சங்ககாலக் காதல் ஒழுக்கம்,
களவொளுக்கமும் ஏக்கமும்
த.சிவபாலு
"என்னைத் தந்தேன் தலைவன் உண்டான் என்னை இழந்தேன்"
குறிஞ்சிநிலத்தலைவி
தலைவன் மணம்புரியாது இருப்பதனால் மனம் நொந்து தோழிக்கு உரைக்கின்றாள்.
எனது உயிர்தோழியே கேட்பாயாக தலைவனை நம்பினேன். அவனிடத்திடல் என்னைத்
தந்தேன் என்னை முழுமையாக உண்டனன். குறவனது தோட்டத்தில் வளர்ந்த
பொன்போன்று காட்சிதரும் தினையை கிறி கோதி உண்டபின் மழையினால் பசுமையாக
இன்னும் இலை காட்;சியளிப்பதுபோன்று எனது பெண்மையை அவன் உண்டுவிட்டான்
அதனால் தானியம் இழந்த பயிரைப்போல உள்ளேன். நானும் அவன் வருவான் என்னை
மணந்துகொள்வான் என்ற நினைவில் உயிர்வாழ்கின்றேன். அந்த தானியம் இளந்த
தினைப் பயிரின் இலையாக இன்னும் பசுமையாக உள்ளேன். தலைவன் என்னை
வரைத்துக்கொள்ளாமல் காலத்தை நீடிப்பது எனக்கு மிகுந்த மனவேதனையைத்
தருகின்றது நானே அவர் வருவார் என்னை வரைத்துக் கொள்ளுவார் என்னும்
நம்பிக்கையில் உயிர்வாழ்கின்றேன்.
பெருமழை நீடித்து தினை மீண்டும் கதிர்விடுவதுபோன்று அவர் வந்து என்னை
மணந்துகொண்டால் நான் எனது நலிவு, மனவேதனையில் இருந்து விடுபட்டு
மீண்டும் நலனடைவேன். ஏன்று தனது தோழிக்கு தனது மனதிலுள்ள வேதனையைக் கூறி
ஆறுதல் பெறுகின்றாள். இதனை தோழி தலைவனுக்குத் தெரியத்தருவாள் என்னும்
எண்ணமும் அவள் உள்ளத்தில் இல்லாமல் இல்லை.
புனவன் துடவைப் பொன்போல் சிறுதிணை
கிளி குறைத்து உண்ட கூழை இருவி
பெரும் பெயல் உண்மையின் இலை ஒலித்தாங்கு என்
உரம் செத்தும் உளெனே தோழி! என்
நலம் புதிது உண்ட புலம்பினானே. (குறுந்தொகை)
என்பது உறையூர் முதுகண்ணன் சாத்தனாரின் புலமைக்குச் சான்றாக அமைகின்றது.
மிக நுட்பமாக களவொழுக்கத்தில் இன்பமுற்றுப் பிரிந்து சென்ற தலைவன்
மீண்டும் வந்து விரைவில் தன்னை மணமுடிக்கவில்லையே என்பது அந்த இளம்
பெண்ணின் ஏக்கம், பரிதவிப்பு என்பன மிக நுட்பமாக
வெளிப்படுத்தப்படுகின்றது. அத்தோடு கூடிப்பிரிதல் பெண் தன்னைத் தந்து
கற்பொழுக்கத்தில் நின்று தவறிழைத்ததாக அன்றிஅவனை மணந்து அவனோடு
வாழவேண்டும் என்னும் ஆதங்கத்தையும் எடுத்துக் காட்டுகின்றது. ஒருத்தி
ஒருவனை நினைத்துவிட்டால் அவளது உள்ளத்தில் இருந்து அவனை அகற்றவே
முடியாது. அவ்வித காதலால் அவன் மீது பற்றும் பாசமும் மீதூரப்பெற்று
காதலாய் மலர்ந்து மனத்தினால் கணவன் மனைவியாகவே நினைந்து வாழும்
நிலைமைக்குச் சென்றவர்கள் பிரிந்து வாழுதல் துன்பத்தை; தருவதாக
அமைகின்றது. 'உன்னிடத்தில் என்னைத் தந்தேன்' என்று 'உன்க்காகவே நான்
உயிர் வாழ்கின்றேன்''உடல் வளர்த்தேன் உன்னை அடைவதற்கு' என்றெல்லாம்
சினிமாப் பாடல்கள் சங்க இலக்கியத்தின் வழி வந்தவையாகவே காணப்படுகின்றன.
புனவன் - குறவன், துடவை –தோட்டம், குறைத்து– கோதி, கூழை – கூழையாகிய
கதிர், (குறுகியதான) பெரும்பெயல்- பெருமழை, இலைஒலித்தாங்கு -
இலைபசுமையாக இருப்பதுபோன்று, என் உரம் - எனது வலிமை, செத்தும் -
இழந்தும். உனெனே - இருக்கின்றேனே.
இதனை ஒத்த தலைவியின் விளக்கம் வேறுவிதமாக அமைவதனைச் சங்கச் செய்யுளான
குறுந்தொகை
27 வதாக இடம்பெறும்
வெள்ளிவீதியாரின் பாடல். தனது தலைவியின் உடலில் ஏற்படும் மாற்றம், அவளது
நிலை கவலையைத் தருகின்றது. தலைவியிடம் ஏன் என வினவுகின்றாள். ஆதற்கு
தலைவி தோழிக்குக் கூறியதாக அமைகின்றது இந்தக் கவிதை. தலைவி தனது
தலைவனுடன் சேரவில்லை அவனுக்கு எனது உடலை நான் கொடுக்கவில்லையே அது
வீணாக அழந்து அவனுக்கும் இன்றி எனக்குமின்றி வீணே அழிந்து
பாழாகப்போகின்றதே. துலைவனால் அடையவேண்டிய இந்த இன்பத்தை அவனும்
அனுபவிக்காது என்னிடத்தில் வராது எங்குள்ளானோ? ஏன்னை நாடி அவன் வந்து
எனது நி;லையை அறிந்து என்னை மகிழவைத்துத் தானும் மகிழ்வானோ என ஏங்கும்
பாலை நிலத்துத் தலைவி தன் தோழிக்கு தலைவனின் பிரிவால் பசலை படரும்
நோய்க்கு ஆளாகி எனது அழகிழந்து நலிந்து போகின்றேனே என்று
குறிப்பிடுகின்றாள்.
கன்றும் உண்ணாது, கலத்தினும் படாது
நல் ஆன்தீம் பால், நிலத்து உக்கா அங்கு
எனக்கும் ஆகாது. ஏன் ஐக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல், என் மாமைக் கவினே. (குறுந்தொகை
-27)
நல்லினப்
பசுவின் இன்சுவை பொருந்திய பாலானாது அதன் கன்றால் அருந்தப்படாதும், பால்
கலையத்தில் அதனை எடுத்து மற்றவர்களும் உண்ணாது வீணாக நிலத்தில்
கொட்டுகின்றதே. அது மண்ணுக்கு இரையாவது போன்று எனது அழகு உடலை எனது
அருமைத் தலைவன் அனுபவிக்காமல் எனக்கும் பிரயோசனப்படாமல் வீணாக
அழகொழிந்து போகின்றதே. எனது பெண்குறிப் பகுதி நிலத்தில் கொட்டி
பாலைப்போல வீணாக பசலையால் அழகிழந்து போகின்றது. அதனை அவரும்
அனுபவிக்கவில்லையே. எனது காம நோயை வந்து குணப்படுத்தா விட்டால் தலைவனின்
பிரிவுத்துயர் ஒன்றே போதும் என்னை அழிப்பதற்கு. அந்த வேதனையால் நான்
அழகொழிந்து யாருக்கும் உதவாமல் மண்ணில் மடிந்து போகப்போகின்றதே இந்த
அழகிய உடல் எனத் தோழிக்கு தனது பிரிவுத்துயரை எடுத்துரைக்கின்றாள் தலைவி.
இது காமக் கிளர்வின் வெளிப்பாடோ? துலைவனைப் பிரிந்துவாழ்;வதின்
பிரிவுத்துயரோ? புலவர் வெள்ளிவீதியார் மிக நுட்பமாக எடுத்துரைக்கின்றார்.
புhலை நிலத்தில் ஊற்றப்படும் பால் புல் பூண்டுக்குக் கூடப் பயன்படாதே!
ஆவ்விதமே தலைவனுக்கான எனது உடல் அவனால் அனுபவித்து இன்பம் காணாமல்
வீணாகிப்போகின்றதே பசலைக்கு எனது அழகு உட்பட்டு பாழாகிப்போகின்றது
என்பதனை எத்துணை உதாரணத்தால் தலைவியனி; வாயிலாக விளக்கம் தருகின்றார்.
இது சங்கப் புலவரின் சிறப்பன்றோ?
|