தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் பிறந்த நாள்: 08.01.2016

 

முனைவர் இரா.மோகன்



தெ.பொ.மீ:

தென்பட்டினம் பொன்னுசாமியின் திருமகனாகப் பிறந்த தெ.பொ.மீனாட்சி-சுந்தரனார், தமிழக மக்களால் 'தெ.பொ.மீ.' என்று மதிப்;போடு அழைக்கப் பெற்றவர். ஏறக்குறைய எண்பது ஆண்டுக் காலம் (8.1.1901 - 27.8.1980) தமிழ் மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்தவர்: 'பன்மொழிப் புலவர்', 'பல்கலைச் செல்வர்', 'நடமாடும் பல்கலைக்கழகம்', 'பெருந்தமிழ்மணி', 'குருதேவர்', 'பத்மபூஷண்', 'கலைமாமணி' முதலான பல்வேறு சிறப்புப் பெயர்களாலும் பட்டங்களாலும் சிறப்பிக்கப்பட்டவர்ளூ சென்னை மாநகராட்சியின் ஆல்டர்மென், சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப் பள்ளியின் செயலர், மாநிலக் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்-கழகத்தின் மொழியியல் துறைத் தலைவர், மதுரைப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர், சிகாகோ பல்கலைக்கழகத்தின் சிறப்பு நிலைப் பேராசிரியர், திராவிட மொழியியல் கழகத்தின் முதுநிலை ஆய்வாளர், ஆழ்நிலைத் தியானத்தின் தேசியக் குழு உறுப்பினர் -எனப் பல்வேறு பொறுப்புகளில் வீற்றிருந்து தமிழ்நாட்டுக்கும் மொழிக்கும் சமுதாயத்திற்கும் அருந்தொண்டு ஆற்றியவர்ளூ சட்டம், வரலாறு, உளவியல், தத்துவம், இலக்கியம், இலக்கணம், மொழியியல், ஆன்மிகம் முதலான பல்வேறு அறிவுத் துறைகளில் பழுத்த புலமை பெற்றிருந்தவர். அவருக்கு அன்பும் அறிவும் குழைத்து ஊட்டி வளர்த்த அவரது தமையனார் சதாவதானம் தெ.பொ.கிருஷ்ணசாமிப் பாவலரைத் தமிழ் கூறு நல்லுகம் நன்கறியும்.

'தமிழர் பத்து நோபல் பரிசாவது பெற வேண்டும்'

'தமிழன் வாழ்ந்தாலன்றித் தமிழ் வாழ முடியாது' என்று தெ.பொ.மீ உறுதியாக நம்பினார். 'தமிழனை விட்டுத் தமிழினைக் காணும் முயற்சி வீண், வீண், வீண்' என்று அவர் மும்முறை அழுத்திக் கூறினார். அதே போல் தமிழர் பிற மொழிகளைக் கற்றல் வேண்டும் என்பதிலும் அவர் இறுதிவரை உறுதியான கருத்தினைக் கொண்டிருந்தார். 'தமிழன் தனியே வாழ முடியாது. 'பிற மொழிகளைத் தமிழன் போலக் கற்பாரும் இல்லை' என்ற உண்மையை உறுதியாக நம்பிப் பிற மொழிகளைக் கற்பதில் நம்மவர் ஊக்கம் கொள்ளுதல் வேண்டும். வடமொழியை நம்மவர் போல் ஓதுவார் உண்டா? ஆங்கிலத்தினைச் சீனிவாச சாத்திரியார் போல உலகிற் பேசியவர் உண்டா? வானமளந்த தமிழையறிந்த தமிழனுக்கு 'ஆகாதது' என்று ஒன்றும் இல்லை. இந்த உறுதி வளர வேண்டும். பிற மொழி கண்டு தடுமாறும் மனம் ஒழிய வேண்டும். உலகெல்லாம் தமிழ் வளர இதுவே வழி. 'தமிழன்றி வேறொரு மொழியும் வேண்டாம்' என்ற கருத்துப் போலத் தமிழினைக் கொலை செய்யும் படை வேறொன்றும் இல்லை' என்று தேமதுரைத் தமிழோசை உலகமெலாம் பரவுவதற்கு வழிவகை கூறினார் தெ.பொ.மீ.
'தமிழர் பத்து நோபல் பரிசாவது பெற வேண்டும் என்ற விருப்பமுடையவன் நான். தாகூர் நோபல் பரிசு பெற்றதால் உலகத்தில் உள்ளோர் எல்லோரும் வங்காள மொழியைக் கற்றனர். அது போல, தமிழர் நோபல் பரிசு பெற்றால், உலகெல்லாம் தமிழ் பரவும் என நம்புகிறேன். எத்துறையினர் ஆயினும், தமிழ்ப் பற்று கொண்டு போற்றுவாராயின் தமிழ் உலக மொழியாகும்' என ஒரு நேர்காணலில் தம் விருப்பத்தை வெளியிட்டார் தெ.பொ.மீ. 'கன்னித் தமிழ்' என்றும், 'என்றுமுள தென்றமிழ்' என்றும் போற்றப்படும் தமிழ், உலக மொழியாகச் சிறந்தோங்க வேண்டும் என்பதே அவரது விழுமிய விருப்பம்ளூ உயரிய கனவு. அதற்காகவே அல்லும் பகலும் ஒல்லும் வகையயெல்லாம் அரும்பாடு பட்டார் அவர். அவரது வருங்காலக் கற்பனையில் - தொலைநோக்கில் - பல ஐன்ஸ்டைன்களும், பல ஷேக்ஸ்பியர்களும், பல காந்திகளும், பல கலியாணசுந்தரனார்களும், பல டால்டன்களும், பல எடிசன்களும் வாழும் இடமாகத் தமிழ்நாடு விளங்கியது.

ஆங்கிலத் தாயின் அருள்

'குறைந்தது மூன்று தலைமுறையாகவேனும் தமிழ் கற்றுத் திளைத்த குடியில் பிறந்ததன் பயனாகத் தமிழ் நூல்களின் சூழலிலேயே பிறந்தது முதல் வாழ்ந்து வந்துள்ளேன். ஆனால், ஆங்கிலத் தாயின் அருள் இல்லாதிருந்தால் நான் தமிழின் உயிர்த் துடிப்பினை அறிந்திருக்க முடியாது. இது என்னைப் பொறுத்த உண்மையே அன்றி, எல்லோருக்கும் ஒத்த உண்மை அன்று என்பதனையும் நான் நினைப்பூட்ட வேண்டும்' எனத் தெ.பொ.மீ. ஓரிடத்தில் எழுதிச் செல்கின்றார். தமிழின் உயிர்த் துடிப்பினை அறிவதற்கு மட்டுமன்றி, தமிழில் உயிர்த் துடிப்பான கலைச்-சொல்லாக்கங்களை உருவாக்குவதற்கும் அவருக்கு ஆங்கிலப் புலமை கை-கொடுத்துள்ளது. ஆளுமை
(Personality), எதிர்நிலைத் தலைவன் (Villain), உயர்தனிச் செம்மை (Classical), நனவோடை (Stream of Consciousness), இருப்பு நிலைக் கொள்கை (Existentialism), செய்யுணிலை அறம் (Poetic Justice) நாடகக் கீழறைப் பொருள் (Dramatic Irony) முதலான சொல்லாக்கங்களைப் படைத்த பெருமை அவருக்கு உண்டு.

'நான் ஒரு கற்றுக்குட்டி'

பன்னிரண்டுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருந்த தெ.பொ.மீ. பண்பாட்டின் திருவுருவமாக விளங்கினார்ளூ ஐம்பதுக்கு மேற்பட்ட நூல்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிக் குவித்த அவர், அடக்கத்தின் உறைவிடமாகத் திகழ்ந்தார்ளூ 'நிறைகுடம் நீர்தளும்பல் இல்' என்ற பழமொழிக்கு எடுத்துக்காட்டாக அவருடைய வாழ்க்கை இலங்கியது. 'நான் ஒரு கற்றுக்குட்டி. நான் பேராசிரியனாக இருந்த எந்தத் துறையிலும் பட்டம் பெற்றவனல்ல. எனவே பேருக்குத் தான் நான் ஆசிரியர். உலகம் எப்படியோ என்னைத் தூக்கிவிட்டுக் கொண்டிருக்கிறது... இன்றும் மாணவன் என்ற நிலையில் நான் அறிந்து கொண்டு வருவனவற்றை என்னுடைய தமிழன்பர்களோடு பகிர்ந்து விருந்துண்ணவே விரும்புகின்றேன். மற்றவர்கள் எழுதாமையால் நான் எழுத வேண்டியிருக்கிறது. எனவே குழந்தை விளையாட்டுப் போல என்னுடைய மொழியியல் விளையாட்டுக்களையும் கருத வேண்டும். விளையாடி விளையாடித் தானே குழந்தை உயர்கிறது?' என 'மொழியியல் விளையாட்டுக்கள்' என்னும் நூலுக்கு எழுதிய முன்னுரையில் அடக்கத்தோடு குறிப்பிட்டார் தெ.பொ.மீ.

அடக்கமும் பணிவும் மட்டுமன்றி, மாற்றுக் கருத்துக்கு – கருத்து வேற்றுமைக்கு – மதிப்புத் தரும் பெருமனமும் தெ.பொ.மீ.க்கு இருந்தது. 'தமிழ் மக்களுக்கு என்றே எழுதினேன். அவர்கள் என்ன நினைக்கின்றார்களோ? என் கருத்துக்கள் என் கருத்துக்களே! என் முகம் போல மற்றொரு முகம் இராது. ஆதலின், என் கருத்துக்கள் எல்லோர் கருத்துமாக முடிவது அருமை. என்றாலும், அன்பினால் குற்றத்தினைப் பொறுத்து வாழ்த்துவது அன்றோ தமிழ் மரபு? அதனையே நம்பி வாழ்கிறேன்' என்று 'வள்ளுவர் கண்ட நாடும் காமமும்' என்ற நூலுக்கு எழுதிய முன்னுரையில் நயத்தக்க நனிநாகரிகத்தோடு குறிப்பிட்டார் தெ.பொ.மீ.

'வால் எழுத்தே தமிழ்நாட்டின் தலையெழுத்து'

'புதியதோர் உலகம் செய்வோம்' என்று உணர்ச்சியோடு முழங்கினால் மட்டும் போதாதுளூ அதற்குக் கால்கோளாக - அடிப்படையாக - 'கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு வெட்டிச் சாய்க்க வேண்டும்'. அம்முயற்சியில் ஈடுபடுவோர் செய்ய வேண்டிய முதற்பணி - முக்கியமான பணி - சாதிக் கொடுமைக்குச் சாவுமணி அடித்தல் ஆகும். இவ்வகையில் தெ.பொ.மீ. தீவிரமான - கடுமையான - முற்போக்கான - வருத்தைக் கொண்டிருந்தார். 'நாய்கள் ஒன்றை ஒன்று வரவேற்பது, கை குலுக்கி அன்று. பின்னுக்குத் திரும்பி வாலடியை மோந்து வரவேற்பதே நாய்கள் வழக்கம். தமிழ்நாட்டு மக்களின் பெயர்களுக்கு வாலுண்டு. ஐயர், செட்டியார், முதலியார் என்னும் வால்கள், நாய் வால் நீண்டாலும் நீளாக் கொடுக்கு போலக் கோணி நிற்கும். மக்களை மக்களாய்ப் பார்க்கும் கண் கெட்டுப் பல நூற்றாண்டுகளாகின்றன. நம்மோடு ஒட்டிக் கொள்ளாது, நம் பெயரோடு ஒட்டிக் கொண்டு கிடக்கும் முதலியார், நாயுடு போன்ற இந்த வாலை மோந்;து பார்ப்பதே பெருந்தமிழ் வழக்காகி உள்ளது. இந்த வால் எழுத்தே தமிழ்நாட்டின் தலையெழுத்து' என்று தமிழ்நாட்டு மக்களின் சாதி-யுணர்வினைக் குறித்து நெஞ்சு பொறுக்காமல் எழுதியுள்ளார் தெ.பொ.மீ.

'மாணவர்களே என் குருமார்கள்'

சென்னை சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப் பள்ளி, மாநிலக் கல்லூரி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் முதலான கல்வி நிறுவனங்களின் வாயிலாக மாணவ சமுதாயத்துடன் நெருங்கிய உறவும் தொடர்பும் கொண்டிருந்தார் தெ.பொ.மீ. மாணவர்களையே தம் குருமார்களாக - ஆசிரியர்களாக - பார்த்தார் அவர். 'கானல் வரி' என்னும் புகழ் பெற்ற சிலப்பதிகார ஆய்வு நூலுக்கு எழுதிய முன்னுரையில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:

'இலக்கியத்தை நானே ஓதும் போது பெருவிளக்கம் ஒன்றும் நான் பெறுவதில்லை. மாணவரிடையே ஓதும் போது சில இடத்திலே புதுவிளக்கம் மின்னிப் பொலியும். இலக்கியக் கூட்டுணவின் சிறந்த பயன் இது. தனியே 'அரகர' என்று சொல்லும் போது பெறும் உணர்ச்சியை விடத் திருவண்ணாமலை கார்த்திகை விளக்கீட்டின் போது பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருக்கையில், அவர்களோடு சேர்ந்து 'அரகர' என்று சொல்லும் போது நாம் அறியாததொரு மெய்யுணர்வு ஓரிமைப் போதேனும் நம்மைத் தனக்குள் ஆழ்த்தி விடுகிறது. இலக்கிய அனுபவம் எனக்கு வகுப்பிலும், கூட்டங்களிலுமே உண்டாயிற்று எனப் பொதுவாகக் கூறலாம்'.

'மாணவர்கள் முகப்பொலிவில் நான் கண்டவையே இக் கருத்துக்கள். அவர்களை என் குருமார்கள். வாழ்க அவர்கள்!' எனக் 'குடிமக்கள் காப்பியம்' என்னும் நூலுக்கு எழுதிய முன்னுரையிலும் தம் மாணவர்களை மனமாரப் பாராட்டியுள்ளார் தெ.பொ.மீ.

'பல் கலைஞர்'

நுண்மாண் நுழைபுலம் மிக்க அறிஞர்கள், நல்ல நகைச்சுவை உணர்வு (ளுநளெந ழக ர்ரஅழரச) படைத்தவர்களாகவும் விளங்குவது இயல்பு. இந் நகைச்சுவை உணர்வு தெ.பொ.மீ.யிடமும் குடிகொண்டிருந்தது. புலவர் குழுக் கூட்டம் ஒன்றில் அவரைப் பற்றிக் குறிப்பிடும் போது, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம், 'தெ.பொ.மீ. பல்கலைஞர்' என்று பாராட்டிப் பேசினார். தெ.பொ.மீ. எழுந்து அவர்க்கு விடை கூறும் போது, 'எனக்கு முதலில் இரண்டொரு பற்கள் விழுந்தனளூ மறுபடியும்
3,4 பற்கள் விழுந்து விட்டன. நான் ஒரு பல் மருத்துவரிடம் கொண்டு போய்க் காட்டினேன். அவர் எல்லாப் பற்களையும் கலைத்து எடுத்துவிட்டு, மேலும் கீழும் புதிதாகவே கட்டித் தருவதாகக் கூறினார். பார்ப்பவர்களுக்கு வேறு விதமாகக் காட்சியளிக்குமே என்று நான் ஒப்பவில்லை. அதற்கு மருத்துவர் 'வேற்றுமையே தெரியாமல் முன் இருப்பது போலவே அழகாக அமைத்துத் தருகிறேன்ளூ நீங்கள் யாரிடமும் சொல்லாதீர்கள்ளூ நானும் எவரிடமும் சொல்ல மாட்டேன்' எனக் கூறினார். ஒப்பினேன். எல்லாப் பற்களும் கலைத்து எடுக்கப்பட்டு புதிதாகக் கட்டி அமைத்தார். இதை நானும் வெளியில் சொல்லவில்லை. பல் மருத்துவரும் வெளியில் சொல்லவில்லை. இது எப்படி வெளியில் தெரிந்தது என்று எனக்குப் புரியவில்லை. இதை எப்படியோ தெரிந்து கொண்டு எல்லோரும் என்னைப் 'பல்கலைஞர்' என்றே கூப்பிடுகிறார்கள்' என்று பேசி அவையினரைச் சிரிக்க வைத்தார்.

கா.அப்பாத்துரையாரின் புகழாரம்

'தெ.பொ.மீனாட்சிசுந்தரனாரைச் சிலர் பல்கலைக்கழகம் என்று கூறுப. எனக்கு அவர் அவ்வாறு தோன்றுகிறாரில்லை. அவர் பல்கலைக்கழகத்தையும் கடந்த ஒருவர் என்பது என் உட்கிடக்கை. மீனாட்சிசுந்தரனார் பிறவி புண்ணியமுடையது. ஏன்? அவர் வாழும் உலகில் இகலில்லைளூ பகையில்லை. அஃது அந்தண உலகம்' எனத் தமிழ்த் தென்றல் திரு.வி.க. தம் வாழ்க்கைக் குறிப்புக்களில் தெ.பொ.மீ.யை நினைவுகூர்ந்து போற்றியுள்ளார்.

'அறிஞருள் அறிஞரான தெ.பொ.மீ.யின் புகழ் ஒளியில் நான் காந்தியடிகளின் பண்பு நிழலையும், திருத்தந்தை ஈராசின் அருள் நிழலையும், இயேசு நாதரின் ஒரு புகழ்க் கதிர்ச் சிதறலினையும் ஒருங்கே காண்கிறேன்' என்னும் பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையின் புகழாரமும் இங்கே மனங்கொளத்தக்கதாகும்.

 

 

முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற் புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
625 021
(எழுத்தாளர், பேச்சாளர்