலர் என்ற நூலில் அதன் தொகுப்பாசிரியரால் விபுலாந்தர் நள்ளிரவு 01.15க்கு மரணித்ததாகவே பக்கம் 159 இல் குறிப்பிட்டுள்ளார். எனின் நள்ளிரவு என்பது அடுத்தநாள் திகதியாகும் என்பது திருத்தம் சொல்வோரின் வாதமாகும்.

 
குழந்தை பிறந்ததும் தம்பிப்பிள்ளை என்ற பெயர் சூட்டப்பட்டது என்ற தகவல் அடிகளார் படிவமலர் பக்கம்-103 இல் காணப்படுகின்றது ஆனால் விபுலாநந்த ஆராய்வு என்றநூல் (பக் 06) மயில்வாகனன் எனப் பெயர் சூட்டப்பட்டதாகவே குறிப்பிடுகின்றது. தம்பிப்பிள்ளை என்ற பெயர் பெரும்பாலும் தவிர்க்கப்பட்டு மயில்வாகனன் என்ற பெயரே விபுலாநந்தரின் ஆரம்பக் குழந்தைப் பருவப் பெயர் என்று உச்சரிக்கப்படுகின்றது.


யாழ்நூல் அரங்கேற்றம் இந்தியாவில் திருக்கொளம்புதூரில் 20.06.1947 இல் இடம் பெற்றதாக பண்டிதர் வீ.சி.கந்தையா தனது 'மட்டக்களப்புத் தமிழகம்' என்ற நூலில் குறிப்பிடும் அதேநேரம் அடிகளார் படிவமலர் என்ற தொகுப்பு நூலில் பத்திரிகைத் துறையில் புகழ் பெற்றிருந்த எஸ்.டி.சிவநாயகம் எழுதிய 'அடிகளார் தோற்றமும் யாழ் அரங்கேற்றமும்' என்ற கட்டுரையில் அரங்கேற்றம் 05.06.1947 இல் நடைபெற்றதாகவே குறிப்பட்டுள்ளார்.


விபுலாநந்தர் இலங்கையில் கலந்து கொண்ட இறுதிப் பொது நிகழ்வுபற்றியும் வேறுபாடான தகவல்கள் உண்டு வ.சிவசுப்ரமணியம் எழுதிய 'விபுலாநந்த தரிசனம்' என்ற நூலில் திருகோணமலையில் 28.12.1946 நடைபெற்ற தம்pழ் விழாதான் இலங்கையில்; விபுலாநந்தர் கலந்து கொண்ட இறுதிப் பொதுநிகழ்வு எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் 1947 இல் மட்டக்களப்பு திறந்த வெளியரங்கில் நடைபெற்ற மீலாத் விழாவே இலங்iயில் அவர் கலந்து கொண்ட இறுதியான பொதுநிகழ்ச்சி என உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் உள்ளன. ஏ.பீர் முகம்மது எழுதிய ( இக்கட்டுரையாளர்.) 'விபுலாநந்த அடிகளும் முஸ்லிம்களும்' என்ற நூலில் 'இலங்கையில் இறுதியாகக் கலந்து கொண்ட பொது நிகழ்வு' என்ற தலைப்பில் கூடுதலான தகவல்;களுடன் ஒரு அத்தியாயமே உள்ளது.


சுவாமி விபுலாநந்தர் நினைவுவிழா சிறப்பு மலர் விபுலம் 2003 இன் முதலாம் பக்கத்தில் வெள்ளைநிற மல்லிகையோ என்ற விபுலாநந்தரின் மிகப் பிரபலம் பெற்ற பாடலின் தலைப்பு ஈசன் உவக்கும் மலர்கள் என்றே உள்ளது. ஆனால் ஈசன் உவக்கும் இன்மலர் மூன்று என்றே பலராலும் எழுதப்பட்டு வருகிறது.

 சுவாமியின் தலைப்பை மாற்றியவர் யார்?


இவ்வாறு பல கோணங்களில் கேள்விகளும் தெளிவற்ற பதில்களும்; உள்ளன.


வெறுமனே அரசுமுறைப் பாடநூல்களின் சில பக்கங்களிலும் பல்கலைக்கழக விரிவுரை வகுப்புகளின் ஓரத்திலும் விபுலாநந்தரைத் தேட முற்படாமல் அவரை முழுமையாக வெளிக் கொண்டுவரும் பொறிமுறையைக் கண்டறிய தமிழ்ப் பரிபாலனம் செய்யும் பல்கலைக் கழகத்தார் முழுமூச்சுடன் முன்வருதல் வேண்டும். அவரின் வாழ்வுமுறையும் வரலாறும் துல்லியமாக வெளிக் கொணரப் பட்டு எழுத்தாக்கப்பட வேண்டும். அதுவே உத்தியோகபூர்வ ஆவணம் என்று பிரகடனப்படுத்த வேண்டும். அதனை எல்லோரும் ஏற்கத்தக்க முறையில் வெளியீடு செய்து பகிர்தலும் வேண்டும். அதன் தொடர்ச்சியாக விபுலாநந்த அடிகள் இலங்கையின் தேசிய வீரராக அங்கீகாரம் பெறும்வகையில் பிரேரணைகள் முன்வைக்கப்படுதலும் வேண்டும். இதுவே விபுலாநந்தர் தொடர்பில் இன்றைய தேவையாகும்.



apeermohamed@gmail.com

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்