இலக்கியப்பார்வையில் நடுகல்


வைகை அனிஷ்

ஒரு நாட்டின் இனம், மொழி, வரலாறு, பண்பாடு, பாரம்பரியம் போன்றவற்றை தெரிந்து கொள்வதற்கு முக்கியமாக பயன்படுவது கல்வெட்டுக்கள், வெளிநாட்டார் குறிப்பு, நடுகல், நாணயம் போன்றவை ஆகும். அந்த வகையில் நடுகல் பற்றியும் இலக்கியப்பார்வையில் நடுகல் செய்திகளையும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.

நடுகல்

பெருங்கற்காலம் தொடங்கி இறந்தவர்களுக்கு நினைவுக்கற்கள் உலகம் எங்கும் எடுக்கப்பட்டாலும் போர்களில் மாண்டவர்களுக்கு நடுகல் எடுப்பது சிறப்பாக கருதப்பட்டு வந்துள்ளது. தமிழ் மொழியில் நடுகல் என்றும் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழியில் வீரகலு அல்லது வீர சிலாலு எனவும் அழைக்கப்படுகிறது. வடக இந்தியாவில் இந்நடுகற்களை பலியா என்றும் கம்பியா என்றும் சர என்றும் அவைகை அழைக்கின்றனர்.

நடுகற்களின் கற்களின் பயன்கள்

நடுகற்கள் மூலம் பண்டைய காலத்தில் மக்கள் வாழ்வு முதல் சாவு வரை அறியலாம்.

1.வட்டெழுத்துக்களின் பரிணாம வளர்ச்சி
2.நாட்டை ஆண்டு சிறு மற்றும் குறுநில மன்னர்கள்
3.போரில் மாண்ட தொல்குடி, வேளிர் அரசியல்
4.வட்டார வழக்குச்சொற்கள்
5.உறவு முறைகள்
6.நடுகல் வழிபாடு சிவ வழிபாட்டில் இணைவது
7.வட்டெழுத்திலிருந்து தமிழ் மாற்றம் அடைவது
8.பல்வேறு இனக்குழு மக்களின் வாழ்க்கை முறைகள்
9.காட்டு விலங்குகளை கொன்று நாட்டைக் காத்தல்
10.ஆயுதங்களின் பயன்பாடு அறிதல்
போன்றவற்றை அறியலாம்.


இலக்கியத்தில் நடுகல்

சங்க காலத்தில் வீரர்களுக்கிருந்த பெருமைகளை சங்கப்பாக்கள் தெரிவிக்கின்றன. அகம், புறம் என வாழ்க்கையை பிரித்துக்கொண்ட தமிழர், புறத்தில் போர்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர். தொல்காப்பிய இலக்கண நூலில் புறத்திணையியலில் நடுகற்கள் பற்றிய ஏராளமான செய்திகள் விரவிக்கிடக்கின்றன.

தொல்காப்பியர் அகத்திணையை ஏழாக வகுத்துக்கொண்டது போல புறத்திணையையும் ஏழாக வகுத்துக்கொண்டார். சங்கப்பாக்கள் சிலவற்றில் பீடும் பெயரும் எழுதிய வீரர்களின் நடுகற்கள் உள்ளன. புறநானூற்றில் வீரர்களுக்கு எடுக்கப்பட்ட நடுகற்கள் மட்டுமின்றி நாடாண்ட மன்னர்களுக்கும் நடுகற்கள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது. அதியமான் நெடுமான் அஞ்சிக்கு நடுகல் நடப்பட்டதை ஒளவையார் கீழே உள்ளவாறு பாடுகிறார்


நடுகற் பீலி ச10ட்டி நாரரி
சிறுகலத் துகுப்பவும் கொள்வன் கொல்லோ (புறம் 232)
என்றும்
கோடுயர் பிறங்குமலை கெழீஇய
நாடுடன் கொடுப்பவுங் கொள்ளா தோனே


என்றும் பாடுகிறார்.

மேலும் தகடுர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையுடன் இவன் போரிட்டு நடைபெற்ற போரில் வேல்பாய்ந்து இறந்தான். இறந்தவன் உடல் தீயில் இடப்பட்டது இதனை


எறிபுனக் குறவன் குறைய லன்ன
கரிபுற விறகின் ஈம ஓள்ளழற்
குறுகினும் குறுகுக குறுகாது சென்று
விசும்புற நீளினும் நீள்க பசுங்கதிர்த்
திங்கள் அன்ன வெண்குடை
ஒண்ஞாயிறு அன்னோன் புகழ்மா யலவே (புறம் 235)


என்று குறிப்பிடுகிறார்.

ஒளவையாரைப்போன்றே ஆவூர் மூலங்கிழார் என்ற புலவர் மல்லிநாட்டு காரியாதி என்பவனுக்கு நடுகல் ஏற்படுத்தப்பட்டதைக் குறிப்பிட்டு பாடல் ஒன்றை பாடுகிறார். அப்பாடல் பின்வருமாறு


பல்லா தழீஇய கல்லா வல்வில்
ஊழைக்குரற் கூகை அழைப்ப ஆட்டி
நாகுமூலை அன்ன நறும்பூங் கரந்தை
விரகறி யாளர் மரபிற் ச10ட்ட
நிரையிலவன் தந்து நடுகல் ஆகிய
வெள்லே விடலை (புறம் 261)


இப்பாடலின் மூலம் கரந்தைப் பூவை ச10டி மீட்டு வந்த வெள்வேல் விடலை, நடுகல் ஆனான் என்பதை இப்பாடலின் மூலம் அறியலாம்.


அகநானூறு

அகநானூறு எனப்படும் நெடுந்தொகையில் நடுகல் தொடர்பான செய்திகள் 11 பாடல்களில் இடம் பெற்றுள்ளன. அம்மூவனார் பாலை நிலத்து வழியினைக் கூறும்போது வில்லேர் வாழ்க்கை விழுந்தொடை மறவர், கடவுளை வழிபட நடுகல்லின் மேல் பீலி ச10ட்டி, கள்ளோடு செம்மறியைப் பலிகொடுக்கப் போவதற்கரிய வழி என்று குறிப்பிடுகிறார்.

முனையாத் தந்து முரம்பின் வீழ்த்த
வில்லேர் வாழ்க்கை விழுந்தொடை மறவர்
வல்லான் பதுக்கைக் கடவுட் பேன்மார்
நடுகற் பீலி ச10ட்டி துடிப்படுத்துத்
தோப்பிக் கள்ளொடு துரூஉப்பலி கொடுக்கும்


குடவாயிற் கீரத்தனார் இவ்வாறு நடுகல் பதுக்கையைக் குறிப்பிடுகிறார். (அகம் 35) சவச்சின்னங்களில் ஒன்றான கல்பதுக்கைகள் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. கல்பதுக்கை என்பது நான்கு புறமும் ஆளுயர பலகைக் கற்களை வைத்து மேலே மூடிவைப்பதாகும்.இவ்வாறான கல்பதுக்கைகள் திண்டுக்கல்;மாவட்டம் தாண்டிக்குடிஇ பண்ணைக்காடுஇ தேனி மாவட்டத்தில் வருஷநாடு போன்ற பகுதிகளில் உள்ளது. (படம் காண்க)


பட்டினப்பாலை

நடுகல்லுக்கு அரண் இடப்பட்ட செய்தியை பட்டினப்பாலை குறிப்பிடுகிறது. அதாவது கேடயத்தை அல்லது வேலியை நட்டனர் எனலாம்.

கிடுகுநிரைத் தெஃகூன்றி
நடுகல்லின் அரண்போல் (பட்டினப்பாலை 78-79)


சமாதிகள் ஆன நடுகல்

வீரர்களுடைய நடுகல் வழிபாடு பிற்காலத்தில் மன்னர்களுக்குப் பள்ளிப்படை கோயில்கள் தோன்ற காரணமாயிற்று. துறவிகள் அல்லது மடத்தின் தலைவர்களுக்கு சமாதி ஏற்படுத்தி ஆண்டுதோறும் குருபூஜை நடத்தும் வழக்கமும் நடுகல் வழிபாட்டிலிருந்து வந்திருக்கவேண்டும். சமாதிக் கோயில்களில் குருமகான்களின் உருவங்களோ சிவலிங்க வடிவங்களோ காணப்படும். திருவாடுதுறை ஆதினத்தின் நான்காவது பட்டம் உருத்திரகோடி தேசிகர் நின்ற நிலையில் உள்ள சமாதிக் கோயில் மதுரையில் உள்ளது.

சமண சமயத் துறவியர் உண்ணா நோன்பிருந்து மாண்ட இடங்களில் கல்வெட்டுக்கள் உள்ளன. நிசீதிகை கற்கள் என இவைகளை அழைக்கிறோம்.

நடுகல்லும் முஸ்லீம்களும்

போத்துக்கீசியரோடு பொருத காலத்தில் உடைந்த மரக்கலத்தின் நடுக்கம்பம் கரை தொட, அதைக் கொணர்ந்து ஊரின் நடுவே நட்டு, தூணைக்கழுவி அதைப் பற்றியும் சுற்றியும் நின்ற வீரத்திற்கு நற்றூபம் எழுப்பி நினைவு கூர்ந்து தொஐக நடத்தும் துண்டு பூமியை இன்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்குப் பள்ளம் துறையைத் தொட்டிருக்கும் குஞ்ஞாலி விளையில் காணலாம்.

இதே போல வீரனை நினைவு கூறும் நடுகல் ஒன்று கோட்டாறு வேம்படிப் பள்ளியின் கல்லறை(கபர்ஸ்தான்) போரில் ஈடுபட்டு இறந்த இஸ்லாமிய வீரர் ஒருவரின் ஓய்விடச்; சமாதி. பொருதவாறு ஹிஜிரி 1193-ல் துயிர்துறந்த இவ்வீரரின் பெயர் 'ஹித் செய்யது பக்கீர் இபுன் ஸய்யது வலி. கல்லறையின் தலைமாட்டுக்கல்லில் உருவிய கூர்முனை வாள் ஒன்றும் கைக்கட்டாரியும்இ கால்மாட்டுக்கல்லில் வீரமரணம் முடிந்த நிலையைக் காட்டும் உறைகளினுட் செருகப்பட்டிருக்கும் அதே வாளும் கைக்கட்டாரியும் உள்ளது. இதுபோன்ற நடுகல் வேறு எங்கும் இல்லை என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.

நடுகல்லின் வகைகள்

புலிகுத்தி நடுகல், வளர்ப்பு நாய்களுக்கு நடுகல், கோழிக்கு நடுகல், குதிரைக்கு நடுகல், கிளிக்கு நடுகல், போரில் மாண்ட வீரனுக்கு நடுகல் என பலவகைகளிலும் நடுகல்லை வைத்துள்ளார்கள்.


புலிகுத்தி நடுகல்

சித்தர்கள் நத்தம் புலிகுத்திக்கல்
இவ்வூர் அணைப்பட்டி அருகில் வைகையாற்றில் தென்கரையில் அமைந்துள்ளது. சோழவந்தானிலிருந்து நிலக்கோட்டைக்கும் செல்லும் பண்டைய பெருவழியில் அமைந்திருக்கிறது. இவ்வூர் வழியாகச் சென்ற பழைய பெருவழி இங்கு கண்டறியப்பட்ட கி.பி. 13ம் நூற்றாண்டு கல்வெட்டில் 'சோழகுலாந்தகன் பெருவழி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சித்தர்கள் நத்தத்தின் பழைய பெயர் பொருந்தல் ஆகும்;. இங்கு கண்டறியப்பட்ட கல்வெட்டு 'பொருத்தலான தேவேந்திரவல்லபுரம்' என்று இதனை குறிப்பிடுகிறது. பொருந்தில் என்ற ஊர் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளது. சங்க காலத்தில் 'பொருந்தில் இளங்கீரனார்' என்று அழைக்கப்பட்ட சங்கப்புலவர் வாழ்ந்திருக்கின்றார். இவர் அகநானூற்றில்
19,351 ஆம் பாடலையும் புறநானூற்றில் 53 ஆம் பாடலையும் பாடியவர் ஆவார்.சித்தர்கள் நத்தம் பகுதியில் ஆற்றின் ஓரத்தில் பண்டைய காலத்தில் மக்களை புதைக்கும் வழக்கம் இருந்துள்ளது. அப்பகுதியில் உள்ள தோப்புகளில் இன்றும் உழும்போது மண்கலயங்கள், மண்ஜாடிகள், முதுமக்கள் தாழி போன்றவை கிடைக்கின்றன.


இப்பகுதியில் புலிகுத்தி தார் என்று அழைக்கப்படும் இடத்தில் கி.பி.
13 ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த குலசேகரபாண்டியன் காலத்து நடுகல் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. கி.பி.1296 ஆம் ஆண்டு சோழகுலாந்தகப் பெருவழி என்று அழைக்கப்பட்ட இவ்வூர் வழியாகச் சென்ற பெருவழியில் இருந்து கொண்டு அதில் பயணம் செய்தவர்களின் உயிரைப் போக்கிவந்த பெருங்கடுவாய் புலி ஒன்றைக் கொன்ற வீரனுக்காக எடுக்கப்பட்ட நடுகல் இதுவாகும். பாகனூர் கூற்றப்றத்துப் பொருத்தலான தேவேந்திரவல்லபுரத்தில் இருந்த வீரக்கொடியார் என்றழைக்கப்பட்ட வணிகவீரர் குழுவில் குன்றாத பெருமாள் என்ற இவ்வீரன் இருந்தான் என்றும் இவ்வீரமகன் குடும்பத்தினருக்கு ஒரு மாவரை நிலம் 'உதிரப்பட்டியாக' தானமாக தந்தார்கள் என்றும் நடுகல்லின் பின்புறம் உள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது. பொருத்தலான தேவேந்திரவல்லவபுரம் என்று அழைக்கப்பட்ட வணிக நகரம்(சித்தர்கள் நத்தம்) மதுரையில் இருந்த சிவல்லப்பெரும்பள்ளி என்ற சமணப்பள்ளிக்குரிய நிலங்களைக் கொண்ட பள்ளிச்சந்தமாக இருந்துள்ளதையும் இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. இவ்வாறு பாரம்பரியத்தை பறைசாற்றும் நடுகல்லை பாதுகாப்பது நமது ஒவ்வொருவரின் கடமையாக இருக்கவேண்டும்.

 


வைகை அனிஷ்
3.பள்ளிவாசல் தெரு
தேவதானப்பட்டி-625 602
தேனி மாவட்டம்
தொலைபேசி:9715-795795