கலைமாமணி கவி கா.மு.ஷெரீப்
கவிஞர் மா.உலகநாதன்., எம்.ஏ
முன்னுரை
:
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரிக்கு அருகிலுள்ள அபிவிருத்தீசுவரத்தில்
காதர்ஷா, முகமது பத்தும்மாள் ஆகியோரின் அருந்தவப் புதல்வராகப் பிறந்தவர்
கா.மு. ஷெரீப் அவர்கள். ஆரம்பத்தில் சிறுகடையொன்றில் எழுத்தராகப்
பணியாற்றியவர். விவசாயமும் செய்தார். புpரபலமான பாடலாசிரியர்;:
பத்திரிகைத் துணை ஆசிரியர்: நூலாசிரியர் - நாடகாசிரியர் - நாடக, சினிமாப்
பாடல் புனைந்தவர்: கதாசிரியர்: வசனகர்த்தா - இப்படி இவர் எடுத்தது பல
அவதாரங்கள்.
உமறுப்புலவர் எழுதிய சீறாப்புராணம் முழுவதையும் கவிதை நடையிலேயே எழுதி,
உரையும் எழுதியவர். பதவுரை, கருத்துரை, விரிவுரை, பயன் எனப் பகுத்து
அவருக்கே உரித்தான செந்தமிழில், யாவரும் புரிந்து கொள்ளத்தக்க அழகிய இனிய
எளிய நடையில் சீறாப்புராண உரையினை அமைத்திருக்கிறார். ஆவற்றைச்
சொற்பொழிவும் செய்திருக்கிறார்.
இவ்வாற்றான், தமிழறி மக்கள் அனைவராலும் நன்கு மதிக்கபெறும் புலவரானார்.
சுpன்னஞ்சிறு சொற்களைக் கொண்டு பென்னம்பெரிய கருத்துக்களை விளக்கும்
ஆற்றல் பெற்றவர். வுpளக்கவுரை எதுவும் தேவையில்லாத பல காவியங்களையும்,
கவிதைகளையும் படித்தவர்.
பொற்காலம் :
1940இல்
தொடங்கி 1970
வரை இவரின் பாடல்களின் பொற்காலம் எனலாம்.
1948இல்
மாயாவதி என்ற படத்தில் பாடல் எழுதியதன் மூலம் திரைப்பட உலகுக்கு
அறிமுகமானார். நாடகப் பாடல்கள் எழுதி, பின்னர் திரைப்பாடல்கள் எழுதலானார்.
திரு. A.P.நாகராசன்-கா.மு.ஷெரீப்
இவர்களின் இணை பிரியாத நட்பின் காரணமாக திரையுலகம் பல அரிய பாடல்களையும்
காட்சிகளையும் பெற்றது.
திருவாரூரில் ஒளி என்ற பத்திரிகையை நடத்தினார். அங்கு கலைஞர்
அவர்களோடு தொடர்பு ஏற்பட்டது. கலைஞரின் எழுத்தாற்றலை, பேச்சாற்றலைக் கண்டு,
அவரை மேலும் மேலும் எழுதத்தூண்டி, அவரை சமூகக் கண்ணோட்டங்களைக்
காணச்செய்து சீர்திருத்தக் கருத்துகளை எழுதவைத்தார்.
சேலம் மாடர்ன் தியேட்டரின் ஆஸ்தான கவிஞர் இவர். கோவை சென்ட்ரல்
ஸ்டுடியோவில் உட்கார்ந்து தான் நான் பெற்ற செல்வம், நலமான செல்வம்
என்ற பாடலை எழுதினார். இப்பாடல், பட்டி தொட்டியெங்கும் பலரால்
பாராட்டப்பட்டது.
பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே என்றொரு பாடலும் இவரது
கைவண்ணத்தில் உருவானதே. இப்பாடலில் தவழும் தத்துவச் சுவையைக் கேட்டுக்
கேட்டு ரசிக்கலாம். இவரது பாடலில் தனித்துவம், காட்சிச் சூழலுக்கு ஏற்ற
கவி வரிகள் இருக்கும். வருடத்தில்
2, 3
படங்களுக்கே பாடல்கள் எழுதினாலும், அதில் இவரது கவி முத்திரை இருக்கும்.
புதுயுகம் :
அக்கால முன்னணிக் கவிஞர்களில் முதன்மையானவர் நம் கா.மு.ஷெரீப்.
1954இல்
புதுயுகம் படத்தில் முதன் முதல் பாட்டெழுதும் வாய்ப்பு. கவிஞர் அ.
மருதகாசிக்கு இவரே முன்னோடி.
அலிபாபாவும் 40
திருடர்களும் படத்தில் வரும் மாசிலா உண்மைக் காதலே பாடலுக்கு
பல்லவியை ஷெரீப் எழுத, சரணத்தை மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர்
T.R.
சுந்தரம் விருப்பத்தின் பேரில் இன்னொருவர் எழுத ஆக இருவரின்
கைவண்ணத்திலும் உருவான இப்பாடலை,
A.M.ராஜாவும்,
பானுமதியும் பாடினார்கள். புhடல், பார்த்தவர்களின் உள்ளங்களைக் கொள்ளை
கொண்டது.
சிவகாமி படத்தில் வானில் முழுமதியைக் கண்டேன், வனத்தில் ஒரு பெண்ணைக்
கண்டேன். இப்படி இயற்கையையும், பெண்ணையும் மாறி மாறி வர்ணித்து
எழுதியிருக்கிறார்.
கோவைப்பழம் கொடியில் கண்டேன்
குடிசைமுன்னே பெண்ணைக் கண்டேன்
மலைத்தேனின்
இனிப்பைப் போல, மாது அவள்
பேசக் கண்டேன்.
ஓப்புவமையைப் பார்த்தீர்களா?
கோவைப் பழம் - உதடு
மலைத்தேனின் இனிப்பு - பேச்சு
தென்னம்பாளை - சிரிப்பு
முதலாளி :
சிவலீலா என்ற படத்துக்கு இவர் எழுதிய பாடல் தான் A.P.நாகராஜன் பின்னர்
எடுத்த திருவிளையாடல் படத்தில் வரும் பாட்டும் நானே, பாவமும் நானே
பாடலுக்கு முன்னோடி என்பர். ஆதுபோல, திருவருட்செல்வர் படத்தில்
DR.சீர்காழி
கோவிந்தராஜன் அவர்கள் பாடும் இருக்கும் இடத்தை விட்டு பாடலுக்கு
சிவலீலா படப்பாடலே முன்னோடி.
முதலாளி படத்தில் வந்த ஏரிக்கரையின் மேலே போறவளே பொன் மயிலே பாடலை
நாம் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியுமா? நீர்வளம் நிலவுலகில் இருக்கும்
வரை எவராலும் மறக்க முடியுமா? சோலைகளுக்குள் புகுந்து, கிராமியக்காதலின்
சுவையைக் கொண்டு வந்த இவரின் கவிவரிகள், திரைப்படம் என்னும் வாகனத்தில்
ஏறி அவனியில் பவனி வந்தது.
100
திரைப்படங்களுக்கு மேல் பாடல்கள் எழுதியுள்ளார்.
1972இல்
தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கிப் பாராட்டியது. தன்
பாடல்களில் சமூகச் சீர்திருத்தக் கருத்துகள், உழைப்போர் முன்னேற்றம்,
பெண்களின் முன்னேற்றம் ஆகிய முற்போக்குச் சிந்தனைகளை விதைத்தவர்.
1994
வரை தன் முதுமைக் காலத்திலும் கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தார். இன்று
அவர் நம்மிடையே இல்லையெனினும் அவரது பாடல்கள் காற்று வெளியெங்;கும்
உயிரோட்டத்துடன் பயணிக்கிறது.
வாழ்க கவிஞரின் புகழ்!
worldnath_131149@yahoo.co.in
|