நீதி நாயகம் விமலா அவர்களின் உரை

 

தொகுப்பு: கவிஞர் இரா .இரவி

 


சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு மனித உரிமை சட்டவியலின் பிதாமகன் நீதி நாயகம் கிருஷ்ணய்யர் நினைவேந்தல் கூட்டம் சோக்கோ அறகட்டளை சார்பில் நடந்ததது.

ரு பூவிடம் மகிழ்வான நேரம் எது என்று கேட்டார்களாம் .அநதப் பூ சொன்னது .மங்கை சூடும் போதும் மகிழவில்லை . தேனீ வந்த நுகர்ந்த போதும் சுகம் இல்லை .அரசன் இடம் சென்ற போதும் மகிழவில்லை. விடுதலைக்காக போராடி இறந்த மாவீரன் மீது விழுந்தபோது மனம் மகிழ்ந்தேன் .' என்றதாம் .அது போல மனித உரிமைக்கு குரல் தந்த நீதி நாயகம் கிருஷ்ணய்யர் நினைவேந்தல் நிகழ்வில் பேசுவதில் மனம் மகிழ்ந்தேன்.

மனிதநேயமும் மனித உரிமையும் வேறில்லை .மனித உரிமைதான் மனிதநேயம்.மனிதநேயம்தான் மனித உரிமை. மனித உரிமையும் நீதி நாயகம் கிருஷ்ணய்யர் அவர்களும் வேறில்லை.மனித உரிமைதான் நீதி நாயகம் கிருஷ்ணய்யர் .நீதி நாயகம் கிருஷ்ணய்யர்தான் மனித உரிமை. குரலற்றவர்களின் குரலாக ஒலித்தவர் .அவர் ஒரு மகாகடல் .எல்லையற்ற வானம் .அவர் பற்றி ஒரு நாள் முழுவதும் கூட பேசலாம் .

அவர் நீதியரசராக இருந்து ஒய்வு பெற்ற பின்னும் .மக்கள் நேசித்தார்கள் .
.ஒரு தாசில்தார் பணி ஒய்வு பெற்று நடந்து வந்தாராம் .வரும்போது பள்ளத்தில் விழுந்து விட்டாராம் . விழுந்தவரை தூக்க கை கொடுத்தார்களாம்.பதவி ஏற்க புதிய தாசில்தார் வந்துவிட்டார் என்று சொல்லவும் ஒய்வு பெற்ற தாசில்தாரை இப்படியே விட்டு விட்டு ஓடினார்களாம் .அப்படிப்பட்ட காலத்தில் மக்கள் நீதி நாயகம் கிருஷ்ணய்யரை மக்கள் நேசித்தார்கள் .

மனித உரிமை
365 என்றனர் .அன்று .ஆனால் இன்று மனித உரிமை 100 பெருக்கல் 365 ஸ்ரீ 36500. ஆனது .ஏழை மக்கள் பற்றியே எப்போதும் சிந்தித்தவர் நீதி நாயகம் கிருஷ்ணய்யர்.

ஒரு புதுக்கவிஞன் எழுதினான் .

கிளி விடுதலை கேட்டது
கதவை திறந்து விட்டனர்
சிறகை விரித்து பறக்கவில்லை
சீட்டை எடுத்து கொடுத்து விட்டு
கூண்டுக்குள் சென்றது!


இப்படித்தான் பல மனிதர்களும் விடுதலை பற்றி அறியாமல் வாழ்கிறார்கள் .மனிதநேயம் என்றால் என்னவென்று தெரியவில்லை.

மற்றொரு கவிஞன் எழுதினான்.


மொத்தமாய் செத்தால்
உச்சரிக்கும் சொல்
மனிதநேயம்!

நீதி நாயகம் கிருஷ்ணய்யர் நினைவின் மூலம் நம்மை மேம்படுத்திக் கொள்ள உதவிய நிகழ்வு இது .அவர் நல்ல கணவராக, நல்ல தந்தையாக, நல்ல நீதியரசராக, நல்ல காந்தியவாதியாக திகழ்ந்தவர் அவரது தீர்ப்பில் காந்தியத்தை மேற்கோள் காட்டி உள்ளார். காந்தியத்தில் எனக்கு மிகவும் பிடித்தது அகிம்சை என்று குறிப்பிட்டுள்ளார் . காந்தி என்றால் நூல் நூற்ப்பாரே அவர்தானே என்பார்கள் சிலர். இன்னும் சிலர் கத்தியின்றி ரத்தமின்றி சுதந்திரம் வாங்கியவர் என்பர் .

காந்தியடிகள் பற்றி முழுமையாக அறியவில்லை .மானத்தை மறைக்கும் ஆடையை வெள்ளையனிடம் பெறுவதா? அவமானம் .இங்கு விளைந்த பருத்தியை எடுத்துச் சென்று துணியாக்கி விற்கிறான் .அதை வாங்கி நாம் அணிவதா என்று சிந்தித்து .நூல் நூற்றார் .அயல் நாட்டுத் துணையைப் புறகணிக்க அறிவுறுத்தினார்.


இந்த நிகழ்வு நடக்கும் இன்று சத்யார்த்தி இமலாலா நோபல் பரிசு பெறுகிறார்கள் . ஒவ்வொரு நடவடிக்கையும் ஏழைகளுக்கு பயன்படும்படி இருக்க வேண்டும் .அதனை தொடர்ந்து செய்ய வேண்டும் .என்பார் அவர் .பொது நல வழக்கு இசிறைச்சாலை சீர் திருத்தம் பல நன்மைகள் அவரால் விளைந்தவை .அவர் சிறையில் இருந்த போது அடிந்த துன்பம் மற்ற சிறைவாசிகள் அடையக் கூடாது என்று சீர் திருத்தம் கொண்டு வந்தார் .சிறையில் உள்ள ஒரு நிமிடம் ஒரு வருடமாக நீளும் .அவ்வளவு கொடுமையானது என்பார் .

சிலப்பதிகாரத்தில் இரண்டு வகையான சிறை இருந்தது .விழாவின் போது அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர் என்ற தகவல் உள்ளது

மனித உரிமை என்றால் அதில் குழந்தைகள் உரிமை இபெண்கள் உரிமை இமுதியவர்கள் உரிமை இப்படி பல வகை உரிமை அடக்கம் .குறைந்தபட்ச அடிப்படைத் தகுதி மனிதநேயத்தோடு வாழ்வதுதான்.

குழந்தைகள் தின விழாவில் ' சிலுவையில் அறியப்பட்ட சின்னச் சின்ன ஏசுகளே வருக என்றனர் . ஒரு கோடி பெண்கள் காணவில்லை என்று யுனிசெப் ஆய்வின் தகவல் அறிவித்து உள்ளது .பெண் கருக்கொலை,  பெண் சிசுக்கொலை இகடத்தல் காரணமாக உள்ளன . ஜீவானாம்சம் வழக்குகளில் சிறந்து தீர்ப்பு வழங்கியவர் .

முதியோர்களும் சரியாக பேணுவதில்லை .அதனால்தான் ஒரு கவிஞர் எழுதினார் முதியோர் இல்லம் பற்றி
.
இது மனிதகாட்சிசாலை
பால் குடித்த மிருங்கங்கள்
பார்த்துவிட்டுப் போகும்!


ஒரு கவிஞர் எழுதினார்.

வீட்டின் பெயரோ அன்னை இல்லம்
அன்னை இருபதோ அநாதை இல்லம்.


நீதிபதி மைக்கேல் என்ற வெளிநாட்டவர் சொன்னார் . நீதி நாயகம் கிருஷ்ணய்யர் எழுதுவது தீர்ப்பு அல்ல கவிதை என்றார் .உலக முன் மாதிரி தீர்ப்புகள் வழங்கியவர் நிதி இல்லை என்ற காரணத்தால் நீதி இல்லை என்று சொல்வது அநீதி என்றார் இன்று இங்கு வந்துள்ள வழக்கறிஞர்களிடம் வேண்டுகோள் வைக்கிறேன் .அவர் போல ஏழைத் தொழிலாளிகளிடம் கட்டணம் வாங்காதீர்கள் .இன்னும் சிலரிடம் வழக்கு வென்ற பின் வரும் தொகையில் கட்டணம் பெறுங்கள்.

நீதியரசர் நூல்கள் படியுங்கள் .மனிதநேயத்தோடு வாழ்வோம்.


 

 

 

 

 www.tamilauthors.com