90வது அகவைப்பூர்த்தியில் கவிநாயகர் விநாயகர் கந்தவனம்

த.சிவபாலு B.Ed.Hons, M.A.
 

அமுது எங்கே சுவை அங்கே
சுவை
எங்கே தமிழ் அங்கே
தமிழ்
எங்கே நான் அங்கே
நான்
எங்கே தமிழ் அங்கே

 

  எனக் கவியால் பட்டி தொட்டியெங்கும் தமிழ் முழக்கம் செய்துவந்து கவிநாயகர் சிறிது காலமாகச் சுகவீனமுற்ற நிலையில் தனது இல்லத்தில் வாழ்ந்து வருகின்றார்.  வரிகளுக்குச் சொந்தக் காரர்.  கவியரங்கத்திற்கு ஒரு கந்தவனம் என்று அடைமொழி கொடுக்கப்படடு அழைக்கப்பட்டவர்.  கவிநாயகர் பங்குபற்றாத கவியரங்குகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு ஈழத்தின் நெடுந்தீவு தொடக்கம் கல்முனைவரை அவரது கவிதைகள் கோலோச்சியதோடு கனடாவில் புலம்பெயர்ந்த பின்னர் கனடாவில் நடக்கும் தமிழர் நிகழ்வுகளில் அவர் பங்குபற்றாதவை இல்லை என்றே கூறும் அளவிற்கு  கோலோச்சியவர்.

சாவகச்சேரி நுணாவில் விநாயகர் மற்றும் சின்னம்மா தம்பதினரின் இளைய மகனாகப் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை நுணாவில் சைவப்பிரகாச வித்தியாலயத்திலும்  இடைநிலைக் கல்வியை சாவகச்சேரி றிபேக்கல்லூரியிலும் பின்னர் உயர் நிலைக் கல்வியை தமிழ் நாட்டில் உள்ள கிறிஸ்தவக் கல்லூரியிலும் கோவை அரசினர் கலைக்கல்லூரியிலும் பயின்று  பட்டம் பெற்ற இவர். புவியியலைப் பிரதானமாகக் கொண்டவராக இருந்தாலும் தமிழ்மீது  அதீதபற்றுக்கொண்டவராகவும் பாண்டித்தியம் பெற்றவராகவும் தன்னை ஒரு தமிழறிஞராகப் புடம்போட்டுக்கொண்டார்.

மாத்தளை St. Thomas College,  வசாவிழான் மத்திய மகாவித்தியாலயத்திலும் ஆசிரியராகவும். முல்லைத்தீவு யோகபுரம் மகா வித்தியாலயம்,  மற்றும் யாழ். அளவெட்டி அருணோதயக் கல்லூரி, வசாவிளான்  மத்திய கல்லூரியிலும் அதிபராகவும் கடமையாற்றிய பின்னர் சில ஆண்டுகள் நைஜீரியாவில் ஆசிரியராகவும் பணிபுரிந்த பின்னர் கனடாவில்  வாருணன் மற்றும் வாணி  ஆகிய இரு பிள்ளைகளோடு கனடாவில் குடியேறி வாழ்ந்துவருகின்றார்.

கனடாவின் தேசிய கீதத்தை தமிழாக்கம் செய்து தமிழ் மாணாக்கர்களால் தமிழில் இசைக்க வழி சமைத்தவர் இவரே!

கவிநாயகர் வி. கந்தவனம் அவர்களின் வாழ்வும் வரலாறும் சங்க இலக்கிய மரபின்வழி மரபுதழுவி ஆவணப்பதிவினைச் வெண்பாக்களால் வடித்தெடுத்துள்ளனர் கனடா கவிஞர் கழகத்துக் கவிஞர்கள். இதனை நூலுருவாக்க எடுத்துக்கொள்ளப்பட்ட கவிஞர் கழகத்தின் முயற்சியினை எத்துணை பாராட்டியும் போதாது என்றே சொல்லவேண்டும்.

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தவன் தமிழன், அந்தப் பெருமையுடைத்துத் தமிழ்போற்றும் நல்லுலகு. அந்தப் பெருமைக்கேற்ப கழகம் வைத்து அங்களை ஆற்றுப்படுத்தி, அநுகூலந் தந்து, புலமை கற்றுத் தந்து, புதுமெருகூட்டிய பெருமகன், என்து பெருமதிப்பிற்கும், அன்பிற்கும், நட்பிற்கும் இலக்கணமாகத் திகழும் கவிநாயகர் வி. கந்தவனம் அவர்கள். என்னை உடன்பிறப்பாகக் கருதி அன்பால் அடிமைகொண்டவர். தனது வீட்டிற்கு அழைத்து உபசரித்து தானும் மகிழ்ந்து எம்மையும் மகிழவைக்கும் கவிநாயகர் தம்பதியினரின் உபசரிப்பை நினைக்குந் தோறும் அப்பூதி அடிகளாரின் நினைவே மனத்தெழுகின்றது. 

தமிழ் மொழியின் நிலைக்கழன் கவிதை வடிவமேயாம். மொழி வளர்ச்சியில் பேச்சு, எழுத்து என்பன மிக முக்கியத்துவம் பெறுகின்றன. பேச்சாற்றல் மொழியைத் திருத்தமாகப் பேசவும், விளங்கிக்கொள்ளவும் வைக்கின்றது. எழுத்தாற்றல் தனது உள்ளக் கிடைக்கைகளை, நெஞ்சத்து எழும் உணர்வுகளை பதிவாக வெளிக்கொண்டுவர உதவும் மிகப்பெரும் கருவியாக அமைகின்றது. எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பைப் பெற்றது எமது தமிழ் மொழி. முத்தமிழ் என அழைக்கப்டும் சிறப்பு, உயர்வு, பண்பு, மேன்மை, செம்மை எல்லாம் எம் தமிழுக்கு உண்டு. கவிதை கட்டுதல் அல்லது செய்யுள் புனைதல் என்பது மொழி வளர்சியின் உயர்ந்த படியாகும். இதனை இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எம் இனத்தவர்கள் கற்றுக்கொண்டு மிகத் திருத்தமாக இலக்கணத்தோடு சுருங்கச் சொல்லி விளங்கவைக்கும் பான்மையைத் தமதாக்கிக் கொண்டவர்கள். அதன்வழி கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய நாகரீகம் படைத்த எமது பண்டைய சமுதாயம், மிகச் சுருக்கமாகத் தமது பதிவுகளைச் செய்யுள்வழி ஆக்கி வைத்துள்ளனர். நவீன தொழில் நுட்பச்சாதனங்கள், காகிதத்தின் பயன்பாடு என்பன அதிகரித்தமையால் கவிகட்டுவதிலும் கட்டுரை எழுதுவது இலகுவாகிவிட்டது. எனினும் உணர்வுகளை வௌப்படுத்தும் ஆற்றல் கட்டுரைகளை விட கவிதைகளுக்கே உண்டு.

இக்கவிதை மரபினைக் குறிப்பாக  பாரம்பரிய செய்யுள் மரபினை மறைந்துபோக விடாது அதனைப் புலம்பெயர்ந்த பனிப்புலத்திலும் நிலைநிறுத்தவேண்டும் என அவாவி நின்றவர்களுள் கவிநாயகர் கந்தவனமும் ஒருவர். தான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமே என மற்றவர்கள் இன்புறக்கண்டு இன்பங்கொள்ளும் மரபினர். அவர் கவிதை வகுப்புக்களைத் தொடங்கி நடத்தி வந்ததோடு தனது நீண்டகால மனச்சுமையை கவிஞர் கழகத்தை உருவாக்கி இறக்கிவைத்தவர்.   தங்களிடம் தேங்கிக் கிடக்கும் கவிகட்டும் மற்றும் செய்யுள் புனையும் ஆற்றல்களை தம்மோடு மறைந்துபோகவிடாது அவற்றை எதிர்காலச் சந்ததியினருக்கும் கிடைக்கும் வாய்ப்பினை நல்லக  வேண்டும் என்றநோக்கோடு பல ஆண்டுகளாக இந்த நன்முயற்சியில் அயர்வின்றிச் செயற்பட்டு வந்துள்ளமைக்கு நானும் இராமாணயத்தில் சேது அணைகட்டப்பட்ட வேளை அணிலும் பங்களிப்புச் செய்தது போன்று நானும் அதில் பங்கு கொள்ள நான்  கனடா எழுத்தாளர் இணையத்தின் தலைவராகச் செயற்பட்டவேளை கவிதை வகுப்புக்களை ஏற்பாடு செய்து தந்தமையை நினைத்துப் பார்க்கின்றேன்.  

சமூகத்திற்கு பயன்படத்தக்க பல்வேறு பணிகளில் சமய, இலக்கிய, சமூகப் பணிகளில் தன்னை இணைத்துக் கொண்டுள்ள கவிநாயர் அவர்கள் கவிதை வகுப்புக்கமைளயும் ஒழுங்கு முறைப்படி தவறாது நடத்திவைத்து கவிதை கற்க வந்தவர்களை ஊக்கத்தோடு பயில வழிவகுத்தவர். அவரது பணிகளை பதிவு செய்யப்படல்வேண்டும் என்னும் உயரிய நோக்கோடு கனடா கவிஞர் கழகம் மேற்கொண்டுள்ள முயற்சியினை தமிழ் கூறும் நல்லுலகம் என்றுமே பாராட்டும் என்பதில் ஐயமில்லை. கவிஞர் கழகத்து உறுப்பினர்கள் இன்றுபோல் என்றும்அடம்பன் கொடியும திரண்டால் மிடுக்கு என்பது போன்று ஒற்றுமையாகவும் பலமாகவும் செயற்பறட்டு வருவது கருத்திற்கொள்ளற்பாலது. அகத்தியரின் நன்மாணாக்கருள்  தொல்காப்பியர் போன்று மாவிலி மைந்தன் திரு. சண்முகராசா அவர்கள் அவரது பணியைப் பின்தொடர்ந்து  மேற்கொண்டு கவிஞர்களை உருவாக்கிவருவது பாராட்டற்குரியது.

கவிநாயகர் அவர்களின் பணிகளை, ஆற்றலை, அவர்தம் வாழ்வியலை ஒரு நூலில் அடக்கிவிடமுடியாது. அவர் எழுதிக் குவித்த நூல்கள் பற்றி ஒரு கட்டுரைக்குள் அடக்கிவிடமுடியாது. அவர் ஆற்றிய சமயப்பணி அதற்கு மேலானது. தன்னடக்கத்தோடு தமிழ்கூறும் நல்லுலகிற்கு அவர் அற்றிய பணிகளை அளவிடமுடியாது. அவர் கவிஞர் கழகத்தோடு மட்டும் நின்றுவிடாது கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின்  உருவாக்கத்திற்கும், அதன்  செயற்பாட்டிற்கும் முழுமூச்சாக உழைத்தவர் என்பதும்  கருத்திற்கொள்ளற்பாலது. கனடா எழுத்தாளர் இணையத்தின் தலைவராகவும் காப்பாளராகவும் பல்வேறு வழிகளில் பங்களிப்புச் செய்துள்ளார். இலக்கியம், சமயம் சார்ந்த அறிஞர்களை உள்வாங்கி மகாநாடுகளையும் கருத்தரங்கங்களையும் நடத்துவதற்கும் காரணராக இருந்துவந்துள்ளார். மறைந்த அறிஞர்களான அதிபர் கனகசபாபதி, பேராசிரியர்  பசுபதி, பேராசிரியர் கண்ணப்பன் போன்றோருடன் மிக நெருங்கிய தொடர்பை மிக நெருக்கமாகப் பேணி வந்தவர்.

 ஆழ்கடலான் திரு.முருகவே பரமநாதன் அவர்கள்  தலைமையில் நடைபெற்ற பாராட்டுவிழாவல்  கவிநாயகர் கந்தவனம் அவர்கள் ஆத்மசோதி முத்தையா அவர்களின் வழியிலே சைவத்தையும் தமிழையும் வளர்க்க அரும்பாடுபட்டுத் தொண்டாற்றி வருகின்றார். சைவம் நலிந்தபோது சமயகுரவர்கள், ஆழ்வார்கள் அதை வளர்த்தமை போன்று எங்கள் மேன்மைக்குரிய ஐயா அவர்கள் அதனை வளர்த்து வருகின்றார். ஒரு மனிதனை அறிவதற்கு அவரின் கல்விநிலையைப் பற்றி அறிவதன் மூலம் அவரின் தகுதிப்பாட்டை அறிந்துகொள்ள முடியும். கந்தவனம் ஐயா அவர்களுக்கு அவர்களின் கல்வித் தகமையைச் சான்றாண்மையை நன்கு அறிந்து உலகப் பல்கலைக்கழகம் கலாநிதிப்பட்டத்தை வழங்கியுள்ளது என்றால் அவரது தகைமையைப் பற்றி நாம் கூறவேண்டிய அவசியமில்லை. இந்து சமயப் பேரவைக்குக் காப்பாளராக இருந்து தொண்டாற்றி வரும் கலாநிதி கந்தவனம் ஐயா அவர்களின் சேவையைப் பாராட்டவேண்டியது தமிழ் மக்கள் ஒவ்வொருவரதும் கடமை என்றும் குறிப்பிட்ட அவர் தொடர்ந்து உரையாற்றுகையில். புவியியல், பொருளியல் துறைகளில் தனது கல்வியை மேற்கொண்ட அவர் இலக்கியத்துறையிலும் பாண்டித்தியம் பெற்றார். கல்வியியல், நாடகத்துறையிலும் அவர் படித்துப்பட்டம் பெற்றார்  எனக் குறிப்பிட்டுள்ளை கருத்திற்கொள்ளத்தக்கது.  

       முனைவர் பார்வதி கந்தசாமி அவர்கள் கவிநாயருக்கு எடுக்கப்பட்ட பாராட்டு விழா மலரில் வரைத்த ஆங்கிலக் கட்டுரையிலிருந்து சிலபகுதிகள் கீழே  தரப்படுகின்றன.  கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்வி டிப்ளோமா, நாடகம் மற்றும் நாடகத்துறையில் டிப்ளோமா ஆகியவற்றைப் பெற்று மூன்றாம் நிலைக் கல்வியைத் தொடர்ந்தார். அவர் ஒரு சிறந்த நாடக ஆர்வலரானார் மற்றும் அவர் G.C.E இல் நாடகம் மற்றும் நாடகம் கற்பித்த முதல் ஆசிரியரானார். தமிழ் வழிப் பள்ளிகளுக்கு உயர்தரம். இவருடைய தனிச்சிறப்பு சிறுவர் அரங்கம் ஆகும், இது குழந்தைகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது மற்றும் அவர்களில் சிலர் பிராந்திய மற்றும் இலங்கைத் தீவு அடங்கலான போட்டிகளிலும் பரிசுகளை வென்றனர்.

பல ஆண்டுகளாக கல்வி புறக்கணிக்கப்பட்ட மலையகம் மற்றும் பிற வளர்ச்சியடையாத பிரதேசங்களின் தகுதியான பல பிள்ளைகளின் வாழ்க்கையில் அவரது ஆசிரியர் வாழ்க்கை மாற்றங்களை ஏற்படுத்தியது. இலங்கையில் மாத்திரமன்றி லெசோதோவிலும் தென்னாபிரிக்க குடியரசிலும் கற்பித்தார்.

அவர் 80 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் மற்றும் சிறு புத்தகங்களை எழுதியுள்ளார், அவற்றில் பல அவரது கவிதைகளின் தொகுப்புகளாகும். இவரது மூன்று புவியியல் நூல்கள் பாடசாலைகளில் பாடப் புத்தகங்களாகப் பயன்படுத்த இலங்கைக் கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்டது. மாணவர்களிடையே மிகவும் பிரபலமான புவியியல், தமிழ் மொழி மற்றும் இலக்கியம் ஆகியவற்றில் மாணவருக்கான நூல்களையும் எழுதினார்.

அவர் இலங்கையில் இரண்டு தமிழ் எழுத்தாளர் சங்கங்களின் முக்கிய நிறுவன உறுப்பினராக இருந்தார், ஒன்று மாத்தளையிலும் மற்றொன்று யாழ்ப்பாணத்திலும். அவர் பல ஆண்டுகளாக யாழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சாதாரண தமிழ் மக்களிடையே கவிதைகளை ஊக்குவிப்பதற்காக தமிழ் சமூகத்தால் போற்றப்பட்டவர். மக்கள் அவரை கவிஞர்களின் நாயகர் என்று அன்புடன் அழைத்தனர்.

தமிழ் மக்கள் மற்றும் அவர்களின் சொத்துக்கள் மீதான இலங்கை இராணுவத்தின் அட்டூழியங்களுக்குப் பிறகு அவர் தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து இலங்கைக்குத் திரும்ப முடியவில்லை. தெல்லிப்பளை குரும்பசிட்டியில் உள்ள தனது வீட்டையும் காணியையும் இராணுவத்தினரிடம் இழந்தார். அவர் நவம்பர் 1988 இல் தென்னாப்பிரிக்கா குடியரசில் இருந்து நேராக கனடா சென்றார்.

கவிஞர் மார்ச் 1989 இல் மேல் கனடா கல்லூரியில் பாதுகாப்புப் பணியாளராகச் சேர்ந்தார், 1994 இல் அவர் மேல்நிலைப் பள்ளிக்கு அஞ்சல் மேலாளராகவும் உதவி வரவேற்பாளராகவும் மாற்றப்பட்டார், அவர் 1999 வரை அந்தப் பதவியை வகித்தார். இருப்பினும், அவர் பள்ளிக்கு தன்னார்வ அடிப்படையில் தொடர்ந்து 2013 வரை உதவினார்.

  கவிநாயகர் எறும்புகளைப் போன்ற  சுறுசுறுப்பான உழைப்பாளி. சைவ சமயத்தின் காவலர். பல திருமுறை மாநாடுகளை ஏற்பாடு செய்து நடத்தினார். அவர் எண்பது வயதைக் கடந்தும்  எழுதுகிறார், பேசுகிறார். அவர் தன்னை ஒருபோதும் வயதானவராக கருதுவதில்லை. அவரிடம் வாகனம் ஏதும் இல்லை, அதனால் கூட்டங்களில் கலந்துகொள்ள நடந்து செல்கிறார் அல்லது பொதுப் போக்குவரத்தில் செல்கிறார். குரும்பசிட்டியில் அவர் விட்டுச் சென்ற புத்தகங்களின் தொகுப்பு மற்றும் அவர் விட்டுச்சென்ற எழுத்துக்களைப் பற்றி அடிக்கடி பேசுகிறார். பெரும்பாலான முன்னணி தமிழ் வார இதழ்கள் மற்றும் பத்திரிகைகளுக்கு அவர் தொடர்ந்து எழுதுகிறார். இவரது கனடா தமிழ் மொழிபெயர்ப்பு பல தமிழ் நிகழ்வுகளில் பாடப்பட்டுள்ளது. அவர் நல்ல உள்ளம் கொண்ட அறிஞர்.

தேசிய கவிதை நூலகம் (யு.எஸ்..) ஏற்பாடு செய்திருந்த கவிதைப் போட்டியில் ஆசிரியர் விருதை வென்றவர். அவரது கவிதையான டான்சிங் ட்ரீ’(நடமாடும் மரமொன்று) இதுஅடிவானத்திற்கு அப்பால்’(‘A Dancing Tree’ which is included in n anthology of poems called ‘Beyond the Horizon’). என்ற கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. தேசிய கவிதை நூலகம் அவரது சில ஆங்கிலக் கவிதைகளின் ஆல்பத்தையும்விஷன்ஸ் என்ற பெயரில் தயாரித்துள்ளது. அவரது இரண்டு புத்தகங்கள் ஆங்கிலத்தில் உள்ளன, அதாவது 12 சிறுகதைகள் மற்றும் நீடித்த ஒளி. கனேடிய இடைநிலைப் பள்ளிகளில், பாடத்திட்டச் சேவைகள் கனடாவால் ஆதாரப் புத்தகங்களாகப் பயன்படுத்த அவை பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

கவிஞர் விரிவுரைப் பயணம் மற்றும் தமிழ்க் கவிதைப் பணி என பல நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார். கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்தில் உள்ள அவரது இலக்கிய நண்பர்கள் மற்றும் கலாச்சார சங்கங்கள் தமிழ் மொழி மற்றும் இலக்கியத்திற்கான அவரது சிறந்த பங்களிப்பிற்காக விருதுகள் மற்றும் கெளரவப் பட்டங்களை வழங்கி கௌரவித்துள்ளனர். தமிழ் கலாச்சார தூதராக இருந்துள்ளார். இளம் தமிழ்க் கவிஞர்கள் சங்கத்தின் தலைவராகவும், மையக்கருவாகவும் திகழ்ந்தவர். அவர் திறந்த மனதைக் கொண்டவர் மற்றும் தனது நேரடியான தன்மையை நிலைநாட்ட தயங்கமாட்டார். அவர் உயர்ந்த நேர்மையான மனிதர் மற்றும் ஏராளமான ரசிகர்களையும் கேட்பவர்களையும் கொண்டவர்.

அவர் ஒரு பொறுப்புள்ள குடும்பத்தவராகவும் இருக்கிறார், அன்பான கணவர் மற்றும் அற்புதமான தந்தை மற்றும் அவரது பேரக்குழந்தைகளுக்கு ஒரு துணை. தமிழை அதிகம் நேசிப்பவர், செம்மொழித் தமிழின் பெருமையை உரைகள் மூலம் பரப்புகிறார்.கவிஞர்களின் தமிழ் வனத்தின் சூரிய மலர் அவர்.       

        


த.சிவபாலு B.Ed.Hons, M.A.



                         

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்