தென் இந்தியப் பெண் எழுத்தாளர் திருமதி விஜயாராமனின்
'அன்பெனும் மலர் ஏந்தி' நூல் வெளியீட்டு விழா
தொகுப்பு: அனாமிகா
கலை இலக்கியங்களில் ஆர்வம் உள்ள எந்த ஒரு படைப்பாளிக்கும், தானும் ஏதாவது
எழுதி தனது கட்டுரைஒரு பத்திரிகையில் வெளிவரவேண்டும் என்ற ஆதங்கம்
இயல்பாகவே அமைந்துவிடும். ஆனால் அது அனைவருக்கும் எளிதான காரியம் இல்லை.
எண்ணற்ற நூல்களை வாசித்து, அதனால் பெற்ற அறிவைக்கொண்டு, தனது சிந்தனை
மற்றும் எளிதாய் எழுதும் ஆற்றல், திறன், ஆர்வம் மற்றும் ஈடுபாடு ஆகியவை
இயல்பாகவே இருக்க வேண்டும். அப்போது தான் அந்த எண்ணம் தனக்குள்ளேயே ஒரு
விதையாகப் பதியம் போட்டு, அது துளிர்த்து மணம் கமழும் மலராக இலக்கியச்
சோலையில் மலர்ந்து அனைவரின் மனதை கவரக்கூடியதாக அமையும். அந்த வகையில்
சங்க காலம் தொட்டு இன்றைய விஞ்ஞான உலகில், கலை இலக்கியப் படைப்புகள்
என்பன காலத்திற்குக் காலம் பலவித உருவகங்களைப் பெற்று, சிறுகதைகள்,
நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள்; என அனைத்துத் துறை சார்ந்த
வரலாற்று ஆவணங்களாக, எண்ணற்ற சான்றோர்களால் படைக்கப்பட்டு நூல் வடிவம்
பெற்று காலத்;தின் பெட்டகமாக நம் அனைவரையும், படித்தறிந்து இன்புற
வைக்கின்றது. பொது விடயம், அரசியல், வி;;ஞ்ஞானம், வரலாறு, மருத்துவம்,
ஆன்மீகம், பயணக்கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள்,
சிறுவர்களுக்கான படைப்புகள் என எத்தனை எத்தனை நூல்கள்! ஆனால் அத்தனையும்
படிக்க நேரம் இருக்கிறதா? அல்லது இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கைச்
சூழலில் நூல்களை வாசிக்கும் ஆர்வம் நம்மில் எத்தனைபேரிடம்; உள்ளது?
படைப்பாளிகள் என்கிறபோது அதில் ஆண்-பெண் என்று இருபாலரும் இன்றைய
காலகட்டத்தில் அபரிதமாக தங்களது எழுதும் திறனால் அபார சாதனைகள் புரிந்து
வருவதை நாம் அறியாததல்ல. அதிலும் ஒரு வேற்று நாடான கனடாவில் கடந்த
30 ஆண்டுகளுக்கு மேல் வாழும் இலங்கை மற்றும்
இந்தியத் தமிழர்கள் பல்துறை சார்ந்தவர்களாக தங்களது படைப்புக்களை
தொடர்ந்து எழுதி, வெளியிட்டு தமிழ் இலக்கிய சேவை செய்து தமிழர்களைப்
பெருமையுறச் செய்து வருகின்றார்கள். நம்மவர் மத்தியில் தொடர்ந்து
நடைபெறும் எண்ணற்ற கலை இலக்கிய கலாச்சார நிகழ்வுகளில் நூல் வெளியீட்டு
வைபவம் என்பது மிகவும் பிரபலமாகி வருவதோடு மட்டுமின்றி,; கனடாவில் இத்தனை
படைப்பாளிகளா என்று பிற இனத்தவரையும் வியப்புற வைக்கும் அளவிற்கு
இங்குள்ள அரசு பொது நூலகங்களிலும் அவை இடம் பிடித்துள்ளது தான்
தமிழர்களின் சாதனை ஆகும். இதற்கு அடிப்படைக் காரணமே தமிழ் மொழியின்
தொன்மையான வரலாற்றுச் சிறப்பாகும். உலகில் எத்தனையோ மொழிகள் தோன்றி
மறைந்துவிட்ட நிலையில், தமிழையும், தமிழ் கலை இலக்கிய கலாச்சார மரபுகளை
வாழ வைத்துக்கொண்டிருக்கும் நம் தமிழ் இனத்தின் வரலாறு என்பது காலம்
உள்ளவரை நிலைத்திருக்கும் என்பதைப் பறை சாற்றுவதே இத்தகைய நூல்கள்
அவ்வப்;போது வெளிவருவதால் தான். அதுவும் ஒரு நூலை எழுதி, வெளியீடு செய்வது
என்பதும் ஒரு சுகப்பிரசவம் மாதிரிதான். காரணம் பிரசவம் என்பது ஒரு
தாய்க்கு மறுஜென்மம் என்பதுபோல், ஒரு படைப்பாளியும் அனுபவரீதியான
வாழ்வியல் யதார்த்தங்களைப் பிரதிபலிக்கின்ற வகையில் இனிய தமிழில் ஒரு நூலை
வெளியிட முற்படும்போது அவர் படும் பாடு சொலிலி விளங்க வைக்க முடியாது.
எத்தனையோ
நூல் வெளியீடுகள் இவ்வாறுதான் பல்வேறு முயற்சிகளின் வெளிப்பாடாக நம்மைச்
சுற்றி நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. அந்த விதத்தில் கடந்த 3.10.09
சனிக்கிழமை மாலை 888.லாரன்ஸ் கிழக்கு அவின்யுவில் உள்ள டான்மில்ஸ் பொது
நூலகக் கலையரங்கில், தமிழகத்தின் புதுவை மாநிலத்தைச் சேர்ந்த பெண்
படைப்பாளியான திருமதி விஜயாராமன் அவர்களின் 3வது படைப்பான 'அன்பெனும் மலர்
ஏந்தி' நாவல் தொகுப்பு நூல், கவிநாயகர் திரு கந்தவனம் அவர்களின் தலைமையில்
மிகவும் எளிதான ஒரு வைபவமாக சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக
அஜின்கோட் பாராளுமன்ற உறுப்பினரும், இங்குள்ள அனைத்தின மக்களின் அன்பையும்
ஆதரவையும், நன்மதிப்பையும் பெற்றவரான மாண்புமிகு திரு ஜிம்கர்ஜியானிஸ்
அவர்கள் தனது செயலாளர் திருமதி கேத்தியுடன் வருகை புரிந்து நூலாசிரியரைப்
பாராட்டி கனேடிய பிரஜா உரிமை சாஸனம் (தமிழ்) பிரதியை வழங்கிக் கௌரவித்தும்,
தமிழீழர்களின் பிரச்னையின் நியாயத்திற்குக் குரல்கொடுத்து, தனது மனிதநேயப்
பண்பாட்டு உணர்வை வெளிப்படுத்தி உரையாற்றிச் சிறப்பித்தார்.
அன்றைய
தினம் பல்வேறு சமூக நிகழ்வுகளான கலை நிகழ்ச்சிகள், ஒன்றுகூடல்கள்,
அரங்கேற்றம் மற்றும் நூல்வெளியீடு எனப் பல நிகழ்ச்சிகள் பல இடங்களில்
இருந்தும்,
ஒரு இந்தியப் பெண் எழுத்தாளர் முதன் முதலாக ஒரு நூலை வெளியிடுவது என்பது
வரவேற்கக்கூடியது என்ற வகையில் இங்குள்ள படைப்பாளிகள், வர்த்தகப்
பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள், குடும்ப நண்பர்கள் என அதிக எண்ணிக்கையில்
கலந்துகொண்டு, நூலினை வாங்கிப் பாராட்டிச் சிறப்பித்தார்கள். அதிலும்
நூலாசிரியரின் கணவரான திரு புதுவை இராமன் அவர்கள் இங்குவெளிவரும்
பலதரப்பட்ட பத்திரிகைகளில் கடந்த 10 ஆண்டுகளாக எழுதித் தாயக மக்களின்
மத்தியில் பெரும் நன்மதிப்பைப் பெற்றவர் என்ற வகையில் அவருக்காகவே பலர்
வந்திருந்தது அன்றைய விழாவை நிறைவு கொள்ளச் செய்துள்ளது என்றால் மிகையல்ல.
ஒரு
நூல் வெளியீட்டு விழா என்றாலே தலமையுரை, ஆசியுரை, வாழ்த்துரை, நூல்
ஆய்வுரை, வெளியீட்டுரை என்பன ஒரு கலாச்சாரமாகும். அதே விதத்தில் நீண்டதொரு
பட்டியலிட்ட நிகழ்வாக அமையாமல் மிகவும் எளிமையாக அமைந்த விதத்தில், கனடா
ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய ஆலோசகர், பிரபல சிவாச்சார்யார் டாக்டர்
சிவஸ்ரீ சோமாஸ்கந்தக் குருக்கள் ஆசியுரை, உதயன் பத்திரிகையின் பிரதம
ஆசிரியர் திரு ஆர்.என்.லோகேந்திரலிங்கம் வாழ்த்துரை, திருமதி மீனா
தவரட்ணம் நூல் வெளியீட்டுரை, கலாநிதி திருமதி கௌசல்யா சுப்பிரமணியன்
மற்றும் கவிஞர் திரு புகாரி ஆகியோரின் நூல் ஆய்வுரை என கன கச்சிதமாய்
அமைந்திருந்ததோடு, பெண் படைப்பாளியைப் பாராட்டி கௌரவிக்கும் வகையில் தென்
இந்திய தமிழ் சங்கம் சார்பில் அதன் தலைவரும் பிரபல சித்த மருத்துவ
நிபுணருமான திரு ராம்குமார் அவர்கள் நூலாசிரியருக்குப் பொன்னாடை அணிவித்து
'கலை இலக்கியத்திலகம்' எனும் கௌரவபட்டத்தையும் வழங்கிச் சிறப்பித்தார்.
திருமதி
சியாமாசுந்தரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் தொடங்கிய இவ்வைபவத்தில்;,
திரு புதுவை இராமன் வரவேற்புரை வழங்கி, நூலாசிரியரைப் பற்றி அறிமுக
உரையாற்றினார். அனைத்து நிகழ்வுகளையும் தனக்கே உரிய தனித்துவமான பாங்கில்
கவிநாயகர் கந்தவனம் தொகுத்து வழங்கியதோடு, தனது தலைமையுரையில், திருமதி
விஜயா இராமன் புதுவையில் முதன் முதல் எழுதி வெளியிட்ட 'புதிய பூவிது
பூத்தது' பற்றியும், கனடாவிற்கு வந்தபின்னர் இங்குள்ள தாயக உறவுகளோடு பழகி,
அவர்களின் வாழ்வியல் யதார்த்தங்களை நன்கு அறிந்துகொண்டு, அதனை 'கனடாவில்
பூத்த கதை மலர்கள்' என ஒரு நூலாக எழுதி வெளியிட்டு, தற்போது 3வது
படைப்பாக 'அன்பெனும் மலரேந்தி' என்று மலர்களை மையப்படுத்தியே தலைப்பைக்
கொண்டதைப்பற்றி விமர்சித்தார். குறிப்பாக புதுவையில் ஆசிரியராக 36
ஆண்டுகள் பணிபுரிந்தபோது, கலை இலக்கியத்தில் ஈடுபாடுகொண்டு, வானொலி,
தொலைக்காட்சி நிகழ்வுகளில் பங்கேற்றும், புதுவை மற்றும் தமிழகத்தில்
வெளிவரும் சஞ்சிகையில் தனது ஆக்கங்களை வெளியிட்டு, கலைமகள் மாத இதழ்
நடத்திய அமரர் ராமரத்தினம் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றதையும்.
அதுபோன்றே உதயன் ஆண்டுவிழா சிறுகதைப்; போட்டியில் 2ம்
பரிசாகப் தங்கப்பதக்கம் பெற்றதை விவரித்து, குறிப்பாக திரு புதுவை
இராமனிடம் தாயக மக்கள் கொண்டுள்ள அபரித நட்புணர்வையும் மேற்கோள் காட்டித்
தனது நல் வாழ்த்துக்களைக் கூறி நிறைவு செய்தார்.
ஆசியுரை
வழங்கிய சிவாச்சார்யார் டாக்டர் சிவஸ்ரீ சோமாஸ்கந்தக் குருக்கள், அன்பு
எனும் தலைப்பினை வைத்து, இறைவன், இயற்கை, மனிதநேயம் ஆகியவற்றோடு ஒப்பிட்டு
நூலாசிரியர் கையாண்டுள்ள இயல்பான வாழ்க்கைத் தத்துவங்கள் அனைத்துமே
முற்றிலும் ஒரு அனுபவரீதியான வகையில் அமைந்திருந்ததை வெகுவாகப் பாராட்டித்
தனது ஆலயத்தின் சார்பில் பொன்னாடை அணிவித்து, விநாயகர் சிலையை வழங்கி
ஆசிர்வதித்துச் சிறப்பித்தார்.
வாழ்த்துரை வழங்கிய உதயன் பிரதம ஆசிரியர் திரு லோகேந்திரலிங்கம் அவர்கள்
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல்
நூலாசியரின் குடும்ப நண்பர் என்ற வகையிலும், தனது பத்திரிகையின் மூலம்
அனைவரின் நன்மதிப்பை பெற்று, தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வரும் திரு
புதுவை இராமன் நம்மினத்துடன் நெருங்கிப் பழகி, முதிய வயதிலும்கூட, கலை
இலக்கிய ஈடுபாட்டினை வெளிப்படுத்தும் வகையில் தனது குடும்பத்தினரையும்
நம்மிடையே அடையாளம் காண வைத்துள்ளது பெருமைக்குரியதாகும் என்று வாழ்த்திச்
சிறப்பித்தார்.
நூல்
வெளியீட்டுரை வழங்கிய திருமதி மீனா தவரட்ணம் அவர்கள் தனது உரையில்,
திருமதி விஜயாராமனின் ஆன்மீக ஈடுபாட்டையும், ஸ்வாமி பரமாத்மானந்தாவின
உபதேச உரைகளைக் கேட்டு;, அவற்றை பல நூல்களாக தொகுத்து எழுதி அவரது
கருத்துரைகளை மீண்டும் மீண்டும் வாசித்து மகிழ வைத்திருப்பதாகப்
பாராட்டினார். மேலம் தனது உரையில், ஒரு படைப்பு என்பது எப்படி இருந்தால்,
வாசிக்க முற்படும் ஒருவரின் உள்ளத்தைத் தொடும் என்ற வகையில் நூலாசிரியர்
தனது எழுத்தாற்றலால் கதைகளை அமைத்திருக்கும் விதத்தையும், எழுத்து நடையும்
தன்னை மிகவும் கவர்ந்தது என்றுகூறினார். பொதுவாகவே தமிழ்ப்பெண்களுக்குள்ள
பிறருக்கு உதவும் மன இயல்பினை மையப்படுத்தி ஒவ்வொரு கதையிலும் மிகவும்
அழகாகக் கொண்டு சென்றுள்ளதை அனைவரும் படித்து இத்தகைய எழுத்தாளரின்
படைப்;புகள் மேலும் தொடர அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்று கூறித் தனது
உரையை அவர் நிறைவு செய்தார்.
அடுத்து
இடம் பெற்ற நூல் வெளயீpட்டில் முதல் பிரதியை 84
வயது முதியோரான திருமதி யோகாம்பாள்
சுப்பிரமணியம் பெற்றுக்கொண்டு தனது நல்ஆசியைக் கவிதையாக அளித்துச்
சிறப்பித்தார். வந்திருந்த அனைவருமே நூலாசிரியரிடமிருந்து நூலினைப் பெற்று
தங்களது வாழ்த்துக்களைக் கூறி சிறப்பித்தார்கள்.
நூல் ஆய்;வுரை வழங்கிய கலாநிதி திருமதி கௌசல்யா சுப்பிரமணியம் மற்றும்
கவிஞர் புகாரி ஆகியோர் தங்களது உரையில் இந்நூலில் உள்ள மூன்று நாவல்களின்
சிறப்புகளைப் பற்றி, பல மேற்கோள்களுடனும், கனடா மற்றும் தமிழகத்தில்;
வாழும் தமிழர்களின் மன குண இயல்புகளின் யதார்த்தங்களை பிரதிபலிக்கும்
வகையில் கதைகளாக அமைத்திருப்பதை பல்வேறு கோணங்களில் ஆய்ந்து மிகவும்
நகைச்சுவையாக உரையாற்றி, தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொண்டார்கள்.
அன்றைய நிகழ்வில் பங்குகொண்டு உரையாற்றிய அனைவருக்கும், வந்திருந்த
சிறப்பு விருந்தினர் பாராளுமன்ற உறுப்பினர் திரு ஜிம் கர்ஜியானிஸ்,
பிரமுகர்களான கதிர் ஒளி ஆசிரியர் போதகர் திரு போல்ராஜ், எழுத்தாளர் திரு
அகில், சித்த மருத்துவர் திரு ராம்குமார், விவேகா பிரிண்டர்ஸ் அதிபர்
மற்றும்
Children Education Funds Inc. Branch Manager
திரு சிவா கணபதிப்பிள்ளை ஆகியோருக்குப்
பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.
திருமதி விஜயா இராமன் தனது ஏற்புரையில், தான் சிறுவயதில் கல்வி கற்கும்
காலம் தொட்டே எண்ணற்ற கலை இலக்கிய நூல்களைப் படித்து இன்புற்றதின் விளைவே,
தன்னையும் ஒரு படைப்பாளியாக மாற்றி நூல்கள் எழுத வைத்ததையும், அதற்கு
பக்க பலமாய் இருந்த தனது குடும்பம் மற்றும் நண்பர்களையும் நினைவு கூறி,
கனடாவிற்கு வந்த பின்பு இலங்கைத் தமிழர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு
ஏற்பட்டு, அவர்களின் தூய தமிழ்ப்பற்றும், நட்புணர்வும், இங்குள்ள ஊடகங்கள்
மற்றும் கலை இலக்கியச் சான்றோர்களின் ஊக்கம் தொடர்பு, ஆதரவு ஆகியவைதான்
இந்த 3வது நூலை எழுத வைத்தது என்று
கூறி, வந்திருந்த அனைவருக்கும, குறிப்பாக வளம்பரம் தந்து உதவிய ஊடகத்துறை
மற்றும் இவ்விழா இனிதே நடைபெற பல வகைகளிலும் உதவியும், ஆதரவும் நல்கிய
அனைவருக்கும் தனது நன்றியைக் கூறி நிகழ்;வை நிறைவு செய்தார்.
|