வாழ்வியல் மென்திறன்கள் நோக்கில்
தமிழற நிகழ்தகைமை
முர் ப.கொழந்தசாமி, தமிழ்த்துறை, தாகூர் கலைக்
கல்லூரி, புதுச்சேரி.
தமிழ் இலக்கிய வகைமையில் பாடுபொருள் அடிப்படையில் அற இலக்கியங்களுக்கு
தனித்தன்மையான இடம் உண்டு. இவை இன்புறுத்துவதைக் காட்டிலும் அறிவுறுத்தி
உயர்விப்பதில் கூடுதல் அக்கறை காட்டுகின்றன. அதனால் அற நூல்களில்
வையத்துள் வாழ்வாங்கு வாழ வழிகூறும் மென்திறன்கள்
(Soft Skills)
கூறப்பட்டுள்ளன. உலக நலவாழ்வு நிறுவனம் (
WORLD
HEALTH ORGANISATION)
நரம்பியல், உளவியல், சமூகவியல், மேலாண்மையியல் போன்ற பலதுறை
வல்லுநர்களின் கூட்டாய்வு முயற்சிகளின் பயனாக மனித வாழ்க்கையை
மேம்படுத்தும் மென்திறன்களை
( life skills)
பரிந்துரைத்துள்ளது.1
அவையாவன:
1.
சிக்கல் அவிழ்ப்பு (
Problem solving )
2.
முடிவு எடுத்தல் (
Decision making )
3.
புத்தாக்கச் சிந்தனை (
Creative thinking )
4.
மேம்பட்ட சிந்தனை (
critical thinking )
5.
கருத்தாடல் திறன்கள் (
Communication skills )
6.
பண்பட்ட மனித உறவுகள்
(
Interpersonal relationships )
7.
பிறர் உணர்வுகளை அறிந்து மதித்தல்
(
Empathy )
8 . தன்னிலை விழிப்புணர்வு
( Self awareness )
9. உணர்ச்சி ஒருங்கமைப்பு
( Control of emotions )
10.
பதற்றம் தவிர்த்தல்
( Control of stress )
இவற்றை அடிப்படையாகக் கொண்டு தமிழ் அற நூல்களில் கூறப்பட்டுள்ள
கருத்துகளை அணுகினால்,
இவை என்றைக்கும் நின்றுநிலைத்துப் பயன் நல்கும் நிலைபேறுடைய
மானுடமதிப்புகளை
( Eternal human
values)
விண்டுரைத்துள்ளதை அறியலாம். இவற்றை அறிந்து பரப்பினால் உலகிலுள்ள
ஒவ்வொரு தனிமனிதனும் ஒட்டுமொத்த உயிரினங்களும் பயன்பெற வாய்ப்பாகும்.
அறம்
ஆறறிவு பெற்று, எதையும் காரணகாரிய இயைபுடனும் அறிவியல் மனப்பான்மை
கொண்டும் அணுக வாய்ப்புள்ள மனிதன் நல்லது தீயது ஆகியவற்றை உணர்ந்து,
நல்லவற்றைப் போற்றியும் அல்லவற்றை விலக்கியும் அறவாழ்வு வாழவேண்டும்.
2
அறம் என்பதை உ(ய)ரிய வாழ்க்கைமுறை என்று
வரையறுக்கலாம். அதாவது அனைவரும் உரிய வாழ்வு வாழ்ந்து, படிப்படியாக உயரிய
வாழ்வை அமைத்துக்கொள்ளவேண்டும் என்பது இதன் கருத்தாகும். இவற்றுள் உரிய
வாழ்க்கைமுறை என்பது கட்டாயம்; உயரிய வாழ்வு என்பது பெருமை என்று
கூறலாம். உள்ளது சிறத்தல் (பரிணாமம்-
Evolution
) உயிர்களின் பண்பு என்னும் உயிரியல் கோட்பாடு இங்கு நினைவுகூரத்தக்கது.
திருக்குறளில்
தமிழ் அறநூல்களுள் பல்வேறு காரணங்களால் திருக்குறள் தனிச் சிறப்பிடம்
பெற்றுத் திகழ்கிறது. இது மானுட மேம்பாட்டுக்காகத் திட்டமிட்டுப்
படைக்கப்பட்ட நூலாகும். அதனால் வையத்துள் வாழ்வாங்கு வாழவேண்டியதன்
தேவையைத் திருக்குறள் ஐந்தாம் அதிகாரத்தில் வலியுறுத்தி2
அறன் வலியுறுத்தல் என்னும் தலைப்பிலான நான்காம் அதிகாரத்தில் மனமாசு
இன்மையே அடிப்படையான அறம் என்று சுட்டியுள்ளது.3
ஒருவன் எப்படியாக விரும்புகிறானோ அப்படியே ஆகிறான் என்னும் உளவியல்
கொள்கையை விளக்கி, செய்யவேண்டியவை; செய்யத்தகாதவை(
High risk behaviour ):
மேன்மையான குணங்கள், சீரழிக்கும் எண்ணங்கள் ஆகியவற்றை
எடுத்துக்கூறியுள்ளார்.
அன்புடைமை, பொறையுடைமை(
Patience ),
கல்வி, பெரியாரைத் துணைக்கோடல்
( Procuring the Aid of Great Men ),
அடக்கமுடைமை, அறிவுடைமை, ஆள்வினையுடைமை
( Manly effort ),
ஒப்புரவறிதல்
( Benevolence
),
ஒழுக்கமுடைமை
(Observance
of the
Proprieties of
life), கண்ணோட்டம்
(Gracious
demeanour),
காலமறிதல், குறிப்பறிதல்
(Knowing the sovereign’s Mind ),
சான்றாண்மை
( Perfection of Good Qualities ),
செங்கோன்மை
( Upright Government )
,சொல்வன்மை ( The
Power of Speech ),
தெரிந்துசெயல்வகை
( Acting with Fore-thought
),
நடுவுநிலைமை ( Equity
),
நாணுடைமை
( Modesty ),
பண்புடைமை
(
Proper behaviour ),
பழைமை ( Long standing friendship ),
பெருமை
( Greatness ),
தவம்
( The quality of being morally strict),
மானம் (Honor),
வாய்மை
( Truthfulness ),
வினைத்திட்பம் (Firmness of Action ),
வினைத்தூய்மை ( Purity of Action )
போன்ற பண்புகள் ஒருவனை இன்பமாகவும் உயர்வாகவும் சமூகத் தன்மையுடனும்
(
Socially fit )
வாழவைக்கும். தன்னையறிதல், அறிவியல்மனப்பான்மை, பேரருளுடைமை, பெரியாரை
மதித்தல், சுற்றம்
போற்றல், அறிவு வளர்ச்சி, தன்னடக்கம் ஆகிய குணங்கள் தனிமனித
வளர்ச்சிக்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் வாய்ப்பாவனவாகும். இனி,
திருக்குறளில் காணலாகும் வாழ்வியல் மென்திறன்கள் குறித்த கருத்துகள்
பட்டியலிடப்படுகின்றன.
இறைவனை இடைவிடாது நினைந்து வாழ்த்தி உயர்வாழ்க்கையைப் பின்பற்றினால்
துன்பங்களிலிருந்து விடுபெறலாம்.
3
உலக உயிர்களின் உணவு உற்பத்திக்கும் உணவாகவும் வாழ்க்கைத் தேவைகளுக்கும்
பயன்படும் மழை வளத்தைப் பேண வேண்டும். இல்லாவிடில் துன்பம் உண்டாகும்.
முடிந்தவரை நல்லொழுக்கங்களைக் கடைபிடிக்க வேண்டும் இத்தைகைய
ஒழுக்கவாணர்களை உலகம் ஏற்றுப் போற்றும். அறத்தினால் சிறப்பும் வளமையும்
ஏற்படும். அதனால் அறவாழ்க்கையை அமைத்துக்கொண்டு, பழி ஏற்படுவதனைச்
செய்யக்கூடாது.
இல்லற வாழ்க்கை மேன்மையானது. அன்பும் அறனும் வளருமிடமாக ஒவ்வொரு
குடும்பமும் விளங்கவேண்டும். அதன் வாரிசுகள் வலிமைமிகு குடிமக்களாக
விளங்குமாறு வளர்க்கவேண்டும்.
ஒரு குடும்பத்தில் கணவனும் மனைவியும் கருத்தொற்றுமையுடன்
பண்புள்ள மக்களைப் பெற்று வளர்த்து அவர்களை உயர் வாழ்க்கைக்குத்
தகுதிப்படுத்தி, பெண்மையைப் போற்றும் பண்பை வளர்க்கவேண்டும்.
மற்ற உயிர்களைக் காட்டிலும் மனிதன் அன்பும் இரக்கமும் உடையவனாக
வாழவேண்டும். அன்பில்லாத மனிதன் நடைப்பிணத்திற்கு ஒப்பானவன். அன்பே சிவம்
என்பதை நடைமுறைப்படுத்தவேண்டும்.
தன்னைப் போலவே மற்றவர்களையும் கருதி விருந்து உபசரிக்க வேண்டும். இனியவை
கூறி இன்னாதவற்றை விலக்கி இன்முகத்தோடு பழகவேண்டும். மனித வாழ்க்கை
தொடர்நடவடிக்கை என்பதைப் புரிந்துகொண்டு நன்மையை மிகுவிக்கவேண்டும்.
நன்றிபாராட்டும் பண்பு நன்மைகள் பலவற்றுக்கு வித்திடுவதாகும்.
எதையும் விருப்புவெறுப்பு இல்லாமல் நடுவுநிலைமையுடன் அணுகும் அறிவியல்
மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளவேண்டும். உண்மையை உணரும்
மெய்யாளுமையைக்
கைக்கொண்டால் சிறக்கலாம். எதிலும் உறுதிவேண்டும். அதே போல அடங்கவேண்டிய
இடம், நேரம் ஆகியவற்றை உணர்ந்து நடக்கவேண்டும். புலன்கள், நாக்கு
ஆகியவற்றில் அடக்கம் தேவை.
ஒவ்வொரு மனிதனையும் உலகம்
கூர்ந்துகவனித்துவருகின்றது. ஒருவனுடைய சிந்தனைஇ செயல்இ சாதனை ஆகியவற்றின்
அடிப்படையில் எடைபோட்டு மதிப்பிடுகின்றது. அதனால் ஒழுக்கம் உயிரைவிடவும்
மேன்மையானது என்பது வள்ளுவ வாய்மை. ஒழுக்கத்தில் தவறினால் எவராயினும்
மதிப்பிழந்துபோவர். அதனால் ஒழுக்கத்தை இடைவிடாமல் போற்றவேண்டும். நடத்தை
ஒழுங்கைப் போலவே காமச் செயல்பாடுகளிலும்நெறிதவறாமை இன்றியமையாதது.
இன்பம் அனுபவித்தல் எல்லா உயிர்களுக்கும் தேவையானது. என்றாலும் அது
முறைதவறியதாகவோ ஒழுக்கம் குன்றியதாகவோ அமைந்துவிடக் கூடாது. இன்றைய
இளைஞருலகை அச்சுறுத்திவரும் எய்ட்ஸ் போன்ற கொடுமைகளிலிருந்து
விடுபட இந்த அறவுரை பயன்படத்தக்கது
4
ஏதாவது காரணம் பற்றியோ அல்லது அறியாமையினாலோ ஒருவன் இன்னா செய்யும்போது
வெறுப்படைந்து தானும் அதைத் திருப்பிச் செய்யாமல் பொறுத்துக்கொள்ளும்
பொறையுடைமை தேவை. தன்னைத் தோண்டுவோரையும் பொறுத்துக்கொள்ளும் நிலம் போலத்
தீமையிலும் அமைதி காக்க வேண்டும்.
பிறருக்குச் செல்வம், கல்வி, அழகு போன்றவை மிகும்போது அதை
ஏற்றுக்கொள்ளாமல் பொறாமைப்படக் கூடாது. மனதால் பொறாமைப் பட்டாலும் அது
தீமை ஆகும். ஒரு சில காரணங்களால் பற்றாக்குறையோ வறுமையோ
ஏற்படும்போதுகூடப் பிறர்க்குரிய பொருளை வவ்வக் கருதக்கூடாது. அவ்வாறு
செய்தால் நீங்காத பழி ஏற்படும்.
ஒருவர் இல்லாதபோது அவரை இகழ்துரைக்கவோ அவரைப்பற்றிக் குற்றம் கூறவோ
முயலக்கூடாது. இத்தகைய புறம் கூறும் மனநிலை சமுதாய அமைதியைக்
கெடுத்து விடும்.
இனியவை கூறுதலைப் போலவே கேட்பவருக்குப் பயன் உள்ளவாறும் பேசவேண்டும்.
பேச்சாடல் என்பது பயனுள்ள இனிய சமூகச்செயல்பாடாக
அமையவேண்டும்.
செயலாற்றவேண்டியது ஒவ்வொருவனின் கடமையும் ஆகும். ஆனால் அது நன்மை
பயப்பதாகவும் தீமையை விலக்குவதாகவும் அமைய வேண்டும். மறந்தும் தீமை தரும்
செயல்களைச் செய்து விடக்கூடாது.
சமுதாயச் சட்டதிட்டங்கள், கட்டுப்பாடுகள், நீதிநெறிமுறை போன்றவை
கூறப்பட்டிருந்தாலும் சூழலுக்கு ஏற்ற, நன்மையை மிகுவிக்கின்ற
செயல்களிலும் ஒருவன் ஈடுபட வேண்டும். ஓர் ஊரிலுள்ள நன்னீர்க் கிணறு
போலவும் பயனுள்ள மரம் போலவும் சமூகப்பயனுடன் வாழவேண்டும். ஒருவனிடம்
உள்ள அன்பு, அறிவு, வசதி போன்றவை எளிமையாக, தற்பயனை எதிர்பாரத முறையில்
மற்றவர்களுக்குப் பயன்பட வேண்டும். அதற்கு ஈகைக் குணம் இன்றியமையாதது.
பசித்தவர்க்குப் பசிபோக்கலும் வறியாரின் வறுமைபோக்கலும் சமூக
நல்லிணக்கத்துக்கும் அமைதிக்கும் தேவையானவை.
ஒவ்வொரு மனிதனும் புகழ் ஏற்படும்படி அற வாழ்வு வாழவேண்டும். அதற்குச்
சூழ்நிலையறிந்து நன்மையை மிகுவிக்கும் செயல்களில் ஈடுபடவேண்டும்.
தொடர்புடையவர்களிடம் அன்பும் உயிரினங்கள் மீது அருளும் சுற்றுச்சூழல்
பாதுகாப்புணர்வும் ஒவ்வொருவருக்கும் தேவை. தனக்கு இந்த உலகத்தில் வாழ
எவ்வளவு உரிமை இருக்கிறதோ அந்த உரிமை மற்ற உயிர்களுக்கும் உண்டு என்பதை
ஒவ்வொருவரும் உணர்ந்து கடைபிடிக்கவேண்டும். தனது தேவைக்காகவும்
சுவைக்காகவும் பிற உயிர்களைக் கொன்று புலால் உண்பதைத் தவிர்க்க வேண்டும்.
இந்த உலகத்தில் பல்லுயிப்பெருக்கம் (Bio-diversity)
பராமரிக்கப்பட்டால் தான் இயற்கைச்சூழல் சரியாக இருக்கும்.
.
5
தனிமனித அறங்களைச் சொன்ன அறநூல்கள் மனிதர்களின் கூட்டாகிய சமூக
அறங்களையும் கூறியுள்ளன. மனிதனை ‘கூடி வாழும் சமூக விலங்கு’
என்று கூறுவதுண்டு. ஒவ்வொரு தனிமனிதனும் அறவுணர்வோடு வாழ்வதைப்போலவே அவன்
சமூக அங்கத்தினன் ஆகும்போதும் சமூக ஒற்றுமையிலும் வளர்ச்சியிலும்
ஆர்வம் காட்டவேண்டும். தனிமனிதனும்
சமூகமும் ஒருவருக்கொருவர் கொண்டு கொடுத்து ஒருங்கே வளரவேண்டும். சமூகம்
ஏற்றுக்கொள்ளாத தனிமனித வளர்ச்சி நிலைத்துநிற்காது.
இவற்றை இளைஞர்கள் கற்று நல்லனவற்றைத் தெரிந்துகொண்டு விடாது தொடர்ந்து
கடைபிடித்தால் உலகம் போற்றும் உத்தமனாக வாழமுடியும். அப்போது ஒவ்வொரு
தனிமனிதனும் சமூகத்தின் சொத்தாக மதிக்கப்படுவான். அறத்தை
வணிகநோக்கில்
செய்யாமல்
அறத்தின் வளர்ச்சிக்காக, மானுடமேம்பாட்டுக்காகச் செய்யும் மனநிலையை
வளர்த்துக்கொள்ளவேண்டும். அதோடு ஒவ்வொரு தனிமனிதனின் நடத்தைகளும்
மற்றவர்களுக்குப் பாடமாக அமைதல்தகும். திட்டமிட்டு வளர்ச்சிநோக்கிலான
மாற்றங்களை ஏற்படுத்துமாறு சிந்தனைப் போக்கு ஏற்படவேண்டும். இத்தகைய
கருத்துகளுக்கு முதன்மை தரும்போது ‘என்னால் முடியும்’
, ‘எனக்கு
வலிமை இருக்கிறது’
என்னும் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வாய்ப்பாகும். இவை பல
நூற்றாண்டுகளுக்கு முன்னர் கூறப்பட்டவை. என்றாலும்
நிகழ்காலத் தகவுடையன; நிலைபேறுடையன
; எவரும் ஏற்கக்கூடியன.
திருக்குறளைப் போலவே மற்ற அற இலக்கியங்களிலும் வாழ்வியல் சிந்தனைகள்
கொட்டிக்கிடக்கின்றன. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல
இதுவரை திருக்குறள் கூறியுள்ள மென்திறன்கள் எடுத்துரைக்கப்பட்டன. தமிழ்
அறநூல்களில் இவற்றையொத்த கடலளவு செய்திகள் மூழ்கிக் கிடக்கின்றன. இவற்றை
முத்தெடுப்பது போல வெளிக்கொணர்ந்து முறையாகப் புரிந்துகொண்டு
செயலாற்றினால் மானுடம் வளப்படும். இந்தக் கட்டுரையில் வாழ்வியல்
மென்திறன்கள் பற்றிக் கூறப்பட்டது. இவ்வாறே வன்திறன்கள் (
High risk behaviour
)
பற்றியும் கூறப்பட்டுள்ள கருத்துகளை அறிந்தால் விழிப்புணர்ச்சி
ஏற்படும். நமது அற மரபுச் செல்வங்களைப் பயன்கொண்டு உலக மானுடம்
வளர்க்கலாம்.
குறிப்புகள்
1.
கூக்லி இணையதளச் செய்தி.
2.
திருக்குறள், 50, 3. மேற்படி,
34.
பயன்பட்டவை
1.
திருக்குறள் மூலமும் பரிமேலழகருரையும் ( மூன்று தொகுதிகள்), மதுரைப்
பல்கலைக்கழகம்.
2.
கூக்லி இணையதளம்.
-------நிறைவு------
muthubilla2@gmail.com
|