கலந்தொடா மகளிர்
கவிஞர் மா.உலகநாதன்., எம்.ஏ
முன்னுரை
தாய்மை, பெண்மைக்குக் கிடைத்திருக்கும் வரம்.
பொன்னுடையரேனும் புகழுடையரேனும் மற்
றென்னுடையரேனும் உடையரோ - இன்னடிசில்
புக்களையும் தாமரைக் கைப் பூநாறும் செய்யவாய்
மக்களை யிங் கில்லாதவர். நளவெண்பா
இந்த வரத்தைப் பெறுவதற்கு அவர்கள் படுகின்ற அவத்தைகளோ ஆயிரமாயிரம் அதில்
ஒன்றுதான் அவர்கள் மாதந்தோறும் உடலாலும் மனதாலும் அடையும் அவத்தை-
மாதவிலக்கு. இந்த மாதவிலக்கின்போது அவர்களுடைய உடலிலிருந்து வெளிப்படும்
ஹார்மோன்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் என்பது அறிவியல் உண்மை.
ஆதனால்தான் செடி, கொடிகளின் பக்கமும், ஆண்களின் பக்கமும் அவர்கள்
செல்வதில்லை. மேலும், மனரீதியாக கோபம், எரிச்சல் போன்ற துன்பங்களையும்
அவர்கள் அடைகிறார்கள். இதையே, Pசந–ஆநளெவசரயட ளுலனெசழஅந என்று அறிவியல்
கூறுகிறது.
கலந்தொடா மகளிர்
பெண்கள் பூப்புற்றிருக்கும் காலங்களில் தூய்மையற்றவர்களாகக் கருதப்படுவர்.
அவர்கள் பூப்புற்றிருக்கும் காலங்களில் வீட்டுப் பண்டங்களைத் தொடாமல்
ஒதுங்கி வாழ்ந்தமையால் அவர்கள் கலந்தொடா மகளிர் எனப்பட்டனர்.
இந்நிலை இன்றும் இருந்து வருகின்றது. மாதவிலக்குக் கொண்ட பெண் ஒருத்தி
இனிய பழந்தரும் மரத்தினடியில் நின்றால் அம்மரத்தின் பழம் கொடிய கசப்பாக
மாறிவிடும். அவள், தானியத்தைத் தொட்டால் அது விதைப்பதற்கு உதவாது. வளரும்
பூச்செடியருகில் சென்றால் அது வாடி வதங்கிவிடுகின்றன. என்று பிளினி
கூறுகிறார்.
இவற்றால் இயற்கையின் கூறுகள் மாதவிலக்காகிய பெண்களால் பாதிக்கப்படுகின்றன
என்பது பெறப்படுகின்றது. மேலும் அக்காலத்தின் நம்பிக்கையினைப்
புலப்படுத்துவதாகவும் உள்ளது எனலாம். கறிவேப்பிலை, துளசி முதலியவற்றின்
அருகில் மாதவிலக்குக் கொண்ட பெண்கள் சென்றால் அவை காய்ந்து விடும் என்று
இன்றும் கூறி வருகின்றனர்.
புறநானூற்றுப் பாட்டு ஒன்றில் கலந்தொடா மகளிர் பற்றிய தெளிவான குறிப்பு
காணப்படுகின்றது. பருத்திப் பயிர்களால் சூழப்பட்ட சிற்றூர் மன்னனின்
உழுந்தின் சக்கையைத் தின்று வளர்ந்து தளர்ந்த நடையை உடைய குதிரை,
கடல்நீரைப் பிளந்து கொண்டு செல்லும் தோணியைப் போல பகைவருடைய சேனையினிடையே
சென்று போரிட நெய்யால ;அமைத்த உணவை உண்டு ஒழுங்காக கத்தரிக்கப்பட்ட
பிடரினையுடைய பகை மன்னரின் குதிரைகள் முருகன் தோட்டத்தில் பாண்டங்களைத்
தொடுதற்கில்லாமல் விலக்குடையராகிய மகளிரைப் போலப் போருக்கு அஞ்சி
பின்னிட்டன, என்று பொன்முடியார் என்ற புலவர் பாடுகிறார்.
சுpற்றூர் மன்னனின் குதிரைத்தாக்குதலுக்குப் பகைமன்னனின் குதிரை
பின்னிட்டதற்கு முரகன் கோயிலில்விலக்குடைய மகளிர், பாண்டங்களைத் தொட
பின்வாங்குதலை உவமையாகப் கூறுகின்றார். இதனை,
அணங்குடை முருகன் கோட்டத்துக்
கலந்தொடா மகளிரி னிகழ்ந்துநின் றவ்வே
புறம்-299:6,7
ஏன்ற அடிகளில் உணர்த்துகின்றார்.
கலந்தொடா மகளிர் என்பது பூப்புற்ற மகளிரைக் குறிக்கும் என்று ஒளவை
சு.துரைசாமிப்பிள்ளை இப்புறநானூற்றுப் பாடலின் பொருள் விளக்கத்தில்
கூறுகிறார்.
பூப்புற்ற மகளிர் மனைகளில் கலந்தொடாது
விலகியிருந்து தாம் பூப்புற்றமை தெரிவிப்பது
தமிழரது மரபு. பூப்புத் தோன்றும் மகளிர்க்கு
அதன் வரவு முன்கூட்டி அறிய வாராமையின் அதன்
வரவைத் தாம் விலகி நின்றுநாணிக் காட்டும்
இயல்பு பற்றி கலந்தொடா மகளிரி னிகழ்ந்துநின்
றவ்வே, என்று கூறுகின்றார்.
பூப்புக் காலத்தில் பெண்ணை அசுத்தமாகக் கருதினரேனும் அதனை நீக்குதற்கு
மேற்கண்ட வழிகள் ஒன்றும் சங்க இலக்கியங்களில் இல்லை என்பார் பேராசிரியர்
வி.ஐ.சுப்பிரமணியம் பிள்ளை.இலக்கியத்தில் சான்றுகள் இல்லையெனினும்,
வாழ்க்கையில் சில நாட்கள் வரை ஒதுக்கி வைத்துப்பின்னர் நீராட்டிக்
குடும்பத்துடன் சேர்த்துக்கொள்ளும் நிலை நடைமுறையில் தென்னிந்திய
மக்களிடம் இருந்து வருகின்றது. ஆதலால் நீராடுவதும் மாற்றாடையுமே தீட்டினை
நீக்குதற்குரிய அடையாளங்கள் எனலாம்.
ஆவர்கள் பூப்புற்ற காலத்தில் கடல்தாண்டிய பயணம் செல்லக்கூடாது என்பதை,
முந்நீர் வழக்கம் மகடுஉக்கில்லை என்று ஓர் தொல்காப்பியம் சொல்கிறது.
புயன்கொண்ட நூல் : புறநானூற்றில் தமிழர் பண்பாடு.
worldnath_131149@yahoo.co.in
|