சிற்பியின் ‘ஒரு
கிராமத்து நதி’ - ஒரு பார்வை
முனைவர் பூ.மு.அன்புசிவா
புறநானூறு,
‘எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்ல வாழிய நிலனே’ என்று மனிதனின்
வாழ்வில் மண்ணின் மைந்தர்களின் தாக்கத்தை எடுத்துக்காட்டுகின்றது.
மண்ணுக்கும் அம்மண்ணில் பிறந்த மனிதனுக்கம் உள்ள தொடர்பு, உடலுக்கும்
உயிருக்கும் இருக்கின்ற தொடர்பைப் போன்றது. இத்தகய தொடர்பின்
தாக்கத்தால் உருவான கவிதைத் தொகுப்பே சிற்பியின் ‘ஒரு கிராமத்து நதி’
யாகும். இந்த பிறந்த மண்சார்ந்த படைப்புச் சிறப்பிற்காகவே இந்நூல்
2003-ல்
சாகித்ய அகாடமி விடுதலைப் பெற்றது என்பது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.
பாலக்காட்டுக் கணவரியன் தெற்குத் தாழ்வாரத்தில் அமைந்த ஆத்துப்
பொள்ளாச்சி கிராமம் சிற்பியின் பிற்நத மண்ணாகும். சுpற்பி, ஐம்பது
ஆண்டுகளுக்கு முன்னால் எத்தகைய அகப்புற மாசுகள் படியாத சூழலில், தன்
வாழ்வு அரங்கேறிய ஊரை – ஊரை வாழ்வித்த நதியை – வளம் சேர்த் இயற்கையை –
சரித்திரச் சுவடுகளை – தன் மனதில் பதிவான அம்மண்ணின் மைந்தர்களை
மண்ணியப் பற்றோடு பதிவுசெய்கிறார். இப்பதிவை, மானிடவியல் பார்வையில்
ஆராயும்வகையில் இக்கட்டுரை அமைகின்றது.
நதியை நேசித்தல்
சிற்பி தன் கிராமத்தைச் சார்ந்து ஓடிய நதியை அதன் தொப்புள் கொடியாகப்
பார்க்கின்றார். தனக்கும், அந்நதிக்கும் இடையிலான தொடர்பை அவர்,
“தானும் உணவாகி
மீனும் உணவாகி
இந்த நதிக்கு
நானும் உணவானேன்” (ஒ.கி.ந.ப.6)
என்று விளக்கிக் காட்டுகின்றார்.
நதிகளின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தக்கூடாது. அதனுடைய இயற்கையான ஓட்டம்
மானுடத்திற்குத் தடையின்றிச் சொந்தமாக வேண்டும் என்று சிற்பி
விரும்புகின்றார். அணைகளின் நீர்த்தேக்கம் ஒரு குறிப்பிட்ட இடத்தில்
மட்டும் பயனைத் தருகின்றது. இந்தத் தேக்கத்தைக் கூட சிற்பி விரும்பாத
தன்மையை,
“அணைகளை உடையுங்கள்
ஆறுகள் பாடட்டும்” (ஒ.கி.ந.ப.7)
ஏன்று சொல்கிறார். இயற்கையை நேசிக்கும் சிற்பி தன் கிராமத்து நதியையும்
தாயாக நேசிக்கிறார். தன் கிராமத்தை வளத்தோடு வாழவைக்கும் நதியுடன்,
தானும் சங்கமம் ஆகத்துடிக்கும் தவிப்பை,
“இது என் உதிரத்தின் உப்பு
இது என் தாய்ப்பால்”(ஒ.கி.ந.ப.10)
என்ற வரிகள் தெரியபடுத்துகின்றன. நதிக்கும் தனக்கும் உள்ள தொடர்பை,
நதிப்படுகை’, தாய்வீடு’, கோரைப்பாய்’, வீணை’, பள்ளியறை’, துயரங்களின்
வடிகால், சந்தோஷத்தின் சங்கமம்’ என்று பட்டியலிட்டுத் தருகின்றார்.
பூமித்தாயின் மாராப்பாகத் திகழும் அந்நதியே ஆத்துப் பொள்ளாச்சியின்
வாழ்வுக்கும், வளத்திற்கும் அடிப்படை என்பதை,
“ஆடிஆடி நகரும்
நடனக்கார நதி
இல்லாவிட்டால்
சபிக்கப்பட்ட
இந்தக்கிராமதத்தை
யார் சீண்டுவார்கள்?” (ஒ.கி.ந.ப.12)
என்று கூறவதில், சிற்பி நதிக்குத் தரும் மரியாதையைக் காணமுடிகின்றது.
இயற்கையை நேசித்தல்
சிற்பி, தன் கிராமத்தில் மக்களுக்கு நிழல்தரும் அத்திமரத்தை ஊர்காக்கும்
காவலனாகப் பார்க்கின்றார். அம்மரத்தின் சிறப்பை,
“அந்த அத்திமரமும்
கெத்து கெத்தென்று
ஆற்றங்கரைக் கொரு
நிரந்தரக் காவலனாக” (ஒ.கி.ந.ப.18)
நிற்கின்றது என்று பெருமிதத்துடன் குறிப்பிடுகின்றார். அந்த அத்திமரம்
இன்று வெட்டப்பட்டு அந்த ஞாபகம் மட்டும் எஞ்சி இருப்பதை,
“நாற்பது இலையுதிர்காலம்
கடந்து போனபின்
ஆற்றங்கரை யோரம்
காவல் இருந்தது
ஒரு ஞாபகம் மட்டும்” (ஒ.கி.ந.ப.19)
என்று தாயாகக் காவலானாக, அம்மாவின் முத்தம் போல் குளிர்ச்சி தந்த மரம்
இன்றில்லை என்பதை ஆதங்கத்துடன் புலப்படுத்தகின்றார்.
காற்றை நேசித்தல்
சிற்பி, மாசு சூழ்ந்த இந்த இயந்திரச்சூழலில் மனதைச் சுகமாகத் தாலாட்ட
சுத்தமானக் காற்றைச் சுமந்துவர நதியை அழைக்கின்றார். மலையாளக் காற்று
தேக்குமரக் காடுகளில் பாய்ந்து, தென்னை மரங்களைத் தடவி, மிளகுக் கொடிகளை
வருடி, தாழம் மடல்களை அசைத்து,
“இளங்காலைப் பொழுதில்
தெருவே மனக்கவரும் பூக்காரி போல்
வாசனை நடை போட்டு வா” (ஒ.கி.ந.ப.40)
என்று அழைக்கின்றார்.
மண்ணின் மைந்தர்களை நேசித்தல்
சிற்பி, தன் கிராமத்து மக்களின் எளிய வாழ்வு, களங்கமற்ற பேச்சு,
இயல்பான அணுகுமுறை, தொடர்புடைய நிகழ்வுகள் ஆகியவற்றைப் பிறந்த மண்ணின்
மேல் கொண்ட ஆசையின் தாகத்தோடு அசைபோடுவதைக் கவிதைகள்
புலப்படுத்துகின்றன.
சிற்பி, இன்றைய முதலாளித்துவச் சமுதாயத்தில் தீவுகளாக வாழ்கின்ற
நகரியசூழலை ஒருபுறம் ஒதுக்கிவைத்து, தன் கிராம மக்கள், நின்று பேசி
சாவகாசமாய் வாழும் போக்கைச்சுட்டிக்காட்டுகின்றார்.
ஊரையே உறவாக நேசிக்கும் மாமனிதர் பாட்டைய்யா, கதை எடுக்காத பீமனான
ஊமையன்: இளம்பருவத்தோழன் ஆறுமுகம்: ஓருக்கெல்லாம் உதவும் அங்கம்மா:
ஆண்டுதோறும் தன் தலைமையில் தெருக்கூத்தை அரங்கேற்றும் மயில்சாமிக்
கவுண்டர்: பெரியவர் முதல் சிறுவர் வரை அனைவருக்கும் பிரியமான
மாப்பிள்ளைக் கவுண்டர்: ஆட்டுக்கல் கொத்தும் பறவை பழனியப்பன்: ஆசாரி
தங்கப்பன்: ஊருக்கெல்லாம் மருத்துவம் பார்க்கும் வெள்ளைச்சாமியார் என்று
அக்கிராமத்தில் பாரம்பரியப் பண்பாட்டுச் சின்னங்களாக உலாவந்த மக்களை
அவர்தம் செயற்பாட்டுப் பிண்ணனியோடு சிற்பி சித்தரிக்கின்றார்.
சிற்பி, அம்மக்களுள் தன் தாயைப் தனியே பிரித்துப்பார்க்கிறார். தன்
குடும்பத்தைப் போலவே ஊர்மக்களையும நேசித்துவாழ்ந்த தன் தாயைப்பற்றி அவர்,
“நேசிப்பு நேசிப்பு
புருஷனைப் போலவே
பண்ணையத்தையும்
குழந்தைகள் போலவே
எருமைகளையும்
உறவுகளைப் போலவே
அக்கம் பக்கத்தையும்..” (ஒ.கி.ந. ப.29)
நேசித்த, அழித்து எழுதமுடியாத சித்திரம் போன்றவள் என்று பெருமைப்
படுத்துகின்றார்.
விழாக்களை நினைவு கூர்தல்
சிற்பி கிராமதேவதையான மாகாளி அம்மனுக்கு எடுக்கப்படும் பண்டிகையைக்
குறிப்பிடுகின்றார். மக்கள், மழைபெய்யத் தவறும் காலங்களில் அம்மனுக்கும்,
விநாயருக்கும் மழை வேண்டி விழா எடுப்பார். விழா எடுத்தவிதத்தைச் சிற்பி,
“மாகாளி கோயில் முன்
கொடும்பாவி எரித்தனர்
மழைக்கஞ்சி காய்ச்சி
மக்கள் எல்லாம் குடித்தனர்
.............................................................
.............................................................
விநாயகருக்குக்
குடம் குடமாய்
நீராபிஷேகம் செய்தனர்” (ஒ.கி.ந.பக.86-87)
என்று விளக்குகிறார்.
சரித்திரச் சுவடுகள்
சிற்பி, தன் கிராமத்தின் சரித்திரச் சுவடுகளைப் பற்றிப் பெருமிதத்துடன்
பகிர்ந்து கொள்கிறார். ஆற்றுப்படுகைகளில் கிடைத்த சங்ககால காசுக்கள்,
திகம்பரச் சமணர் கற்படுக்கைகள், தீர்த்தங்கள் சிலைகள் என்று சரித்திரச்
சின்னங்களை அவர் பட்டியலிட்டுத் தருகின்றார். (ஒ.கி.ந.பக.58-59)
பறைச்சிற்பங்கள்
சிற்பி, நதியோரம் கிடந்த பாறைகள் மேல் நதியின் நீரோட்டம் ஏற்படுத்திய
இயற்கைச் சிற்பங்களை ரசத்து எழுதுகின்றார். அப்பாறைச் சிற்பங்களை,
“மைக்கேல் ஏஞ்சலோக்கனின்
கர்வத்தை அடக்கும்
சிற்பக் கலைக்கூடம்” (ஒ.கி.ந.ப.22)
என்று மகிழ்ச்சியுடன் வருணிக்கிறார்.
நிறைவாக
சிற்பியின் ஒவ்வொரு கவிதையிலும் தான் பிறந்த மண்சார்புடைய அனுபவம்,
பாதிப்பு தாக்கம், நேசிப்பு ஆகியவை அழுத்தமான முத்திரையாக்
பதித்துள்ள்மையைக் காணமுடிகின்றது.
சிற்பி, நிகழ்வுகளை, செய்திகளை வெறும் கவிதைப்பதிவுகளாகத் தராமல்,
அவற்றை தன் உயிருடன், நாடிநரம்புகளுடன் தொடர்புகொண்ட உயிர்ப்புடன்
வெளிப்புடுத்துகின்றார்.
இன்று, இயந்திரக்கதியில் இயங்கும் மக்கட்கூட்டம், தனித்தனித் தீவுகளாக
அந்நியப்பட்டு வாழ்ந்துவருகின்றது. இச்சூழலில், இந்த இருத்தல் மாற
வோண்டும். ஒவ்வொருவரும் தாம் பிறந்த மண்ணை நேசிக்க வேண்டும்: அம்மண்ணின்
மக்களோடு உறவுகொண்டு வாழவேண்டும் என்ற சிற்பியின் ஆதங்கத்தை-
எதிர்ப்பார்ப்பை அவருடைய ஒரு கிராமத்து நதி’ அறிவுறுத்தகின்றது. இந்த
அறிவுறுத்தைல வழிமொழிந்து கட்டுரை நிறைவடைகின்றது.
முதன்மைச்சான்று நூல்
-
சிற்பி, ஒரு
கிராமத்து நதி, கோலம் வெளியீடு, பொள்ளாச்சி, முதல்பதிப்பு, டிசம்பர்
1998
அவன் - அது - அவள் - ஒரு பார்வை
அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்றாள் அவ்வை. அரிது அல்ல
கொடிது. மானிடராய் பிறத்தலை விட கொடிதானது அரவாணியாய் பிறத்தல்.
பிறத்தலை வட வாழ்வது மகா கொடிது. அராவாணிகளின் வாழ்க்கை எவ்வளவு
கொடுமையானது என ‘அவன் - அது - அவள்’ என்னும் நாவல் மூலம்
உணர்த்தியுள்ளார் யெஸ். பாலபாரதி. ஆண், பெண், அரவாணியைக்
குறி[க்கும் விதமாக ‘அவன்,அவள்,அது’ என்பர். இங்கு ‘அது’ என்பது
அஃறிணையாக அரவாணியைக் குறிக்கிறது. ஆசிரியரோ ‘அவன்- அது - அவள்’
என்பதன் மூலம் ‘அது’வென ஆண் அடையாளத்தைக் குறிப்பிடுகிறார்.
அவனிடமுள்ள அது விலக்கப்பட்டால், நீக்கப்பட்டால், கழிக்கப்பட்டால்
‘அவள்’ ஆகிவிடுகிறாள் என்கிறார். அரவாணியை உயர்தினையாகவே
காட்டியுள்ளார்.
இராமேஸ்வரத்தைச் சேர்ந்த ‘கோபி’ என்னும் வாலிபன் தன்னுள் எழுந்த
பெண் உணர்வை அறிந்து குடும்பத்தினர் ஒத்துக் கொள்ளதததால்
விழுப்புரம் வழியாக மும்பையை அடைந்து முழுமையாக அரவாணியாகி குடும்ப
வாழ்க்கையில் ஈடுபடுவது வரை நாவல் நீள்கிறது. ‘கோபி’ என்பவன்
‘கோமதி’ யானாள் என ஓர் அரவாணியை மையப்படுத்தி நாவல் எழுதப்பட்டாலும்
அரவாணிகள் உலகம் எப்படி பட்டது, எவ்வளவு கொடுமையானது, எவ்வளவு
மோசமானது என பல அரவாணிகளின் மூலம் விளங்கச் செய்துள்ளார்.
கோபியாக வீட்டில் இருக்கும் போது அவன் தன்னை ஒரு பெண்ணாகவே நினைத்து
வாழ்கிறான். ஆணாக பிறந்தாலும் ஒரு பெண்ணே என்று முடிவெடுக்கிறது
மனம். பெண் உடையை அணிந்து மகிழ்கிறான். அரவாணிகளோடு நட்பு கொள்வதையே
விரும்புகிறான். அறிந்த குடும்பத்தினர் மறுக்கின்றனர்.
வெறுக்கின்றனர். அடிக்கின்றனா. பேய் பிடித்திருப்பதாக பேயோட்டியை
வைத்து விரட்டுகின்றனர். பெற்ற பிள்ளையானாலும் உற்ற உறவானாலும்
வீட்டினரே அரவாணியாவதை ஏற்பதில்லை என்கிறார் . கல்லூரியில்
படிக்கும் காலத்தில் சக மாணவர்களாலும் கேலியும் கிண்டலும்
தொடர்கிறது. சரவணன் என்னும் ஒரு நண்பன் மட்டும் ‘கோபி’ யின்
மனநிலையைப் புரிந்து கொண்டு உதவுகிறான்.
விழுப்புரம் கூவாகம் விழாவிற்கு செல்லும் போது ‘கோபி’யை நான்கு பேர்
பாலியல் பலாத்காரம் செய்தது , விழுப்புரத்தில் ஓர் அரவாணி கடை
கேட்கும் போது கடைக் காரரால் தாக்கப்பட்டது , புகார் கொடுத்த
பின்னும் காவல் துறை புகாரை ஏற்காமல் அடித்து துன்புறுத்துவது,
மும்பைக்கு அரவாணிகளோடு பயணிக்கும் போது தொடர்வண்டியில் பிற
பயணிகளால் கேவலப்படுத்தப்படுவது, ‘சுந்தாp’ என்னும் அரவாணி திருமணம்
செய்து கொண்டாலும் கணவனால் கைவிடப்பட்டு தற்கொலை செய்து கொள்வது,
தாயம்மாவிடம் நிர்வாணம் செய்து கொண்டதால் புண் ஆறாததால் சிறுநீர்
கழிக்க முடியாத நிலை ஏற்பட்டு கிட்னி பாதித்தது, ‘நதியா’ என்னும்
அரவாணி மரணமடைந்தது என நாவல் முழுக்க அரவாணிகளுக்கு நிகழ்ந்த,
நிகழ்த்தப்பட்ட இன்னல்களை , இம்சைகளைக் காணமுடிகிறது. அரவாணி வாழ்வு
என்பது அவர்களாக விரும்பி ஏற்பதில்லை. அவர்களுக்குள் எழும்
மாற்றங்களே அவர்களை அந்த நிலைக்குக் கொண்டு செல்கிறது. வலியுடனும்
வேதனையுடனும் வாழும் அரவாணிகளை புறக்கணிப்பதைத் தவிர்த்து
அங்கீகரிக்க வேண்டும்.
நிர்வாணம் செய்த பிறகே அரவாணி முழுமை அடைகிறார். நிர்வாணம் செய்தல்
என்பது ஆண் குறியை அகற்றுவதேயாகும். நிர்வாணம் செய்வது ஒரு
சடங்காகவே அரவாணிகளிடையே உள்ளது. நிர்வாணம் இரண்டு முறைகளில்
செய்யப்படுகிறது. ஒன்று அரவாணிகள் முறைப்படி தாயம்மாள் என்னும்
அரவாணி மூலம் அகற்றப்படுவது. இரண்டாவது முறை மருத்துவர்களால்
செய்யப்படுவது. இரண்டும் ஆபத்தானது எனினும் வேறுபாடு உண்டு.
‘தாயம்மா கையில் பண்ணினனு வையு, அழகு அதிகமாகும், மார் பெரிசாகும்
, மயிரு மொளைக்கறது நின்னு போயிடும். . . ஆனா வலி தெரியும், அத
தாங்குத சக்தி வேணும் . அப்படி இல்லைனா. . . டாக்டர்கிடடயே
பண்ணிக்க் என்று தாயம்மாவே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. நதியா
போன்றவர்கள் பாதிக்கப்பட்டதை எடுத்துக் கூறியும் ‘கோமதி’ தாயம்மா
கையாலே துணிந்து நிர்வாணம் செய்து கொள்ள சம்மதிக்கிறாள். நிர்வாணம்
செய்யும் முறையை வாசிக்கும் போது நெஞ்சும் கனக்கிறது.
யெஸ். பாலபாரதி ராமேஸ்வரத்துக்காரர். பிழைப்புக்காக மும்பைச்
சென்றவர். அங்கு இருந்தவர். இதனால் தமிழ், இந்தி என்னும்
இருமொழிகளையும் அறிந்தவர். அராவாணிகள் குறித்து எழுத வேண்டும்,
ஏதாவது செய்ய வேண்டும் என்னும் உந்துதலுடன் அரவாணிகளுடன் உரையாடிவர்
. உறவாடியவர். அரவாணிகளின் மொழியையும் தெரிந்தவர். தமிழ்,இந்தி ,
அரவாணி மொழி என கையாண்டு நாவலைக் கொண்டு சென்றுள்ளார். ஆனாலும்
வாசிப்பில் சிக்கல் எதுவுமில்லை. புரிகிறது. அரவாணிகளுடனான
பிரச்சனைகளை அழுத்தமாக கூறியுள்ளார். மும்பையில் வசித்த காரணத்தால்
மும்பையின் பகுதிகளையும் நாவலில் காட்டி காட்சியாக விரியச்
செய்கிறார். அரவாணிகளின் நிலையையும் அறியச் செய்துள்ளார்.
அரவாணி என்பதை விட திருநங்கை என குறிப்பிடுவதையே விரும்புகிறார் என
நாவல் உறுதிப்படுத்துகிறது.
‘தமிழகத்தில் காண்பது போலல்லாமல் . . . எங்கு காணினும்
திருநங்கைகளின் கூட்டத்தை மும்பையில் தான் காண முடிந்தது. அவர்களை
அமமக்கள் மதிப்பதும், திருமணவிழா குழந்தைக்குப் பெயர் சு{ட்டு விழா,
புதிய கடை திறப்பு விழா போன்ற காரியங்களுக்கு பூசாரியை அழைப்பது
போன்றே , திருநங்கைகளையும் அழைத்து ஆசி வாங்கிக் கொள்வதும்
வித்தியாசமாகப் பட்டது” என முன்னுரையில் குறிப்பிட்டவர் நாவலிலும்
தமிழ்நாட்டை விட மும்பையில் அரவாணிகள் மதிக்ப்படுவதையும் மனிதராக
பாவிப்பதையும் பதிவு செய்துள்ளார். தமிழ்நாடு அளவிற்கு மும்பையில்
அரவாணிகள் கேலி செய்யப்படுவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சமூகத்தை விட்டு விலகினாலும் சமூகத்தால் விலக்கப்பட்டாலும் ஒரு
சமூகமாக வாழ்ந்து வருபவர்கள் அரவாணிகள். குடும்பமாகவும்
வாழ்கிறார்கள். அவர்களுக்குள்ளும் உறவு உண்டு. புதியதாக வருபவர்களை
மகளாக தத்து எடுத்துக் கொள்கின்றனர். அம்மாவின் அம்மாவாக ‘நானி’ (பாட்டி)யும்
உண்டு. அக்கா, தங்கை உண்டு. குருவும் உண்டு. கோமதிக்கு அம்மாவாக
தனம் பாத்திரமும் அக்காவாக சுசீலா பாத்திரமும் அழகாகவும் உணர்வு
பூர்வமாகவும் படைக்கப்பட்டுள்ளது. அரவாணிகளுக்கு ஆண் துனை ஆகாது என
நாவல் உணர்த்துகிறது. கணவனால் கைவிடப்பட்டதாக ‘சுந்தாp’ என்னும்
அரவாணியையும் படைத்துள்ளார். நாவலின் நாயகியான கோமதியானவளும்
கணவனால் துன்புறத்தப்படுவதாகவே காட்டப்பட்டுள்ளது. ‘இனி என்ன பண்ண
முடியும்? பொட்டயாப் பொறந்ததே தப்பு . அதுலயும் கல்யாணம் காடச்pன்னு
ஆசப்படுறது அதவிட தப்பு. பார்க்கலாம். இன்னும் எத்தனை
காலத்துக்குன்னு. முடியற வரைக்கும் சமாளிப்பேன். என்னைக்கு
முடியாமல் போகுதோ. . . அன்னிக்கு ஏதாவது டிரெயினுக்கு முன்னால்
பாய்ஞ்சுடுவேன்’ என்று நாவலின் இறுதியில் கோமதி இருப்பது
அரவாணிகளின் வாழ்க்கை தோல்வியலேயே முடியும் என்பதையே காட்டுகிறது.
கோபி வீட்டை விட்டு வெளியேறுவதில் இருந்து நாவல் தொடங்குகிறது.
இரண்டாம் அத்தியாயம் பின்னோக்கி இராமேஸ்வரத்தில் நடப்பதாக உள்ளது.
ஆறாம் அத்தியாயம் வரை இவ்வாறு மாறி மாறி செல்கிறது. ஏழாம்
அத்தியாத்தில் இருந்து நாவல் ஒரே நேர்க் கோட்டில் பயணிக்கிறது.
பின்னோக்கி சில அத்தியாயங்களை மட்டும் அமைந்ததில் சிற்ப்பம்சம்
எதுவுமில்லை.
“சிறப்புப் பேருந்தே இந்த லட்சணத்தில் இருக்கிறதென்றால். . .
வழக்கமான பேருந்துகளின் நிலை பற்றி சந்தேகம் வந்தது. எவ்வளவுதான்
வருமானம் வந்தாலும் அந்த இயந்தி[ரகளுக்கு மட்டும் கட்டுப்படியாகமால்
போகும் ரசகியம் யாருக்குத்தான் புரிந்திருக்கிறது் என நாவலின் இடையே
அரசையும் சாடி தன் இயல்பான குணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
‘அவள் - அது - அவள்’ என்னும் இந்நாவல் அரவாணிகள் பற்றிய நாவலிலேயே
தனித்து விளங்குகிறது. அரவாணிகளின் உலகத்தை வாசகர்களுக்கு எடுத்து
வைத்துள்ளது. அரவாணிகளின் வலிiயும் வேதனையையும் கூறியதுடன்
அவர்களின் உணர்வையும் புரிந்து கொள்ள கோருகிறது. ‘பெண்களாகவும்
இல்லாமல் ஆண்களாகவும் இல்லாமல் திருநங்கைகளாக மாறியவர்களுக்கு
வாழ்க்கையின் மீது இருக்கும் தீராத காதலே இந்தப் புனைவு’ என
முன்னுரையில் குறிப்பிட்டது போலவே அரவாணிகளுக்கு வாழ்க்கை உண்டு
என்கிறது நாவல். யெஸ். பாலபாரதிக்கு சமூகம் மீது காpசனம்
மிகுதியாகவே உள்ளது என அவர் படைப்புகள் மூலம அறிய முடியும். தற்போது
அரவாணிகள் பால் அவர் கவனம் திருமப்p அனைவரின் கவனத்தையும்
ஈர்த்துள்ளது போற்றத்தக்கது.
சமத்துவபுரம்
கழிவுநீர் சுத்தம் செய்ய
அதே கருப்பன்
என்னும் ஹைக்கூ மூலம் பரவலாகப் பேசப்பட்ட யெஸ்.பாலபாரதி ஒரு
நாவலையும் எழுத முடியும் என இந்நாவல் மூலம் நிரூபித்துள்ளார்.
‘எரிந்து கொண்டிருந்த எல்லா சோடியம் விளக்குகளும் பேருந்து
நிலையத்தில் இருளை விரட்டும் முயற்சியில் இருந்தது் என்னும் நாவலின்
தொடக்கம் நம்பிக்கையுடனுள்ளது. இது அரவாணிகளின் வாழ்வின் இருளை
விரட்டும் என்னும் நம்பிக்கையை உண்டாக்குகிறது.
முனைவர்
பூ.மு.அன்புசிவா
உதவிப்
பேராசிரியர்
தமிழ்த்துறை
இந்துஸ்தான்
கலை
அறிவியல்
கல்லூரி
கோயம்புத்தூர்-
641 028
பேச:
9843874545, 09842495241.
|