முடியும் என்கிற நம்பிக்கையே
வெற்றியைத் தேடித்தரும்
கவிஞர் அண்ணா சிங்காரவேலு
வந்தவாசி – ஜன-25.
வந்தை
வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் மூன்றாமாண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு
வந்தவாசியை அடுத்த மாம்பட்டு கிராமத்தில் நடைபெற்ற தமிழ்க்கலை விழாவில்,
ஒவ்வொரு மனிதனும் தாம் செய்யும் செயலில் நிச்சயம் நம்மால் முடியும்
என்கிற நம்பிக்கையோடு ஈடுபட்டால் வெற்றியை அடையமுடியும் என்று
தொலைக்காட்சி பேச்சரங்க இயக்குநரும் கவிஞருமான அண்ணா சிங்காரவேலு
பேசினார்.
இவ்விழாவிற்கு சங்கத்தலைவர் அ.மு.உசேன் தலைமையேற்றார். முன்னாள் ஒன்றிய
கவுன்சிலர் சு.சச்சிதானந்தம், துணைத்தலைவர் சு.அசோக்குமார், ஆசிரியர்
வீ.கார்த்திகேசன், எ.தேவா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துலைமையாசிரியர் க.சண்முகம் அனைவரையும் வரவேற்றார்.
மாம்பட்டு பெ.பார்த்திபனின் இசை நிகழ்ச்சியும், எ.மோகன்தாஸ்,
ரகமத்துல்லா, சஞ்சய்குமாரின் பல்குரல் நிகழ்ச்சியும், பள்ளிக்
குழந்தைகளின் ஆடல், பாடல் கலை நிகழ்சிகளும் நடைபெற்றன.
கலை நிகழ்ச்சிகளில் சிறப்பான பங்களிப்பைச் செய்த குழந்தைகளுக்குப்
பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன.
விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தொலைக்காட்சி பேச்சரங்க
இயக்குநரும், கவிஞருமான அண்ணா சிங்காரவேலு பேசும்போது, இன்றைய நவீன
உலகில் செல்போன், இண்டர்நெட், வீடியோ கேம் என பல கண்டுபிடிப்புகள்
வந்துவிட்டாலும், மனிதர்கள் ஒரே கூட்டுக் குடும்பமாய் வாழ்ந்த
சந்தோசத்தை இவைகளால் தர முடியவில்லை.
விளைநிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி விட்டு, விவசாயி பசியோடு
இருக்கிறான். உலகம் எவ்வகை மாற்றத்தை அடைந்தாலும் அன்பு என்பதே
எப்போதும் மாறாதது.
நமது குடும்ப உறவுகள் இன்றைக்கு நிறையவே மாறிவிட்டன. வீட்டிற்கு வரும்
விருந்தினரை அன்போடு வரவேற்று, உபசரித்து, விருந்தளிப்பது நம் தமிழர்
பண்பாடு இன்றைக்கு தொலைக்காட்சியில் நம் தமிழர் பண்பாடு இன்றைக்கு
தொலைக்காட்சியில் தொடர் பார்க்கும் போது வரும் விருந்தினரை வேண்டா
வெறுப்பாக பார்கிறோம்.
எந்த அறிவியல் கண்டு பிடிப்பையும் ஆக்க சக்திக்கு மட்டுமே பயன்படுத்த
வேண்டும். செல்போனில் வரும் மிஸ்டு காலுக்கே நாம் அரைமணி நேரம் பேசுகிற
நிலைக்கு மாறிவிட்டோம். காலம் நம்கையில் தான் உள்ளது. எதற்கும் சோர்வு
அடையாமல், தன்னம்பிக்கை ஏனும் உயரிய சிந்தனையை மனதில் கொடு, நாம் எந்த
செயலில் இறங்கினாலும் வெற்றிக் கனியை பறித்துவிட முடியும் வாழ்வை
வெல்வதற்கு இதுவே சரியான வழி என்று குறிப்பிட்டார்.
விழா நிகழ்வை சங்க ஆலோசகர் மு.முருகேஷ் தொகுத்து வழங்கினார். நிறைவாக,
சங்கச் செயலாளர் பா.சீனிவாசன் நன்றி கூறினார்.
www.tamilauthors.com
|