பி.வரதராசனுக்குத் 'தமிழ்ப் பணிச் செம்மல் விருது'
 

 

பிறர்க்கென முயலும் பெருந்தகை பி.வரதராசனுக்குப் பாராட்டு விழா வடக்கு மாசி வீதியில் அமைந்துள்ள மணியம்மை மழலையர் தொடக்கப் பள்ளியில் 04.01.2015 அன்று நடைபெற்றது. 'சொல்லேருழவர்' ச.செந்தூரன் அவையினரை வரவேற்றார்.

மூதறிஞர் தமிழண்ணல் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி வாழ்த்துரை வழங்கினார். உலகத் திருக்குறள் பேரவையின் பொதுச் செயலர் தமிழ்ச் செம்மல் ந.மணிமொழியன் முன்னிலை வகித்து உரையாற்றினார். அருட்செல்வர் சங்கர சீதாராமன், ஜவஹர் அசோசியேட் மேலாண்மை இயக்குநர் பொறியாளர் ஜ.சுரேஷ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

தொல்காப்பியர் மன்றத்தின் சார்பில் பி.வரதராசனுக்குத் 'தமிழ்ப் பணிச் செம்மல்' என்னும் விருது வழங்கப் பெற்றது.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் தமிழ்த் துறையின் மேனாள் பேராசிரியர் இராம.சுந்தரம், ஆயிர வைசியர் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் மு.அருணகிரி, யாதவர் ஆடவர் கல்லூரி தமிழ் உயராய்வு மைய மேனாள் தலைவர் பேராசிரியர் இ.கி.இராமசாமி, மதுரை காமராசர் பல்கலைக்கழக மேனாள் தகைசால் பேராசிரியர் 'தமிழ்த் தேனீ' இரா.மோகன் ஆகியோர் வரதராசனைக் குறித்துத் தகுதியுரைகள் வழங்கினர்.

தருமை ஆதீனப் புலவர் தா.குருசாமி தேசிகர், முனைவர் உல.சுப்பிரமணியன் இருவரும் வாழ்த்துக் கவிதைகள் வாசித்து அளித்தனர். பி.வரதராசன் ஏற்புரை வழங்கினார். 'ஹைகூ திலகம்' இரா.இரவி நன்றி நவின்றார்.

கோவை மருத்துவக் கல்லூரி டீன் ரேவதி கயிலைராஜன், மூளை நரம்பு மருத்துவர்கள் டி.கயிலைராஜன், வ.இன்பசேகரன், மூத்த எழுத்தாளர் கர்ணன், 'மனித நேயம்' ஆசிரியர் ஏ.எம்.ஜேம்ஸ், திருச்சி சந்தர், க.ஜான் மோசஸ், பெரியார் தொண்டர் ராஜகிரி தங்கராசு, பேராசிரியர்கள் வீ.காந்திமதி, நா.கருணாமூர்த்தி, வீ.மோகன், பட்டிமன்றப் பேச்சாளர்கள் மூரா, முத்து இளங்கோவன், ச.திருநாவுக்கரசு உள்ளிட்டோர் திரளாகக் கலந்து கொண்டனர்.
 




 

 

 www.tamilauthors.com