லியொன்
ரொக்ஸ்சின் பேச்சு
தமிழில்: வ.அழகலிங்கம்
லியொன் ரொக்ஸ்சி 1905
புரட்சியை அடுத்து முதலாம் எதிரியாக ஆயுள்தண்டனை பெறமுன் வர்க்க
நீதிமன்றத்தில் புரட்சி செய்யும் உரிமையைப் பாதுகாக்கப் பேசிய பேச்சு
ஆசனத்தில்
அமர்ந்திருக்கும் கனவான்களே, குடிமக்கள் பிரதிநிதிகளே!
ஓர்
ஆயுதஎழுச்சி என்ற பிரச்சனை என்பது இந்தப் பிரத்தியேக நீதி
மன்ன்றத்திற்கு ஒரு சிறப்பான பிரச்சனையாகத் தோன்றலாம்.
50 நாட்கள்
நீடித்திருந்த தொழிலாளர் சோவியத்துகளின் நிகழ்சிகளில் ஒருபொழுதும் இது
ஒரு பிரச்சனையாக இருக்கவில்லை. ஆனால் இந்தக் நீதிமன்றத்திற்கு ஆரம்ப
விசாரணையிலிருந்தே இதுவே முக்கியமான பிரச்சனையாக இருந்ததோடு
நீதிமன்றத்தில் இதுவே முதன்முதலாக ஆராயப் படுகிறது. ஓர் ஆயுத எழுச்சி
என்றபிரச்சனையானது சோவியத் கூட்டங்களில் எப்பவும் எந்த இடத்திலும்
எழவில்லை. அதைப் பற்றிக் கலந்துரையாடப்படவுமில்லை. ஓர் அரசியல் நிர்ணய
சபை என்ற பிரச்சனை கூடக் கலந்துரையாடப் படவில்லை. ஓர் ஜனனாயகக் குடியரசு
என்ற பிரச்சனை கூடக் கலந்துரையாடப் படவில்லை.
புரட்சிப் போராட்டத்தின் அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்த
விதிக்கிரமமான பொதுவேலைநிறுத்தம் பற்றிக்கூட ஒரு கூட்டத்திலாவது
பேசப்படவில்லை. மையப் பிரச்சனையாகப் புரட்சிப் பத்திரிகைகளிலும் பல
கூட்டங்களிலும் பல மகாநாடுகளிலும் பல பல வருடங்கள் விவாதிக்கப் பட்ட
இந்த விடயங்கள் எந்தத் தருணத்திலாவது சோவியத் கூட்டங்களில் கருத்துக்கு
எடுக்கப்படவில்லை. அது ஏன் கருத்துக்கு எடுக்கப்படவில்லை என்பதைப்
பற்றியும் ஆயுதப்போரட்டம் என்பதை சோவியத்துக்கள் எப்படி
வரையறுத்திருந்தார்கள் என்பதைப் பற்றியும் பின்னர் விளக்குகின்றேன்.
நீதிமன்றத்தின் பார்வைக்கு முக்கிய விடயமாகத் தோன்றும் இந்த
விடயத்திற்கு அப்பால் செல்லுமுன், என்னை மற்றொரு விடயத்தில் கவனம்
செலுத்த இந்த நீதிமன்றம் அனுமதியளிக்க வேண்டும். முன்னதோடு
ஒப்பிடுமிடத்து அது முன்னதிலும்பார்க்க பொதுவானது ஆனால் கூர்மை
குறைந்தது, அதாவது சோவியத்துகள் பொதுவில் பலாத்காரத்தைப் பிரோயோகிப்பது
பற்றிய பிரச்சனை பற்றியது. சோவியத் சில நேரங்களில் தனது நிறுவனமொன்றின்
மூலமோ அல்லது தனது அமைப்பொன்றின் மூலமோ பலாத்காரத்தையோ அல்லது
அடக்குமுறையைப் பிரயோகிக்கத் தனக்கு உரிமை உடையது என்று கருதியதா?
இந்தக் கேள்விக்கான எனது பதிலைப் பொதுவான அடிப்படையில் சொல்வதென்றால்
ஆம் என்பதாகும். வழமையாகச் செயற்படும் அரசொன்றில் அது என்ன
அரசாட்சிவடிவத்தில் செயற்பட்டாலென்ன முரட்டுத்தனமான அடக்குமுறையின்
ஏகபோக உரிமை அரசுக்கு உரியதாகும் என்பது எனக்கும் நன்றாகத் தெரியும்,
வழக்கை நடாத்தும் பிரதிநிதிகளுக்கும் நன்றாகத் தெரியும். அது அதன்
மாற்றப்படமுடியாத உரிமையாகும். அந்தப் பலாத்கார ஏகபோக உரிமையை அது
எந்தத் தனி அமைப்பும் பறிக்க விடாமல் அது பொறாமையோடும் நித்திய நிரந்தர
விழிப்போடும் பாதுகாக்கும். இந்த வழியில் அரச அமைப்பானது தனது இருப்பைப்
பாதுகாக்கப் போராடுகிறது. சிக்கலான மற்றும் முரண்பாடோடு உடன்பாடுடைய ஒரு
நவீன சமூகத்தின் ஸ்தூலமான படம் இதுவாகும்.
எடுத்துக்காட்டாக றஸ்சியா போன்ற பரந்த ஒரு நாட்டைப் பார்த்தால்
முரண்பாடுகளோடு கூடிய தற்போதுள்ள சமூக அமைப்பு முறையில் ஒடுக்குமுறை
பெரும்பாலும் தவிர்க்கவே முடியாததாகும் என்பது உடனடியாகத் தெளிவாகும்.
நாங்கள் அராஜகவாதிகள் அல்ல. நாங்கள் சோஷலிஸவாதிகள். அராஜகவாதிகள் எங்களை
ஷஷஅரசமைப்பு|| வாதிகள் என்று அழைக்கிறார்கள். ஏனெனில் நாம் அரசின்
வரலாற்று அவசியத்தை அங்கீகரிப்பவர்கள். ஆகவே வரலாற்று நோக்கில் அரச
ஒடுக்குமுறையையும் அங்கீகரிப்பவர்களாகும்.
ஆனால் ஓர் அரசியற்பொதுவேலைநிறுத்தம் உருவாகிய நிலைமையின் கீழ் அதன்
இயல்பு அரசப் பொறிமுறையைச் செயலிழக்கச் செய்வதாகும். இத்தகைய நிலைமையின்
கீழ் பழைய அரச அதிகாரத்தின் நாட்கள் ஏற்கனவே காலவாதியாகிவிட்டன.
அரசஅதிகாரத்திற்கு எதிராகவே அரசியல் வேலைநிறுத்தம் குறிவைக்கப்பட்டது.
இறுதியல் அரசியல் வேலைநிறுத்த நடவடிக்கையால் அரசஅதிகாரமானது செயற்திறன்
அற்றதாகியது. அதனால் பொதுவான ஒழுங்குமுறையையும் கட்டுப்பாட்டையும்
அரசின் வசம் இருந்த ஒரேயொரு வழிமுறையான காட்டுமிராண்டித்தனத்தாலும்
கூடத் தக்கவைக்க முடியவில்லை. இதற்கிடையில் வேலைநிறுத்தமானது நூறு,
ஆயிரம் என்று தொழிலாளர்களை தொழிசாலைகளிலிருந்து வீதிகளுக்கு இறக்கியதோடு,
அவர்களைப் பொதுவாழ்விலும் அரசியல் வாழ்விலும் ஈடுபடும்படி விடுதலை
செய்தது. அவர்களை வழி நடாத்துவது யார்? தொழிலாளர் அணிகளில் ஒழுங்கையும்
கட்டுப்பாட்டையும் யாரால் கொணர முடியும்? பொலிசால் முடியுமா? இராணுவப்
படைகளால் முடிமா? நானே என்னைக் கேட்டேன்.
யாரால் முடியும்? என்னால் விடைகாண முடியவில்லை. தொழிலாளர்
பிரதிநிதிகளின் சோவியத்துகளைத் தவிர எவராலும் முடியாது. ஒருவராலும்
முடியாது!
சோவியத்துகளே மகத்தான இந்த அடிப்படைச் சக்திகளை வழிநடாத்தினார்கள்.
உடனடிக் கடமைகளைச் சுட்டிக்காட்டியாதோடு உள்முரண்பாடுகளை இயலுமானவரை
குறைத்து, அத்துமீறல்களையும் வரம்பு கடந்த செயல்களையும் தடுத்து,
போராட்டத்தில் தவிர்க்கமுடியாமற் பாதிப்படைபவர்களின் எண்ணிக்கையைக்
கணிசமாகக் குறைப்பதை உறுதி செய்தார்கள். சோவியத் என்பது அரசியல்
வேலைநிறுத்தத்தின் பலாபலனால் படைக்கப்பட்டது. அது புரட்சிகர மக்களின்
சுயாதீனமான அரசாங்க உறுப்பாக உருவாகியதேயொழிய வேறொன்றுமில்லை. அது ஓர்
அதிகார உறுப்பாகப் பரிணமித்தது. இது முழு மக்களின் சித்தத்தின் பேரில்
முழுமையின் ஒரு பகுதியை ஆட்சி செய்தது. இது ஒரு ஜனனாயக சக்தியாக
இருந்தது. அதற்கு மக்கள் தானாகக் கீழ்படிந்து நடந்தார்கள்.
பெரும்பான்மையினரின் ஒழுங்கமைக்கப்பட்ட சக்தியாகச் சோவியத்துகளே
விளங்கியதோடு பெரும்பான்மை வெகுசனங்களுக்குள் அராஜகம் வராமல்
தடுப்பதற்காக அது சில விஷமிகளை ஒடுக்குமுறை நடவடிக்கைகளால் தடுக்கத்
தவிர்க்க முடியாமல் நிர்ப்பந்திக்கப் பட்டது.
சோவியத்துகளே வரலாற்றின் புதிய அதிகாரசக்தியாக வந்தன. அது மாத்திரமே
பழைய அதிகார ஜந்திரத்தின் நீதிநெறிமுறை, அரசியற்பரிபாலனம்,
நிர்வகிக்கும்; பொறிமுறை போன்ற எல்லாம் திவாலாகிப்போன நேரத்தில் இவை
எல்லாவற்றையும் அமுல் நடாத்தும் பூரண அதிகார சக்தியாக விளங்கியது.
சரியாகச் சொல்வதென்றால் தனிமனிதர்களின் பாதுகாப்புக்கும் வெகுசன ஒழுங்கை
நிலை நாட்டுவதற்குமான ஒரே உத்தரவாதமாக இருந்ததால் குழப்பங்களையும்
அராஜகங்களையும் எதிர்ப்பது தனது கடமையாகக் அது கருதியது.
பழைய ஆட்சியின் பிரதிநிதித்துவம், முற்றிலும் கொடூரமான அடக்குமுறையை
அடிப்படையாகக் கொண்டிருந்தது. அது சோவியத்துகளின் வன்முறை பற்றி அறநெறி
வெறுப்புணர்வோடு பேச உரிமையற்றதாகும். இந்த நீதிமன்றத்தில் வரலாற்று
அதிகாரத்திற்காக வழக்குத் தொடுத்தவர்கள் பெரும்பான்மையினர் மீது
சிறபான்மையினர் செய்யும் நிறுவனப்பட்ட வன்முறையைப் பிரதிநிதித்துவப்
படுத்து ;;பவர்களாகும். புதிய ஆட்சி அதிகாரத்தின் முன்னோடிகளாக
ஒழுங்கமைந்த சோவியத்துகள் பெரும்பான்மையின் விருப்பத்திற்கு
அடிபணியும்படி சிறுபான்மைக்குக் கட்டளையிட்டது. சோவியத்துகளின்
புரட்சிகர உரிமையின் இருப்பை இது தெளிவாக வேறுபடுத்திக் காட்டுவதோடு
இந்த உரிமையானது எந்தவொரு சட்டம் மற்றும் ஒழுக்கம் பற்றிச் சந்தேகப்
படுவதற்கும்; மேலானது.
இந்த அடக்கு முறையைப் பயன் படுத்தும் உரிமையைச் சோவியத்துகள் இனங்கண்டு
கொண்டன.
ஆனால் அந்த அடக்குமுறையை எந்தச் சந்தர்ப்பங்களில் என்ன அளவில் பாவிப்பது?
நாம் இந்தக் கருத்தை நூற்றுக்கணக்கான சாட்சிகளிடம் கேட்டறிந்தோம்.
அடக்குமுறை நடவடிக்கைகளைச் செயற்படுத்த முன் வார்த்தைகளால் தூண்டி
இணங்க வைக்க முற்பட்டோம். இந்த உண்மையான தூண்டும் முறையைக்
கடைப்பிடிப்பதிலும் செயற்படுத்துவதிலும் சோவியத்துகள் கழைத்தே போகவில்லை.
புரட்சிகரக் கிளர்ச்சிகள் மூலம், பேச்சுவார்த்தை என்ற ஆயுதங்கள் மூலம்
சோவியத்துகள் புதுப் புது வெகுசனங்களைத் தனது காலடியிற் கொணர்ந்ததோடு
அதன் அதிகாரத்திற்கும் அடிபணியச் செய்தன. அறியாமையினாலும் ஊழலில்
வீழ்ந்ததினாலும் சோவியத்துகளை எதிர்த்த தொழிலாளர் குழுக்களை அவர்களின்
உடலுக்குப் பாதிப்பு ஏற்படாத பலாத்காரம் மூலம் வெகு சீக்கிரத்தில் அமைதி
நிலைமையைக் கொணர்ந்தது.
அது மற்ற வழிகளில் முயன்றது என்பதை நீங்கள் சாட்சியங்களிலிருந்து
கண்டிருப்பீர்கள்.
அது தொழிலாளர் நிர்வாகங்களுக்கு நல்ல நோக்கோடு வேலை நிறுத்தம்
செய்யும்படி வேண்டுகோள் விடுத்தது.
அது அறியாமையிலிருந்த தொழிலாளர்களுக்கு பொது வேலைநிறுத்தத்திற்கு
அனுதாபமுடைய தொழில்நுட்பவியலாளர்கள் மூலமும் பொறியியலாளர்கள் மூலமும்
செல்வாக்குச் செலுத்தியது. அது தொழிலாளர்களை வேலைநிறுத்தத்திற்கு வெளியே
ஷஷகொண்டுவருதற்காகப் "பிரதிநிதிகளை அனுப்பியது. மிக அதீதமான
சந்தர்ப்பங்களில் மாத்திரம் வேலைநிறுத்தத்தைக் குழப்பும் கருங்காலிகளைப்
பலாத்காரத்தால் மிரட்டியது. ஆனால் அது எப்போதும் உண்மையாகவே
பலாத்காரத்தைப் பிரயோகித்ததா?
ஆசனத்தில் அமர்ந்துள்ள கனவான்களே, நீங்கள் இதுபோன்ற உதாரணங்களைப்
பூர்வாங்க விசாரணை ஆவணங்களில் பார்த்திருக்க மாட்டீர்கள். எல்லா
முயற்சிகள் செய்தபோதும் நீதி மன்ற விசாரணையின்போது இது போன்ற உதாரணங்கள்
எதையும் நிர்மாணிக்க முடியவில்லை.
நாம் தீவிரமாக அந்த "வன்முறை" உதாரணங்களை எடுத்திருந்தாலும் அது
நகைச்சுவையிலும் பார்க்க சோகமாகவே தென்படும். நீதி மன்றத்தின் முன் அது
மறுபரிசீலனை செய்யவே பயன்படும் (இன்னார் இன்னார் தொப்பியைக் கழட்டாமல்
ஒருவரின் குடியிருப்புக்குள் நுழைந்தார், இன்னார் இன்னார் பரஸ்பர
சம்மதத்தோடு வேறு ஒருவரைக் கைது செய்தார்..) இந்தத் தொப்பியை யாரோ
எடுக்க மறந்து விட்டார் என்பதை நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டி வரும்.
பழைய ஆதிக்கம் நூற்றுக் கணக்கான தலைகளின் தொப்பியைக் ஷஷகழட்டுவதன்||
மூலம் அடிக்கடி தவறு செய்தது.
சோவியத்துகளுக்கு வன்முறை நடவடிக்கைகள் அவர்களது மதிப்பீட்டிற்கு ஏற்ற
மட்டத்திற்கே தேவைப் பட்டது. அன்றய நிகழ்வுகளை அவைகளின் உண்மை
வடிவத்தைப்போல மீள் நிர்மாணம் செய்வதே எமது கடமையாகும், அதற்காகப்
பிரதிவாதிகளாகிய நாங்கள் இந்த விசாரணையில் செயலூக்கத்துடன்; கலந்து
கொண்டோம்.
இந்த நீதிமன்றத்தில் இன்னுமொரு முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியை
முன்வைக்க அனுமதியுங்கள். தொழிலாளர்கள் பிரதிநிதிகளான சோவியத்துகளின்
செயல்களும் அக்டோபர்
17(30)அறிக்கைப் பிரகடனங்களும்
சட்ட அடிப்படைக்குள் அடங்குவனவா? சோவியத் தீர்மானங்களுக்கும் அரசியல்
நிர்ணய சபைக்குமிடையே, ஓர் ஜனனாயகக் குடியரசைப் படைப்பதற்கும் அக்டோபர்
அறிக்கைக்குமிடையே என்ன உறவு இருந்தது. அந்தக் காலங்களில் கேட்பதற்கு
எமக்குத் தோன்றாத அந்தக் கேள்வியை அப்பட்டமாகக் கேட்க அனுமதியுங்கள்.
ஆனால் அது இன்று சந்தேகத்திற்கு இடமின்றி இந்த நீதி மன்றத்திற்கு
முக்கியமானது.
நீதிமன்றத்தில் அமர்ந்திருக்கும் கனவான்களே சாட்சி லுகானின்
வாய்ப்பிறப்பை நாங்கள் இங்கே கேட்டோம். அது தனிப்பட்ட முறையில் எனக்கு
மிகவும் ஆர்வத்தைத் தூண்டுவதாக இருந்தது.
அதன் சில முடிவுகள் ஏற்புடையதாகவும் ஆழமானதாகவும் இருந்தது.
மற்ற விஷயங்களுக்கிடையில் லுகானின் சொன்னார் தொழிலாளர் பிரதிநிதிகளான
சோவியத்துக்களும் கொள்கைகளும் ஒரு குடியரசு அமைப்பாக விளங்கியது என்று.
அதன் முழக்கங்களும் மற்றும் அதன் அரசியற் கொள்கைகள், மூலதர்மங்கள், அதன்
சுதந்திரப் பிரகடனம் போன்றவைற்றை உண்மையாகவும், நேரடியாகவும், மற்றும்
உறுதியாகவும் அமுல் நடத்தினால் அது அக்டோபர்
17 இல் சார்அரசு பிரகடனப்
படுத்திய ஒரு குடியரசு போன்ற அமைப்பாகிவிடும்;. உண்மையில் அந்த
அறிக்கையைப் பிரகடனப்படுத்திய பொறுப்பாளிகள் உண்மையில் தாங்கள் பிரகடனப்
படுத்தியதற்கு எதிராகவே போராடினார்கள்.
ஆமாம், ஆசனத்தில் அமர்ந்திருக்கும் கனவான்களே, நிலப்பிரபுக்களின்
பிரதிநிதிகளே!
ஆம் புரட்சியாளர்கள், பாட்டாளி வர்க்க சோவியத்துகள் உண்மையில் ஒக்டோபர்
வேலைநிறுத்த அழுத்தத்தின்கீழ் றஸ்சிய மக்களுக்கு வாக்குறுதி அளித்த
பேச்சுச் சுதந்திரத்தையும், கூட்டங்கூடும் சுதந்திரத்தையும் தனிமனித
பாகாப்பு என்பவற்றையே அமுல் நடாத்தினார்கள.; அதே சமயம் பழைய
அரசஜந்திரத்தால் செய்ய முடிந்தது என்னவென்றால் மக்கள் சட்டபூர்வமாக
அடைந்த உரிமைகளைத் துண்டு துண்டாகக் கிழித்தெறிந்ததுதான். ஆசனத்தில்
அமைந்துள்ள கனவான்களே, சந்தேகத்திற்கு இடமற்ற புறநிலை உண்மைகள்
வரலாற்றில் ஒரு பகுதியாக மாறிவிட்டது. அது மறுக்கமுடியாதது, ஏனெனில் அது
மறுதலிக்க முடியாதது.
இருந்தபோதும் நாங்கள் அகவய அடிப்படையிற் செயற்பட்டதோடு ஒக்டோபர் 17
அறிக்கை அகவய அடிப்படையில் பிரகடனப்படுத்தப்; பட்டதா என்று என்னையும்
என் தோழர்களையும் கேட்கலாமா?
கேட்கவே முடியாது என்று நாம் திட்டவட்டமாகவே கூறுவோம். ஏன்?
நீதிமன்றத்திலுள்ள கனவான்களே நாங்கள் தவறு செய்யவில்லை என்று மிக ஆழமாக
நம்பினோம். அக்டோபர்
17 அறிக்கை
புதிய சட்ட அடிப்படையில் உருவாக்கப்படவில்லை என்றும் ஒரு புதிய வகைச்
சட்ட அமைப்பு முறைக்கான அத்திவாரமும் போடப்;படவில்லை என்று நாம் ஆழமாகவே
நம்பினோம். இந்த அறிக்கையின் மூலம், முழு அரச இயந்திரத்தையும் உண்மையாக
மறு ஒழுங்கு செய்யவேண்டும் என்று நாங்கள் நம்பினோம்.
பொருள்முதல்வாத நிலைப்பாட்டின் மூலம் இந்த ஒன்று மட்டுமே சரியானது என்று
நாங்கள் ஏற்றுக்கொண்டோம்;. ஆனால் நாம் அக்டோபர்
17 அறிக்கையின் உள்ளார்ந்த சக்தியை
நம்பவில்லை. இதை நாங்கள் பகிரங்கமாகவே அறிவித்தோம்.
நாங்கள் கட்சி அங்கத்தவர்கள் என்ற பாங்கிலும் புரட்சியாளர்கள்
என்றரீதியிலும் எங்கள் நடைமுறைக் குறிக்கோளையும் எங்கள் அகவய
அணுகுமுறையையும்; நீதிமன்றத்திற்காக எங்களது உண்மையான குறிக்கோளையும்
எங்களது நிலைப்பாட்டையும் கைவிட்டு எமது அறிக்கைக்கு ஏற்றமுறையில் ஓர்
அரச குடிமக்கள் என்றமுறையில் தீர்மானித்தோம் என்பதை நான் நம்பவில்லை.
நீதிவிசாரணைக்காக, அது போயும் போயும் ஒரு நீதிமன்றமென்ற முறையிலாவது,
நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையை ஒரு புதிய சட்டபூர்வத்திற்கான
அடித்தளமாகக்; பார்க்கக் கடமைப்பட்டது. அப்படி இன்றி அது வேறாக
இருந்தால் அது இல்லாமற் போய்விடும். இத்தாலியிலே ஒரு முதலாளித்துவ
நாடாளுமன்றக் கட்சி நாட்டின் முடியாட்சி அரசியலமைப்பின் அடிப்படையில்
செயற்படுகிறது என்பது எங்களுக்குத்தெரியும். அனைத்து நாகரீக நாடுகளிலும்
இயல்பாகவே புரட்சிகரக் குணாம்சமுடைய சோஷலிசக் கட்சிகள் சட்டரீதியாக
இயங்கிப் போராடுகின்றன.
பிரச்சனை இதுதான்: அக்டோபர்
17 அறிக்கையானது றஸ்சியக்
குடியரசின் சோஷலிசவாதிகளுக்கு செயற்படுவதற்கு ஏதாவது இடத்தை
விட்டிருக்கிறதா? இந்தக் கேள்விக்கு நீதி மன்றம் விடையிறுக்க வேண்டும்.
நீதிமன்றத்தில் நாம் அரசியலமைப்பு அறிக்கை ஒரு வெற்றுப் பட்டியல்
வாக்குறுதி என்றும் இது தானாக ஒருநாளும் நிறைவேறாது என்று
சமூகஜனனாயகவாதிகளான நாம்; விவாதித்ததைச் சரியென்று இந்த நீதிமன்றம்
சொல்ல வேண்டும். அந்தக் காகித உத்தரவாதங்களுக்கு எதிரான எமது புரட்சிகர
விமர்சனங்கள் சரியானது இல்லையா? நாங்கள் மக்களை உண்மையானதும்
முழுமையானதுமான பாகிரங்கப் போராட்டத்திற்கு அழைத்தது சரியில்லையா? நாம்
சரியா அல்லது தவறா? அக்டோபர்
17 அறிக்கை ஓர் உண்iமான
சட்டபூர்வமான சட்ட அடிப்படையின் மீது அமைந்ததென்றும் பிரையைகளது
கருத்துக்களும் நோக்கங்களும் மாறுபட்டு இருந்தபோதும் குடியரசுச்
சட்டநெறிக்கமையச் சட்டபடி நடக்கும் பிரையைகள் மனிதர்களாக
வாழமுடியுமென்றும் இந்த நீதிமன்றம் இயலுமென்றால் சொல்லட்டும.; ஷஷநீங்கள்
எனது ஜதார்த்தத்தை நிராகரித்தீர்கள். ஆனால் நான் தப்பிப் பிழைத்து
உங்களுக்காகவும் அதுபோல் நாடு முழுவதற்குhகவும் வாழ்கிறேன்|| என்று
அக்டோபர்
17 அறிக்கை
இந்த நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் எங்களுக்கு இங்கே சொல்லட்டும்.
தொழிலாளர்களின் பிரதிநிதிகளான சோவியத்துகள், ஓர் அரசியல்நிர்ணயசபை என்ற
பிரச்சனையையோ ஒரு ஜனனாயகக் குடியரசை உருவாக்க வேண்டும் என்ற
பிரச்சனையையோ அதன் கூட்டங்களில் ஒரு நாளும் எழுப்பவில்லை என்று ஏற்கனவே
நான் சொல்லியிருக்கிறேன்.
இருந்தபோதும் தொழிலாளர்வர்க்க சாட்சிகளின் உரைகளிலிருந்தும் அவர்கள்
எழுப்பிய சுலோகங்களிலிருந்தும் அவர்கள் தங்களது அணுகுமுறைகளைத் தெளிவாக
வரையறுத்தார்கள் என்பதைக் காண்பீர்கள். அது வேறு எப்படி இருக்க முடியும்.
எப்படியிருந்தபோதிலும், சோவியத்துகள் கன்னி மண்ணில் எப்படியும்
வந்திருக்க மாட்டா. ஜனவரி 9(22) நிகழ்வுகளுக்குள் றஸ்சியப் பாட்டாளி
வர்க்கம் ஏற்கனவே வாழ்ந்த அனுபவத்தால் அது உருவாக்கப்பட்டது. செனட்டர்
ளூனைடழஎளமல'ள கமிஷன் மூலமும், றஸ்சிய சர்வாதிபத்தியத்தின் நீண்ட, முழு
நீண்ட பள்ளிகள் மூலமும் அது உருவாக்கப் பட்டது. சோவியத்துகள்
தோன்றுவதற்கு நீண்ட காலங்களுக்கு முன்னரே, அரசியல்நிர்ணய சபைக்கான
கோரிக்கை, அனைவருக்கும் வாக்குரிமை, ஒரு ஜனனாயகக் குடியரசுக்கான
கோரிக்கை, அதனோடு சேர்ந்து எட்டு மணி நேர வேலைநாள் புரட்சிகரப் பாட்டாளி
வர்க்கத்தின் முக்கிய கோஷங்களாக ஆகிவிட்டிருந்தன. அதனால் தான்
சோவியத்துகள் கொள்கை விஷயங்களில் இந்த பிரச்சினைகளை எழுப்ப சந்தர்ப்பம்
ஏற்படவில்லை. மேலும் அது அதன் தீர்மானங்களில் அவைகளை இலேசாகச்
சேர்த்துக் கொண்டது. இந்த விடயங்கள் ஏற்கனவே ஒரே தடவையில்
சேர்த்துக்கொள்ளப் பட்டதால் அதை மீண்டும் சேர்க்கவேண்டி இருக்கவில்லை.
அதேபோன்றே சாராம்சத்தில் கிளர்ச்சி எழுச்சி யோசனையும் சேர்த்துக்
கொள்ளப்படவில்லை என்பது உண்மையாகும்.
நீதிமன்றக் கனவான்களே, கிளர்ச்சி எழுச்சி என்றால் என்ன? அது ஓர்
அரண்மனைப் புரட்சியல்ல. அது ஓர் இராணுவச் சதியல்ல. ஆனால் அது ஒரு
உழைக்கும் வெகுசனங்களின் கிளர்ச்சி எழுச்சி! இந்த நீதிமன்றத்தின் தலைவர்
பின்வரும் கேள்வியைச் சாட்சி ஒருவரிடம் கேட்டார்: "ஓர் அரசியல் வேலை
நிறுத்தம் கிளர்ச்சி எழுச்சி என்று கருதுகிறீரா? " நான் சாட்சி என்ன
சொன்னார் என்பதை மறந்து விட்டேன். நீதிமன்றத் தலைவருக்கு அதுபற்றிச்
சந்தேகம் இருந்தபோதும் அரசியல் வேலை நிறுத்தம் ஒரு கிளர்ச்சி
எழுச்சியென்று நான் நம்புகின்றேன்.
அது ஒரு தோற்ற மறுப்பல்ல. குற்றப் பத்திரிகைக் கண்ணோட்டத்தில்
பார்க்கும் போது அது தோற்ற மறுப்பாகத்தோன்றலாம். நான் திரும்பவும்
சொல்கின்றேன். கிளர்ச்சி எழுச்சி பற்றிய எனது எண்ணக் கருவை, நான்
தற்போது நிரூபிப்பேன். பொலீஸ்சும் அரசதரப்பும் புனைந்த அதன் பெயரோடு
அந்தக் கலைச்சொல்லுக்குப் பொதுவான எதுவும் கிடையாது. ஓர் அரசியல் வேலை
நிறுத்தம் ஒரு கிளர்ச்சி எழுச்சியாகும். நான் கேட்;கிறேன், உண்மையில்
ஓர் அரசியற் பொது வேலைநிறுத்தும் என்றால் என்ன? இதற்குப் பொருளாதார
வேலைநிறுத்தத்தோடு சேர்ந்த ஒரு பொதுப் பண்பு உண்டு.
அதாவது இரண்டு சந்தர்ப்பங்களிலும் தொழிலாளர்கள் வேலை செய்வதை
நிறுத்துவார்கள். வேறு எந்த வைகையிலும் ஒன்றோடு ஒன்று ஒத்துப் போகாது.
ஒரு பொருளாதார வேலை நிறுத்தம் திட்டவட்டமான குறுகிய நோக்கத்தைக் கொண்டது.
முதலாளி மீது அழுத்தத்தைத்கொண்டு வந்து சுமையை ஏற்றித் தற்காலிகமாக அவர்
போட்டியாக விளங்கும் துறையிலிருந்து வெளியே விலக்கி வைப்பது. அது அந்த
தொழிற்சாலையின் வரம்புகளுக்குள் சில மாற்றங்களை அடைவதற்காக ஒரு
தொழிற்சாலையில் வேலை செய்வதைப் பகிஸ்கரிப்பது.
ஓர் அரசியல் வேலைநிறுத்தத்தின் இயல்பு ஆழமாகப் பார்க்குமிடத்து மிகவும்
வித்தியாசமானது. அது தனிப்பட்ட முதலாளிகளுக்கு எந்த அழுத்தத்தையும்
கொடுக்காது. ஒரு வழக்கமாக அரசியல் வேலைநிறுத்தத்தின்போது எந்தத்
தனிப்பட்ட பொருளாதாரக் கோரிக்கையையும் முன்வைக்காது. அது தனது
கோரிக்கைகளை முதலாளிகளின் தலைமையின் மீதே வைக்கும். இதனால் முதலாளிகளின்
தலைவர்களே கடினமாகப் பாதிக்கப் படுவார்கள். அதே நேரத்தில் அரச
அதிகாரமும் பாதிக்கப் படும். அப்படியானால் ஓர் அரசியல் வேலை நிறுத்தம்
ஓர் அரச அதிகாரத்தை எப்படிப் பாதிக்கும்? அது அதன் முக்கிய
செயற்பாடுகளைச் செயலிழக்க வைத்துவிடும். ஒரு நவீன அரசானது, ஏன்
றஸ்சியாபோன்ற பின் தங்கிய நாட்டிலுங்கூட, பேருந்துப்பாதை என்ற எலும்புக்
கூட்டாலும் தந்திப் பிணைப்பு என்ற நரம்பு மண்டலத்தாலும் ஆன ஒரு
முழுமையான ஒரு மையப்படுத்தப் பட்ட பொருளாதார உயிரிபோன்ற அடித்தளத்தைக்
கொண்டதாக உள்ளது. தந்தி, பேருந்து, மற்றும் நவீன தொழில் நுட்பங்களின்
அறிவு றஸ்சியாவில் கலாச்சார மற்றும் பொருளாதாரத் தேவைகளை அடைவதற்குப்
பயன்படாமல் றஸ்சிய சர்வாதிகாரத்தின் வரம்பில்லா அடக்குமுறை
நோக்கங்களுக்கு எல்லாவகைகளிலும் அத்தியாவசியமானவைகளாகும். இருப்புப்
பாதை தந்தி என்பன ஒரு முனையிலிருந்து மற்ற முனைக்குப் படைகளை கொண்டு
செல்வதற்கும் அவைகளை ஒருங்கிணைப்பதற்கும்; நிர்வாகச் செயற்பாடுகளுக்கும்
அரசுக்கு எதிரான செயற்பாடுகளை நசுக்குவதற்கும் ஈடு செய்ய முடியாத
ஆயுதங்கள்.
ஓர் அரசியல் வேலை நிறுத்தம் என்ன செய்யும்? அது அரசின் பொருளாத
ஜந்திரத்தை முடக்கி, நிர்வாகத்தின் பாகங்களுக்கிடையேயுள்ள தொடர்புகளைக்
குலைத்து அரசாங்கத்தைத் தனிமைப் படுத்தி அதைச் சக்தியற்றதாக்கிவிடும்.
மறுபுறம் அது அரசியல்ரீதியாக தொழிற்சாலைகளிலுள்ள தொழிலாள வெகுசனங்களை
ஐக்கியப் படுத்தி அணிவகுத்து இந்தத்தொழிலாளர் சேனைகளை அரசுக்கு எதிராகத்
திருப்பிவிடும். நீதிமன்றத்திலுள்ள கனவான்களே அதிலேதான் கிளர்ச்சி
எழுச்சியின் சாராம்சம் உள்ளது. நீதிமன்றத்திலுள்ள கனவான்களே கிளர்ச்சி
எழுச்சியென்பது ஸ்தாபனப்பட்ட அரச எதிரிகளுக்கு எதிராகப் பாட்டாளிவர்க்க
வெகுசனங்கள் அனைவரையும் ஒரு புரட்சிகர எதிர்ப்பு நடவடிக்கையில்
ஈடுபடும்படி ஐக்கியப்படுத்துவது என்றவாறே சோவியத்துகள் விளங்கிக்
கொண்டார்கள். நானும் அவ்வாறே விளங்கிக் கொண்டேன்.
சோவியத் இல்லாத நேரத்தில் நாம் தன்னிச்சையாக வெடித்த அக்டோபர்
வேலைநிறுத்தத்தின்போது இரண்டு விரோதக் கன்னைகளுக்கிடையேயான ஒரு
புரட்சிகர மோதலைப் பார்த்தோம். இது சோவியத் உருவாதற்கு முன்பு நடந்த
மோதுதலாகும். இந்த ஒக்டோபர் வேலை நிறுத்தமும் அப்பொழுது நடந்த
புரட்சிகர முட்டிமோதல்களுமே உண்மையிலே சோவியத்தைப் பெற்றெடுத்தது.
ஒக்டோபர் வேலைநிறுத்தம் "அராஜகத்த" உருவாக்கியது. இந்த அராஜகத்தின்
பலாபலனாய் அக்டோபர்
17 அறிக்கை
வெளிவந்தது. வழக்குத்தொடுத்த அரச தரப்பு இதை மறுக்க மாட்டாது என்று நான்
நம்புகின்றேன். எந்தப் பழமைவாய்ந்த அரசியல்வாதிகளும் பழமைவாய்ந்த
பத்திரிகையாளர்களும் அரை உத்தியோகத்தர்களான ழேஎழலந ஏசநஅலய நொவொயா
விறெமியாக்களும் இதை மறுக்க மாட்டார்கள் என்று நான் நம்புகின்றேன்.
அக்டோhர் அரசியல் வேலை நிறுத்தத்தின் பீதியினாலேயே அக்டோபர் அறிக்கை
உருவாக்கப்பட்டது என்று ழேஎழலந ஏசநஅலய நொவொயா விறெமியா ஒரு சில
நாட்களுக்கு முன்பு எழுதியது. அக்டோபர் அறிக்கையானது புதிய சக்திகளாலான
அமைப்பு முறையின் அத்திவாரமாகும். நீதிமன்றத்திலுள்ள கனவான்களே நாங்கள்
இதை அங்கீகரிக்க வேண்டும். தற்போதய அரச அமைப்புமுறையானது பீதியை
அடிப்படையாகக் கொண்டது.
அந்தப் பீதி தோன்றுவதன் அடிப்படை பாட்டாளி வர்க்கத்தின் அரசியல்
வேலைநிறுத்தமாகும்.
அதாவது அரசியற் பொது வேலை நிறுத்தம் என்பது வேலையைப் புறக்கணிப்பதையும்
தாண்டிய ஏதோ ஒன்றாகும் என்பதை நீங்கள் பார்க்க வேண்டும்.
ஓர் அரசியல் வேலைநிறுத்தம் என்பது, அது வேலையை நிறுத்திய மாத்திரமே அது
ஓர் ஆhப்பாட்டம் ஆகிவிடுகிறது. சாராம்சத்தில் அது ஒரு கிளர்ச்சி
எழுச்சியாகும். இதைச் சரியாகச் சொல்வதென்றால் இதுதான் மிக முக்கியமான,
மிகப் பொதுவான பாட்டாளிவர்க்கக் கிளர்ச்சி எழுச்சியாகும். இது மிக
முக்கியமான கிளர்ச்சி எழுச்சி முறையேயொழிய இதுமாத்திரம்தான் ஒரேயொரு
முறையல்ல. ஓர் அரசியல் வேலை நிறுத்தப் போராட்ட முறைக்கு அதற்கேயுரிய
இயல்பான எல்லை உண்டு. சோவியத்துகள் வேலைக்குப் போகும்படி கோரிய
மாத்திரமே ஒக்டோபர்
2 ம் தேதி(நவம்பர்
3) நண்பகலே தொழிலாளர்கள் வேலைக்கு
போனார்கள் என்பதே இதைத்தெளிவு படுத்தும்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்களிப்பின் மூலம் அக்டோபர்
17 அறிக்கை வரவேற்கப் பட்டதால்,
வாக்குறுதி அளித்தபடி சுதந்திரங்களை அறிமுகப் படுத்துவதில் அரசாங்கம்
தோல்வியடையும் என்று வெகுஜனங்கள் அஞ்சியதற்கு நல்ல காரணம் உண்டு. ஒரு
தீர்க்கமான போராட்டம் தவிர்க்க முடியாதது என்பதைப் பாட்ளிவர்க்கம்
கண்டுகொண்டதால் தங்கள் புரட்சியின் அதிகார மையமான சோவியத்தின் பக்கம்
உள்ளுணர்வால் திரும்பினர். மறுபக்கத்தில் சர்வாதிகார ஆட்சி அதன் பீதி
நிலையிலிருந்து மீண்டு அதன் அரைகுறையாக இடிந்த ஜந்திரத்தை புனரமைக்கத்
தொடங்கித் தனது துருப்புக்களை மீண்டும் அதற்குரிய முறையில்
ஒழுங்குபடுத்தியது. அக்டோபர் மோதுதலின் விளைவாக இரண்டு சக்திகள்
வெளிப்பட்டன. ஒரு புதிய வெகுஜன சக்தியை அடிப்படையாகக் கொண்ட மக்கள்
அதிகாரமான தொழிலாளர் பிரநிதிகளைக் கொண்ட சோவியத் என்ற சக்தி. மற்றயது
பழைய இராணுவத்தை அடிப்படையாகக் கொண்ட உத்தியோகபூர்வ சக்தி. இந்த இரு
சக்திகளும் அருகருகே இருக்க முடியாதவை. ஒன்று வலுப்பெற்றால் அது மற்றயதை
அழிந்தொழியும்படி அச்சுறுத்தும்.
துப்பாக்கி முனையில் ஏற்படுத்தப்பட்ட சர்வாதிகாரம் மக்கள் சக்திகளை
ஐக்கியப்படுத்தும் மையமான சோவியத்துக்குள் இயற்கையாகவே அதிகபட்ச
வியாகூலத்தையும் குழப்பத்தையும் நிலைகுலைவையும் இந்தப் பரந்த நிகழ்வுப்
போக்கினுள் கொண்டுவர முயற்சிக்கும். மக்கள் நம்பிக்கையின்,
கட்டுப்பாட்டின், செயல் முயற்சியின், தொழிலாளிவர்க்க ஐக்கியத்தின்
அடிப்படையிலேயே சோவியத் நிறுவப்பட்டது. இப்படி நிறுவப்பட்ட சோவியத்
மக்கள் சுதந்திரம் அச்சுறுத்தப் படுவதை, குடிமக்கள் உரிமை பறிபோவதன்
பேராபத்தை, தனிமனித உரிமையின் பாதுகாப்புப் பாழாவதை புரிந்து கொள்வதில்
தவறிழைக்காது. மறுபுறம் இரத்தக் கறை படிந்த இராணுவத்தின் கைகளில்
அக்டோபர்
17
வரைக்கும் எல்லா ஒடுக்குமுறை அதிகாரங்களும் சடத்துவ ஆயுதங்களும்;
பொதிந்திருந்தன.
வளர்ந்து வந்த வெகுஜன எழுச்சியின் இரண்டாவது மாபெரும் போராட்டக் கட்டம்
என்னவென்றால் இந்த இரண்டு சக்திகளுக்குமிடையில் யார் இராணுவத்தின் மீது
செல்வாக்கைச் செலுத்துவது என்பதாகும்.
எதேச்சாதிகாரத்தை எதிர்த்த பாட்டாளி வர்க்கத்தின் வெகுஜன
வேலைநிறுத்தமானது இராணுவத்தைத் தொழிலாளர் பக்கம் கொண்டுவருவதற்கும்
சிப்பாய்களோடு சகோதரத்துவம் பூண்டு அவர்கள் மனதை வெல்வதற்குமான ஒரு
சக்திவாய்ந்த இயக்கமாகியது. இந்த இயக்கத்திலிருந்து இயற்கையாகவே
சர்வாதிகாரம் தங்கி நிற்கும் சிப்பாய்களுக்கு அறைகூவுவதற்கு ஒரு
புரட்சிகரக் கோரிக்கை தோன்றியது.
இரண்டாவது நவம்பர் வேலைநிறுத்தம், தொழிற்சாலைகளுக்கும்
படைமுகாங்களுக்கும் இடையே ஒரு சக்திவாய்ந்ததும் அற்புதமானதுமான
ஐக்கியத்தைக் காட்டும் செயற்பாடாகும.; இராணுவம் மக்களுக்கு ஆதரவாகச்
சென்றிருந்தால் நிச்சயமாக ஒரு கிளார்ச்சி எழுச்சி தேவைப் பட்டிருக்காது.
ஆனால் புரட்சியின் பக்கம் ஓர் அமைதியான முறையில் இராணுவம் மாறுவதைக்
கருதிப்பார்க்க முடிமா? இல்லை. அப்படி நடவாது. இராணுவம் மக்களின்
நண்பனாகப் போவதைச் சர்வாதிகாரம் நானாவித ஊழற் செயற்பாடுகளிலிருந்தும்
இராணுவத்தை விடுவித்து கையைக் கட்டிக் கொண்டு காத்திருக்க போவதில்லை.
அனைத்தையும் இழந்துவிடுவதற்கு முன்னதாகச் சர்வாதிகாரம் முன்முயற்சி
எடுத்து ஒரு தாக்குதலைத் தொடுக்கும். பீட்டர்ஸ்பர்க் தொழிலாளர்கள் இதைத்
தெரிந்திருந்தார்களா? ஆம் அவர்களுக்கு இது தெரிந்திருந்தது. இரு
தரப்பிற்கும் இடையே வெளிப்படையான மோதல் தவிர்க்க முடியாததாக இருந்தது
என்பதைப் பாட்டாளி வர்க்கமும் சோவியத்துகளும் நம்பினார்களா? ஆமாம்,
அவர்கள் அதை நம்பினாhர்கள். விரைவாகவோ அல்லது பின்னரோ அபாயகரமான நேரம்
வரும் என்பதிற் சந்தேகம் இருக்கவில்லை. கட்டாயமாகவே அவர்களுக்கு அது
தெரிந்திருந்தது.
மக்கள் சக்தியினால் ஆன ஸ்தாபனம் ஆயுதந்தாங்கிய எதிர்ப்புரட்சித்
தாக்குதல் மூலம் தடுக்கப்பாடாது விட்டிருந்தால் அது நிச்சயமாகத்
தொழிலாளர் பிரதிநிகளான சோவியத் தலைமையின் கீழ் சென்ற பாதையில் தொடர்ந்து
முன்னேறி இருக்கும். அதன் பலாபலனால் நிச்சயமாகப் பழைய அமைப்புமுறையானது
எந்தவிதப் பலாத்காரத்தின் பயன்பாடும் இல்லாமல் அழிந்திருக்கும்.
நாங்கள் என்னத்தைக் கண்டோம்?
தொழிலாளர்கள் சோவியத்துகளைச் சூழ அணிதிரண்டதைக் கண்டோம். எப்பொழுதும்
அதிகரித்துக் கொண்டே போன விவசாய வெகுசனங்களையெல்லாம் அரவணைத்துக் கொண்டு
எப்படி விவசாயிகள் சங்கம் அதன் பிரதிநிதிகளைச் சோவியத்திற்கு அனுப்பிச்
சோவியத்தைச் சூழ அணிதிரண்டதைக் கண்டோம்.
எப்படிப் புகையிரத மற்றும் அஞ்சற் தொழிற் சங்கள்கள் சோவியத்தைச் சூழ
அணிதிரண்டதைக் கண்டோம்.
எப்படி உத்தியோகத்தர்கள் சங்கமும் தொழிற்சங்கங்களின் சம்மேளனமும்
சோவியத்தை நோக்கி ஈர்க்கப் பட்டன என்பதைக் கண்டோம். நாம் அங்கே எவ்வளவு
சகிப்புத்தன்மையைப் பார்த்தோம். எவ்வளவு தாரள மனப்பான்மையைக் கண்டோம்.
தொழிற்சாலை நிர்வாகங்கள் எப்படிச் சோவியத்துகளை அணுகினர் என்பதைக்
கண்டோம்.
இதுவரைகாலமும் ஒத்திப் போட்டுக் கொண்டே போன புதிய அரசியல் அமைப்பு
முறையான அரசில் நிர்ணய சபைக்கு அதிகார உறுப்பின் மையப் பகுதியிலிந்து
அத்திவாரமிடும் சவால்விட முடியாத ஒரு வீர முயற்சியை முழுநாடும் உண்மைலே
மேற்கொண்டிருந்தது.
பழைய அரச சக்தி இந்த அங்கக முயற்சியில் தலையிடவில்லை என்றால், அது
தேசிய வாழ்வில் உண்மையான அராஜகத்தை அறிமுகப்படுத்தாமல் விட்டிருந்தால்;,
இந்த சக்திகளை நிறுவனமாக்கும் செயல்முறை முழுச் சுதந்திரமாக நடைபெறக்
கூடியதாக இருந்திருந்தால் இதன்விளைவாக பலாத்காரத்தைப் பயன்படுத்தாமலும்
இரத்தம் சிந்தாமலும் ஒரு புதிய றஸ்சியா மறுபடி பிறந்திருக்கும்.
ஆனால் விடுதலைக்கான செயல்முறை ஒரு சுமூகமான நடவடிக்கையாக இருக்கும்
என்று நாம் ஒரு கணமும் நம்பவில்லை என்பது துல்லியமான விடயமாகும். நாம்
பழைய ஆதிக்கத்தின் உண்மையான இயல்பை மிக நன்றாக அறிவோம்.
கடந்தகாலத்திலிருந்து உறுதியாக முறித்தது போல் அறிக்கையில் இருந்து
தெரிகின்றபோதிலும் பழைய அரசஜந்திரம் தனது சொந்த விருப்பத்தின் பேரில்
அதிகாரத்திலிருந்து விலகிக் கொள்ளப் போவதில்லை. அதிகாரத்தை மக்களிடம்
ஒப்படைக்காது அல்லது அதன் முக்கிய நிலை ஒன்றிலிருந்தும் சரணடையாது என்று
சமூகஜனனாயவாதிகளான நாங்கள் நம்புகின்றோம். நாங்கள் முன்கூட்டியே
எதிர்பார்த்ததோடு மற்றும் தேசத்தையும் வெளிப்படையாகவே எச்சரித்தோம்.
சர்வாதிகாரம் இப்படிப்பட்ட அதிகாரத்தை அதன் கைகளில் இப்பொழுது இருப்பது
போல் வைத்திருக்க மற்றும் அது பயத்தால் துறந்தவைகளை மீண்டும் பெறுவதற்கு
மேலும் பல அதிரவைக்கும் முயற்சிகளை மேற்கொள்ளுமே தவிர விட்டுக்
கொடுக்காது. நம்முடைய கண்ணோட்டத்தில் கிளர்ச்சி, அதுவும் ஆயுதம் ஏந்திய
கிளர்ச்சி தவிர்க்க முடியாதது. நீதிமன்றத்தில் வீற்றிருக்கும் கனவான்களே,
பொலீஸ் மற்றும் இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் செயற்பாட்டின் ஒரு
வரலாற்றுத் தேவையாக ஆயுதம் ஏந்திய கிளர்ச்சி இருந்தது. இன்னும்
வரலாற்றுத் தேவையாக இருந்து வருகிறது.
அக்டோபர் மற்றும் நவம்பர் முழுவதும் இந்தக் கருத்து சோவியத்தின்
அனைத்துக் கூட்டங்களிலும் மகாநாடுகளிலும் ஆட்சி செலுத்தியது. முழுப்
புரட்சிகரப் பத்திரிகைகளிலும் ஆதிக்கம் செலுத்தியது. முழு அரசியற்
சூழல்களிலும் நிரம்பி வழிந்தது.
ஒன்றில் அல்லது மற்றொன்றில் அல்லது இரண்டிலும் மீண்டும் மீண்டும்
வெளிப்பட்டது. ஒவ்வொரு சோவியத் உறுப்பினரின் உணர்மையிலும்
படிந்திருந்தது. அதனாலேயே மிக இலகுவாக அது சோவியத் தீர்மானங்களின்
பகுதியாக உருவாகியது. அதனாலேயே அதுபற்றிக் கலந்துரையாட வேண்டிய அவசியம்
ஏற்படவில்லை.
அக்டோபர் வேலைநிறுத்தத்திலிருந்து ஒரு பதட்டமான அரசியற் சூழ்நிலையே
வாரிசுரிமையாகப் பெறப்பட்டிருந்தது. ஒரு வெகுஜனப் புரட்சிகர அமைப்பு
அதன் இருப்புக்குப் போராட வேண்டிய சூழலே நிலவியது. அந்த வெகுஜன அமைப்பு
சட்டபூர்வமாக ஏற்படுத்தப் படவில்லை ஏனெனில் அங்கே சட்டம் நிலவவில்லை.
அது தனது சொந்தப் பலத்திலேயே தப்பிப் பிழைத்தது. பழிவாங்கக் காத்துக்
கொண்டிருந்த ஓர் ஆயுத எதிர்ப்புரட்சியை அது எதிர்கொண்டது. இதுதான்
கிளர்ச்சி எழுச்சிக்கான அட்சரகணித சூத்திரம் என்று நான் அதைச் சொல்வேன்.
புதிய சம்பவங்கள் இந்தச் சூத்திரத்துள் வெறுமனே புதிய எண் பெறுமதிகளையே
அறிமுகப் படுத்தின.
ஆயுதமேந்திய கிளர்ச்சிபற்றிய யோசனை ஒருபுறமிருக்க, அது அரசதரப்பின்
மேலோட்டமான முடிவாக இருந்த போதிலுங்கூட, இது சோவியத்தில் நவம்பெர் 27
ஏற்றுக்கொள்ளப்பட்ட முடிவிலே மாத்திரமா காணமுடியும். இல்லை. அதாவது அது
எம்மைக் கைதுசெய்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரேயே எடுக்கப்பட்டது.
அங்கே அது தெளிவாகவும் இணையற்ற விதத்திலும் வெளிப்படுத்தப் பட்டது.
ஆயுதமேந்திய கிளர்ச்சி பற்றிய யோசனை வௌ;வேறு வடிவங்களில் இருந்த
போதிலும் அது அடிப்படையில் ஒன்றாகவே இருந்தது. சோவியத் தோற்றத்தின்
ஆரம்பத்திலிருந்தே அதன் வளர்ச்சிப் போக்கு எங்கணும் ஒரு சிவந்த இளை
ஊடாடுவது போல வழி நெடுகலும் ஊடுருவி ஊடாடி இருந்தது. சோவியத்தின்
சவஅடக்க ஆர்ப்பாட்ட ஊhவலம் ரத்துச் செய்ததில், அதன் நவம்பர்
வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் தீர்மானத்தில்,
அரசாங்கத்துடனான ஆயுதமேந்திய போராட்த்தைப் பற்றியது போன்ற அனேக
தீர்மானங்களிலும் மற்றும் தவிர்க்கமுடியாத ஒரு இறுதி ஆயுதப்போராட்டத்
தீர்மானம் வரை அது தொடர்ந்து பேசப்பட்டுள்ளது.
ஆனால் இந்த முடிவுகளைப் பற்றிய சோவியத்துகளின் சொந்த வியாக்கியானம்
என்ன? அது ஆயுதமேந்திய எழுச்சியை ஒரு நிறுவனம் என்று நம்பி அதை
இரகசியமாகத் தயாரித்துத் தயார் நிலையில் அதை வீதிக்குக்
கொண்டுவரலாமென்று நம்பியதா? ஒரு கிளர்சி எழுச்சியை முன் கூட்டியயே
திட்டமிட்டபடி செய்து முடிக்கலாமென்று நம்பியதா? நிர்வாகக் குழு
தெருப்போராட்டம் பற்றி ஒரு நுட்பத்தை விவரித்ததா? இல்லை. நிச்சயமாக
இல்லை. இந்தக் குற்றப் பத்திரிகையின் ஆசிரியர் சாதாரணமாக ஒரு டஜன்
துப்பாக்கிகளைக் கையில் எடுத்துவிட்டால் அவரைப் பொறுத்த மட்டில் அது ஒரு
ஆயுத எழுச்சியாகிவிடும் என்ற புதிரைக் கூறியுள்ளார்.
ஆனால் அவரது பார்வை குற்றவியற் சட்டப் பார்வை மட்டுமே. குற்றவியற்
சட்டத்திற்குச் சதிகாரச் சங்கங்களை மட்டமே தெரியும். அதனால் ஒரு வெகுஜன
அமைப்புப் பற்றிய கருத்தைச் சிந்திக்க முடியாது. அதற்குப் படுகொலைகள்
கலகங்கள் பற்றித்தான் தெரியுமேயொழிய அதற்குப் புரட்சியைப் பற்றித்
தெரிந்திருக்காது. இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்ட சட்டக் கருத்தானது
புரட்சி இயக்கத்தின் அபிவிருத்தி வளர்ச்சியிலும் பார்க்கப் பல
தசாப்தங்கள் பின்னுக்கு உள்ளது. குற்றவியற் கோவை நெறி வியாக்கியானம்
செய்யும் றஸ்சியாவின் நவீனத் தொழிலாளிவர்க்க இயக்கத்திற்கும் சதி என்ற
எண்ணக்கருவுக்குமிடையே பொதுவானது எதுவும் கிடையாது. அந்தக் கருத்து
ஊயசடிழயெசi காலத்தில்த்தில் வாழ்ந்த ளுpநசயளெமல காலத்திலிருந்து
அவ்வளவாக மாறவில்லை. அதனாற்தான் சோவியத் நடவடிக்கைகளைக் சட்டத் தர்க்கக்
கண்ணோட்டத்தில் இருந்து பார்க்குமிடத்து மிகவும் வீணானதாகப் புலப்படும்
சட்டக் கோவை
101 க்கும்
102 க்கும் இடையேயான ஒரு குறுகிய
வரையறைக்குள் கசக்கிப் பிளிகிறார்கள்.
எமது நடவடிக்கைகளோ புரட்சிகரமானவைகளாக இருந்தன. ஆனால்; இன்னும் நாம்
உண்மையில் ஆயுதமேந்திய கிளாச்சி எழுச்சிக்காகத் தயாரித்துக் கொண்டுதான்
இருந்தோம்.
வெகுஜனங்களின் கிளர்ச்சி எழுச்சி யென்பது ஆசனத்தில் அமர்ந்திருக்கும்
கனவான்களே அது தயார் செய்யப் பட்டதல்ல மாறாக அது தானகவே உருவாவது. அது
சமுதாய உறவுகளின் விளைவு ஆகும்.
ஒரு திட்டமிட்ட தயாரிப்பல்ல. அது உருவாக்கப்பட முடியாதது. ஆனால் அதை
முன்கூட்டியே ஊகிக்கலாம். சார்அரசைச் சார்ந்திருந்தது போல் நம்மையும்
அவர்கள் சிறிதாகவே சார்ந்திருந்தார்கள் என்ற காரணங்களாலேயே
வெளிப்படையான மோதலானது தவிர்க்க முடியாமல் வந்தது. நாளுக்கு நாள் அது
நெருங்கி வந்தது. இந்தத் தவிர்க்கமுடியாத முட்டிமோதலிலே எங்களால்
முடிந்த அத்தனையும் செய்து எவ்வளவு இறப்பைக் குறைக்க முடியுமோ
அவ்வளவுக்குக் குறைக்கத் தயாரானோம் என்பதே அதன் அர்த்தமாகும். நாங்கள்
இந்த நோக்கத்திற்காக முதலில் ஆயுதங்களைச் சேர்த்து, இராணுவ
நடவடிக்கைகளுக்கான திட்டத்தைத் தீட்டி, ஆயுத எழுச்சியிற் பங்கேற்பவர்களை
அந்தந்த இடங்களுக்கென்று ஒதுக்கி, நகரத்தை வௌ;வேறு பிரிவுகளாகப்
பிரித்து, வேறு வார்த்தையிற் சொல்வதென்றால் இராணுவ அதிகாரிகள் என்னென்ன
குழப்பங்கள் வரும் என்று எதிர்பார்த்து என்னென்னவெல்லாம் செய்வார்களோ
அதைச் செய்து அதாவது இராணுவ அதிகாரிகள் பீட்டர்ஸ்பேர்க்கைத் துறைகளாகப்
பிரித்து ஒவ்வொரு துறைக்கும் பொறுப்பாக ஒவ்வொரு தானைத்தளபதிகளை
நியமித்து, ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையளவு இயந்திரத் துப்பாக்கிகளையும்
வெடிகுண்டுகளையும் ஒதுக்கித் தயார்படுத்தினோமா? இல்லை. எங்களது
பங்களிப்பும் பாத்திரமேற்பும் இப்படித்தான் இருக்கவேண்டமென்று நாம்
கருதவில்லை. ஒரு தவிர்க்கமுடியாத கிளர்ச்சி எழுச்சிக்குத் தயார்
செய்வதென்பது நீதிமன்றத்திலுள்ள கனவான்களே, வழக்குனர்கள்
நினைப்பதுபோலும் சொல்வதுபோலும் நாம் ஒரு கிளர்ச்சி எழுச்சிக்குத்
தயாராகவில்லை. நாம் ஒரு கிளர்ச்சி எழுச்சிக்குத் தயாரானோம் என்பதன்
முதலாவதும் முக்கியமானதுமான எங்களின் அர்த்தம் என்னவென்றால் மக்களுக்கு
அறிவொளி ஊட்டவேண்டும். வெளிப்படையான முட்டிமோதல் தவிர்க்க முடியாதது
என்பதை விளக்க வேண்டும். அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட உரிமைகளும்
சலுகைகளும் மறுபடியும் திருப்பிப் பறிக்கப்படும் என்பதை விளக்கி அந்த
உரிமைகளையும் சலுகைகளையும் பாதுகாக்காப்பதற்கு உழைக்கும் மக்களின் ஒரு
சக்திவாய்ந்த அமைப்பின் தேவையானது அவசியம் என்று விளக்கி, எதிரியோடு
நேரடி முட்டிமோதலுக்குச் செல்ல வேண்டுமென்பதையும் போராட்டம் இறுதி
எல்லைவரை செல்ல வேண்டும் என்பதையும் அதைத்தவிர வேறு வழி
இல்லையென்பதையும் அவர்கள் நம்பும்படியும் ஏற்கும்படியும் செய்ய வேண்டும்.
ஒரு கிளர்ச்சி எழுச்சிக்குத் தயாராவது என்பதன் எங்களின் தாற்பரியம்
இதுதான்.
எந்த சூழ்நிலையில் நாம் ஒரு எழுச்சியை வெற்றியை நோக்கி வழிநடத்திச்
செல்லலாம் என்று நாம் நினைத்தோம்;? எங்களுக்கு இராணுவத்தின் அனுதாபங்
கிடைக்கும் நிலையிற்தான். முதல் தேவையான நமது பக்கத்திற்கு இராணுவம் வர
வேண்டும் என்பதாகும்.
சிப்பாய்கள் மக்களுக்கு விரோதமான வெட்கக்கேடான பங்கை வகிக்கிறார்கள்
என்பதை அங்கீகரிக்க நிர்ப்பந்திக்க வேண்டும். அவர்களை மக்களோடு சேர்ந்து
மக்களுக்காக வேலைசெய்யத் தூண்ட வேண்டும். அந்தப் பணியே எமது முதலாவது
பணியென்று கொண்டு அந்தக் கடமையைச் செய்தோம்.
நான் ஏற்கனவே கூறியபடி நவம்பர் மாத வேலைநிறுத்தம் ஒரு பாரபட்சமற்ற
உந்துவிசையாகவும் மரண தண்டனை அச்சுறுத்தலின் மத்தியிலும் கூட
மாலுமிகளோடான நேரடி சகோதரத்துவத்துடன் கூடிய ஒத்தாசையாகவும் இருந்ததோடு,
இது பாட்டாளி வர்க்கத்தை நோக்கி இராணுவத்தின் அனுதாபத்தையும்
கவனத்தையும் ஈர்த்தது என்பது மிகப்பெரிய அரசியல் முக்கியத்துவத்தை
கொண்டிருந்தது. இதையே அரச வழக்கறிஞர், ஆயுதமேந்திய எழுச்சிக்கான
தயாரிப்புக்களாக பார்த்தார்.
ஆனால், நிச்சயமாக, அனுதாபத்தோடு கூடிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டதினால்
மட்டும் பிரச்சனையைத் தீர்த்துவிட முடியாது. பின் எந்தச் சூழ்நிலையின்
கீழ் இராணுவம் புரட்சியின் பக்கத்திற்கு வரும் என்று நாங்கள் நினைத்தோம்,
மற்றும் இப்போதும் நாம் நினைக்கிறோம். எந்தச் சூழ்நிலையின் கீழ்
இராணுவம் புரட்சியின் பக்கத்திற்குப் வரும் என்று எதிர்பார்க்கலாம.;
இராணுவம் புரட்சியின் பக்கம் வருவதற்குரிய முன்நிபந்தனை என்ன? இயந்திர
துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கிகள்? உழைக்கும் மக்கள் இயந்திர
துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கிகள் வைத்திருந்தார்கள் என்றால் அவர்கள்
கட்டாயமாகப் பெரும் அதிகாரத்தைக் கொண்டவர்கள் ஆவார்கள்.
இந்த வல்லமையானது பெரும்பாலும் ஒரு தவிர்க்க இயலாத எழுச்சியை
அகற்றிவிடும்.
முடிவெடுக்கமுடியாமல் ஊசலாடும் நிலையிலுள்ள இராணுவம் ஆயுதமேந்திய மக்கள்
கால்களில் ஆயுதங்களை கீழே போட்டு விடும். ஆனால் இந்த வெகுஜனங்களிடம்
பெருமளவில் ஆயுதங்கள் இருந்ததுமில்லை. இருக்கப் போவதுமில்லை. இருக்கவும்
முடியாது. அப்படியானால் வெகுசனங்கள் தோற்கடிக்கப்பட்டுத் தொலைந்து
போவாவார்கள் என்ற அர்த்தமா? இல்லை, அப்படி நடவாது.
ஆயுதங்கள் எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும் மிகவும் அடிப்படையான பலம்
ஆயுதங்களில் தங்கியிருக்கவில்லை. இல்லை, ஆயுதங்களில் இல்லை.
நீதிமன்றத்திலுள்ள கனவான்களே நாம் உறுதியாக நம்பினோம் கடைசிக் கணிப்பில்
ஒரு மக்கள் எழுச்சியின் வெற்றிக்கான பலம் வெகுசனங்களின் கொல்லும்
திறனினல்ல மாறாக அவர்களின் சாவதற்குத் தயாரான பெரிய நிலையே பலம்.
மக்களை நசுக்குவதற்காகத் தெருக்களுக்கு அனுப்பிய சிப்பாய்கள், மக்களை
நேருக்கு நேர் தாங்களே கண்ட அவர்கள் மக்கள் தங்களின் கோரிக்கைகளைப்
பெற்றுக்கொள்ளும் வரை சடலங்களுக்குமேல் சடலங்களை அடுக்கினாலும்
தெருவிலிருந்து போக மாட்டார்கள் என்பதை இந்தக் கூட்டத்தில் தாங்களாகவே
கண்டுகொண்டார்கள். மக்கள் மிக அக்கறையுடன் ஒரு முடிவு காணும்வரை போரிட
வந்து விட்டதைக் தாங்களாகவே பார்த்துக் கண்ட சிப்பாய்கள் மக்கள்
பின்வாங்கப் போறதில்லை என்பதை நம்பினார்கள். சிப்பாய்களின் இதயங்கள்
தடுமாற்றம் அடைந்தன. அவர்கள் எல்லாப் புரட்சிகளிலும் செய்ததைப்போலவே ஒரு
மாமூல்நிலைமைiயை நிலைநாட்டச் சேவை செய்ய வந்தவர்கள் சந்தேகங்கொள்ள
நிர்ப்பந்திக்கப் பட்டதோடு மக்கள் கட்டாயம் வெற்றிகொள்வார்கள் என்பதை
நம்ப நிர்ப்பந்திக்கப் பட்டார்கள்.
ஒரு கிளர்ச்சி எழுச்சியைத் தெருத் தடை அரண்காளால் இணைப்பது வழக்கமான
யோசனையாகும். ஒரு மக்கள் எழுச்சியைப் பற்றிய எங்கள் எண்ணக் கரு உண்மையை
கூட ஒதுக்கித் தள்ளிப் பெரிய அச்சத்தை ஊட்டுவதாக இருக்கலாம்.
கிளர்ச்சியிலே தடையரண்கள் என்பது ஒரு தெளிவான பொறிமுறை உறுப்பு என்பதை
நாங்கள் மறக்கக் கூடாது. இது எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு தார்மீகப்பங்கை
வகிக்கும். ஒவ்வொரு புரட்சியிலும் தடுப்பரண்களின் முக்கியத்துவம் போரிலே
கோட்டைகள் பாதுகாப்பது போல ஒரேமாதிரி இருப்பதில்லை. ஒரு தடுப்பரண்
வெறுமனே ஒரு சடரீதியான தடையாக இருப்பதில்லை. தெருத்தடைகள் கிளர்ச்சி
எழுச்சியின் நோக்கிற்கு எவ்வாறு உதவுகிறதென்றால் தடையரண்கள் படைகளின்
இயக்கங்களைத் தற்காலிமாகத் தடுத்து மக்களோடு நெருங்கிய தொடர்புகள்
ஏற்படுவதற்கு உதவுகின்றன. சாலைத் தடுப்புகளிலே படையினர் மக்களின்
குரலைக் கேட்கிறார்கள.; ஒருவேளை அவர்களுடைய வாழ்நாளில் முதல் முறையாக
நேர்மையான சாதாரண மக்களின் பேச்சை மக்களின் மனச்சாட்சியின் குரலைக்
கேட்கிறார்கள். மற்றும், குடிமக்களுக்கும் படையினருக்கும் இடையேயான
தொடர்புகளின் விளைவாக இராணுவ ஒழுங்கு சிதைந்து இல்லாமற் போகிறது. இது
மக்கள் எழுச்சிக்கு உறுதியும் உத்தரவாதமும் அளிக்கின்றது. ஏனெனில்,
இதுதான் இது மாத்திரந்தான் எங்கள் அபிப்பிராயப்படி ஒரு மக்கள் எழுச்சி
தயாரிக்கப்பட்டதன் வெற்றியாகும். மக்கள் துப்பாக்கிகளும் றைபிள்களும்
ஏந்தியதால் அல்ல. துப்பாக்கிகளும் றைபிள்களும் கையிலேந்தப் பண்ணுவது
மக்களின் கிளர்ச்சி எழுச்சிக்குத் தயாரிப்பதல்ல. மாறாக மக்களைத்திறந்த
தெருப்போரில் மடிவதற்குத் தயாராக்குவதுதான் மக்களின் கிளர்ச்;சி
எழுச்சிக்குத் தயாராக்குவது என்பதாகும்.
ஆனால், நிச்சயமாக, பழைய முற்றுகையிட்ட அதிகாரம், இந்தப் பெரும் உணர்வின்
வளர்ச்சியைக் கண்டு, ஒரு நாட்டின் நலன்களுக்காகச் சாகத் தயாரான நிலையைக்
கண்டு, எதிர்காலத் தலைமுறையினரின் சந்தோஷத்துக்காகத் தமது உயிரைக்
கொடுக்கத் தயாராக இருக்கும் நிலையைக் கண்டு, அப்படி ஓர் உற்சாகத்தால்
காட்டுத்தீபோல் திடீரெனத் தொற்றப்பட்டுள்ள மக்களைப் பார்த்து அதை உணரவோ
அதைப் புரிந்து கொள்ளவோ முடியாத நிலையிலுள்ள அந்த அதிகாரம், அதன்
கண்களுக்கு முன்னாலேயே மக்களின் தார்மீக மீளுருவாக்கத்தை அமைதியாகப்
பார்த்துக் கொண்டிருக்க முடியாது. சார் அரசாங்கம் அதைப் பரபரப்பின்றி
அமைதியாக பார்த்துக் கொண்டிருப்பதன் அர்த்தம் அது தன்னை அகற்றப் படுவதை
அனுமதிப்பதாகும். அந்த அளவுக்கு அது தெளிவாக இருந்தது.
அப்படியானால், அதனால் என்ன செய்ய முடியும்;? அது மக்களின் அரசியல்
சுயநிர்ணய உரிமைக்கு எதிராக அதன் சகல வழிமுறைகளையும் கொண்டு அதன்
கடைசிச் சக்தி இருக்குமட்டும் போராட வேண்டும். அறியாமை நிறைந்த
இராணுவத்தை, கறுப்பு நூற்றுவர் இயக்கத்தை, இரகசியப் பொலீசை, ஊழல்
ஊடகங்கள் போன்ற அனைத்தையும் செயலுக்கு ஏவ வேண்டும். மக்களை ஒருவருக்கு
எதிராக ஒருவரை ஏவி விடவேண்டும். தெருக்களை இரத்த வெள்ளத்தால் கழுவ
வேண்டும். கொள்ளையடிக்க வேண்டும். பாலியற் பலாத்காரம் செய்ய வேண்டும்.
எரிக்க வேண்டும். பீதியை உண்டு பண்ண வேண்டும். பொய்ப் பிரச்சாரம் செய்ய
வேண்டும். ஏமாற்ற வேண்டும். அவதூறு செய்ய வேண்டும்.
இவைகளைத்தான் பழைய குற்றவாளியான அதிகாரம் செய்ய வேண்டி இருந்தது. மேலும்
இந்த விடயங்களை அது செய்தது. இன்னும் இன்றுவரை இவைகளைச் செய்து
கொண்டிருக்கிறது.
வெளிப்படையான முட்டிமோதல் தவிர்க்க முடியாததாக இருந்தது என்றால்
கட்டாயம் அதற்கு நாம் பொறுகாளிகள் அல்ல. எங்களது ஜீவமரண எதிரிகளே
அவைகளைக் கொண்டு வந்தார்கள்.
அக்டோபரிலும் நவம்பரிலும் கறுப்பு நூற்வர்களுக்கு எதிராகத் தொழிலாளர்கள்
தங்களை ஆயுதபாணியாக்கினார்கள் என்பதை நீங்கள் இங்கே பலமுறை
கேள்விப்பட்டீர்கள். இந்த நீதிமன்றத்திற்கு வெளியே என்ன நடக்கிறது
என்பது பற்றி ஏதும் அறியாதவர்களுக்கு மக்கள் தொகையில் பெரும்பாலானவர்கள்
விடுதலை கொள்கைகளை ஆதரிக்கும் ஒரு புரட்சிகர நாட்டில், வெகுஜன மக்கள்
வெளிப்படையாக இறுதிவரைக்கும் போராடும் உறுதியை வெளிப்படுத்தும் ஒரு
புரட்சிகர நாட்டில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மக்கள் தொகையில்
முக்கியமற்ற மிகக் குறுங்குழுவான கறுப்பு நூற்றுவர்களுக்கு எதிராகப்
போரடத் தாங்களே ஆயுதபாணியாகிய ஒரு புரட்சிகர நாட்டில் இது முற்றிலும்
புரிந்துகொள்ள முடியாத விடயம். சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டவர்கள்,
இந்தக் கழிசடைகள் என்ன சமூக அந்தஸ்தை வைத்திருந்தாலுங்கூட அவர்கள்
அப்படி ஆபத்தானவர்களா? இல்லை, அவர்கள் நிச்சயமாக ஆபத்தானவர்கள் அல்ல.
பரிதாபத்திற்குரிய இந்தக் கறுப்பு நூற்றுவக் கும்பல்கள் மாத்திரம்
மக்கள் வழிக்குக்
குறுக்கே நின்றால் பிரச்சனை சிறியதாக இருக்கும். ஒரு சாட்சியாகத்
தோன்றிய வழக்கறிஞர் டீசயஅளழn னிடமி;ருந்து மாத்திரமல்ல நாம் கேட்டோம்
இங்கே சாட்சியம் கூறிய நூற்றுக்கணக்கான தொழிலாளர்களிடமிருந்தும்
கேட்டோம். இழப்தற்கு ஒன்றுமில்லாத காடையர்களான இந்தக் கறுப்பு நூற்றுவர்
குழுக்களுக்குப் பிறகால் அரசாங்க அதிகாரிகள் எல்லாரும் அல்லவென்றாலும்
பெரிய அளவில் அரசாங்க அதிகாரிகள் ஆதரவளித்தார்கள் என்று கேட்டோம்.
மற்றும் இவர்கள் சும்மா நிறுத்தப் போவதுமில்லை. ஒரு கிழவனின் நரை
மயிரைப் பிடுங்காமலோ அல்லது ஓர் ஆதரவற்ற பெண்ணையோ அன்றி ஒரு குழந்தையையோ
விடப்போவதில்லை. அரசாங்கத்தின் முகவர்களே சந்தேகத்திற்கு இடமின்றி அங்கு
நின்று அரச வரவு செலவு நிதியைப் பாவித்து கறுப்பு நூற்றுவரை அணிவகுத்து
ஆயுதபாணியாக்கினார்கள்.
மேலும் இறுதியாக, இந்த வழக்கு விசாரணைக்கு முன்பு இது எமக்குத்
தெரியாமல் இருந்ததா? நாங்கள் பத்திரிகைகளிற் படிக்கவில்லையா? கண்கண்ட
சாட்சிகளிடமிருந்து நாம் இதைக் கேள்விப்படவில்லையா? எங்களுக்கு இது
பற்றிய கடிதங்கள் கிடைக்கவில்லையா? நாங்கள் எங்கள் சொந்த கண்களால்
எதையும் பார்க்கவில்லையா? நாங்கள் இளவரசர் ருசரளழஎ அம்பலமாக்கிய
வெளியீடுகளிலிருந்து அறிந்ததில்லையா? ஆனால் அரசதரப்பு எதையும் நம்பப்
போவதில்லை.
அதால் இவைளை நம்ப முடியாது. அது இவைகளை நம்பினால் யாரை அது பாதுகாக்க
முனைகிறதோ அவர்களுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளைத் திருப்ப வேண்டி
வந்துவிடும். ஒரு றஸ்சியக் குடிமகன் தனது தற்பாதுகாப்பின்
அத்தியாவசியத்திற்காகப் பொலிஸ்சுக்கு எதிராக ஒரு றிவோல்வரால்
ஆயுதபாணியாகி செயற்பட்டதை அது ஒத்துக்கொள்ள வேண்டிவரும். ஆனால் அதிகார
சக்திகளின் படுகொலை நடவடிக்கைகளை அரசதரப்பு நம்புகிறதோ இல்லையோ என்பது
இறுதியில் முக்கியமற்ற ஒன்றாகி விடும். நாம்தொழிலாளர்களை நம்பினோம்
என்பது இந்த நீதிமன்றத்திற்கு போதுமானதாக இருக்கும். நூறாயிரக் கணக்கான
தொழிலாளர்கள் எங்களின் அழைப்பை நம்பி தாங்களே ஆயுதபாணியாகினார்கள்.
சக்தி வாய்ந்த ஆளும் குளுக்களின் கைகள் கறுப்பு நூற்றுவர்களின் அழகிய
நடவடிக்கைகளுக்கு வழிகாட்டின என்பதை நாம் எந்த சந்தேகமுமின்றி
நம்புகின்றோம்.
நீதி மன்றத்திலுள்ள கனவான்களே அந்தக் கெட்ட கைகளை இப்போதுங் கூட
எங்களாற் பார்க்க முடியும்.
இப்பொழுது இருக்கும் அரசாங்க வடிவத்திற்கு எதிராகப் போராடும்படி சோவியத்
தொழிலாளர்களை ஆயுதாபணியக்கியதை ஒப்புக்கொள்ளச் செய்வதற்காக அரச தரப்பு
நம்மை அழைத்தது.
இது அப்படியோ நடந்தது என்று என்னைத் திட்டவட்டமாகக் கேட்டிருந்தால் நான்
ஆம் என்றே விடையளித்திருப்பேன். ஆம், நான் இந்தக் குற்றச்சாட்டை ஏற்கத்
தயாராக இருக்கிறேன், ஆனால் ஒரே ஒரு நிபந்தனை மட்டும். அரசதரப்பும்
மற்றும் நீதிமன்றமும் என் நிபந்தனையை ஏற்றுக் கொள்வார்களோ தெரியாது.
என்னைக் கேட்க விடுங்கள்:"அரசாங்க வடிவம்" என்று அரசதரப்புக் கூறியதன்
அர்த்தம் என்ன? உண்மையிலே எங்களிடம் ஓர் அரசாங்க வடிவம் இருக்கிறதா?
மிக நீண்ட கடந்த காலத்திலிருந்தே தேசம் அரசாங்கத்திற்கு ஆதரவு
அளிக்கவில்லை. ஆனால் அது இராணுவ-பொலிஸ்-கறுப்பு நூற்றுவக் கருவியாகும்.
எம்மிடமுள்ளது ஒரு தேசிய அரசாங்கம் அல்ல மாறாக அது ஒரு வெகுஜனப் படுகொலை
செய்யும் தானியங்கி ஜந்திரம். இந்த அரசாங்க ஜந்திரத்திற்கு என்னால் வேறு
பெயரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த ஜந்திரம் உயிருள்ள எமது
தேசத்தின் உடம்பைத் துண்டு துண்டாகப் பிய்த்தெறிகிறது. நீங்கள் என்னிடம்
இனஒழிப்புக்கள், கொலைகள், எரியூட்டல்கள், பாலியற்பலாத்காரங்கள்; என்று
சொன்னால்.. நீங்கள் என்னிடம்
Tver, Rostov, Kursk, Siedlee போன்ற
இடங்களில் என்னவெல்லாம் நடந்ததென்று சொல்வீர்களானால்.. நீங்கள் எனக்கு
Kishinev, Odessa, Bialystok என்பன
றஸ்சிய சாம்ராச்சியத்தின் அரச வடிவங்கள் என்று சொல்வீர்களானால்
அதன்பிறகு நான் அரச தரப்பு சொல்வதை ஏற்றுக் கொள்வேன,; போன அக்டோபரிலும்
நவம்பரிலும் நாம் எங்களை ஆயுதபாணியாக்கிக் கொண்டோம் என்பதை நேரடியாகவும்,
உடனடியாகவும், றஸ்ஷியப் பேரரசின் அரசாங்க வடிவத்திற்கு எதிராக
ஆயுதபாணியாகினோம் என்பதை ஒத்துக் கொள்வேன்.
|