கவிஞர் அன்புசிவாவின் “அபியும் நானும்” சிறுகதைகள் - ஓர் ஆய்வு

சீ.விஜயலட்சுமி

த்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியங்களில் தோன்றிய புதிய உரைநடை வடிவம் “சிறுகதையாகும். முதல் சிறுகதை படைத்த பெருமைக்கு உடையவர்” எட்கர் ஆலன்போ” என்பவர் ஆவார். இஃது ஆங்கில மொழியில் அமெரிக்காவில் தோன்றியதாகும் தமிழில் “வ.வே.சு.ஐயர்” சிறுகதை “குளத்தங்கரை ஆரசமரம் சொன்னகதை” ஆகும். தமிழில் சிறுகதை வளர்ந்துள்ளதற்கு காரணம் “மணிக்கொடி” இதழ் என்று சொன்னால் அஃது மிகையாகாது.

பரபரப்பான இன்றைய சூழலில் மனிதர்கள் உண்பதற்கே நேரமில்லாமல் இருக்கிறார்கள். இதில் எங்கு கதைகள் படிப்பது என்ற நிலைமாறி சிறுகதை படிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். “குதிரைப் பந்தயம் போல் தொடக்கமும் முடிவும் சுவை மிகுந்து விறுவறுப்புடன் அமைவதே நல்ல சிறுகதை என்று கூறுகிறார் “செட்ஜ்விக்”

ஆசிரியர் அறிமுகம்

கவிதைத் துறையில் மட்டுமல்லாமல் சிறுகதைத் துறையிலும் கவிஞர் அன்பு சிவா சாதனை படைத்துள்ளார். கவிஞர் அன்பு சிவா அவர்கள். இவர் பத்துக்கும் மேற்பட்ட கவிதைப் புத்தகங்களை வெளியிட்டுள்ளார். இவருடைய சிறுகதைகள் பதினான்கும் பாமர மக்களுக்கும் எளிதாகப் புரியும் வண்ணம் எளிமையான நடையில் இருப்பது கூடுதல் சிறப்பாகும். தன் மனதைப் பாதித்த நிகழ்வுகளை மட்டுமே இக்கதைக்குக் கருவாகக் கொண்டுள்ளார். கதையின் அத்தனை பாத்திங்களும் உயிள்ளவையாக பரிமளிக்கின்றன “அபியும் நானும்” என்ற சிறுகதை மூலம் மிகச் சிறந்த “சிறுகதைக் கலைஞர்” என்றும் நிரூபித்துள்ளார்.

சொல்ல மறந்த கவிதை

இக்கதையில் சாதிக்கொடுமையால் ஏற்படும் கொடிய அவலங்களை காதலின் மூலமும் காதலர்களின் மூலமும் வெளிக்காட்டியுள்ளார். மனம் ஒத்த ஆண். பெண்ணிடையே நிகழும் உணர்வு காதல் ஆகும். கதையில் காதலி உயிர் பிரியும் முன் தன் காதலுக்கும் காதலனுக்கும் கவிதை கூறுகிறாள்.

“திரு
நீ காற்றாகப் பிறந்தால் - நான்

சருகாகப் பிறப்பேன்
நீ ஆறாகப் பிறந்தால் - நான்
மழைத் துளியாகப் பிறப்பேன்.
நீ மண்ணாகப் பிறந்தால் -நான்
விதையாகப் பிறப்பேன்
ஆனால் ----- நாம்
மனிதனாய் மட்டும் இந்த உலகில் பிறக்க….


முடிக்கும் முன் காதலி உயிர் பிரிந்தது. உடன் கட்டை ஏறுவது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் சொந்தம் என்று, காதலியின் பிரிவைத் தாங்க முடியாத காதலன் தானும் இறக்கிறான்.

சாதிக் கொடுமை என்ற கருப்பொருளை நினைவில் வைத்துக் கொண்டு அக்கருப் பொருளை முற்றுப் பெறச் செய்வதற்கு வேண்டிய தந்திரங்களை சிறுகதைக்குள் சேர்த்து சூழலுக்கு ஏற்றவாறு மனிதர்களையும் செயல்களையும் படைத்துள்ளார்.

அபிக்குப் பிறந்தநாள்

உயிர்வாழத் தேவையான அடிப்படைப் பொருட்களை வாங்கும் அளவிற்கு வருவாய் ஈட்ட இயலாமையை வறுமை என்பர். ஆறாம் வகுப்பு மாணவி தன் பிறந்த நாள் கொண்டாட முடியாத வருத்தத்தை ஏதார்த்தமாக வெளிப்படுத்தியுள்ளார் ஆசிரியர். “முடியுள்ள மவராசி அள்ளி முடியறா” இருக்கறவ பொறந்த நாளு கொண்டாடுறா. இல்லாதவளுக்கு அதெல்லாம் கிடையாது” என்ற வரிகள் உண்மை ஏழ்மையை உணர்த்துகிறதுஃ சிறுகச் சிறுகச் சேமிக்கும் எண்ணத்தை அந்தக் குழந்தையின் மூலம் உணர்த்தியுள்ளார். தான் சேர்த்துவைத்த தொகையில் சாக்லேட் வாங்கி அதைத் தன் நண்பனுக்காக மீண்டும் கடையில் கொடுத்து நோட்டுப் புக்கும் வாங்கிக் கொடுப்பது நெஞ்சை நெகிழ வைப்பதாகும். ஆசிரியருக்குத் தோன்றா எண்ணம் அபிக்குத் தோன்றியிருப்பது பாராட்டும் வண்ணம் அமைந்துள்ளது இக்கதையில்.

“உன்னைப் போல் உன் அயலானையும் நேசி” மிளகளவு உன்னிடமிருந்தால் கடுகளவாவது இல்லாதவனுக்குக் கொடு என்ற பைபிளின் கருத்தை இக்கதையின் மூலம் தௌ;ளத் தெளிவாக விளக்கியுள்ளார் ஆசிரியர்.

“குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச் சொல்கேளா தவர்”


என்றார் வள்ளுவர். இக்கதையில் பாத்திரங்களின் பெயர்கள் கதையின் கருவிற்கேற்ப அமைந்துள்ளது, “குழந்தைமணி” “சந்தானம்” என்பன. குழந்தையில்லை என்பதற்காக தன் மனைவி தாயிட்ம படும்வேதனை வார்த்தைகளை பொறுத்துக் கொள்ளும் கணவனாகக் காட்டுகிறாh.; குழந்தை பெற்றெடுக்க தகுதியில்லாத மலட்டுத் தன்மை ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவான ஒன்றாகக் கடவுள் படைத்துள்ளார். ஆனால் நம் சமுதாயம கதைகளில் மட்டுமல்ல, நிஜத்திலும் பெண்களை மட்டுமே ஏன் குறை கூறுகிறது? “மலடி” என்ற பட்டம் இருக்கிறது. “மலடன்” என்று ஏன் சொல்வதில்லை?
இக்கதையில் தான் மடலட்டுத் தன்மை உடையவன் என்று தெரிந்தவுடன் தன் மனைவியின் காலில் விழுந்து இறுகப்பற்றித் “தெய்வமே என்னைப் பழிவாங்கிறாதே! எங்க அம்மாவை தண்டிச்சிராதே! நான்.. நான்… என மன்றாடும் சந்தானம் நினைவில் நிற்கும் கதாபாத்திரம் ஆகும்.

பெண் தெய்வத்திற்கு சமானமானவள் என்பதை “குழந்தை மணியின் வார்த்தைகள் மூலம் அழகாக விளக்கியுள்ளார் ஆசிரியர்ஃ “திருமண உறவு இன்பத்துல மட்டும் சம பங்கு கிடையாது. துன்பத்துலயம் உண்டு” ‘ஆம்பிள கிட்ட தான் குறை’ என்று சொல்லும் அரக்கிப் பெண் நான் இல்லை, என்று கூறுகிறாள். மருந்து மாத்திரை சாப்பிடலாம் எனத் தன்னைத் தானே தேற்றிக் கொள்கிறாள்.

தன் அம்மாவிட்ம சந்தானம், “ஒன்னோட புருஷனுக்கு குழந்தை பெத்துக்குடுக்கிற தகுதி இல்லைன்னு தெரிஞ்சிருந்தா நீ இன்னொரு புருஷன தேடிருப்பியா,” எனக் கேட்டதன் மூலம் உண்மையை தாய்கும் விளக்கிவிட்டான் சந்தானம்.

“ஓவிய வல்லுநர் சில கோடுகளால் சிலநிமிடங்களில் தீட்டிய ஒரு முகம் போன்றது. நோக்கமும் விளைவும் ஒன்றையே எதிர்ப்பார்க்கின்றன” என்ற சிதம்பரநாதன் அவர்களின் கூ;ற்றுப்படி கதை அமைந்துள்ளது.

பூமாலை அம்மா

சிறுகதையில் “பூமாலை” திருநங்கையின் பெயர்” ஆணுமில்லாமல் பெண்ணுமில்லாமல் மூன்றாம் பாலினமான திருநங்கையரை இச்சமூகம் “அலி”. பேடி, ஒம்போது, பொட்டையன், பொம்பளச் சட்டடி என்n;றல்லாம் இழிவுபடுத்துகிறது. யாரும் இவர்களைப் பற்றி நாவல்களிலோ நூல்களிலோ எழுதுவதில்லை.

ஒரு திருநங்கையின் உணர்வுகளை, ஏக்கங்ளை “பூமாலை அம்மா” மூலம் ஆசிரியர் கூறியள்ளார். குழந்தைப் பருவம் முதலே ஆணாகப் பிறந்த திருநங்கையர் பெண் சார்ந்த அடையாளங்கைளையே விரும்புகின்றனர். கதையில் மாளிகை வீட்டு முதலாளி அம்மா “நீ இனிமே எங்க வீட்டுக்கு வர்ரதா இருந்தா… நல்லா நீட்டா ஆம்பள மாதிரி டிரஸ்பண்ணிட்டு வா” என்று சொல்வதன் மூலம் பூமாலை மனதை காயப் படுத்திவிட்டார். யாருமற்ற பூமாலை ஒரு சிறுவனிடம் தாய்ப் பாசத்தை வெளிக்காட்டுகிறாள். ஆணுடையை அணிந்து வந்த பூமாலையை அதிhச்சியடன் பாhத்த சிறுவன் பச்சை புடவையை அவருக்குப் பரிசாகக் கொடுக்கும் போது சிறுவனின் பாசம் விளங்குகிறது.

“உன்னோட பழக்கத்தினால் தான் என் பையனிடம் நல்ல மாற்றங்கள் வந்திட்டு இருக்கு, உன் நட்பு அவனுக்கு அவசியம் தேவை” என்று கூறுவதன் மூலம் சகமனிதர்கள் போலவே திருநங்கையரும் மதிக்கப்பகிறார்கள் என்று கூறியள்ளார். “அபியும் நானும்” - இதில் மற்றுமொரு விசேஷமான கதை.

கவிஞர் அன்புசிவா அவர்களின் சிறுகதைகளில் பெண்மைநலன், சாதி, தன்னம்பிக்கை, முன்னேற்றம், குடும்பநலன் என்ற அளவற்ற வேறுபட்ட கருத்துக்களையும் தெளிவாகக் கூறியுள்ளார்.
 

சீ.விஜயலட்சுமி
இந்தி ஆசிரியர்
போத்தனூர்
கோயம்புத்தூர்.

 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்