சுப்ரபாரதிமணியன் நாவலில் குழந்தைத் தொழிலாளர்களின் பிரச்சினைகள்
மு.சசிகலா முனைவர்பட்ட ஆய்வாளர்
மானிட வரலாற்றின் தொடக்க காலத்தில் தாய்வழிச் சமுதாய அமைப்பில் பெண்
முதன்மை இடத்தில் இருந்தாள். ரிக் வேத காலத்திலும் பெண்களின் நிலை
ஆணுக்கு இணையானதாகவே இருந்திருக்கிறது. இவை சமூக வரலாறுகள்
சுட்டிக்காட்டும் உண்மைகளாகும். பெண் தொழிலாளர்களின் வாழ்வியலை
முன்னிலைப் படுத்தி இவ்வாய்வு அமைகிறது. இந்தியச் சமுதாயம் பொதுவாகப்
பெண்களுக்குப் பெருமை சேர்க்கும் பண்புடையதாக அமைந்துள்ளது.
தாய்த்தெய்வ வழிபாடு, அர்த்தநாரித் தத்துவம், சக்தி வழிபாடு, பூமியைத்
தாய் வடிவில் காணும் 'மண்ணின் மடந்தை' என்னும் சிலம்பு காலநிலை,
உலகத்து மண் பரப்பைத் தாய் வடிவில் காணும் போக்கு, 'நிலமெனும் நல்லாள்'
என்னும் குறள் காட்டும் கொள்கை, இறைவனைத் 'தாயுமானவா'; என்று அழைக்கும்
போக்கு, 'தாயில் சிறந்த கோவிலுமில்லை' என்னும் சமூக நீதி, இயற்கைச்
சக்திகளைத் தாய் வடிவில் காணும் நிலை, கல்வியைக் 'கலைமகள்' என்றும்
செல்வத்தைத் 'திருமகள்' என்றும் போற்றிவரும் தன்மை ஆகிய தமிழர் நிலைகள்
எண்ணத்தக்கன. ஆசிரியர் தம் புதினங்களைப் பற்றிக் குறிப்பிட்டுக்
கூறும்போது, 'திருப்பூர் வாழ்நிலை அனுபவத்தின் வெளிப்பாடான மற்ற மூன்று
புதினங்கள் ஒரே நாவலின் வெ;வேறு பகுதிகளாகவே அமைந்திருக்கின்றன. தொழில்
நகரம் தரும் மனித நெருக்கடிகளும் சிதைவுகளும் என்னை அவற்றைப்
பதிவுசெய்ய வைத்திருக்கிறது. குழந்தைப் பருவத்தை இழந்து விட்டு
குற்றவாளிப் பரம்பரையாய் ஒருதலைமுறை தொழில் நகரத்தில் தொடர்வதைப்
பதிதவுசெய்ய வேண்டியிருக்கிறது. உலக மயமாக்கலும் அதன் கோரத்தன்மையும்
பெண்களையும் குழந்தைகளையும்தான் அதிகம் தாக்கி இருக்கின்றன. சட்டம்
தருகிற வெற்று உறுதிமொழிகளை மீறி அவர்கள் சுரண்டப்படுகிறார்கள்.
அதிகப்படியான வேலைப்பளுவும் பாலியல் சுரண்டலும் சுலபமாகிவிட்டது' என்று
தெளிவு படுத்தியுள்ளார்.
எனவே ஆசிரியரின் புதினங்களுள் 'பிணங்களின் முகங்கள்'
'சமையலறைக்கலயங்களில்' ஆகிய இரண்டும் குழந்தைத் தொழிலாளர் பற்றி
அதிகமாகப் பேசுகின்றன.
'உலக மக்களில் மூன்று பேருக்கு ஒருவர் குழந்தை, குழந்தைப் பருவத்தை
மறந்தவர்களாய் தொழிலாளி வர்க்கத்தில் சேர்ந்தவர்களில் இந்தியாவில் 1000
லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர். இந்தியாவில் குழந்தைத்
தொழிலாளர்கள் அதிகம் உள்ள ஏழாவது மாநிலம் தமிழகம். ஒருவகையில்
பெற்றோரின் வறுமை என்பது காரணமற்றது. அதன் பல வகைகளில் குழந்தை உழைப்பே
வறுமைக்குக்காரணம். குழந்தைக் தொழிலாளர்கர் மலிவான கூலிக்கு
அடிமைப்படுத்தப் படுகிறார்கள்'11 என்கிறார் ஆசிரியர். இக் கருத்தை
ஆசிரியர் தம் புதினங்களில் கீழ்க்கண்டவாறு பதிவு செய்கிறார்.
நெசவுத்தொழிலும்
பாதிப்பும்
'பிணங்களின் முகங்கள்' புதினத்தில் செந்தில் எனற சிறுவன் சொல்லும்போது
எனக்கு இதுதா கடைசி பரிட்சை ஏன்னா அடுத்த வருஷம் ஸ்கூலுக்குப்
போகப்போறதில்லை. பனியன் கம்பனிக்குப் போடான்னு எங்கப்பா சொல்லிட்டார்.
கனகு போவான்னு நெனக்கிறேன் என்கிறான்.
கனகுவுக்கும் நிறையபடிக்க ஆசை. படித்து ஒரு நல்ல வேலைக்குகூட போகலாம்.
ரவிந்தர் கூட எலிமென்டரி ஸ்கூலில்தான் படித்தவர். இப்போது
ஏரோப்பிளான்னு பேட்டரி போடும் வேலையைச் செய்கிறார். நல்ல சம்பளம் அவர்
உடுத்தும் உடைகளைப்போல் உடுத்தவேண்டும் முடிந்தால் ஏரோப்ளானில் எல்லாம்
பறக்க வேண்டும். இதெல்லாம் படிப்பில்லாமல் முடியாது' என்று கனகு
யோசிக்கிறான். ஆனால் நெசவுத் தொழிலில் ஏற்பட்ட பாதிப்பால் அவனுடைய கனவு
கலைகிறது.
'நான் வேலைக்குபோகலப்பா....'
'வேற என்ன பண்ணப்போறே'
'படிக்கனும்...'
'பெரிசா படிச்சு என்ன பண்ணப்;;;போறே ஒருவருஷமோ ரெண்டு வருஷமோ
அப்புறம் வேலைக்குத்தானே போகப்போற. இதுல என்ன...?
'நெறைய படிக்கனும்பா...'
படிச்சவன் எல்லாம் ரோட்ல திரியறான் நமக்கெல்லா ஒத்துவருமா...?'
அவனுக்கு அழுகையாய் இருந்தது. இவர் இதையே திரும்பத் திரும்பச்
சொல்லிக்கொண்டிருக்கிறார். தீர்மானித்து விட்டாரா. யார் சொல்லியும்
மாற்றிக்கொள்ள மாட்டாரா...?' என்று குழம்பினான் கனகு.
கோபாலின் நிலையும் இதேதான். கோபாலனின் அப்பா குடிக்துவிட்டு
அடிக்கும்போது அவன் அம்மா கத்தத் துவங்கினாள், 'தம்பி... கோபாலு
எங்கப்பா. இந்த நாசமாப்போற மனுஷங்கிட்டே அடிவாங்கி வாங்கி உடம்பு
மரத்துப் போச்சு, சாப்பாட்டுக்கும் காசு தந்ததில்லை. இந்த ஆள
விட்டுவிட்டு எங்காச்சும் ஊர்ப்பக்கம் வந்திர்லாம்ன்ன யோசனை.
கோபாலையும் பனியன் கம்பனிக்கு வேலைக்குப் போகச் சொல்லலாம் பாரு...
எப்படியோ மானத்தோட பொழைக்கனும்' என்ற உருவாக்குவதற்குக் குடும்பச்
சூழலும் ஒரு காரணம் என்பதை நிறுவுகிறார். எனவேதான் செந்தில், கோபால்
போன்று மற்ற குழந்தைகளும் வேலைக்குச் செல்ல நிர்பந்திக்கப்படுகின்றன.
பூரணிக்கு வருத்தமாக இருந்தது. அம்மா கூறினாள், 'செகடந்தாளி
சித்தப்பாவுக்கு தெரிஞ்ச ஒருத்தங்க. நல்ல வசதியாக இருக்காங்க. அவங்க
வீட்டு குழந்தைங்க யாருமில்ல உன்னக் கூப்பிடுறாங்க. அவங்க வீட்ல ஒரு
அத்தை இருக்காங்க. அவளுக்குத் தொணையா நீ இருக்கனும்.'
'தொணன்னா எப்படிம்மா...?'
'சின்னச்சின்ன வேலையெல்லாம் செஞ்சுட்டு அவங்க வெளிய போறப்பெல்லாம் கூட
இருந்துட்டு அவங்களுக்குத் தொணயா...' என்று சமாதானம் செய்கியறார்கள்
வீட்டில் உள்ள பெரியவர்கள். இன்னுமொரு காட்சியில் குழந்தைகளின்
மனநிலையை ஆசிரியர் படம்பிடித்துக் காட்கிறார்.
'கோவிந்தராசு வாத்தியார் ஆக விருப்பம் என்று சொல்லியிருந்தான்.
பையன்கள் மிரட்டலாம். ஊரில் இருப்பவர்கள் வாத்தியார் என்றால் மிகுந்த
மரியாதை தருவார்கள். வளர்ந்த செடிகள் இருக்கிற பக்கம் கையில் ஒரு
குச்சியுடன் நின்று கொள்வான். எதையாவது முனகிக் கொண்டிருப்பான். கையில்
இருக்கும் குச்சியால் செடிகளை அடித்துக்கொண்டே இருப்பான். வாத்தியார்
ஆகவேண்டும் என்று ஆசைப்படுபவன் பனியன் கம்பெனி வேலைக்குப்;;;;போவதாக
சொல்கிறாள் ஏனென்று கேட்டால் அழுதுவிடுவானா பூரணிமாதிரி அழுது
மூச்சையாகி விடுவானா. நினைக்கையில் வருத்தமாக இருந்தது.' இதே நிலை பல
குடும்பங்களில் பற்பல கனவுகளுடன் வளரும் குழந்தைகள் வறுமையின்
காரணமாகத் தங்கள் கனவுகளைத் தொலைத்துவிட்டு வேலைக்குச் செல்ல வேண்டிய
சூழல்களை, ஆசிரியர் பல இடங்களில் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
சின்னஞ்சிறு வயதில் வருமானம் ஈட்ட வேண்டிய கட்டாயத்திற்குக்
குழந்;தைகள் தள்ளப்படுவதற்து வறுமையே முதன்மைக் காரணமாகக்
கருதப்படுகிறது என்று கருதும் ஆசிரியர் சில நிகழ்வுகளை 'சாயத்திரை'
என்ற படைப்பிலும் எடுத்துக்காட்டுகிறார்.
'புடுபுடுவென்று வந்த மோட்டார்சைக்கிள் குமாரின் நெருக்கத்தில்
நின்றது. உதட்டிற்கு கீழ்; தொங்கிக்கொண்டிருந்த தடித்த மீசையைக்
கொண்டிருந்தவன் கருப்புக் கண்ணாடியைக் கழற்றி 'என்ன பஞ்சம் பொழக்கப்
போற மாதிரியா...' என்றார்.
'இந்த ஊரை விட்டு எங்க போறது...'
'எங்கபோனாலும் காசெ வெச்சுட்டு போற வழியெப்பாரு. கந்து வட்டிக்காரன
லேசுல நெனச்சுறாதே'
'கட்டிர்ரனுங்கோ. பையன் அடுத்த வாரத்திலிருந்து கம்பனிக்கு போவான்.
மொதல்ல வட்;;டி கட்டறதுக்குன்று அவன் சம்பளம் செரியாயிடும். நாலு மாசம்
போச்சுன்னா. கைநெறய பனியன் சம்பளக் காசு வந்துரும் தந்துருவான்.
அப்பாவின் தீர்மானத்தால் அதிர்ந்து போனவன் போல் குமார் பார்த்தான்.
அவரின் முகத்தில் தெரிந்த தெளிவு அவனுக்கு பயமூட்டியது. உடம்பை
வேகமாக்கிக்கொண்டு ஓடவேண்டும் போலிருந்தது அவனுக்கு.'
'சமையலறைக கலயங்கள்' புதினம் இக்கருத்;;;தை மேலும்
உறுதிப்படுத்துகிறது.
'என்ன... சின்னதாயிம்மா எங்கேயோ கௌம்பிட்ட...?' என்றாள் வசந்தா.
'வேற எங்கம்மா, கலாவைப் பாக்கத்தா. மாசம் ஒரு தரம் கோபிக்கு போயி
சம்பளம் வாங்கிட்டு வந்திருவன்.'
'கலா இன்னும் அந்த எடத்திலதா வேலை செய்யறாளா...?'
'அங்க ஒன்னும் கொறச்சல் இல்லமா.. தென்னந்;தோப்புக்காரர் வூடு. வூட்ல
வேலை, துணி தொவைக்கறதுன்னு, மாசத்துக்கு ஒரு நாள் சம்பளத்துக்கு போய்
நிப்பன் நானூறு ரூபாயை எடுத்துக்கையில் நீடடிருவாங்க. நாலைந்து
தேங்காயை முதலாளியம்மா எடுத்துக்கன்னு கொடுப்பாங்க. ஒரு நாள் இருந்து
கோழி கொழம்பு, ஆட்டுக்கறின்னு சாப்புட்டு வருவன்...'
'கலா வயசுக்கு வந்துட்டாளா...?'
'இல்லம்மா வந்தாலும் என்ன தங்கமானவங்க அவங்க வீட்டுல ஜாக்கிரதையா
வெச்சுக்குவாங்க...'
'கம்பனிக்குப் போனா வாரம் நானூறு வருமோ'
'வாஸ்தவம்தான், பட்டினி கெடந்தப்போ அந்த மகராசி வான்னு கலா
கையைபிடிச்சு இழுத்துட்டு போனாங்க. இதுவரைக்கும் ஒரு குறையும் இல்ல.
நிம்மதியா இருக்கட்டும்...'19 மேற்கண்ட உரையாடல்களின் மூலம்
பெற்றோர்கள் வருமையின் கோரப் பிடிலிருந்து விடுவிக்கவே குழந்தைகளை
வேலைக்கு அனுப்பத் துணிகிறார்கள் என்பது தெளிவாகிறது. ஆனால் உண்மையில்
வறுமை மட்டுமே காரணம் இல்லை என்பது நிபுணர்களின் கருத்து. ஒரு
குடும்பத்தில் பலர் சம்பாதிக்கவும் குடும்ப வருமானம் அதிகரிக்கவும்,
வசதியினைப் பெருக்கிக் கொள்ளவும் குழந்தை சராசரி மனிதனின்
எதிர்பார்ப்பு பொருளாதார நிலையை விரிவுபடுத்த வேண்டும் என்பதே.
பிணங்களின் முகங்கள் புதினத்தில் குடும்பமாக உழைக்கும் ஒரு முஸ்லீம்
குடும்பத்தைப் பற்றி ஆசிரியர் இவ்வாறு குறிப்பிடுகிறார். 'கரீம்
வீட்டில் இருப்பதுபோல் பிளாஸ்டிக் பாய் வாங்க வேண்டும் என்று கனகு
சொன்னாள். 'அவங்க வீட்ல அவங்க அம்மாவத் தவிர எல்லோரும் வேலைக்குப்
போறாங்க. ஜகாங்கீர் உன் வயதுதாண்டா. அவங்கண்ணன் கடடிங்மாஸ்டர் ஜரீனா
கூட ஜட்டி கம்பனிக்குப் போறா... அப்புறம் என்ன கொறச்சல். பிளாஸ்டிக்
பாய் என்ன, வேற எதிலாச்சும் பாய் கெடச்சாலும் வெலைக்கு வாங்கிப்
போடுவாங்க' என்றார் அவன் அப்பா கோபமாக.
குழந்தைத் தொழில் உருவாவதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. கடந்த
பத்தாண்டுகளில் விவசாயத்துறையில் பெரும் மாற்றம் வந்து விட்டது. தொழில்
வாரியாகப் பார்க்கும்போது விவசாயத் துறையில்தான் மிக அதிக அளவில்
குழந்தைகள் வேலை செய்து வந்தனர். ஆனால் தற்போது இதில் பெரிய மாற்றம்
ஏற்பட்டதால், ஏழை விவசாயக் கூலிகள் வேலையில்லா காரணத்தால் நகர்ப்
புறங்களுக்குக் குடிபெயர்ந்து, அங்கே கிடைக்கும் தொழிலைச் செய்து
வயிற்றைக் கழுவும் அவல நிலைக்குப் பெற்றோர்களால் தள்ளப்படுகின்றனர்.
குடும்பம் குடும்பமாக இடம்பெயர்ந்து வரும் பெற்றோர்கள், குழந்தைகள்,
பட்டறைகள், கடைகள், உணவு விடுதிகள் என எந்த வேலை கிடைத்தாலும் செய்து
அப்படியே வளர்ந்து விடுகின்றனர் எனச் சமீபத்திய ஆய்வுகள்
தெரிவிக்கின்றன. 'பிணங்களின் முகங்கள்' புதினத்தில் இன்னொரு நிகழிவில்
வேணி என்கிற பாத்திரத்தின் மூலம் இக்கருத்தை வெளிப்படுத்துகிறார்
ஆசிரியர்; பிழைப்பிற்காக ஊர் விட்டு ஊh வரும் குடும்பம் ஒன்று தங்களின்
முழுக்குடும்பத்தையே வேலையில் ஈடுபடுத்தும்போது குழந்தைகளின் கல்வி
என்பது கேள்விக்குள்ளாகிறது என்கிறார்.
திருநெல்வேலியிலிருந்து வேலைதேடி வேணியின் குடும்பம் வருகிறது.
திருப்பூர் பனியன் கம்பனி வாசலில் ஒட்டுமொத்தமாய்ப் போய்
நிற்கிறார்கள்;. 'செரி, உனக்கு வாட்ச்மேன வேலை, உங்க ஊட்டுகாரிக்கு
கூட்டற வேலை, இந்த பொண்ணுதா கொஞ்சம் வளந்தமாதிரி இருக்கு, லேபில்
வைக்கறதுன்னு ஆரம்பிக்கலாம், சின்னபசங்க ரெண்டுபேருமே
கைமடிக்கறதுக்குன்னு ஆவாங்க' இப்படிப்பட்ட சூழலில் குழந்தைகளின் கல்வி
பறிபோகிறது என்பதை ஆசிரியர் வலியுறுத்துகிறார்.
முடிவுரை:
-
முதலாளி வீடு, தொழிற்சாலை, பாலியல்
போன்றவை வேலை என்ற பெயரில் குழந்தைகளின் உழைப்பைச் சுரண்டும்
களங்களாக அமைகின்றன. குழந்தை தொழில் என்பது சிறுவயதிலேயே இவர்களின்
உடல் மற்றும் மனவளர்ச்சிக்கு ஊறுதரக் கூடியதாக உள்ளது.
-
குழந்தைத் தொழிலாளர் தம் எண்ணங்களும்
ஏக்கங்களும் கனவாய்க் கற்பனையாய்ப் போய்விடுகின்றன. குழந்தைத்
தொழிலால் இல்லாமையும் கல்லாமையும் உருவாகிப் பல்வேறு
சமூகப்பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு ஏற்படும்.
உதவிய நூல்கள்:
-
சுப்ரபாரதிமணியன், சாயத்திரை,
(எதிர்வெளியிடு, பொள்ளாச்சி, இரண்டாம் பதிப்பு, ஆகஸ்டு 2013)
-
'நீர்த்துளி, உயிர்மை பதிப்பகம்,
சென்னை, முதற்பதிப்பு, டிசம்பர் 2011
-
'சுடுமணல், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்,
சென்னை, முதற்பதிப்பு, பிப். 2012
-
'தறிநாடா, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்,
சென்னை, முதற்பதிப்பு, ஆகஸ்டு 2013
மு.சசிகலா
முனைவர்பட்ட ஆய்வாளர்
தமிழ்த்துறை
ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
ஈரோடு.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|