காலத்தின்
தேவைகேற்ப
கவிதை
வடிவமும்
மாறிட
வேண்டும்
-
நூல்
வெளியீட்டு
விழாவில்
பேச்சு
-
வந்தவாசி.ஜூன்.01.
அகநி
வெளியீட்டகத்தின்
சார்பில்
வந்தவாசியை
அடுத்த
அம்மையப்பட்டு
கிராமத்தில்
பாவலர்
சொல்லினியன்
எழுதிய
‘தடி’
மரபுக்
கவிதை
நூல்
அறிமுகம்,
‘
மீண்டும்
என்
தொட்டிலுக்கு...’
புதுக்கவிதை
நூல்
வெளியீட்டு
விழாவில்,
வேகமாய்
மாறி
வருகிற
காலச்
சூழலுக்கு
ஏற்ப,
கவிதை
வடிவங்களும்
மாற
வேண்டியது
காலத்தின்
கட்டாயம்
என்று
அகநி
வெளியீட்டகத்தின்
இயக்குநரும்
கவிஞருமான
மு.முருகேஷ்
குறிப்பிட்டார்.
இவ்விழாவிற்கு
அம்மையப்பட்டு
ஒன்றியக்குழு
உறுப்பினர்
சு.இரமேஷ்
தலைமையேற்றார்.
ஓட்டல்
உரிமையாளர்
சுரேஷ்முருகன்,
கவிஞர்
பு.குமரன்
ஆகியோர்
முன்னிலை
வகித்தனர்.
வேட்டவலம்
சார்பதிவாளரும்
பாவலருமான
சொல்லினியன்
எழுதிய
‘மீண்டும்
என்
தொட்டிலுக்கு...’
புதுக்கவிதை
கவிதை
நூலை
கவிஞர்
அ.வெண்ணிலா
வெளியிட,
வந்தவாசி
துணை
வட்டார
வளர்ச்சி
அலுவலர்
அ.பெ.வெங்கடேசன்
பெற்றுக்
கொண்டார்.
பாவலர்
சொல்லினியன்
எழுதிய
‘தடி’
மரபுக்கவிதை
நூலையும்,
‘மீண்டும்
என்
தொட்டிலுக்கு...’
புதுக்கவிதை
நூலையும்
அறிமுகம்
செய்து
கவிஞர்
மு.முருகேஷ்
பேசும்போது,
நீண்ட
நெடிய
வரலாற்றினை
உடைய
நம்
தமிழ்மொழியில்
படைக்கப்பட்ட
ஆரம்பகால
இலக்கியங்கள்
யாவையும்
காப்பியங்களாகவே
அமைந்தன.
மேலும்,
மரபுப்
பாடல்களே
தமிழில்
எழுதப்பட்டன.
இலக்கணப்
புலமையும்
இலக்கியம்
கற்றோராலும்
மட்டுமே
இலக்கியங்கள்
படைக்கப்பட்ட
காலம்
மாறி,
குறைந்த
அளவே
கல்வி
பெற்ற
பலரையும்
படைப்பாளியாக்கியது
இருபதாம்
நூற்றாண்டின்
பிற்பகுதியில்
அறிமுகமான
புதுக்கவிதை.
ஆங்கில
இலக்கியம்
படித்தவர்களால்
அறிமுகம்
செய்யப்பட்ட
புதுக்கவிதை
எளிய
வாசகரையும்
சென்றடைந்தது.
எந்த
ஒரு
படைப்பும்
வாழ்கிற
காலத்தின்
குரலைப்
பிரதிபலிப்பதோடு,
பெருவாரியான
மக்களைச்
சென்றடையும்போதுதான்
படைப்பின்
நோக்கம்
நிறைவேறும்.
அதோடு,
காலச்
சூழ்நிலைக்கேற்ப
படைப்பின்
வடிவமும்,
அதில்
சொல்லப்படும்
செய்தியும்
மாற
வேண்டியது
காலத்தின்
கட்டாயமாகும்.
இதனை
சரியாய்
உள்வாங்கிக்
கொண்ட
படைப்புகளே
வெற்றி
பெறும்.
பாவலர்
சொல்லினியன்
இலக்கியச்
செறிவோடு
மரபுக்கவிதைகளும்
எழுதியுள்ளார்.
சாதாரண
வாசகர்களையும்
ஈர்க்கும்
வண்ணம்
எளிய
மொழியில்
புதுக்கவிதைகளும்
படைத்துள்ளார்.
மரபுக்கவிதையில்
மொழி
உணர்வு,
இன
விடுதலை
பற்றிய
ஆழ்ந்த
அக்கறையும்,
புதுக்கவிதையில்
குழந்தைகளின்
இயல்பான
வாழ்வியல்
காட்சிகளையும்
நயம்பட
கவிதையாக்கியுள்ளார்.
மரபுப்பா,
புதுப்பா
என
எதை
எழுதினாலும்,
அதில்
கவிஞரின்
சமூக
சிந்தனையும்
கலந்தேயிருப்பதே
இவரது
கவிதைகளின்
சிறப்பான
அம்சமாகும்
என்று
பேசினார்.
பாவலர்
சொல்லினியன்
ஏற்புரையில்,
கவிதை
மனநிலையோடு
எப்போதும்
வாசிப்பை
நேசிக்கிற
எவராலும்
எனது
கவிதைகளை
எளிதாக
உள்வாங்கிட
முடியும்
என்றார்.
நிறைவாக,
மா.குமரன்
நன்றி
கூறினார்.
படக்
குறிப்பு
:
வந்தவாசியை அடுத்த
அம்மையப்பட்டு
கிராமத்தில் அகநி
வெளியீட்டகத்தின்
சார்பில்
நடைபெற்ற
பாவலர்
சொல்லினியன்
எழுதிய
‘மீண்டும்
என்
தொட்டிலுக்கு...’
கவிதை
நூல்
கவிஞர்
அ.வெண்ணிலா
கவிதை
நூலை
வெளியிட,
வந்தவாசி
துணை
வட்டார
வளர்ச்சி
அலுவலர்
அ.பெ.வெங்கடேசன்
பெற்றுக்
கொண்டபோது
எடுத்த
படம்.
(
நடுவில்)
நூலாசிரியர்
பாவலர்
சொல்லினியன்,
கவிஞர்
மு.முருகேஷ்,
ஒன்றியக்குழு
உறுப்பினர்
சு.இரமேஷ்
ஆகியோர்
உள்ளனர்.
|