மேற்குலகத்துப் பொழுதுபோக்கு நாடகக்
குழுக்கள்
கவிஞர் வி. கந்தவனம்
தற்கால
நாடக அரங்கத்தைப் பொருளாதார நோக்கில் இருவகையாக வகுக்கலாம். ஒன்று துறை
சார்ந்தது
(Professional
Theatre)>
மற்றையது பொழுதுபோக்கானது
(Amateur
Theatre).
துறைசார்ந்தவை
துறைசார்ந்தது தொழில்முறையானது. தொழில் என்பது வாழ்க்கையை நடத்துவதற்கு
வருவாய் கருதி அல்லது சம்பளத்துக்குச் செய்யப்படும் வேலை. பொழுதுபோக்கு
என்பது வருவாயைக் குறிக்கோளாகக் கொள்ளாத முயற்சி.
நடிப்பையும் நாடக மேடையேற்றத்தையும் தொழிலாகக் கொண்டியங்கும்
அமைப்புக்களால் நடத்தப்படும் நாடகங்கள் துறை சார்ந்தவை. இவர்கள்
நடிக்கத் தொடங்குவதிலிருந்து அரங்கேற்றம்வரையிலான ஒவ்வொரு கட்டத்திலும்
ஒழுங்கு, கட்டுப்பாடு, நிறைவான செயற்பாடு (செம்மைப்பாடு -
- perfection)
என்பவற்றில் மிகக் கவனமாக இருப்பார்கள். நாடகம் ஒரே இடத்திலோ வௌ;வேறு
இடங்களிலோ பல தடவைகள் மேடையேற்றப்படும். அதனால் நாடகத்தின் வெற்றி
இவர்களது இலக்காக இருக்கும். வெற்றி என்பது இரசிகர்களின் ஆதரவு.
தோற்றுப்போனால் வருவாய் குறைந்துவிடும.; அடுத்தடுத்த மேடையேற்றங்களும்
பாதிக்கும். அதனால் தங்கள் முழுக் கவனத்தையும், திறமை முழுவதையும்
செலுத்தி நாடகத்தின் வெற்றிக்குத் திட்டமிட்டு உழைப்பார்கள்.
தயாரிப்புச் செலவு உட்பட அனைத்தையும் திட்டமிட்டுச் செய்தல் இவர்களது
சிறப்பியல்பு. இவர்களுக்கு நாடகம் ஒரு வியாபாரப் பொருள்.
பொழுதுபோக்கானவை
நாடகப் பற்றாளர்களால் வருவாய்க்கென் றில்லாமல் ஆர்வ மேலீட்டினால் ஓய்வு
நேரங்களில் மேற்கொள்ளப்படும் நாடக முயற்சிகள் பொழுதுபோக்கானவை. இவர்
களுக்குந் திறமை இருக்கும். தங்கள் திறமையை வெளிக்காட்டவேண்டும்
என்பதற்காகவே நாடகம் ஒன்றை நடத்தவும் முனைவர். நாடகக் கலையை வளர்க்க
வேண்டும் என்னும் இலட்சியமும் இவர்களுக்கு உண்டு.
எனினும் தமது ஆர்வத்தையும் வல்லமைகளையும் ஓரளவுக்குத்தான் இவர்களாற்
காட்டமுடியும். அந்த அளவு அவர்களுக்குக் கிடைக்கும் நேரத்தையும்
திரட்டக்கூடிய முதலீட்டையும் பொறுத்தது. இவர்களிற் பெரும்பான்மையினர்
தமது தொழில்களுக்கே முன்னுரிமை அளிக்கவேண்டிய நிலையில் இருப்பதால்
நாடகத்துக்குச் சொற்ப நேரத்தை மட்டுமே செலவு செய்யமுடியும். அது
அவர்களுக்கு முன்கூட்டியே தெரிந்ததொன்று.
மேலும் எழுத்து, நடிப்பு, இயக்கம், தயாரிப்பு நுட்பங்கள் போன்றவற்றில்
பொழுதுபோக்கு நாடிகர்களுக்கு என்னதான் திறமை இருந்தாலும் அவற்றில்
போதிய தேர்ச்சி இருக்கும் என்று சொல்வதற் கில்லை. திறமை என்பது வேறு
தேர்ச்சி என்பது வேறு. காட்டுக் காளையைப் பழக்கி வீட்டுத் தேவைக்குப்
பயன்படுத்துவதுபோல, ஆற்று வெள்ளத்துக்கு அணைகட்டி நாட்டு வளர்ச்சிக்கு
உதவும்வகை செய்தல்போலத் திறமையைப் பயிற்சியாற் செம்மைப் படுத்துவது
தேர்ச்சி எனப்படும்.
பொழுதுபோக்குக் கலைஞர்களின் முயற்சிகளிற் போதிய தேர்ச்சியும்
செம்மைப்பாடும் பொதுவாகக் குறைவாக இருப்பதனாற்போலும்
amateur
என்ற சொல்லுக்கு
inexpert
அல்லது
imperfect
என்ற பொருளும் தோன்றலாயிற்று.
பொழுபோக்குக் குழுக்களின் வளர்ச்சி
ஒரு விடயத்தை இங்கு கவனித்தல் வேண்டும். பொழுதுபோக்குக் குழுக்களே
தொழில்
முறையான நாடகங்களுக்கு வித்திட்டுள்ளன. மேலும் பொழுதுபோக்குக் குழுக்கள்
மேல் நாடுகளில் நன்கு வளர்ச்சியடைந்தும்விட்டன. பல தமக்கென்றே
அரங்கங்களை வைத் திருக்கின்றன. நடிகர்களுக்கும் தொழிலாளர்களுக்கும்
ஊதியமும் கொடுக்கின்றன. உதா ரணமாகப் பிரித்தானியாவின் சிற்றரங்குகளை
(The Little Theatres)கூறலாம்.
கலைத் துவமும் முருகியலும் நிறைந்த நாடகங்களுக்குப் பெயர்பெற்ற
இவ்வரங்கங்களின்
கூட்டமைப்பு ஒன்று 1946ல்
நிறுவப்பட்டது.
Little Theatre Guild of
Great
Britain
என்பது அதன் பெயர். மற்றுமொரு
அமைப்பு
IATA (International Amateur
Theatre Association)
1952ல் உருவாக்கப்பட்டது. 1977ல்
தோற்றுவிக்கப்பட்ட
l
The
Central Council
for
Amateur Theatre
என்னும் கூட்டமைப்பில் இன்று 5,000க்கும் அதிகமான நாடக நடனக் குழுக்கள்
அங்கம் வகிக்கின்றன.
கல்வித் தேவை கருதிப் பல கல்லூரிகளும் பல்கலைக் கழகங்களும் தத்தமக்கெனப்
பொழுதுபோக்கு நாடகக் குழுக்களை வைத்திருக்கி;ன்றன.
அமெரிக்காவில் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதிகளில் வலுவான ஒரு சிற்றரங்க
இயக்கம் வளர்ந்து தரமான நாடகங்களைப் பல குழுக்கள் அரங்கேற்றின.
கனடாவிலும் இந்த இயக்கம் பரவித் தொழிலரங்கங்களைத் தோற்றுவிக்கும்
அளவுக்குத் தழைத்தோங்கியது.
தமிழீழத்து நிலைமை
தமிழீழத்தில் தற்கால நாடகம் துறைசார்ந்ததாக இன்னமும் வளரவில்லைளூ
வளரக்கூடிய சகுனங்களையும் காணவில்லை. கலைக்கென்று காசு வாங்கினால் அது
கலையாக இருக்காது என்று சில தமிழீழத்தவர் கருதுகிறார்கள். பரதநாட்டியம்,
இசை ஆகிய கலைகள் பலருக்குத் தொழிற் கலைகளாகியுள்ளபோதும் நாடகத் துறையும்
எழுத்துத் துறையும் இன்னமும் பொழுது போக்குத் தரத்திலேயே
நிலைபெற்றிருக்கின்றன. தமிழ் நாட்டில் நிலைமை எப்போழுதோ மாறத்
தொடங்கிவிட்டது.
மேலைநாட்டுத் தமிழரின் பொழுதுபோக்கு நாடக
முயற்சிகள்
புலம்பெயர்ந்து மேலைநாடுகளில் வாழும் தமிழர் மத்தியிலும் நாடக
முயற்சிகள் பொழுது போக்காகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கனடாவிலும்
இங்கிலாந்திலும் தரமான நாடகங்களைச் சில குழுக்கள் அரங்கேற்றிவருகின்றன.
தொழில்நுட்ப வசதிகளோடுகூடிய அரங்கங்களை இவை நன்கு பயன்படுத்தி
வருகின்றனளூ நடிப்புத் திறமை கொண்ட வர்களுக்கும் குறைவில்லை.
ஆனாலும் கலைஞர்களை அவரவர்களின் தொழில் நேர வேறுபாடு காரணமாக ஒத்திகைக்கு
ஒன்றுகூட்டுவதே இக்குழுக்களை எதிர்நோக்கும் பிரதான பிரச்சனையாக வுள்ளது.
இதனோடு குடும்பப் பொறுப்புகளும் பாடசாலைப் பணிகளும் சமூக, சமய
நிகழ்வுகளும் ஒத்திக்கையைச் செவ்வனே செய்யமுடியாத அல்லது ஒத்திவைக்க
வேண்டிய சூழ்நிலைகளைத் தோற்றுவிக்கின்றன.
மற்றுமோர் இடர்ப்பாடு ஒத்திகையை நடத்துவதற்குத் தகுந்த இடங்கள் இல்லாமை.
தொழில் அரங்கங்கள் தத்தமது அரங்குகளிலேயே ஒத்திகைகளை நடத்துகின்றன.
வளர்ச்சியடைந்த பல சிற்றரங்குகளும் தமக்கென அரங்கங்களை
வைத்திருக்கின்றன. இல்லாதவை ஒத்திகைக்கென்று அரங்கங்களை வாடகைக்குப்
பெறக்கூடிய நிதி வசதி படைத்தவையாயுமுள்ளன.
தமிழ் அரங்குகளும் தேவையான அளவுக்கு வளர்ச்சிபெறும். அதற்கு இன்னும் பல
ஆண்டுகள் செல்லும். இப்போதுள்ள பொழுதுபோக்குக் குழுக்கள் வீடுகளிலும்
பொது இடங்களிற் பெறக்கூடிய அறைகளிலும் சிறு மண்டபங்களிலுமே
ஒத்திகைக்காகக் கூடுகி;ன்றன. இதிலுள்ள பிரதான குறைபாடு அரங்க
ஒழுங்குமுறைகளையும் நிற்கும் இடங்களையும் இயக்கத் தூரங்களையும்
நடிகர்களுக்கு முறையாகச் சொல்லிக் கொடுக்க முடியாமை. ஒத்திகை பார்க்கும்
அரங்கத்திலேயே ஆடலை நிகழ்த்துகையில் நடிகர்கள் பிழைகள் விடமாட்டார்கள்.
வசதியற்ற இடங்களிற் பயிற்சி பெற்றுப் பின் அரங்கேறுகையில் நடிகர்கள்
தவறுகள்விடும் சூழ்நிலைகள் உருவாகும். அச்சந்தர்ப் பங்களில் நடிகர்களைக்
குறைகூற முடியாத இக்கட்டான நிலையில் இயக்குநர் இருப்பார்.
இத்தகைய நிலைமைகளையும் பிற எதிர்பாராத பிரச்சனைகளையும் பொறுமையோடும்
பொறுப்புணர்வோடும் புரிந்துணர்வோடும் எதிர்கொண்டு கனடாவில் இயங்கிவரும்
மனவெளிக் கலையாற்றுக் குழு பல ஆண்டுகளாக அரங்காடல்களை வெற்றிகரமாக
நடத்திவருவது குறி;ப்பிடத்தக்கது.
|