கவை மகன்

கவிஞர் மா.உலகநாதன்,திருநீலக்குடி

ரட்டைப்பிள்ளைகளைக் 'கவைமக'வெனக் கூறுவர்; அதாவது ஒரு கருவில் உதித்த இரட்டையர்கள் என்று பொருள்படும். புலவர் எடுத்தாண்ட உவமைச் சிறப்பால்இ இப்பாடலை இயற்றியவர் கவைமகன் என்னும் பெயர் பெற்றார்; கவை என்பது நாம் விளையாடிய கவையுடைய உண்டிவில்லை நம் நினைவில் கொண்டு வரும்.

குறுந்தொகைப்பாடல் ஒன்றில்,

கொடுங்கான் முதலைக் கோள்வ லேற்றை
வழிவழக் கறுக்கும் கானலம் பெருந்துறை
இனமீ னருங்கழி நீந்தி நீநின்
நயனுடை மையின் வருதி யிவடன்
மடனுடை மையி னுயங்கும் யானது
கவைமக நஞ்சுண் டாஅங்
கஞ்சுவல் பெருமவென் நெஞ்சத்தானே.
(குறுந்தொகை-324)

இவர் பாடியது இச் செய்யுள் ஒன்றே !

தலைவியைக் காண வரும் தலைவனிடம்இதோழி தன் தவிப்பு நிலையச் சொல்லுவதாக அமைந்திருக்கிறது இப்பாடல்.

'தலைவியைக் காணும் ஆர்வத்தால் நீ முதலைகள் நிறைந்த நீர்வழியை நீந்திக் கடந்து வருகிறாய்; தலைவியோ அறியாமையால்(மடனால்) இதை எண்ணி மிகவும் வருந்துகிறாள்; நினக்கும் அதனால் துன்பம்; நின் தலைவிக்கும் துன்பம்; நீங்கள் இருவரும் துன்புற்று வருந்த யான் என் மனத்துள்ளே இரட்டைப்பிள்ளைகள் நஞ்சுண்டால் இருவர் திறத்தும் ஒரு தாய் வருந்துவதைப்போல, நீ அங்ஙனம் வருதலை எண்ணி அஞ்சுவேன். நீ இரவில் வருதல் நன்றன்று; அதனைக் கைவிடுக'என்று எச்சரிக்கும் ஒரு தாயின் நிலையை கவைமகன் கவியாகப் படைத்திருக்கிறார்.
 

 


 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்