தமிழ்க்
கலை
இலக்கிய
வெளியின்
சுதந்திரச்
சிந்தனையாளர்
டிராட்ஸ்கி
மருது
-
நூல்
வெளியீட்டு
விழா
சென்னை.ஜன.
08.
அகநி
வெளியீட்டகத்தின்
சார்பில்
திரைப்பட
கலை
இயக்குனரும்
ஓவியருமான
டிராட்ஸ்கி
மருது
குறித்து
கவிஞர்
அ.வெண்ணிலா
தொகுத்த
’காலத்தின்
திரைச்சீலை
-
டிராட்ஸ்கி
மருது’
நூல்
வெளியீட்டு
விழா
சென்னை
மயிலாப்பூரிலுள்ள
கவிக்கோ
மன்றத்தில்
நடைபெற்றது.
இவ்விழாவிற்கு
வருகை
தந்த
அனைவரையும்
கவிஞர்
மு.முருகேஷ்
வரவேற்றார்.
நிகழ்விற்கு
தலைமையேற்ற
தமிழக
வேளாண்மைத்
துறை
இயக்குநர்
டாகடர்
மு.ராஜேந்திரன்
இ.ஆ.ப.,
நூலை
வெளியிட,
ஒளிப்பதிவாளர்
பி.சி.ஸ்ரீராம்
பெற்றுக்
கொண்டார்.
விழாவில்,
திரைப்பட
இயக்குநர்கள்
மிஷ்கின்,
கவிதாபாரதி,
தமிழ்நாடு
வீட்டுவசதி
வாரியத்தின்
மாநிலப்
பதிவாளர்
மு.ராஜசேகர்,
கவிஞர்கள்
தமிழச்சி தங்கபாண்டியன்,
தமிழேந்தி,
தமிழ்
ஆர்வலர்கள்
தி.கிள்ளிவளவன்,
செளந்தர்
வல்லத்தரசு,
தி.ரமேஷ்
ஆகியோர்
வாழ்த்துரை
வழங்கினர்.
நூலை
வெளியிட்ட டாகடர்
மு.ராஜேந்திரன்,
‘கலைத்துறையின்
பல்வேறு
நுட்பமான
திறன்களைப்
பெற்றுள்ளவர்
டிராட்ஸ்கி
மருது.
எளிய
மனிதர்களின்
நல்ல
முயற்சிகளுக்கு
எந்த
பிரதிபலனும்
எதிர்பாராமல்
தனது
பங்களிப்பினைச்
செய்து
வருபவர்.
டிராட்ஸ்கி
மருது
போன்ற
மக்கள்
கலைஞர்களை
போற்றிக்
கொண்டாட
வேண்டியது
இச்சமூகத்தின்
முக்கியமான
கடமையாகும்’
என்று
பேசினார்.
நூலைப்
பெற்றுக்
கொண்ட ஒளிப்பதிவாளர்
பி.சி.ஸ்ரீராம் பேசும்போது,
’நம்
தமிழ்ச்
சமூகத்தின்
ஆரம்பக்
காலங்களில்
கலை
உயரிய
வடிவமாக
நம்மிடையே
இருந்தது.
அந்தக்
கலை
உணர்வு
எங்கு
எப்பொழுது
தேய்ந்து
காணாமல்
போனது
என்று
எனக்குச்
சொல்லத்
தெரியவில்லை.
நம்மிடையே
கலை
தனியாக
செயல்படவில்லை.
அப்படி
செயல்பட்டிருந்தால்,
நம்
வாழ்க்கைத்
தரம்
இன்னும்
சிறப்பானதாக
அமைந்திருக்கும்.
கலையின்
சுதந்திரத்தை
முழுமையாக
அனுபவிக்கிற
ஒருவனாலேயேதான்
அதன்
அனைத்துச்
சிறப்புகளையும்
வெளிக்கொண்டு
வர
முடியும்.
எந்தத்
தடைகளுக்குள்ளும்
சிக்கிக்
கொள்ளாத
கலைஞன்,
மனிதன்
டிராட்ஸ்கி
மருது.
ஓவியத்துறை,
திரைத்துறை
என
மருது
எந்த
துறையில்
கால்ப்
பதித்தாலும்
தனக்கான
கொள்கையை
விட்டுக்
கொடுக்காத
நேர்மைக்குச்
சொந்தக்காரர்.
தமிழ்க்
கலை
இலக்கிய
வெளியில்
முழுச்
சுதந்திரச்
சிந்தனையுடன்
இருப்பதால்தான்
அவரால்
உலக
அளவிலான
கலைப்படைப்புகளைத்
தர
முடிந்திருக்கிறது’
என்று
குறிப்பிட்டார்.
ஓவியர்
டிராட்ஸ்கி
மருது
ஏற்புரையாற்றினார்.
நிறைவாக,
கவிஞர்
அ.வெண்ணிலா
நன்றி
கூறினார்.
படக்
குறிப்பு;
அகநி
வெளியீட்டகத்தின்
சார்பில்
சென்னையில்
நடைபெற்ற
நூல்
வெளியீட்டு
விழாவில்,
‘காலத்தின்
திரைச்சீலை
டிராட்ஸ்கி
மருது’
நூலை
டாக்டர்
மு.ராஜேந்திரன்
வெளியிட,
ஒளிப்பதிவாளர்
பி.சி.ஸ்ரீராம்
பெற்றுக்கொண்டபோது
எடுத்த
படம்.
அருகில்
(இடமிருந்து)
மு.முருகேஷ்,
மு.ராஜசேகர்,
அ.வெண்ணிலா,
ஓவியர்
டிராட்ஸ்கி
மருது,
தி.கிள்ளிவளவன்
ஆகியோர்
உள்ளனர்.
|