பதினென்கீழ்க்கணக்கு நூல்களில் இயம்பும்
அறக்கோட்பாடுகளும்
முனைவர் செ.சரசுவதி
தமிழ் இலக்கியங்களைக்
காலங்களுக்கேற்ப வகைப்படுத்தி அறிகின்றோம். மேற்கணக்கு என்ற வகைப்பாடு
சங்க காலத்தில் சூழலுக்கேற்ப உருவானது. கீழ்க்கணக்கு என்ற வகைப்பாடு
சங்க காலத்தின் அடுத்த சங்க மருவிய காலங்களில் தோன்றின. சங்க
இலக்கியத்தில் அகம் புறம் என்ற கூறுகளைப் பாடுவனவாய் இருந்த இலக்கியம்,
சங்க மருவிய காலத்தில் அறம், பொருள், இன்பம் என்ற மூன்றினையும்
பாடுபொருளாய்க் கொண்டு இலக்கியங்கள் தோன்றின. இக்கால கட்டத்தின்
தொகுப்பாக பதினெண்கீழ்க்கணக்கு உள்ளது.
'நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால் கடுகங் கோவை பழமொழி மாமூலம்
இந்நிலைய காஞ்சியோ டேலாதி என்பவே
கைந்நிலைய வாங் கீழ்க் கணக்கு'
பதினெண்கீழ்க்கணக்கு எவை என்பதை இப்பழம்பாடல் உணர்த்துகின்றது.
மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்ட ஒழுக்க முறைகளின் தொகுதியே முழுநிறை
வடிவமே அறம் என்று கூறுவர்.
பிறவிதோறும் மனிதனைப் பற்றிக் கொண்டு வரும் தீவினையின் பயனாகிய
அறியாமையை அறுத்தெரிவதே 'அறம்' என்று ஆன்மீக வண்ணம் குழைத்த மற்றொரு
விளக்கமும் இதற்கு தரப்படுவதுண்டு.
இல்லறம், துறவறம் என இருவகை. இல்லறம்-கொடுத்தல் மறித்தலும், கோடலும்
இன்மையும், ஒழுக்கம், புணர்தல், புணர்ந்தோர்ப்பேணல் மற்றையவுமாம்.
துறவறம்-துறவும், அடக்கமும், தூய்மையும் தவமும், அறவினையோம்பலும் மறவினை
மறுத்தலும் பிறவுமாம் என்கிறது அபிதான சிந்தாமணி.
நாடோடிகளாக வாழ்ந்த மனித இனம் ஒரு ஒழுங்காக வாழும்போது ஏற்படுத்திக்
கொண்ட ஒழுக்க நெறிகளே அறங்களாக உருவாகியுள்ளன. சமுதாயத்தில்
தீயவையாகவும் அல்லது பிறர்க்கும், தமக்கும் துன்பம் தரும் செயல்களை
செய்யும் போது அவற்றிலிருந்து மனிதன் மீட்கப்படுவதற்கும்,
நல்வழிப்படுத்துவதற்கும் 'அறம்' என்பது தேவைப்பட்டதாக அறியப்படுகின்றது.
பதினெண்கீழ்க்கணக்கில் அறம் பாடும் நூல்களை திருக்குறளை முன்னிறுத்தி
நான்கு அறங்களாக பகுக்கலாம்;;. இல்லறம், துறவறம், அரசறம், சமுதாய அறம்
என்பவை அவை.
கீழ்க்கணக்கில் இல்லறம்
இல்லறம் என்பது இல்லறத்திற்கான அறம், இல்லம் என்பது கணவனும் மனைவியும்
சேர்ந்து வாழும் இடம், இல்லம் என்பது இடம் மட்டும் அல்ல. கணவன் மனைவி
இருவரின் உறவுக்கான களம். 'இல்லத்தில் இருந்து தமக்கும் பிறர்க்கும்
செய்யும் அறங்களே 'இல்லறம்;' எனலாம்.
திருக்குறளை அடிப்படையாகக் கொண்;டு இல்லறம் என்பதை குடும்ப உறவுகள்,
குடும்பத்திற்கான ஒழுக்கங்கள், குடும்பத்தி;ற்கான கடமைகள் என்று
வகைப்படுத்தலாம். குடும்ப உறவுகள் என்பதை கணவன், மனைவி, மக்கட்பேறு,
சுற்றம் முதலிய உறவுகளின் நிலையும், இவர்கள் பேணும் அறங்கள்,
குடும்பத்தாரின் கடமைகளாக பொருளீட்டல், விருந்தோம்புதல், சுற்றம்
பேணுதல், குழந்தை வளர்ப்பு, இல்லறம் பேணுதல் முதலிய அறங்களையும்,
குடும்பத்தார்க்கு இருக்க வேண்டிய ஒழுக்கங்களாக ஆணிற்கான ஒழுக்கங்கள்,
பெண்ணிற்கான ஒழுக்கங்கள் என்ற முறையில் பகுத்துப் பார்க்கிறோம்.
'அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று' (குறள்
493)
பிறன் பழிக்காத வாழ்க்கையை வாழ்தலே இல்வாழ்க்கை அறம் என்கிறது வள்ளுவம்
'நட்டாரை பாக்கிப் பகைபணிந்து வையெயிற்றுப்
உடம்பினான் ஆய பயன்'
அழகிய பெண்ணை மணம் செய்து அவள் சுற்றத்திலும், தன் சுற்றத்திலும்
அன்போடிருத்தல் மக்கட் பிறப்பின் பயனாகும் என்கிறது சிறுபஞ்ச மூலம்;
கணவணும், மனைவியும், மக்கட்பேறுடன் சுற்றம் சூழ அவரவர் ஒழுக்கங்களில்
இல்லம் பேணுவது 'இல்லத்தின் அறங்களாக' கட்;டமைக்கின்றது.
ஆணிற்கான ஒழுக்கங்களாக பிறனில் விழையாமை, பிறர்மனை சேரார், பெண் வழிச்
சேறல் போன்றனை ஆண் இல்லறத்தில் தவிர்க்க வேண்டிய நடத்தைகளாக
சொல்லப்பட்டுள்ளன.பொருளீட்டல், இல்லறத்தின் தேவையை நிறைவேற்றுவதும்
ஆணின் கடமைகளாகச் சொல்லப்பட்டுள்ளன.
பெண்ணிற்கான கடமைகளாக மக்கட்பேறு பேணுதல், இல்லறம் பேணுதல், சுற்றம்
பேணுதல், விருந்தோம்புதல் போன்ற நான்கு பண்புகள் சொல்லப்பட்டுள்ளன.கற்பு
என்பது பெண்ணின் இல்லறத்தின் ஒழுக்க நெறியாக அற இலக்கியங்கள்
எடுத்தியம்புகின்றன.
'கற்பு மாட்சியில்லா மனைவியரை நீக்கி விடுதல்
நல்லது' (இன்னா நாற்பது 10.2)
'பொது மகளிரின் வாய்ச்சொற்கள் நரகம் போன்றது'
(தி.க. 24.1)
மக்கட் பேறுக்கான கடமைகள்
குழந்தைகள் பெற்றோர்களை காத்தல் வேண்டும்;. புகழ் வரும் படி வாழ்தல்
வேண்டும் என்ற அறங்களைக் கட்டமைக்கின்றன.
'மகன் தந்தைக்கு ஆற்றும் உதவிஇவன் தந்தை
என்நோற்றான் கொல் எனும் சொல் (குறள்
70)
'முந்தை எழுத்தின் வரவுணர்ந்து பிற்பாடு
தந்தையும் தாயும் வழிபட்டு – வந்த
ஒழுக்கம் பெருநெறி சேர்தல் இம்மூன்றும்
விழுப்ப நெறிதுரா வாறு' (தி.க.56)
இல்லறம், அன்பு, ஒழுக்கம், கடமைகள் என்ற மூன்று அறங்களைக் கொண்டு இயங்க
வேண்டும் என்று கட்டமைக்கின்றன.
துறவறம்
இல்லறம் பற்றுக்களைத் துறத்தல், உலக வாழ்வின் மேல் ஆசைகளை அறுத்தல்,
ஐம்புலன்கள் மீதுள்ள ஆசை நீக்கலை 'காமம் நீத்துப்பால்' என்று
வரையறுக்கலாம்;. துறவு வாழ்க்கையை மேற்கொள்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய
ஒழுக்கங்கள், தவிர்க்க வேண்டிய பழக்கங்கள் குறித்து 'பதினென்கீழ்க்கணக்கு
நூல்கள் எழுத்தியம்புகின்றன. 'துறவறம'; என்பதை அகம், புறம் என்ற
இருபக்கங்களிலும் உள்ள பற்றுக்களைத் துறத்தல், துறவு நெறியில்
ஐம்புலன்களின் ஆசைகளை ஒழித்து, தவம் மேற்கொள்ளலே துறவு' என்று
கீழ்க்கணக்கின் அற நூல்கள் அறிவுறுத்துவதை அறிய முடிகின்றது.
துறவோர் என்பவர் தவம் மேற்கொள்வராய் அருள் உடையவராய் நிலையாமை உணர்ந்து,
ஆசைகளை அழித்து, மெய்யை உணர்ந்தவரே (அ) உணர்பவரே என்று வள்ளுவர்
வரிசைபட அறிவுறுத்துகின்றார். கீழ்க்கணக்கின் ஏனைய அற இலக்கியங்களில்
நாலடியார், பழமொழி போன்றன வள்ளுவரைப் போன்று விளக்கமாகவும், பிறநூல்கள்
ஆங்காங்கேயும் துறவோர் குறித்துக் கூறும் அறங்களைத் தருகின்றன. துறவோர்
புலால் மறுத்தல், கொல்லாமை, இன்னா செய்யாமை, கூடா ஒழுக்கம் (பொய்யான
தவம் மேற்கொள்ளாமை) போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும் என்று
கீழ்க்கணக்கின் அறநூல்கள் அறிவுறுத்துகின்றன.
'மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்' (குறள் 280)
'நசையில் பெரியதோர் நல்குறவு இல்லை'
ஆசையும் உலகம் விரும்பாததையும் விடலே துறவு என்பதை உணர்த்துகின்றன.
கீழ்க்கணக்கில் அரசறம்
கீழ்க்கணக்கில் 'அரசறம்' ; என்பது நிலம், அரசு நிர்வாகம், தொழில் என்று
பாகுபாடு செய்து பார்க்கப்பட்டுள்ளது.
மன்னனுக்குரிய நிலம் என்பது நாடு, அரண் என்ற இரண்டு கூறுகளாக
பார்க்கப்பட்டுள்ளது. அரண்களான மலை, ஆறு, நிலம் குறித்து அறநூல்களில்
செய்திகள் ஆங்காங்கே தனித் தனியாகவே காணப்படுகின்றன. நாடு என்பதை
வள்ளுவர் நாட்டின் வளங்கள், நாடுசிறப்படைதல் இயற்கை வளங்கள், நல்ல
மக்கள் குடிமக்களை உணர்ந்து காவல் புரியும் மன்னன் இவைகள் நிறைந்த நல்ல
நாட்டை வள்ளுவர் காட்டுகின்றார்;. அரண் என்பதையும் இயற்கை வளம்,
எல்லைகள் முதலியனவும் தொழில், ஆட்சி என்பன செயல் வகையால் சிறப்புற்று
இருத்தலே சிறந்த அரண் என்றும் வள்ளுவர் காட்டுகிறார். அரசு நிர்வாகம்
என்பதில் அரசனின் பண்புகள்;. அரசு நிர்வாகத்தில் இருக்கும்
அமைச்சா,;தூதுவர், ஒற்றர் படைகள், குடிகள் முதலியவை
கட்டமைக்கப்படுகின்றன.
நாடு சிறப்புற்று இருப்பது மன்னனின் ஆட்சி முறையால் மட்;டுமே 'கோனோக்கி
வாழும் குடியெல்லாம்' என்ற புறநானுற்றுத் தொடர் குறிப்பிடுகின்றது.
தொழில் என்ற பகுதியானது மன்னனின் போர் செய்தல், வரிவாங்குதல்,
நிர்வாகத்துக்குரிய ஆட்களை நியமித்தல், போன்ற தொழில்களும்,
அமைச்சா,;தூதுவர், படைகள் இவர்களுக்குரிய தொழில்களும், குடிகள் செய்த
தொழிலாக 'உழவு' என்னும் தொழிலும் இருந்தமையை அறிய முடிகின்றது.
'சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம், அதனால்
உழந்தும்; உழவே தலை' (குறள் 31)
'நன்புலத்து வையடக்கி நாளுமோ டோபோற்றிப்
புன்கலத்தைச் செய்தெருப் போற்றிய பின் இன்புலத்தின்
மண்கலப்பை யென்றிவை பாற்படும் பானுமவோன்
நுண்கலப்பை நூலோது வார்'
சமுதாய அறம்
ஒவ்வொரு தனிமனிதனும் ஒன்றிணைந்த ஒரு அமைப்பினைச் சமூகம் எனலாம்,
சமூகத்தில் ஒருவர் மற்றொருவருக்குத் தீங்கு விளைவிக்காது வாழ வேண்டும்.
எனவே 'நல்ல அறங்களை' கடைபிடிக்க வேண்டும்;. பதினெண்கீழ்க்கணக்கு
இத்தகைய அறங்களை கூறியுள்ளன. அவற்றை குணம், செயல், அறிவு என்ற
அடிப்டையில் பகுத்துப் பார்க்கிறோம். குணம் சார்ந்;து நல்ல பயனைத் தரும்
அறங்களை நேர்மறை அறங்கள் என்றும், துன்பம் தரக்கூடிய செயல்களை எதிர்மறை
அறங்கள் என்றும் வகைப்படுத்திப் பார்க்கிறோம்.
அன்புடைமை, இனியவைகூடல், அடக்கம் உடைமை, ஒழுக்கம் உடைமை, பொறை உடைமை,
வாய்மை, பண்புடைமை, சான்றாண்மை, நாணுடைமை, நடுவுநிலைமை, தீவினை அச்சம்,
சிற்றினம் சேராமை, பெரியாரைப் பிழையாமை, பெரியாரைத் துணைகோடல். இவை
குணம் சார்ந்த நேர்மை அறங்கள் என்று கீழ்க்கணக்கு நூல்கள்
எடுத்தியம்புகின்றன. குணம் சார்ந்த அறங்களை வரிசைப்படுத்தும் போது
எதிர்மறையாக பொறாமைப்படுதல், ஏமாற்;றி பொருள் கொள்ளுதல், புறங்கூறுதல்,
பயனற்றுப் பேசுதல் என்ற பண்புகளை வரிசைப்படுத்தலாம். செய்தல் அதாவது
ஒருவருக்கு தனக்கு செய்யும் செயல்கள் அடிப்படையில் அமைந்துள்ள அறங்களைப்
பெருமை தரும் செய்தல் என்றும் சிறுமை தரும் செயல்கள் என்றும்
வகைப்படுத்தி அறங்கள் பார்க்கப்பட்டுள்ளன. கள்ளுண்ணாமை, ஈகை, ஒப்புரவு,
புகழ், மானம், பெருமை, ஊக்கமுடைமை, ஆள்வினையுடைமை, இடுக்கண் அழியாமை,
செய்ந்நன்றி அறிதல் என்பவை பெருமை சார்ந்த செய்தல் அறங்கள் என்று
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் எடுத்தியம்புகின்றன. புறங்கூறாமை, பயனிலைச்
சொல்லாமை, கல்லாமை, சூது சிற்பினம் சேர்தல் முதலியவை சிறுமை படுத்தும்
செய்கைகள் என்று எடுத்தியம்புகின்றன.
அறிவு சார்ந்த அறங்களை அறிவு அடிப்படையிலான நேர்மறை அறங்கள், அறிவு
அடிப்படையிலான எதிர்மறை அறிவு அடிப்படையிலான அறங்கள்
எடுத்தியம்பப்பட்டுள்;ளன. பெரியாரைத் துணைகோடல், பெரியாரைப் பிழையாமை,
நட்பு, கல்வி, கேள்வி, அறிவுடைமை முதலியவை அறிவுசார்ந்த நேர்மறை
அறங்களாக எடுத்தியம்புகின்றன. பேதைமை, புல்லறிவாண்மை, மறதி முதலியவை
அறிவு சார்ந்த எதிர்மறை அறங்களாக எடுத்தியம்புகின்றன.
தொகுப்புரை:
பதினெண்கீழ்க்கணக்கின் அற இலக்கியங்கள் கூறும் அறங்களை இல்லறம், துறவறம்,
அரசரம், சமுதாய அறங்கள் என்ற பாகுபாட்டின் கீழ் பார்க்கப்பட்டது. 'திருக்குறளை'
முன்னிறுத்தி அறங்களை அமைப்புக்குள் கொண்டு வந்து பார்க்கப்பட்டது.
வள்ளுவர் கூறும் அறங்கள் அமைப்பு, ஆழம் தொடர்ச்சியாக உள்ளன. ஏனைய அற
இலக்கியங்கள் ஆங்காங்கே தனித்தனி அறங்களை எடுத்தியம்புகின்றன.
முனைவர் செ.சரசுவதி
உதவிப்பேராசிரியர்
தமிழ்த்துறை
காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
சத்தியமங்கலம்.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|