இசைக்கலையின்
தோற்றமும் வளர்ச்சியும்
பேராசிரியர் இ.பாலசுந்தரம்
ஆயகலைகள்
அறுபத்தினான்கினுள்ளும் இசைக்கலை ஆற்றல் வாய்ந்த இன்பக்கலையாகும். உலக
நாடுகள் அனைத்திலும் இசைக்கலை இன்று உன்னத வளர்ச்சியடைந்து வருகின்றது.
நாகரிகம்; மக்களுக்கு அளித்த அதிசயமான ஓர் அன்பளிப்;பு இசைக்கலையாகும்.
பூர்வீக கால மக்கள், இடைக்கால மக்கள், நவீனகால மக்கள் அனைவரிடமும்
பல்வேறு நிலைகளில் இசைக்கலை பேணப்பட்டு வந்துள்ளது. கட்டடிடம், சிற்பம்,
ஓவியம், நடனம், இலக்கியம், இசை முதலான கலைகள் ஓரினத்தின் பண்பாட்டுக்
கோலங்களை எடுத்துக்காட்டும் பண்பாட்டுக் கூறுகளாகும். இவற்றுள் இசைக்கலை
உலகப் பண்பாடுகள் அனைத்திற்கும் பொதுவானதாகவும் உலகளாவிய
பொதுப்பண்புகளைக் கொண்டதாகவும் மிளிர்கிறது.
இசையின் ஆற்றல் அளவிடற்கரியது. வண்டுகளின் ரீங்கார ஓசைகேட்டு பூக்கள்
மலர்ந்தன எனக் குறுந்தொகைப் பாடல் ஒன்று குறிப்பிடுகிறது. இசையின்
ஆற்றலால் மிருகங்களும் தம் கொடூரக் குணங்களை மறந்து இசைமீட்போரின்
சொல்லுக்குக் கட்டுப்பட்டன என்பதை உதயணன் சரிதம், சீவகசி;ந்தாமணி
என்னும் இலக்கியங்கள் கூறுகின்றன. குறிஞ்சி நிலத்;திலே தினைப்புனக்
காவலில் நின்ற பெண் ஒருத்தி, பாடிய குறிஞ்சிப்பண் பாடலைக்;கேட்டு அங்கு
தினைக்கதிர்களை அழித்துக் கொண்டு நின்ற யானை, அந்த இசையின்
மயக்கத்தினால் அப்படியே இசையில் ஆழ்ந்துவிட்ட செய்தியை அகநானூநூறு
102ஆம் பாடல் குறிப்பிடுகிறது. எத்தகைய கல்நெஞ்சம் கொண்டவரையும்
கொலைவஞ்சகரையும் மனமுருகச் செய்யும் ஆற்றல் இசைக்கு உண்டு.
பாலைநிலத்தினூடாகச் செல்கின்றவர்களை வழிமறித்துக் கொள்ளையடிக்கும்
கள்வர்கள் கொலைக்கும் அஞ்சாத கல்நெஞ்சக்காரர்கள். ஆனால் அவர்களுக்குப்
பாலைப்பண்ணில் அதிக ஆர்வமும் விருப்புமும் உண்டு. இதனை அறிந்த பாலை நில
வழிப்போக்கர்கள் பாலைப் பண்ணைப்பாடுவர். அவ்வழிபறிக் கள்வர்கள் அந்த
இசைப் பாடல்களைக் கேட்டு உள்ளம் உருகி, தம் கையிலுள்ள ஆயுதங்களும்
கீழேவிழத் தம் கொடிய தொழிலையும் மறந்து அருளுடையார் போலக் காட்சிதருவர்
என்று பொருநராற்றுப்படை என்ற நூல் கூறுகிறது.
தமிழர் பண்பாட்டில் இசைக்கலை ஒரு புனிதக்கலையாகவே
போற்றப்பபட்டுவந்துள்ளது. 'ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே' என்றும், 'ஏழிசையாய்
இசைப்பயனாய்' என்றும் பாட்டிசைத்து, இறைவனையே இசைவடிவில் கண்டனர்
தமிழ்ச் சமய குரவர்கள். பிற சமயத்தவர்களும் இசையைத் தத்தம் மதங்களுடன்
இணைத்துக் கொண்டமையை உலக வழிபாட்டு முறைகள் அறியத் தருகின்றன. இசை
ஆராய்ச்சியாளர்கள் இசையின் படிமுறை வளர்ச்சியினைப் பூர்வீக இசை
(Primitive Music)
, நாட்டாரிசை
(Folk Music), கீழைத்தேய –
மேலைத்தேய சாஸ்திரிய இசை
(Classical Music)
என மூன்றாக வகுத்துள்ளனர்.
பண்டைக் காலங்களில் உலகின் பல பாகங்களிலும் பூர்வீகக் குடிகள்
வாழ்ந்தார்கள். ஆனால் நாகரிக வளர்ச்சியின் பயனாக அவர்களின்
எண்ணிக்கையும் வாழும் இடங்களும் குறுகிவிட்டபோதிலும், அவர்களின்
இசையானது ஆபிரிக்க, அமெரிக்க நாடுகளில் இன்று மிகப் பிரபல்யம்
பெற்றுள்ள துயணண அரளiஉஇ ஊயவெயயெ ஆரளiஉ ஆகியனவற்றுக்குப்
பெரும்பங்களிப்புச் செய்துள்ளது.
பூர்வீகக கால மக்கள் தமதுமொழி வளர்ந்திருக்காத சூழ்நிலையில் தம்
கருத்துக்களையும், இன்ப துன்ப உணர்ச்சிகளையும் பிறருக்குப்
புலப்படுத்தத் தக்கவாறு ஏதோ ஒருவகையில் ஓசைமுறைகளையும், சைகைமுறைகளையும்
பயன்படுத்தினர். தேவை ஏற்பட்டபோது ஓசைகளைத் தாளம்பட ஒலித்து அதில்இன்பங்
கண்டிருக்கவும் கூடும். மனிதன் பேசக் கற்றுக்கொள்ள முன்பு தாளம்பட்ட
ஓசையுடன் பாடத்தொடங்கினான் எனக் கூறப்படுகின்றது. ஊயசடளசரஅp என்ற
தத்துவஞானி தாம் எழுதிய, 'வுhந ழுசபைin ழக ஆரளiஉ என்ற நூலிலே வருமாறு
கூறுகிறார்:
'ஆதி மனிதர் தாம் ஒருவருடன் தொடர்பு கொள்வதற்குப் பயன்படுத்திய ஒருவகைச்
சைகைமுறையே இசையின் ஆரம்பம். அத்தகையதோர்; ஆரம்ப நிலையிலிருந்தே
இசைக்கலை படிப்படியாக வளர்ச்சிபெற்றுத் தனித்;துவமும் நுட்பமும்
செறிவும் கொண்ட ஓர் இன்பக்கலையாக அழகியற்கலையாக வளர்ச்சி பெறுவதாயிற்று'.
பூர்வீக மக்களின் இசை தனியிசை மரபினைக்
(Monophonic
music) கொண்டது. மொழி
வளர்ச்சியடையாத நிலையில் வழங்கிய அக்காலப் பாடல்கள் மிகவும் குறுகிய
அளவினைக் கொண்டிருந்தன. மொழி வளர்ச்சியடைந்த நிலையில் இசைவாய்பாடுகள்
ஆக்கம் பெற்றன. அவற்றைத் தொடாந்து சாஸ்திரிய அடிப்படையில் சங்கீதப்
பாடல்களும் தோற்றம் பெறலாயின. தாலாட்டுப்பாடல்களில் வரும் ரா, ரி, ரூ,
ரோ என்ற எழுத்தோசைகளையும், சாஸ்திரிய இசையில் இடம்பெறும் ச ரி க ம ப த
நி என்ற சப்த சுரங்களையும் ஒப்பிட்டு நோக்கினால் இவ்வுண்மை புலப்படும்.
' ஆராரோ ஆரிவரோ.... . எனத்தொடங்கும் தாலாட்டுப்பாடல் நாட்டார் இசை
மரபில் தாய்மார் பாடுவதாகும். இப் பாடலை கர்நாடக இசையில் நீலாம்பரி
இராகத்திலும் பாடலாhம். இதுபோன்றே கர்நாடக இசையில் இடம்பெறும்
புன்னாகவராளி, குறிஞ்சி, ஆனந்தபைரவி முதலான இராகங்கள் நாட்டாரிசைக்குப்
பெரிதும் கடமைப்பட்டுள்ளன.
எனவே பூர்வீகக் குடிகளின் வாழ்க்கைச் சூழலில் தோற்றம் பெற்ற பூர்வீக
இசைமரபுகளின் அடிப்படையிலிருந்து தோற்றம் பெற்றனவே கடந்த காலத்திலும்
இன்றும் வழக்கிலுள்ள சாஸ்திதிரிய சங்கீதமாகும். நாட்டாரிசையை எடுத்துக்
கொண்டால் அது பாமர மக்களால் ஆக்கம் பெற்று, பரம்பரை பரம்பரையாகப்
பல்லாண்டு காலமாக வழங்கிவருவதாகும். நாட்டுப்புற மக்களின் இன்ப
துன்பங்கள், தொழில்முறைகள், வாழ்க்கை நடைமுறைகள், வழிபாட்டு
நம்பிக்கைகள் முதலானவற்றைக் கருப்பொருட்களாகக் கொண்டனவே நாட்டாரிசை
கூறும் படல்களாகும். இப்பாடல்கள் சாஸ்திரிய இசைமுறையில் அமையாவிடினும்
தனக்கே உரித்தான நாட்டாரிசை மெட்டில் அமைந்துள்ளன. செந்நெறி
இலக்கியங்களும் நாட்டார் இலக்கியங்களும் எவ்வாறு ஒன்றை ஒன்று தழுவியும்,
கொண்டும் கொடுத்தும், வளம்பெற்று வளர்ந்தனவோ, அதுபோன்றே நாட்டாரிசையும்
சாஸ்திரிய இசையும் ஒன்றையொன்று தழுவி வளர்ந்து வந்துள்ளன. பாடல்களை
இயற்றும் இசைவாய்பாடுகள், மற்றும் இப்பாடல்களின் பயன்பாட்டுப் பின்னணி
ஆகியவற்றிடையே இவ்விரு இசைப் பாடல்களுக்குமிடையே ஒற்றுமை
காணப்படுகின்றது.
ஒவ்வோர் இனத்தவரும் தமக்கென ஒரு மொழியை ஆக்கிக் கொண்டதுபோல், தமக்கென
ஓர் இசைமரபையும் வகுத்துக்கொண்டனர். மலைவாசிகளுக்கோ அல்லது
காட்டுவாசிகளுக்கோ திருந்தியமொழி கிடையாது, ஆனால் தாளலயம்பட்;ட இசைமரபு
அவர்களிடமுண்டு. திரும்பத் திரும்பக் கூறும் அமைப்பில் அவர்களது
பாடல்கள் அமைந்திருக்கும். ஆபிரிக்காவில் காட்டுப் பகுதிகளில் வாழ்ந்து
வரும் பிக்மிஸ் (Pலபைஅநைள) என்ற இனமக்கள் பூர்விக இசைமுறைககுளுக்கும்,
நடனங்களுக்கும் பெயர் பெற்றவர்கள். இவர்கள் தமது சமயச்சடங்குகளில்
ஆடிப்பாடும்போது கூட்டமாகச் சேர்ந்து பாடுவதும், பல்வேறு
இசைக்கருவிகளைப் பயன்படுத்துவதும், அவர்களது பாடல்கள் நடனத்திற்கேற்ற
ஒத்திசை
(Rhythm) பெற்றிருப்பதும்;
முக்கிய அம்சங்களாகும். உலகின் அனைத்து இன மக்களும் சமயச் சடங்குகளுடன்
தம் இசைக்கலையை வளர்த்து வந்துள்ளனர் என்ற உண்மையை பூர்வீக இசை,
நாட்டாரிசை என்பன பற்றி ஆராய்ந்த அனைத்து ஆய்வாளர்களும்
வலியுறுத்தியுள்ளனர்.
சங்ககாலத் தமிழ் மக்களின் வாழ்க்கையில் இடம்பெற்ற பல்வேறு சடங்குகளில்
ஆடலும் பாடலும் இசைக்ககருவிகளும் பெரிதும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
முருக வழிபாட்டில் வேலன் வெறியாடினான். காதல் மகளிரும் சேர்ந்து ஆடினர்.
அப்போது வேய்ங்குழல் ஒலித்தது. யாழ் இசை முரன்றது. முழவு அதிர்ந்தது.
முரசு இயம்பியது என்ற விரிவான வருணயையைப் பட்டினப்பாலை என்னும் சங்கநூல்
மூலம் அறிகிறோம்.
நாட்டாரிசை சடங்குககள், சம்பிரதாயங்கள், மக்களின் அன்றாட வாழ்க்கைச்
சம்பவங்கள் உணர்வுகள் என்பனவற்றுடன் தொடர்புடையது. நாட்டாரிசையில்
தோன்றும் பாடல்கள் மனிதன் பிறக்கும்போது தாலாட்டாகவும், இறக்கும்போது
ஒப்பாரியாகவும் பயன்படுகின்றன. இப் பாடல்கள் விளையாட்டுப் பாடல்களாவும்,
காதல் - திருமணப் பாடல்களாகவும், தொழிற்பாடல்களாகவும் பயன்படுகின்றன.
உடல் வருந்தி வேலை செய்யும் தொழிலாளி பாடிக்கொண்டே வேலைசெய்கிறான்.
அதனால் அவனது களைப்பும் அலுப்பும் குறைகின்னறன. பாடல் ஓசை அவனுக்கு
களைப்பைப் போக்கவும் உடல்நோவைப் போக்கவும் துணையாக அமைகின்றது.
பூர்வீக மக்களின் இசை தெய்வீக சம்பந்தம் அல்லது அதீத சக்திகளுடன்
தொடர்புடையதாகக் கருதப்பட்டது. நடனக் கலையும் தெய்வ சம்பந்தமுடையதாகவே
கூறப்படுகிறது. நடனத்துடன் இசை தொடர்புடையது. எனவே பிற்காலங்களில்
நடனமும் இசையும் இறை வழிபாட்ட்டில் முக்கிய இடம்பெறலாயின. கரகம், காவடி,
தேவதையாட்டம், கோலாட்டம் என்பனவற்றுடன் தொடர்புடைய இசைவடிவம் தெய்வீகம்
சார்ந்ததாகும். பண்டைத் தமிழரின் இசைப்பாடல்களும் தெய்வீகம் சார்ந்து
காணப்பட்டன. சிலப்பதிகாரத்திலே இடம்பெறும்; வேட்டுவவரி, குன்றக்குரவை,
ஆய்ச்சியர்குரவை என்பன தெய்வவழிபாட்டுன் இணைந்தனவாகவே பயன்பட்டுள்ளன.
இசைமரபினை, வாய்ப்பாட்டு இசைமுறை
(vocal music), இசைக்கருவிகளால்
(instrumental music)
மெருகூட்டப்படும் வாத்திய
இசை என இருவகையாகப பிரிப்பர். இசைக்கலையின் படிமுறை வளர்ச்சியைக்
கூறும்போது, பூர்வீக இசை, நாட்டாரிசை, சாஸ்திரிய இசை என கால
அடிப்படையில் வகுத்துக்கூறுவர். அவ்வக் காலக்கட்டங்களில் இடம்பெற்று
வந்த இசைக்கருவிகளின் தன்மை, அவற்றின் பயன்பாடு, அறிவியலும் விஞ்ஞான
தொழில்நுட்ப வசதிகளும் உள்ள இக் காலக்கட்டத்தில் இசைக்கருவிகள்
அடைந்துள்ள மாற்றம், அவற்றின் உன்னத வளர்ச்சிநிலை என்பன பற்றி
அறிந்துகொள்ளும்போது, இசைக்கலையின் சீர்மைநிலை தெற்றெனப் புலப்படும்.
இசைக்கருவிகளைத் தோற்கருவிகள், நரம்புக்கருவி, துளைக்கருவி, கஞ்சக்கருவி
என நான்காக வகுத்துள்ளனர். தமிழ் மக்களின் பாரம்பரிய இசைக்கருவிகளில்
யாழ், வீணை, உடுக்கு, மத்தளம், சல்லரி, குழல், பறை, மகுடி முதலியன
குறிப்பிடத்தக்கவை. சமயச் சடங்குகளில் பாடப்படும் பாடல்களுகக்குப்
பின்னணியாக உடுக்கு வாசிக்கப்படுதல் வழக்கமாகும். உடுக்கு ஒலி
கேட்போரைப் பக்திப்பரவசமாக்கும் ஆற்றல் மிக்கது, தமிழ் மக்கள் எவ்வாறு
இசைக்கலைக்குத் தெய்வீகத் தன்மை கற்பித்தார்களோ, அதுபோன்றே
இசைக்கருவிகளுக்கும் தெய்வீகம் கற்பித்துள்ளனர்.
பண்பாட்டு வளர்ச்சியும், இசைநுட்ப வளர்ச்சியும் வாய்க்கப் பெற்ற மக்கள்
மத்தியில்
பொழுதுபோக்கு அல்லது இசைநுகர்ச்சி அடிப்படையில் இசையின் வளர்ச்சி
இடம்பெற்று வந்திருக்கலாம். அரசர்களின் அரண்மனைகளில் மகிழ்ச்சியூட்டும்
வகையில் அங்கு இசைக்கலை வளர்ச்சி கண்டது. தமிழ் நாட்டில் மூவேந்தர்
ஆட்சிக் காலத்தில் பாணர், பரதர், கூத்தர், விறலியர் முதலியோர்
அரசசபைக்குச் சென்று, ஆடலும் பாடலும் வழங்கிக் கலைவிருந்தளித்து
மன்னர்களையும் கொடைவள்ளல்களையும் மகிழ்வித்தனர் என இலக்கியங்கள்
விரிவாகக் கூறுகின்றன.
பாடல்கள் ஆக்கப்படுவதற்கு ஒத்திசைத் தொடர்களாகிய தருப்பாடல்கள்
அடிப்படையானவை. அந்த இசை வாய்பாட்டிற்கு அமைவாகவே பாடல்கள்
பாடப்படுகின்றன என்பதற்குப் பின்வரும் தருவும் பாடலும் சான்றாகின்றன:
தரு: 'தான தானின தான தானின
தான தானின தானானா
தானினந்தன தானினந்தன
தானினந்தன தானினா'
பாடல்: சூட்டைத் தள்ளடா மாட்டைத் தள்ளடா
சோம்பல் தனத்தைத் துடையடா
பாட்டைப் பாடடா மாட்டைச் சாயடா
பள்ளரானவ ரனைவரும்.
நாட்டாரிசைக்கு இத்தகைய தருப்பாடல்களே அடிப்படையாகின்றன. இதுபோன்றே
சாஸ்திரிய இசைக்கு இசைவாய்பாடுகள் தளமாகின்றன. நாட்டுக் கூத்து, வசந்தன்
கூத்து, கரகம் காவடி, கும்மி முதலிய நடனங்களில் தரு – பாடல் - தரு என
மாறி; - மாறிப்பாடுவதை நாம் கவனிக்கலாம். பரத நாட்டியத்தில்
நட்டுவாங்கம் செய்வதற்குப் பயன்படும் தாளக்கட்டுக்கள் போன்றனவே இத்
தருப்பாடலகள். காலத்திற்குக் காலம் சாஸ்திரிய இசையும் நாட்டாரிசையும்
ஒன்றை ஒன்று தழுவி வளர்ந்து வந்துள்ளன என்பதையும் மீண்டும் நினைவுகொள்ள
வேண்டும். தமிழிசை வரலாற்றில் அகத்தியர், இராவணன், நாரதர் என்போரின்
பெயர்கள் முதலில் உச்சரிக்கப்படுகின்றன. யாழ்க்கருவிவை கொடியாகக் கொண்டு
செங்கோலாட்சி புரிந்த இராவணணன் காலத்தில்; இசைக்கலை மகோன்னதநிலை
பெற்றிருந்திருக்க வேண்டும். தமிழிசை மரபிலுள்ள ச ரி க ம ப த நி என்ற
ஏழு சுரவரிசைகள் முறையே குரல் - துத்தம் - கைக்கிளை – உழை - இளி - விளரி
- தாரம் என்ற பெயர்களில் வழங்கின. தமிழகத்தில் சீரோடு வழங்கிய தமிழிசை
வளர்ச்சி, சமண பௌத்த மதத்தவர்களால் தடைப்பட்டது. பக்தி இயக்கத்தின்
மூலம் மீண்டும் பண்ணிசை வளர்ச்சி கண்டது.
காலத்திற்குக் காலம் இசைப்பாடல்கள் தோற்றம் பெற்று வளர்ச்சியடைந்தமை
போன்றே இசைக்கருவிகளும் ஆக்கம் பெற்றுள்ளன. இன்று இந்தியாவில்
500க்கும் மேற்பட்ட இசைக்கருவிகள் இருப்பதும், அவற்றில் சுமார்
250 இசைக்கருவிகள் தமிழ் நாட்டிற்குரியனவாக இருப்பதும் அறியப்பட்டுள்ளன.
உலகின் பெரும்பாலான நாடுகளில் இசைக்கருவிகளின் தோற்றத்திற்கு தெய்வீக
சம்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது. சிவனிடம் 18 வகையான இசைக்கருவிகள்
இருந்;தன என்பது இந்துக்களின் புராணிகமாகும். மெச்சிக்கோ நாட்டவர்
சூரியனிடமிருந்து இசையைப் பெற்றனர் என்பது அவர்களது நம்பிக்கை.
எலும்பாலும் மரத்தாலும் செய்யப்பட்ட கி.மு. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட
இசைக்கருவிகள் எகிப்தில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. தென்கிழக்காசிய
நாடுகளிலும் இசைப்பாரம்பரியம் மிகப் பழங்காலத்திலேயே
வளர்ச்சியடைந்திருந்தமை வரலாற்றுண்மையாகும்.
கிறிஸ்து சகாப்த காலத்தில் அராபிய, பாரசீகக் கலாசாரமும், அதன் பின்னர்
மொகலாயர் கலாசாரமும் வடஇந்தியாவில் செல்வாக்குப் பெற்றிருந்தன. ஆதன்
பயனாக அங்கு 'ஹிந்துஸ்தானி' இசை தோன்றி வளர்வதாயிற்று. அதேவேளையில்
தென்னிந்தியாவில் அமைதியான சூழலில் கர்நாடக இசை வளர்ச்சி பெறுவதாயிற்று.
தமிழ் நாட்டில் ஒவ்வொரு நிலத்திற்கும் தனித்தனி இசை மரபும்
இசைக்கருவிகளும் பேணப்பட்டிருந்தன. குறிஞ்சி நிலத்தில் குறிஞ்சிப்பண்,
தொண்டகப்பறை குறிஞ்சியாழ்,; முல்லை நிலத்தில்; சாதரிப்பண், ஏறுகோட்பறை,
முல்லையாழ்; மருதநிலத்தில் மருதப்பண், நெல்லரிகிணை, மருதயாழ்; நெய்தல்
நிலத்தில் இரங்கற்பண், மீன்கோட்பறை, விளரியாழ்; பாலை நிலத்தில்
பஞ்சரப்பண், துடி, பாலையாழ் என்பன முதன்மை பெற்றிருந்தன. பண்டைத்
தமிழகத்தில் இசை நுணுக்கம், பஞ்சமரபு, பஞ்சபாரதீயம், பரதசேனாபதியம்,
இந்திரகாளியம், சயந்தம், நுத்த கூ}ல் குணநூல் , அகத்தியம், செயிற்றியம்
முதலான இசை, நடனம் பற்றிய பல்வேறு நூல்களும் தோற்றம் பெற்றிருந்தன என
அறியப்படுகிறது. சிந்துவெளி நாகரிக காலத்துத் திராவிடப் பண்பாட்டிலும்
இசைக்கலை நன்கு ஏற்றம் பெற்றிருக்க வேண்டும். சங்க இலக்கியங்களில்
தமிழர் தம் இசைக்கருவிகள் பற்றிய விரிவான விளக்கங்கள் கூறப்பட்டுள்ளன.
சுவாமி விபுலாநந்தர் தாம் அரிதில் முயன்று ஆராய்ந்து எழுதிய
யாழ் நூலில் பண்டைத் தமிழரிடையே இலைக்கலை அடைந்திருந்த நுட்பமான
வளர்ச்சியை ஆதாரங்களுடன் எடுத்து நிறுவியுள்ளமை இத்துறையில்
ஈடுபாடுள்ளவர்கள் அனைவரும் படித்தறிய வேண்டிய விடயமாகும். இசைக்கலையின்
தோற்றமும் வளர்ச்சியும் ஒரு பரந்த ஆராய்ச்சிக் களமாதலால் இவ விடயத்தை
இத்துடன் நிறைவு செய்கின்றோம்.
தமிழிசை வளர்த்தோர்:
நாரதர், பரதர், சாரங்கதேவர், புரந்தரர், வேங்கடமகி, ....
தியாராஜபாகவதர், சியாமாசாஸ்திரி, முத்துசாமிதீட்சிதர், பொன்னையாபிள்ளை,
கோபாலகிருஷ்ணபாரதியார், முத்துத்தாண்டவர்,
அருணாசலக்கவிராயர், அருணகிரிநாதர்,....
|