சங்க இலக்கியத்தில் அகக்கூறுகள்

சீ.விஜயலட்சுமி


பேதைமை என்பது மாதர்க் கணிகலம்

'கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின்
என்ன பயனும் இல'


                                      என்றார் வள்ளுவர்.

கற்க கசடறக் கற்பவை கற்ற ஒரு தலைமகன் அழகியதோர் இடத்தைத் தேடி உலாச் செல்கிறாள். தொல்காப்பிய நூல்களை மனப்பாடம் செய்து கொண்டே செல்கிறான். பிறவிப்பயன் காரணமாக அழகிய பெண்ணைக் காண்கிறான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்கின்றனர்.

'இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினார்' என்ற கம்பநாடர் கருத்துக்கு இலக்கணம் வருத்தனர் கண்வழியே காதல் பரிமாற்றம் நடந்தது. தன்னைவிட்டு பிரிந்துவிடுவானோ? என்று தலைவி ஐயுறுகிறாள். குறிப்பால் அறிந்த தலைவன் எவ்வகையிலும் தொடர்பில்லாத நாம் ஊழ்வினையின் வலிமையால் ஒன்றுபட்டோம். அதனால் நம்மை யாராலும் பிரிக்க முடியாது என்பது உண்மை எனக் கூறினார்.

செம்புலப் பெயனீர் போல அன்புடை நெஞ்சம் தாங்கலந்தனவேஎன்னை ஈன்று வளர்த்த தாயும் உன்னைப் பெற்று வளர்த்த அன்னையும் எந்த வகையில் உறவு முறைக்கு உரிமையுடையவராவார். என்னைச் சான்றோர் ஆக்கிய என் தந்தையும் உன்னிடம் அன்புகாட்டி ஆசையோடு வளர்த்த உன் தந்தையும் எந்த முறையில் உறவு பாராட்டுக்கு உரியவராவர் ஆனாலும் ஒன்று சேர்ந்துள்ளோம். செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் அம்மண்ணின் வண்ணத்தையும், சுவையையும் பெற்று நின்ற தன்மை போல் அன்புடைய நம்மில் கலந்தது என்கிறார் தலைவர்.

'விண்ணின்று பெய்த மழைநீர் மண்ணோடு சேர்ந்தபின் இரண்டுக் கலந்து விட்டது போல் என்று உவமை விளக்குகிறது. (குறுந்தொகை பாடல்
- 40)

மலர் போன்றது காமநோய்

பிரிந்த தலைவனை நினைத்து தலைவி மனம் புழுங்குகின்றாள் கனவில் தலைவன் வருகிறான் தன்னோடு கலந்து உறவாடுகின்றான் அளவளாவிப் பேசுகின்றான் கட்டி அணைக்கின்றான். இவை அனைத்தும் கனவில் மட்டுமே தலைவி விழித்தவுடன் தலைவனைக் காணாமல் தவித்துப் போகிறாள்.

மாலைப் பொழுது வருகின்றது மேயச் சென்ற மாடுகள் கன்றை நிறைத்த வண்ணம் காட்டை விட்டு வீட்டை அடைகிறது. புறவைகள் இணைபிரியாமல் தத்தம் கூடுகளில் வந்து சேர்கிறது. பிரிவாற்றாமல் வருந்தும் தலைவி மட்டும் ஆண் பறவையைப் பிரிந்த பெண் பறவை போல் துன்பப்படுகிறாள்.

இதைதான் வள்ளுவர் ' பொழுது கண்டு இரங்கல்'
என்ற அதிகாரத்தில் கூறுகிறார்.

'காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
முhலை மலருமிந் நோய்'
என்று

பாலொடு தேன் கலந்தற்றே

தன்னைக் காதலித்த தலைவனது உள்ளம் விரும்பும் வண்ணம் இனிமையான சொற்களையே தூய்மையான பற்களின் வழியாக ஊறிய நீர் பாலுடன் தேனைக் கலந்து கலவை போல் தலைவனுக்குச் சுவைக்கும்.

'பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர
் (திருக்குறள்
1121)

மாலும் என் நெஞ்சு

படைப்புக் கடவுள் ஆண்களுக்காகவே பெண்களை அதுவும் அழகான பெண்களை படைத்துள்ளார் அழகிய சேலையில் பச்சைபசேலனத் தழைத்திருக்கும் மரங்கள் தம்மை நாடி வருவோருக்கு நிழல் தருகின்றது. பூங்கொடிகளோ, மரங்களை பின்ணிப் பிணைந்து தழுவிக் கொண்டிருக்கிறது. பசும்புல் கம்பளம் விரித்தாற்போல் காணுகின்றது. அப்போது கட்டிளங்காளையும் மங்கையும் பூஞ்சோலைக்குள் வருகின்றனர் காளையோ
என் கண் முன்னால் காணுகின்ற இவளையோ இவளைப் போன்ற பெண்ணையோ இவ்வுலகத்தில் கண்டதேயில்லை, யார் இவளோ? என எண்ணுகிறாள் 'அணங்குகொல்' என நினைக்கிறாள் உள்ளம் தடுமாறிகிறான் தலைவியோ 'தலைவனாக ஏற்றுக் கொண்ட காரணத்தால் நாணமுறுகிறாள். விண்ணுலகத்துப் பெண்ணோ என ஐயுறுகிறாள். மயிலாக நினைத்துப் பார்த்தால் மயிலுக்குத் தோகையுண்டு, அலகுண்டு, சிறகுண்டு இவளுக்கு இல்லை. பறவை இனத்தைச் சேர்ந்தவளும் இல்லை என்ற முடிவுக் வருகிறாள். 'கனங்குழை மாதர் கொல்' என்று எண்ணினான். 'அணங்கு கொல்' என எண்ணினான். நாணமுற்ற தலைவி முகத்தை திருப்பிக் கொள்கிறான் அப்போது கண்ட கருங்கூந்தலை கண்டவன் உள்ளத்தில் தோகை மயில் தான் நினைவுக்கு வந்தது. இவளை 'ஆய்மயில் கொல்' என்று நினைத்ததில் பிழை ஒன்றும் இல்லை.

தலைவியையே பார்த்துக் கொண்டிருந்த தலைவன் அணங்கையும் மயிலையும் மறந்தாள். 'கனங்கிழை மாதர்கொல்?' என்று எண்ணிப் பார்க்கலானான் கனம் என்றால் நிறைவு சீர்மை செறிவு பெருமை என்று பல பொருள்களுண்டு குழை என்பது கூந்தல் இவள் அடர்ந்த கூந்தலையுடைய பெண்ணா? மயிலா? செறிந்த கார்குழலியா? என்று புரியாமல் தடுமாறினாள்.

மயக்கத்தில் கிடந்த தலைவனின் உள்ளக் கிடங்கைக் கண்ட திருவள்ளுவர்

'அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் ஆய்மயில் கொல்லோ'


மாதர்கொல் மாலுமெ னநெஞ்சு என்ற குறட்பாவை எழுதினார்.
பாலையுண்ண மறுத்தவள் பாலை உள்ளினாள்

பாலை நிலம் பட்ட மரங்களையே மிகுதியாகக் கொண்டது நீர் இல்லா வழிப்பறி கொள்ளையர் வாழும் இடம் மகளின் பிரிவை எண்ணிய தாய் தன் மகளைக் காணாது புலம்பினாள் பாலை நிலத்தில் உள்ளத்திற்கிசைத்த தலைவனோடு நடந்து செல்வதே சிறந்தது என சென்றனளே? நான் தந்த பாலை உண்ண மறுத்தமகள் எனக்கு (பாலை தரவேண்டுமெனப் பிரிந்தாளோ)
பாலை நிலத்தின் இயல்பான தன்மைகளைக் கேட்டிருந்தும் சிறிதும் மயங்காது மாண்புமிகு தலைவனோடு தலைவி சென்றாள் என்று எண்ணும் போது அவளுடைய காதல் வெளிப்படுகிறது. பாலை நிலம் தலைவனோடு சென்ற தலைவி தலைவியின் பிரிவால் வருந்தும் தாய் ஆகியோரின் தன்மைகளை 'கயமனார்' என்றும் சங்கப்புலவர் பாட்டு மூலமாக வெளிப்படுத்துகிறார்.

'பாலு முண்ணால் பந்துடன் மேவாள்
விளையா டாயமொ டயர்வோ ளினியே
எளிதென வுணர்ந்தனன் கொல்லோ முனிசினை
ஓமை குந்திய வுயர் கோட்டொருத்தல்
வேனிற் குள்ளத்து வௌ;வரைக் கவர் அன்
மழைமுழுங்கு கருங்குர லோர்க்கும்
கழைதிரங் காரிடை யவனொடு வெலவே'
(குறும் -
396)

மறுமையிலும் தலைவி

நற்றமிழ் நூல்களில் ஒன்று நற்றிணை நானூறு பாடல்களைக் கொண்டது ஆசிரியர் நூற்று எழுபத்தைந்து போராவார்கள் அவர்களில் ஒருவர் அம்மூவனார்.

தலைவன் வெளிநாடு சென்று பொருள் ஈட்டி வரும்வரை நம்மால் தனித்திருக்க முடியுமா என அஞ்சுகிறது அவள் மனம்.

தலைவி என் காதலனை நான் மறந்துவிடுவேனோ என்றாள் தலைவி இதைத்தான் வள்ளுவர்

'தணந்தமை சால அறிவிப்ப போலும்
முணந்தநாள் வீங்கிய தோள்'


எனக் கூறுகிறார். வழிநோக்கி தலைவிகண்கள் ஒளி இழந்தன என்றும்

'வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்'


எனச் சொல்லி பிரிந்து சென்ற நாட்களைக் குறித்து விரலும் தேய்த்து போனது எனக் கூறுகிறார். ஒருயிருக்குப் பலபிறவி உண்டென்பதை பலரும் ஒப்புக்கொள்கின்றனர்.

'எழுமை எழுபிறப்பும் உள்ளுவர்'
'எழுபிறப்பும் தீயவை தீண்டா'

'எழுமையும் ஏமாப்புடைத்து' என்றார் வள்ளுவர்.

புழவாய்ப் பிறக்கினும் புண்ணியா' உன்னடிகள் என மனத்தே வழுவாதிருக்க வரந்தரல் வேண்டும் என்கிறார் சிவனடியார் இதிலிருந்து ஏழு பிறப்பு உண்டென்று உறுதியாகிறது அதனால் தான் தலைவி.

'பிறப்புப் பிறிது ஆகுவதாயின் மறக்குவென்கொல் என காதலன்' எனக் கூறுகிறான். இறப்பிற்கு அஞ்சவில்லை தலைவி இறந்து பிறந்தால் தலைவனை மறக்க நேரிடுமோ என்று தான் அஞ்சுகிறாள் செந்தமிழ் புலவர் பின்வரும் பாடலால் சிறப்புற எடுத்தியம்புகிறார்.

'தோளும் அழியும் நாளும் சென்றன
நீளிடை யுத்தம் நோக்கி வாளற்றுக்
கண்ணும் காட்சி தௌவின என் நீத்து
அறிவும் மயங்கிப் பிறதா கின்றே
நோயும் பேரும் மாலையும் வந்தன்று
யாங்கா குவென்கொல் யானே ஈங்கோ
காதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவின்
பிறப்பும் பிறிதாகுவ மதயின்
மறக்னுவென் கொல் என் காதலன் எனவே'
(நற்றிணை –
397)

முடிவுரை:

சங்க காலத்தில் இலை மறைவு காயாக இருத்த காதல் இப்போது கொச்சைபடுத்தப்படுகிறது. இன்று பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு பெரிதும் ஆளாக்கப் படுகின்றனர். தினசரி நாளிதழ்கள், நாளேடுகள், வார, மாத இதழ்கள் போன்ற அனைத்து ஊடகங்களிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொள்கிறது. இச்செயல் பெண்ணின் உறவுக்கும் உணர்வுக்கும் இச்சமுதாயம் ஒரு வரைமுறை விதித்துள்ளது இதனை திருக்குறள் பின்வருமாறு கூறுகிறது.

'காமக் கடும்புனல் நீந்நிக் கரைகானென
யாமத்தும் யானே உளன்'

கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப பெண்ணின் பெருந்தக்கது இல. பெண்கள் முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றமாகும்.
 

சீ.விஜயலட்சுமி
17/133L சுவாமி நகர்,
போத்தனூர்

 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்