சிறுகதை
என்னும்
வடிவம்....
அகில்
மனிதனிடம்
கதை
கேட்கும்
ஆர்வம்
ஆதிகாலம்
தொட்டே
இருந்து
வருகிறது.
பழங்காலத்தில்
கதைகள்
வாய்மொழி
மூலமாகவே
சொல்லப்பட்டு
வந்துள்ளன.
கூத்து,
நாடகம்,
கதா
காலட்சேபம்
எனப்
பல்வேறு
வடிவங்கள்
மூலம்
கதைகள்
சொல்லப்பட்டு
வந்தன.
கி.பி
18ம்
நூற்றாண்டில்
உரைநடை
புத்துயிர்
பெற்றது.
அதனைத்
தொடர்ந்து
நாவல்,
சிறுகதை போன்ற
உரைநடை
இலக்கிய
வடிவங்கள்
தோற்றம்
பெற்றன.
எமது
பழம்பெரும்
நூல்களான
அகநூனூறு,
கலித்தொகை,
குறுந்தொகை போன்ற
சங்க
இலக்கிய
நூல்களிலும்,இராமாயணம்,
மகாபாரதம்
போன்ற
இதிகாசங்களிலும்
சிறுகதைக்கான
கூறுகள்
பா
வடிவில்
அமைந்திருப்பதைக்
காணலாம்.
குறிஞ்சிக்கலியில்
கபிலர்
பாடிய 'சுடர்தொடீஇ!
கேளாய்....!'எனத்
தொடங்கும்;
அகத்துறைப்
பாடல்
சிறுகதை
வடிவத்திற்கு
சிறந்த
எடுத்துக்காட்டு
எனலாம்.
'தோழியே...!
தெருவில்
நாம்
மணல்
வீடுகட்டி
விளையாடும்போது,
அவ்வீட்டைக்
காலால்
எற்றி
அழித்து
துன்பப்படுத்துவானே,
அவன்தான்.அவன்பெயர்கூட
சிறுபட்டி!
அன்று
ஒருநாள்
அவன்
எங்கள்
வீட்டு
வாசலில்
வந்து
நின்று,'தாகமாக
இருக்கிறது.
கொஞ்சம்
தண்ணீர்
தாருங்கள்'
என்று
கூவினான்.
அதைக்
கேட்ட
என்
அன்னை,'அவனுக்கு
பொற்சொம்பில்
நீர்
கொடு'
என்று
என்னிடம்
சொன்னாள்.
வந்தவன்
அந்தப்
பட்டிதான்
என்று
அறியாமல்,
தண்ணீர்
கொண்டு
சென்றேன்.
அவன்
என்ன
செய்தான்
தெரியுமா?
என்
கையை
வளையல்களோடு
சேர்த்துப்
பிடித்து
இழுத்தான்.
நான்
பயந்துபோய்,'அம்மா...!!
இவன்
என்ன
செய்கிறான்
பார்'
என்று
சத்தம்போட்டேன்.
என்
அம்மா
பயந்துபோய்
ஓடி
வந்தாள்.
நான்
அவன்
செய்ததை
மறைத்து
விட்டு,
தண்ணீர்
குடிக்கும்
போது
விக்கினான்
என்று
கூறிவிட்டேன்.
என்
தாயோ
அதனை
நம்பி,
அவனிடம்
பொறுமையாகக்குடிக்கக்
கூடாதா?
என்று
கேட்டு
அவனது
தொண்டையை
நீவி
விட்டாள்.'
காதலும்,
நகைச்சுவையும்
நிறம்பிய
ஒரு
சிறுசம்பவம்,
ஒரு
சிறுகதைக்கான
மூலம்.கபிலர்
குறிஞ்சிக்கலியில்
பாடியிருக்கிறார்.கதையின்
முடிவில்
எதிர்பாராத
திருப்பத்தை
எற்படுத்தி
முடிக்கும்
ஒஹென்றி
பாணியை
ஒத்திருக்கிறது.
மேலை
நாடுகளின்
போக்கை
ஒட்டி
உரைநடையை
முதல்
முதலாக
தமிழ்
படைப்பிலக்கியத்துக்குப்
பயன்படுத்தியவர்
வீரமாமுனிவர்.
அவருடையபரமார்த்தகுரு
கதையே
தமிழில்
முதல்
முதலாக
உருவான
உரைநடைக்
கதையாகும்.
இதனைத்தொடர்ந்து
தமிழில்
சிறுகதை
இலக்கியம்
வளர்ச்சி
பெற்றது
என்பர்.
வங்காளத்து
மொழியின்
பாதிப்பும்
ஆரம்பகால
தமிழ்
சிறுகதைகளில்
இருந்தது
என்போரும்
உண்டு.
பாரதி,
வ.வே.சு.ஐயர்
போன்றோர்
வங்காளத்து
அரவிந்தருடன்
நட்புப்
பாராட்டியிருந்தனர்.பாரதியார்
அரவிந்தரின்
சிறுகதைகளை
தமிழில்
மொழிபெயர்த்துள்ளார்.
வ.வே.சு.ஐயர்
எழுதிய 'குளத்தங்கரை
அரசமரம்'
ரவிந்திரநாத்தாகூரின்
உத்தியை
தழுவியதாக
அமைந்துள்ளது.
இத்கதையே
தமிழில்
சிறுகதைக்கான
பண்புகளோடு
வந்த
முதல்
சிறுகதை
ஆகும்.
வ.வே.சு.ஐயர்,
புதுமைப்பித்தன்,
இலங்கையர்கோன்,சம்மந்தன்
போன்றவர்கள்
தமிழில்
சிறுகதை
இலக்கியம்
தோற்றம்
பெறுவதற்கும்,
பிற்காலத்தில்
பல
சிறுகதை
எழுத்தாளர்கள்
தோன்றுவதற்கும்
வழி
காட்டிகளாக
அமைந்தனர்.
இன்று
தமிழ்
சிறுகதை
இலக்கியம்
அபார
வளர்ச்சி
அடைந்துள்ளது.
அ.முத்துலிங்கம்,அகில்,
குரு
அரவிந்தன்,
வ.ந.கிரிதரன்,
யோகா
பாலச்சந்திரன்,
தேவகாந்தன்,குறமகள்,
மாலனி
அரவிந்தன்,
சா.வே.பஞ்சாட்சரம்,
குமார்
மூர்த்தி,லீலா
சிவானந்தன்,
விஜயாராமன்,
ஸ்ரீரஞ்சனி
விஜேந்திரன்,
சுமதிரூபன்,
டானியல்
ஜீவா,
க.நவம்,
த.அகிலன்,
என்.கே.ரகுநாதன்,
பொன்குலேந்திரன்,
இரா.சம்மந்தன்,
மனுவல்
ஜேசுதாசன்,
வீரகேசரி
மூர்த்தி,
சிவநயனி
முகுந்தன்,
வல்வை
கமலாபெரியதம்பி,
க.ரவீந்திரன்,
காலம்செல்வம்,
இளங்கோ,
சிவவதனி
பிரபாகரன்,
மெலிஞ்சிமுத்தன்,
சங்கையூர்
ஜெகன்,
துறையூரான்,உதயணன்
போன்றவர்கள்
கனடா
தமிழ்
சிறுகதை
எழுத்தாளர்களாக
கணிக்கப்படுகிறார்கள்.
சிறுகதை
இலக்கணம்
சிறுகதை
என்பது
சுருக்கமாக
கதை
கூறும்
புனைவகை
உரைநடை
இலக்கியமாகும்.
மரபுக்கவிதையைப்போல
இது
தான்
இலக்கணம்
என்று
சிறுகதைக்கு
இலக்கணம்
இல்லையென்றாலும்
சிறுகதை
தோற்றம்
பெற்றதிலிருந்து
இன்றுவரை
சிறுகதை
எழுதிவருபவர்கள்
கையாளுகின்ற
பொதுவான
தன்மைகள்
சில
இருக்கத்தான்
செய்கிறது.
கதைக்குத்
தேவையான
விடயத்தை
மட்டும்
கொண்டிருக்க
வேண்டும்,தேவையில்லாத
விடயங்களை
வலிந்து
புகுத்தக்
கூடாது.
அதிக
நேரம்
எடுக்காமல்
சில
மணித்துளிகளில்
படித்து
முடிக்கக்கூடியதாக
இருக்கவேண்டும்.அதிகமான
கதை
மாந்தர்,அதிகமான
வருணை,அதிகமான
உரையாடல்
இருக்கக்கூடாது
என்பது
சிறுகதையின்
பொதுவான
தன்மைகள்.
'பிராண்டர்
மேத்யூ'
என்ற
திறனாய்வாளர்
சிறுகதை
பற்றிக்
குறிப்பிடும்போது,'சிறுகதை
என்பது
ஒரே
ஒரு
பாத்திரத்தின்
நடவடிக்கைகளைப்
பற்றியோ,
ஒரு
தனிச்
சம்பவத்தையோ,
அல்லது
ஒரு
தனி
உணர்ச்சி
பற்றியோ
எடுத்துக்
கூறுவதாக
அமைந்திருக்கும்'
என்று
விளக்கமளிக்கிறார்.
சிறுகதைபொதுவாக
மௌனவாசிப்புக்கு
உரியது.
கருவை
நோக்கி
வாசகனின்
கவனம்
இருக்கும்படியாக
கதை
அமைந்திருக்க
வேண்டும்.அண்மையில்
ஒரு
சிறுகதைத்
தொகுப்பு
வெளிவந்தது.
அதைப் 'பார்த்தேன்'
என்று
தான்
சொல்ல
வேண்டும்.'படித்தேன்'
என்று
சொல்லமுடியாது.
காரணம்
பக்கத்துக்குப்
பக்கம்
ஓவியம்
வரையப்பட்டிருந்தது.
ஒரு
சிறுகதையைப்
படிக்கும்போது
கதையில்
வரும்
சம்பவமோ,
காட்சியோ,
கதைமாந்தரோ
மனத்திரையில்
ஓவியமாக
விழவேண்டும்.
அப்பொழுதுதான்
கதையை
முழுமையாக
அனுபவிக்கமுடியும்.
சிறுகதை
அமைப்பு:
கதை
குறைந்த
பக்கங்களைக்
கொண்டிருந்தால்
அது
சிறுகதை,
அதிக
பக்கங்கள்
எழுதப்பட்டால்
அது
நாவல்
என்று
சொல்பவர்கள்
இருக்கிறார்கள்.
சிறுகதைக்கான
அமைப்பு
வேறு
நாவலுக்கான
அமைப்பு
வேறு
என்பதே
உண்மை.
சிறுகதை
அமைப்பு
என்னும்போது
கதைக்கரு,தலைப்பு,உத்தி,
தொடக்கம்,
உச்சநிலை,
முடிவு
போன்ற
முக்கிய
அம்சங்களைக்
கொண்டிருக்கவேண்டும்.
கதைக்கரு:
ஒரு
கதையின்
ஜீவனே
கதைக்கான
கருதான்.
நல்ல
கருவாக
இல்லையென்றால்
கதையில்
ஐPவனிருக்காது.
கதைக்கரு
ஒரு
படைப்பாளியின்
சிந்தனைப்
போக்கை,
இலக்கிய
ஆளுமையைப்
பறைசாற்றுவதாக
அமைகிறது.
சமகால
வாழ்வின்
ஊடாட்டங்கள்,
நவீன
அறிவியலின்;
தாக்கம்,மாறுபட்ட
வாசிப்புத்தளங்கள்,
பன்முகப்பட்ட
அனுபவங்கள்,
தொழில்நுட்ப
வளர்ச்சி
என்பன
சிறுகதைக்
கருவில்
பெரும்
தாக்கத்தை
ஏற்படுத்தியுள்ளன.
கனவுலகில்
இருந்து
விண்வெளி
தாண்டி
விரிகிறது
சிறுகதைகளின்
வளர்ச்சி.
அறிவியல்
சார்ந்த
எழுத்தாளராக
எல்லோராலும்
நன்கு
அறியப்பட்டவர்
எழுத்தாளர்
சுஐhதா.
அறிவியலையும்,
விஞ்ஞானத்தையும்
சிறுகதைகளில்
இணைத்தவராக
இவர்
எல்லோராலும்
போற்றப்படுகிறார்.
தமிழ்
புலம்பெயர்
சிறுகதை
எழுத்தாளர்களின்
படைப்புக்களில்
அவர்கள்
புதிய
சூழலில்,
அந்நிய
கலாசாரத்தின்
தாக்கத்தால்
பல்வேறு
விதமான
கருப்பொருள்களில்,
உத்திகளில்
சிறுகதைகள்
படைக்கிறார்கள்.
அ.முத்துலிங்கத்தினுடைய
சிறுகதைகளில்
அவர்
தொழில்புரிந்த
ஆபிரிக்க,
வடஅமெரிக்க
மாந்தர்கள்
மட்டுமன்றி
அந்தந்த
நாட்டு
பறவைகள்,
விலங்குகள்
கூட
நமக்கு
அறிமுகமாகிறார்கள்.
தலைப்பு:
சிறுகதைக்கு
தலைப்பு
இன்றியமையாதது.
தலைப்பு
ஒரு
சிறுகதையை
வாசிப்பதற்கு
வாசகனை
ஈர்க்கக்கூடியது.
சி.சு.செல்லப்பா'சிறுகதைக்கு
தலைப்பு
இடுதல்
ஓர்
அழகிய
முகத்துக்குத்
திலகம்
இடுவது
மாதிரி'
என்று
குறிப்பிடுவார்.
சிறுகதையின்
சில
முக்கிய
கூறுகளை
வைத்தே
சிறுகதைக்கு
தலைப்பு
இடப்படுகின்றது.
கதையின்
தொடக்கம்,கதையின்
பொருள்,
கதையின்
கரு,கதையின்
முடிவு,கதை
மாந்தர்
என்பன
அந்தவகையில்
குறிப்பிடத்தக்கன.
குறியீடாகத்
தலைப்பு
அமைந்தால்
இன்னும்
சிறப்பு
என்பர்.
தொடக்கம்:
'சிறுகதை
குதிரை
பந்தயம்போல்
தொடக்கமும்
முடிவும்
சுவை
மிக்கதாக
இருக்கவேண்டும்'
என்று 'எல்லரி
செட்ஜ்விக்'
குறிப்பிடுகிறார்.தொடக்கம்
நன்றாக
அமைந்தால்தான்
வாசகன்
முடிவுவரை
சென்று
கதையை
வாசிப்பான்.
ஒரு
நல்ல
சிறுகதை
என்பது
சுவைமிக்க
ஒரு
மாம்பழத்தை
இறுதிவரை
விரும்பிச்சுவைப்பது
போன்றதாகும்.
அவ்வாறன்றி,
மாம்பழத்தை
முதல்
கடியிலேயே
வீசியெறிந்து
விடவேண்டும்
என்ற
எண்ணத்தை
ஒரு
சிறுகதை
ஏற்படுத்துமாயின்
அந்த
சிறுகதையில்
பயனில்லை.
'சிறுகதையின்
முதல்
வாசனமே
வாசகனை
ஈர்த்துவிடல்
வேண்டும்'
என்கிறார்
பிரான்டர்
மாத்யூஸ்
என்பவர்.
ஈழத்து
எழுத்தாளர்
பசுந்திரா
சசி
தனது 'ஆகவே
புலன்
ஆகாது'
என்ற
சிறுகதையை
பின்வருமாறு
தொடங்கியிருப்பார்.
'நடுச்சாமம்,
மயான
இருட்டு.
காற்றில்
ஒரு
வகை
விசப்பூவின்
நாற்றம்
சுவாசத்தோடு
தொண்டையில்
கச்சல்
பூசியது.
இருட்டில்
தொலைந்த
வெளவால்கள்
குறுக்கும்
நெடுக்குமாக
பறக்கும்
சத்தம்
இடை
இடை
வந்து
போனது.
எனது
வீட்டிற்கு
மேற்கு
மூலையில்
அரை
கூப்பிடு
தொலைவில்
இருந்து
இளம்
விதவை
சின்னத்தாயி
வீட்டின்
கிடுகுக்கதவு
சரசரப்பில்லாது
திறந்தது.
உள்ளிருந்து
பூனை
பாதம்
போல்
ஓசையின்றி
அடிமேல்
அடி
எடுத்து
வைத்து
ஒருவன்
வெளியேறினான்'
இந்த
ஆரம்பம்,
கதையை
தொடர்ந்து
வாசிக்கத்
தூண்டுகிறது.
உள்ளேயிருந்து
வெளியேறியவன்
யார்?
உள்ளே
என்ன
நடந்தது?
அடுத்து
என்ன
நடக்கப்போகிறது?
போன்ற
கேள்விகளை
வாசகன்
மனதில்
ஏற்படுத்துகிறது.
மொழிநடை:
படித்தவர்கள்
முதல்
சாதாரணமானவர்கள்
வரை
வாசிக்கின்ற
ஒரு
படைப்பாக
சிறுகதை
இருப்பதால்
எளிமையான
நடையில்
சிறுகதை
எழுதப்பட
வேண்டும்.
பொருள்
விளங்காத
சொற்களோ,
கடுமையான
பண்டித
நடையோ
சிறுகதைக்கு
தேவையில்லாததொன்று.
சிறுகதையாளன்
தனக்கென்று
ஒரு
மொழிநடையைப்
பின்பற்றும்போது
அது
அவனுக்குரிய
நடையாகிறது.
அத்தகைய
தனி
நடையில்
கவரப்படும்
வாசகன்
தொடர்ந்து
அவனுடைய
கதைகளின்
வாசகனாகிறான்.
பொதுவாக,
புதுமைப்பித்தன்
சிறுகதைகளின்
நடை
கிண்டல்,
எள்ளல்
நடை
கொண்டது
என்பர்.
ஜெயகாந்தனின்
நடை
யதார்த்த
நடை
என்பர்.
அவ்வாறே
அ.முத்துலிங்கத்தின்
நடை
எள்ளல்,
நகைச்சுவை
மிக்கது
என்பர்.
இவ்வாறு
சில
எழுத்தாளர்கள்
தமக்கென
ஒரு
பாணியைக்
கொண்டிருப்பர்.
கதையை
வாசிக்கும்போதே
அது
யாருடைய
சிறுகதையாக
இருக்கும்
என்று
சொல்லிவிடலாம்.
கதைகள்
பெரும்பாலும்
எழுத்தாளன்
தானே
கதையைக்
கூறுவதுபோல
அமைந்திருக்கும்.
சில
கதைகள்
பாத்திரங்கள்
கதையைச்
சொல்வதுபோன்ற
பாணியில்
அமைந்திருக்கும்.
இதுதவிர
கதைசொல்லும்பாணியில்
கடிதஉத்தி,
நனவோடை
உத்தி
என
பல
உத்திகள்
கையாளப்படுகின்றன.
அ.முத்துலிங்கம்
சிறுகதைளில்
சம்பவங்களின்
கோர்வையாக
அமைந்த
கதைகளைக்
காணலாம்.
கதைமாந்தர்கள்:
சிறுகதையின்
ஜீவனாகவும்,
கதை
நகர்த்துவதற்கு
காரணமாகவும்
இருப்பவர்கள்
கதைமாந்தர்கள்.
சிறுகதையில்
வரும்
கதைமாந்தர்களின்
தனித்தன்மையினால்
வாசகர்களின்
மனதில்
அப்பாத்திரங்கள்
நிலைக்கின்றன.
கதைமாந்தர்களின்
வலுவான
தன்மையைப்பொறுத்து
சில
படைப்பாளிகள்
தமது
சிறுகதைக்கு
அக்கதைமாந்தர்களின்
பெயரைத்
தலைப்பாக
இடுவதும்
உண்டு.
உச்சநிலை:
உச்சநிலை
என்பது
சிறுகதையை
தொடர்ந்து
வாசிக்கும்போது
அடுத்தடுத்து
என்ன
நிகழுமோ
என்ற
ஆர்வத்தை
ஏற்படுத்தி
உணர்வின்
உச்சநிலைக்கு
கொண்டுசெல்வதாகும்.
சிறுகதையில்
உச்சநிலைக்கு
இடமில்லையெனில்
அது
சாதாரண
கதையாகவே
இருக்கும்.
நீலபத்மநாபன்
அவர்களின் 'வெள்ளம்'
சிறுகதையில்
உச்சநிலை
சிறப்பிடம்
பெறுவதைக்
காணலாம்.பெருமழை,
புயல்
மட்டுமன்றி
அணை
திறந்து
விட்டதின்
காரணமாக
மலைவாழ்
கிராமங்கள்
பல
வெள்ளத்தால்
அழிந்து
போன
துயரத்தை
படம்
பிடித்துக்
காட்டுகிறது
இக்கதை.
மழை
மெல்ல
ஆரம்பித்ததிலிருந்து
கதை
மெல்ல
மெல்ல
சூடுபிடிக்கிறது.
கதையின்
உச்சக்கட்டத்தில்
கதையின்
நாயகன்
சங்கரன்வெள்ள
அனர்த்தத்தில்
தனது
மனைவியை
இழந்துவிடுகிறான்.
கதை
உச்சநிலை
அடைகிறது.
கதை
மேலும்
நீள்கிறது.
சங்கரன்
தன்
மக்களோடு
முரண்பட்டுக்கொள்கிறான்.
திடீரென்று
அவன்
வெட்டிக்கொலை
செய்யப்படுகிறான்.
வாசகன்
இக்கதையை
படிக்கின்றபோது
எதிர்பாராத
வகையில்
உணர்ச்சிக்
கொந்தளிப்புக்கு
உள்ளாகிறான்.அதுதான்
கதையின்
உச்சகட்டம்
என்பது.
முடிவு:
'சிறுகதையின்
முடிவு
என்பது
கதையின்
இன்பியல்
முடிவினாலோ
துன்பியல்
முடிவினாலோ
அழகு
பெற்றுவிடாது.
இவற்றின்
எது
சரியான,
பொருத்தமான
முடிவாக
உணரப்படுமோ
அத்தகைய
முடிவால்
அக்கதை
வெற்றிபெற
முடியும்'
என்கிறார்
திறனாய்வாளர்
பெயின்.
சிறுகதையின்
முடிவு
பற்றி
புதுமைப்பித்தன்
பின்வருமாறு
சொல்கிறார், 'கதை
முடியும்
பொழுது
அதைப்பற்றிய
சிந்தனை
முடிவடைந்துவிடாது.
கதைகள்
முடிவடைந்த
பின்னர்தான்
ஆரம்பமாகின்றன'.உண்மையில்
முடிவை
வாசகனிம்
விட்டுவிட
வேண்டும்.
முடிவு
வாசகனின்
கற்பனைக்கு
வித்திட
வேண்டும்.
தொகுப்புரை:
இன்றைய
இலக்கிய
உலகில்
சிறுகதைக்கென்று
தனியிடம்
உண்டு.
சிறுகதைகள்
பல
திரைப்படங்கள்,
குறும்படங்களாக
வெளிவந்தவண்ணம்
இருக்கிறது.
மறைந்த
இயக்குனர்
பாலுமகேந்திரா
பல
சிறுகதைகளை
குறும்படங்களாக
எடுத்துள்ளார்.
இயக்குனர்
தங்கர்பாட்சான் 'கல்வெட்டு'
என்ற
சிறுகதையை 'அழகி'
என்ற
பெயரில்
திரைப்படம்
எடுத்துள்ளார்.
சிறுகதை
இலக்கியம்
இன்று
வளர்ச்சியடைந்த
இலக்கியவடிவமாக
இருந்தாலும்,
காலத்துக்கு
காலம்
புதிய
உத்திகளையும்
உள்வாங்கி
வளர்ந்தவண்ணம்
இருக்கிறது.
இக்கட்டுரையின்
மூலம் சிறுகதை
இலக்கியத்துக்கான
சில
முக்கிய
விடங்களை
மட்டும்
தொட்டிருக்கிறேன்
தொடாத
பக்கங்கள்
முடியே
கிடக்கிறது.
ahil.writer@gmail.com
|