கும்கி !

 

நடிப்பு:  விக்ரம் பிரபு

இயக்கம் : பிரபு சாலமன்

திரைவிமர்சனம்:  கவிஞர் இரா ,இரவி

மைனா படத்தின் இயக்குனர்  பிரபு சாலமன் இயக்கத்தில் வந்துள்ள தரமான படம் .குடும்பத்துடன் தைரியமாக சென்று பார்க்கக் கூடிய படம் .நடிகர் திலகம் சிவாஜியின் பேரன் , இளைய திலகம் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு .பணக்கார வீட்டுப் பையனாக இருந்தபோது்ம் யானைப் பாகனாக மிக நன்றாக நடித்துள்ளார் .அறிமுகமான முதல் படத்திலேயே முத்திரை பதித்து உள்ளார். பாராட்டுக்கள் .கதாநாயகி லட்சுமி மேனன் அல்லி பாத்திரத்தில் நடித்து பார்பவர்களின் உள்ளதை   அள்ளி விடுகிறார் .நல்ல நடிப்பு .யானையுடன் பயமின்றி நடித்துள்ளார் .

 

காடும் காடு சார்ந்த கதையுமாக மிக நன்றாக இயக்கி உள்ளார் .ஆபாசமின்றி படம் எடுத்ததற்காக இயக்குனர்  பிரபு சாலமனுக்கு பாராட்டுக்கள் .பின்னணி இசை, பாடல் மிக நன்று . இமான் சிறப்பாக  இசை அமைத்து உள்ளார். ஒளிப்பதிவு பிரமாண்டம். வனப்பகுதியும் ,பிரமாண்ட அருவியின் உச்சியில் படம் பிடித்த விதமும் ,இறுதிக் காட்சியில் இரண்டு யானைகளின் மோதலும் பிரமிப்பு ஒளிப்பதிவாளர் சுகுமார் மற்றுமொரு பாலு மகிந்திரா .முத்திரை பதித்து உள்ளார் .கதாநாயகி லட்சுமி மேனன் அல்லியின் அப்பாவாக நடித்தவர் மிக நன்றாக நடித்துள்ளார் .

 

தம்பி ராமையா மனதிற்குள் பேசுவது போன்ற வசனங்கள் நகைச்சுவை சர வெடிகள் .உண்டியல் என்ற பெயரில்தம்பி ராமையாவுடன்  நடிகர் நன்றாக நடித்துள்ளார் .படத்தில் வசனம் மிக நன்று .200 ஆண்டு கால வரலாறு உள்ள வன மக்கள் பண்பாடு ,கட்சிக் கொடிகள் இன்றி அரசாங்க இலவசங்கள்  இன்றி வாழும் உயர்ந்த வாழ்க்கை .

 

அறுவடை நேரத்தில் ஊருக்குள் புகுந்து அழிக்கும் காட்டு யானையை விரட்ட கும்கி யானையை வரவழைக்கின்றனர் . கும்கி யானை செல்ல முடியாத சூழலில் கோயில் யானையை கும்கி யானை என்ற பெயரில் அழைத்து செல்கின்றனர் .வானவாசிகள் வரவேற்று மாலையிட்டு சந்தானம்  குங்குமம் இட்டு பாத பூஜை செய்து எங்களை காக்க  வந்த சாமி என்கின்றனர் .கோயில் யானை பாகன் இரண்டு நாட்களுக்கு மட்டும் என்ற சென்றவன் அல்லியின் அழகில் மயங்கி காதிலிக்கிறான் .அங்கேயே தங்கி விடுகிறான். வனவாசிகளுக்கு  கும்கி யானைக்கும் கோயில் யானைக்கும் உள்ள வேறுபாடு தெரியாமலா இருக்கும் .இந்த இடத்தில இயக்குனர்  பிரபு சாலமனுக்கு சறுக்கல் .

 

இயற்கை வனக் காட்சிகள் கண்ணிற்கும், மனதிற்கும் குளிர்ச்சி .மாணிக்கம் என்ற பெயரில் வரும் கோயில் யானைதான் முதல் கதாநாயகன் .விக்ரம் பிரபு இரண்டாம் கதாநாயகன் என்று சொல்லும் அளவிற்கு மாணிக்கம் யானையின் நடிப்பு மிக நன்று .உருவத்திலும் நடிப்பிலும் பிரமாண்டம்யானையை ராம நாராயணன் அளவிற்கு பயன்படுத்தாதற்கு நன்றி சொல்ல வேண்டும் .

 

இறுதிக் காட்சியில் யானைக்கு மதம் பிடிக்கவில்லை எனக்குதான் மதம் பிடித்து விட்டது .என்னால்தான்  மாணிக்கம் யானையும் மாமா தம்பி ராமையாவும் .உண்டியல் நண்பனும் இறக்க காரணம் ஆகி விட்டேன் என்று அழும் காட்சி நன்று .

 

கடைசியில் ஜோடிகளை இணைத்து வைக்கும் வழக்கமான எதிர்ப்பார்த்த முடிவை தராதது இயக்குனர்  பிரபு சாலமன் பதித்துள்ள தனி முத்திரை .



eraeravik@gmail.com