தனித்தமிழ்த்தந்தை மறைமலையடிகள் விழா
க.தமிழமல்லன்
தனித்தமிழ்த்தந்தை
மறைமலையடிகள்
விழா
சென்னை
பாரதியார்
இல்லத்தில்
15.7.2013 அன்று
மாலை
நடைபெற்றது.
த.தமிழ்த்தென்றல்
தலைமைதாங்கினார்.
பாவலர்
கா.முருகையன்
வரவேற்புரை
நிகழ்த்தினார்.விழாவில்
திருவள்ளுவர்
படத்தைப்
பாவலர்
இரா.தேவதாசு
திறந்து
வைத்தார்.
மறைமலையடிகள்
படத்தை
முனைவர்
மறைமலை
திறந்து
வைத்தார்.
பாவாணர்
படத்தை
புலவர்
மறைமலையான்
திறந்து
வைத்தார்.
மறைமலையடிகளின்
தமிழ்ப்பணிகள்
என்னும்
தலைப்பில்
முனைவர்
க.தமிழமல்லன்
அடிகளின்
அடிகள்
விழுந்தனவா
என்னும்
தலைப்பில்
முனைவர்
க.ப.அறவாணன்,மறைமலையடிகளின்
தனித்தமிழ்க்
கோட்பாடு
என்னும்
தலைப்பில்
முனைவர்
முத்துக்குமரன்,தமிழகவரலாற்று,பண்பாட்டுப்
போக்கில்
ஒரு
திருப்புமுனைஎன்னும்
தலைப்பில்
முனைவர்
பொற்கோ
ஆகியோர்
ஆய்வுரை
நிகழ்த்தினர்.
பண்பலைத்தமிழ்,தமிழா
தமிழ்பேசு,தனித்தமிழ்ப்பெயர்கள்,தொலைக்காட்சித்தமிழ்,தமிழ்வழிக்கல்வி
என்னும்
தலைப்புகளில்
பாவலர்கள்
வெற்றியழகன்,முனைவர்
இளமாறன்,இளவரச
அமிழ்தன்,ஆ.குமாரசாமி,இரா.தேவதாசு
ஆகியோர்
பாடல்கள்
வழங்கினர்.இளையவாலி
நன்றிகூறினார்.
விழாவில்
பின்வரும்
தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.
-
1.தமிழ்த்தாய்
சிலைஅமைக்கும்
தமிழகஅரசைத்தனித்தமிழ்
இயக்கம்
பாராட்டுகிறது.
-
2.
தமிழ்நாட்டில்
தமிழ்
பயிற்றுமொழிக்
கொள்கையை
அடிப்படைக்
கல்விமுதல்
ஆராய்ச்சி,தொழிலியல்
கல்விவரை
கடைப்பிடிக்க
உடனடியாகத்
த.நா.அரசு
முன்வரவேண்டும்.
-
3.த.நா.வழக்குமன்றங்களில்
தமிழில்
வழக்காடவும்
தமிழில்
தீர்ப்புத்
தரப்படவும்
த.நா.அரசும்
அனைத்துக்கட்சிகளும்
சான்றோர்களும்
மாணவர்களும்
முயலுதல்
வேண்டும்.
-
4.
தமிழ்
நாட்டில்
விற்பனை
செய்யப்படும்
அனைத்துப்
பொருள்களுக்கும்
தமிழில்
செயல்முறைக்
கையேடுகள்
அளிக்கத்
த.நா.அரசு
வற்புறுத்த
வேண்டும்.
-
5.
தனியார்ப்பள்ளிகளில்
கட்டணமில்லா
இலவயக்கல்வியைத்
தமிழ்வாயிலாக
அளிக்கத்
தமிழ்
நாடு
அரசு
முன்வரவேண்டும்.
-
6.தமிழில்
படித்தால்
தான்
இனிமேல்
வேலைவாய்ப்பு
வழங்கப்படும்
என்னும்புதிய
உத்தரவு
ஒன்றைத்
தமிழ்
நாட்டு
அரசு
வெளியிட்டுச்
செயற்படுத்த
வேண்டும்.
திரளாக
வந்திருந்த
அவையினர்
தீர்மானங்களைக்
கைதட்டி
நிறைவேற்றினர்.நிகழ்ச்சி
ஏற்பாட்டை
அறிஞர்
பலரும்
பாராட்டி
மகிழ்ந்தனர்.
vtthamizh@gmail.com
|