சாலியா –
அசோக்கமாலா
பொன் குலேந்திரன்
உலகில்,
நாட்டுக்கு நாட்டில் பிரபல்யமான காதல் கதைகள் பல உண்டு. இக்கதைகளில்
குறிபாகச் சொல்லப் போனால்,
அம்பிகாபதி அமராவதி,
ரோமியோ ஜுலியட்
,
லைலா மஜ்ஜுனு ஆகிய காதல் கதைகளை குறிப்பிடலாம். இக்கதையில் கமபர் மகன்
அம்பிகாபதிக்கும் குலோத்துங்க மன்னனின் மகள் அமராவதிக்கும் ஏறபட்ட
காதல் முடிவில் மன்னன் வைத்த பாட்டுப் போட்டியால் தோழ்வியுற்றது. இந்த
காதலை;
எதிர்க்க காதலன்,
காதலி குடும்பஙகளுக்கிடையே உள்ள குடும்பப் பகமை,
சாதி வேற்றுமை,
பணக்காரன் ஏழை என்ற வித்தியாசம் காரணமாக இருந்து வந்திருக்கிறது.
இலங்கையில் நடந்த காதல் கதைகளில்,
சரித்திர வரலாறு படைத்த கதை
“சாலியா
–
அசோக்கமாலா”
காதல் கதை. அக்கதை மக்களின் கவனத்தை ஈர்த்ததுக்கு முக்கிய காரணம,;
சாலியா சிங்களவர்கள் பெருமையாக பேசும் இலங்கை முழுவதையும் கிமு
161 -137
காலத்தில் ஆண்ட துட்டகைமுனு மன்னனின் மகன் ஆவான். அதோடு பட்டத்து
இளவரசன். அசோக்கமாலா கீழ்சாதியான சண்டாளக் குலத்தைச் சேர்நதவள்,
ஆனால் அழகி. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சிங்கள
இனத்திடையே சாதிவேற்றுமை இருந்து வந்ததுக்கு இக்கதை ஒரு ஆதாரம்.
அனுராதபுரத்தில இக்காதலர்களை கல்லில சிலை வடிவில் அமைத்து,
அனுராதபுரத்தில் உள்ள
“இசுருமுனிய”
விகாரவுக்கு போக முன்,
வாசலில் “இசுருமுனிய
காதலர்கள்”
என்ற பெயரில் செதுக்கி வைத்திருக்கிறார்கள். சிங்களவர்கள போற்றும்
“மகாவம்சம்”
என்ற இலங்கையின் வரலாற்று நூலில் இக்காதல் கதை விபரமாக
எழுதப்பட்டுள்ளது
ஒருநாள்,
இளவரசன் சாலியா,
அசோக மரக்காட்டில் யானையில் போகும் போது ஒரு இனிமையான பெண்குரலில்
பாட்டோன்றைக் கேட்டான். அந்தக் குரலால் கவரப்பட்ட சாலியா,
குரல் கேட்ட திசை நோக்கிச் சென்று பாடிய இனிமையான குரல் எவருடையது
என்று தேடும் போது,
ஒரு அழகிய பெண்ணொருத்தி பாடியபடி,
அசோக மலர்களை ஆய்வதைக்கண்டான். அப்பெண்னின் பூர்வீகமறியாது கண்டதும்
அவள மேல் காதல் கொண்டான். அந்தப் பெண் அசோகமாலா தான் சண்டாளச் சாதியைச்
சேர்ந்த ரொடிய இனத்தவள் என தன்னை அறிமுகப்படுத்தியும்,
அசோகமாலா மேல் சலியாவுக்கு ஏறபட்ட தீராத காதலை மாற்றமுடியவில்லை.
“ரொடியா”
இனத்தவர்களை ஒதுக்கி வைக்கப்பட்ட தீண்டத்தகாத சாதி என மக்கள்
கருதினார்கள். சாலியாவுக்கு,
ரொடியா இனத்தைபற்றி நன்கு தெரியும். காட்டில் வாழும் அவ்வினம்
வேட்டையாடும் இனம். வேட்டையாடிய மிருகங்களின் மாமிசத்தை அரண்மணைக்கு
கொடுப்வர்கள். ஒரு சமயம் மிருகங்களின் மாமிசம் கிடைக்காதலால் ஒரு
சிறுவனைக் கொன்று அவனின் இறைச்சியை அரண்மனைக்கு கொடுத்;தாhர்கள்.
மாமிசத்தை உண்ட ரத்தனாவலி என்ற இளவரசி சுவையாக இருப்பதினால் மன்னனுக்கு
அது மனித இறைச்சி என்ற உண்மையை சொல்லாது மறைத்துவிட்டாள். அதை மன்னன்
கேள்விப்பட்டதும் இளவரசியையும்,
மாமிசத்தை கொடுத்த சாதியினரையும் நாட்டை விட்டு துரத்திவிட்டான்.
காட்டில் வாழ்நத அவவினம் தீண்டத்தகாத ரொடியா இனமாக கருதப்பட்டடது. தூன்
கண்டது ஒரு ரொடியா இனப் பெண் என்று தெரிந்திருந்திருந்தும்,
அசோக்கமாலா மேல் சாலியாவுக்கு காதல தொன்றியது. முற் பிறவியில்
சாலியாவும் அசோக்கமாலாவும் கணவன் மனைவியாக இருந்தவர்கள். அந்தத்
தொடர்பே,
அவர்களுக்கிடையே காதல் உருவாகக் காரணம் என்கிறது வரலாறு. அதுக்கான
ஆதாரம் கிடையாது. பௌத்த மதம் மறுபிறவிமேல் நம்பிக்கை உள்ள மதம்.
அசோகமாலா என்ற பெயர் அசோகமலரைக் குறிக்கும்.
சாலியா இசையிலும்,
கவிதையிலும் ஆர்வமுள்ளவன். அவனுக்கு பகவைர்கள் இல்லை. பல நல்ல
காரியங்களைச் செய்த நல்ல குணமுள்ள சாலியா மீது,
தந்தை துட்டகைமுனுவும் சாலியாவின் பாட்டியார் விகாரமகாதேவியும் அன்பைப்
பொழிந்தனர். சண்டாலச் சாதியைச செர்ந்த பெண்யொருத்தியை காதலித்து
திருமணம் செய்தால் கைமுனுவுக்குப் பின்னர் மன்னனாகமுடியாது என்று
சாலியா அறிந்திருந்தும்
;அசோக்கமாலாவை
மறக்க அவனால் முடியவில்லை. சாதி வேற்றுமை மறந்து காதலுக்கு முக்கிய
இடம் கொடுத்தான். சாலியா- அசோக்கமாலா காதல்,
மன்னனின் எதிhப்பையும்
மீறி,
திருமணத்தில் போய் முடிந்தது. அதையறிந்த கைமுனு மன்னன் கோபமுற்று மகனை
அரண்மனையைவிட்டு துறத்திவிட்டான். சாலியா- அசோக்கமாலா தம்பதிகள்
அரண்மனை வாழ்வில் இருந்து விலகி வாழ்க்கை நடத்தினார்கள்
ஒரு நாள் மூலிகைகளால் தன் கைப்பட தாயரிக்கப்பட்ட
“ரத்தம்பால”
என்ற சுவையான உணவை கைமுனு மன்னனுக்கு அசோகமாலா அனுப்பினாள். ஊணவை
அருந்திய மன்னனுக்கு உணவு வெகுவாக பிடித்துக்கொண்டது.
“
யார் இந்த சுவையான உணவை தயாரித்தது”
என்று மன்னன் கேட்டபோது,
“வேறு
ஒருவரும் இல்லை,
உங்கள் மருமகள் அசோக்கமாலாதான தயாரித்தது
“எனறார்கள்
அரண்மனை சமையல்காரார்கள். அதைக் கேள்விப்பட்டதும் மன்னன் கொதித்
தெழும்பினான்.
“ஒரு
கீழ் சாதிப்பெண் தாயாரித்த உணவையா நான் உண்டேன்”
எனக கோபமுற்று
,
அசோக்க மாலா அனுப்பிய
“ரத்தம்பால”
என்ற மூலிகை கலந்த உணவைத் தூக்கி எறிந்தான். உணவு சுவர்களில் தெறித்து
சிதறியது.
இந்தச் சம்பவம் நடநது சில நாட்களில் கைமுனு மன்னன் காலில் கொப்பளம்
ஒன்று ஏற்பட்டு புண்ணாக்கியது. அதைக் குணமாக்க அரண்மனை வைத்தியர்கள்
எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை. புண் பெரிதாகிக் கொண்டே போனது. அதை
குணப்படுத்த ரத்தம்பால மூலிகை அவசியம் என்றனர் வைத்தியர்கள். அந்த
மூலிகை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. ஒரு அரண்மனை சமையலகாரனுக்கு,
மன்னன் அசோக்கமாலா அனுப்பிய ரத்தம்பால உணவை சுவரில் வீசி எறிந்தது
நினைவுக்கு வந்தது. உடனே அவன் சொல்லியதைக் கேள்வியுற்று,
சுவிரில் காயந்திருந்த ரத்தம்பாலவை சுரண்டிஎடுத்து வரும்படி
வைத்தியர்கள் காவலாளிகளுக்கு கட்டளையிட்டனர். அவாகள் சுவரில காயந்து
போன ரத்தம்பால என்ற உணவை சுரண்டி எடுத்து வந்து வைத்தியாகளிடம்
கொடுத்தார்கள். இதைபாவித்து மருந்து தாயரித்து மன்னனின் கால்
புண்ணுக்கு வைத்தியம் செய்து வெகு விரைவில் குணப்படுத்தினர்.
எங்கிருந்து தன் கால் புண்;சுகமாவதற்கு
வேணடிய ரத்தம்பால மூலிகை கிடத்தது என்று வேலைக்காரர்களிடம் கைமுனு
மன்னன் வினாவிய போது,
அவர்கள் பயத்தொடு,
நடந்த முழுவிபரத்தையும் சொன்னார்கள். கதையைக் கேள்விபட்ட மன்னன் தான்
செய்த தவறை உணர்ந்தான். அசோகமாலா மேல் அனுதாபப்பட்டான.;
மகன் சாலியாவையும் மருமகள் அசோகமாலாவையும் மன்னித்து,
அரண்மணைக்கு வரவழைத்தான். மருமகளினது அழகையும்,
அறிவையும் கண்டு பெருமைப்பட்டான். சாலியா - அசோக்கமாலா தம்பதிகளுக்கு
முறைப்படி ஆடம்பாரமாக திருமணம் செயது வைத்தான் கைமுனு மன்னன்.
தம்பதிகள் அரண்மனையில் வாழத் தொடங்கினார்கள். ஆனால் சாலியா,
தாழந்த சாதிப் பெண்ணைத் திருமணம் செய்த காரணத்தால் மன்னனாக
முடியவில்லை. கைமுனுவின் மரணத்துக்குப் பின் அவன் சகோதரன் சாததிஸ்ஸவே
மன்னன் ஆனான். இது போன்று
1936ஆம்
ஆண்டு இங்கிலாந்தில் பத்து மாதங்கள் மன்னராக இருந்த
8ஆம்
எட்வார்ட் என்பர் ஒரு விவாகரத்து செய்த அமெரிக்கப் பெண் வலீஸ் சிம்சனை
காதலித்தார். அதை அரச குடும்பம் எதிர்தத்தினால் அவர் காதலுக்காக
முடிதுறந்த கதையுண்டு.
|