இலக்கியங்கள் காட்டும் சிறுவர் உலகம்

முனைவர் செ.சரசுவதி


லக்கியம் என்பது காலங்காலமாக மனிதர்களின் வாழ்வியலை படம் பிடிக்கும் கண்ணாடியாக உள்ளது. மனித சமுதாயத்தை இலக்கை நோக்கி நகர்த்தி செல்லும் தூண்டுகோலாக இலக்கியம் அமைகின்றது. இலக்கியம் நேரடியாக வாழ்க்கையிலிருந்து வளர்ச்சி பெறுவதாகும்.

பல்வேறு இலக்கிய வடிவங்களின் தோற்றத்திற்குக் காரணமாக கூறுகளை நான்கு வகையாகப் பகுக்கலாம்.

(1)தன் அனுபவத்தைத் தானே வெளியிட வேண்டும் என்ற மனிதனின் விருப்பம்.
(2)ஏனைய மக்களிடத்தும் அவர்தம் செயல்களிடத்தும் மனிதன் கொண்டிருக்கும் ஈடுபாடு.
(3)மனிதன் வாழும் உண்மையுலகிலும் அவன் தன் கற்பனை உலகிலும் அவன் கொண்டிருக்கும் ஈடுபாடு.
(4)தன் அனுபவத்திற்குக் கலை வடிவம் கொடுக்க வேண்டும் என்ற மனிதனின் ஆர்வம்.

மனிதன் தான் நினைத்தவற்றையும் உணர்ந்தவற்றையும் பிறருக்கு உணர்த்த வேண்டும் என்ற உந்துதல் மிகவும் வன்மையாக அவனுக்கு ஏற்படுகிறது. தனின்றும் எழுத்தாளனின் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் நேர்முகமாக விளக்கும் இலக்கியம் தோன்றுகிறது.

இலக்கியங்களில் சிறுவர் இலக்கியம் என்பது கதை, கதைப்பாடல்கள், குழந்தைப்பாடல்கள் போன்றவற்றின் வாயிலாக அறியப்படுகின்றன. முனிதர்களில் குழந்தைகளின் உலகம் என்பது நேர்மறையானது.

உயிருள்ள பூக்களைப் போன்று வண்ணமானது.

சிறுவர்களின் உலகம் மன்தர்களின் உலகில் இருந்து மாறுபட்டுள்ளதை இரு கதைகளின் மூலம் இரு ஆசிரியர்களின் பார்வையில் காண்பதையே இக்கட்டுரையின் பொருளாகும்.

முதல் கதை

ஜெயகாந்தன் பொம்மை விடுதலைக்கு முன் புதுமைப்பித்தன் என்றால், விடுதலைக்குப்பின் ஜெயகாந்தன் என்று சொல்லும் அளவிற்கு சிறுகதையில் தனி இடம் பிடித்தவர். 30-க்கும் மேற்பட்ட புதினங்களையும்இ 20-க்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். 2009-இல் பத்மபூசன் விருமு பெற்றுன்னார். புதினத்திற்காக 1972-இல் சாகித்திய அகாதெமி விருதை பெற்றுள்ளார்.

கதைக்கரு

ஒரு கிராமத்தின் ஒரு பகுதியில் வசிக்கும் பணக்கார குழந்தையின் மனநிலையும், ஏழைக்குழந்தையின் மனநிலையும் ஒப்பிடப்பட்டுள்ளது.

ஏழைக்குழந்தை பொம்மைகளுக்காக ஏங்கி, தம் தம்பியைப் பொம்மையாக நினைத்துச் செய்யும் செயல்பாடுகள் இடம்பெறுகின்றன.

கதைப்பின்னல்

ஏழைத்தாய் கணவனை இழந்தவள். கூலி வேலைக்குப் போகிறாள். ஆண், பெண் என இரு குழந்தைகள். குட்டாயம் வேலைக்குப்போக வேண்டிய சூழல். ஆண் குழந்தை காய்ச்சலில் அவதிப்படுகிறது. அரசாங்க மருத்துவமனைக்குக் கூட்டி சென்று மருந்தை வாங்கிக் கொண்டு வருகிறாள். அம்மருந்தை அருகில் இருந்து தர இயலாத நிலை. பெண் குழந்தையை பார்க்க சொல்லி விட்டு போய் விடுகிறாள். இங்ஙனம் தினசரி வேலைக்குச் செல்லும் இரு குழந்தைகளின் தாய் ஒருபுறம்.

பணக்கார குழந்தை இன்னொருபக்கம். ஆடைஇ பொம்மை அரவணைப்பில் வளரும் மற்றொரு பெண் குழந்தை. பொம்மைகளுடனே 'பொரும்பாலான உலகம்' கழிந்து கொண்டிருக்கிறது.

கதை முடிவு

இக்கதை 'ஏழைக்குழந்தை' பொம்மை இல்லை என்ற ஏக்கத்தை 'தன்' தம்பியின் மூலம் அடைய எண்ணுகிறாள். பொம்மையை குளிப்பாட்டுவது போல் உடல் நலமில்லா குழந்தையை 'குளிர்ந்த நீரில்' குளிப்பாட்டுகிறகள். மூச்சு தாங்காமல் குழந்தை இறந்து விடுகிறது. குழந்தை அறியாமல் ஆண்குழந்தையை அலங்கரிக்கிறாள். ஆம்மா ஓடி வந்து பார்க்கிறாள். குழந்தை இறந்துவிட்டது. ஆம்மா அழுவதைப் பார்த்து குழந்தையும் அழுகிறாள்.

குழந்தையின் உலகம்:

குழந்தைகள் பெரும்பாலும் உணர்வோட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். போலச் செய்தல்இ நினைத்ததை அடைதல் என்ற தன்மைகள் கொண்டு இருக்கின்றனர்.

போலச் செய்தல்

குழந்தைகள் பெரும்பாலும் சூழலைச்சார்ந்தும், பெற்றோர்களைச்சார்ந்தும் வளர்கின்றனர். பெற்றோர்களையும் சமூகத்தின் பிடித்த உறவுகளையும், பிடித்த நண்பர்களையும் பின்பற்றி போலச் செய்தல் என்பதைச் செய்கின்றனர்.

இக்கதையில் 'எதிர் வீட்டுப்பெண்' பொம்மைகளுடன் விளையாடுவதைப் பார்க்கிறாள். துனக்கும் பொம்மை, ஆடை அவளுடையது போல் வேண்டும் என்று எண்ணி அம்மாவிடம் கேட்கிறாள். ஆடை கிடைக்கிறது. பொம்மை கிடைக்கவில்லை. தன் தம்பியை பொம்மையாக வைத்து விளையாடுகிறாள்.

ஏதிர் வீட்டுப்டுபெண் 'தன் தங்கையை' குளிக்க வைப்பதைப் பார்த்து பொம்மைக்கு குளிப்பாட்டி ஆடை அணிவிக்கிறாள்.

'வீட்டின் உள் முற்றத்தில் குழந்தைக்குத் தலைக்கு ஊற்றிக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கும் காட்சியில் லயித்திருந்த கறுப்புக் குழந்தை வழக்கம்போல் இதற்கும் தலையாட்டினாள்'.

'அன்று காலை அந்த முற்றத்தில்தான் அங்கச்சிப் பாப்பாவுக்குத் தலைக்கு ஊற்றியது ராணியின் நினைவுக்கு வந்தது. தன் குழந்தைக்கும் தலைக்கு ஊற்ற எண்ணிய ராணி மெல்ல உள்ளே சென்று அண்டாவுக்குப் பக்கத்திலிருந்த குவளையில் தண்ணீரை மொண்டு எடுத்துக் கொண்டு இரண்டு கைகளாலும் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வந்து திண்ணை மேல் வைத்தாள். இந்தக் காரியங்களின் இடையிடையே, சிவகாமியைப் பார்த்துச் சிரித்துக்கொண்டாள். சிவகாமியும் ரகசியமாகச் சிரித்தாள். சுத்தம் இல்லாமல் 'குழந்தைக்குக் குளிப்பு' வைபவம் நிகழ்ந்தது'.

'அந்த வீட்டுப் பாப்பா செய்தது போலவே குழந்தையின் அருகில் இரண்டு கால்களையும் நீட்டிப் போட்டுக் கொண்டு, தன் சட்டை நனையாமல் இருக்க முன் பக்கத்தை எடுத்து மேலே சொருகிக் கொண்டாள்,......குழந்தையின் தலையில் ஒரு கைத் கண்ணீரை வைத்து 'எண்ணெய்' தேய்த்தாள். பிறகு முகத்தில், மார்பில், உடம்பில் எல்லாம் எண்ணெய் தேய்ப்பது போல் தண்ணீரைத் தேய்த்தாள்'.

குழந்தைகள் நம் சமூகத்தில் இருந்து கற்றுக் கொண்டு போல் செய்கின்றனர். 'குழந்தைகள் வளரும் வரை போலச் செய்தல் மூலமே அனைத்து செயல்களையும் கற்கின்றனர் என்பதை உணர்த்துகின்றது.

நினைத்ததை அடைதல்

குழந்தைகளின் எண்ணங்கள் முழுவதும் நேர்மறையான கருத்துகளைக் கொண்டே இருக்கும். 'அடம்பிடித்தல்' என்ற குணங்கள் மூலம் குழந்தைகள் தாம் எண்ணியதை அடைய எண்ணுகின்றனர். எண்ணியதை அடையும் வரை குழந்தைகள் தம் எண்ணத்தை மாற்றுவதே இல்லை.

இக்கதையில் வரும் குழந்தைகள் வீட்டுக்குழந்தை 'பொம்மை'யை நினைத்ததை இடைகிறாள். ஏழைக்குழந்தையும் தன் தாயிடம் ஆடைக்காக அடம்பிடிக்கிறாள். ஆடை கிடைத்தவுடன் பொம்மைக்கு அடம்பிடிக்கிறாள். கிடைக்காததால் தம்பியை பொம்மையாக்குகிறாள்.

'அம்மா......அம்மா' என்றுக் கொஞ்சிக் கொண்டே வந்தாள் சிவகாமி. 'இன்னாடி?'

'எனக்குச் சட்டை குடும்மா சட்டை! வெக்கமா இருக்கு' என்று முழங்காலைக் கட்டிக் கொண்டு சாப்பிட உட்கார்ந்தாள் சிவகாமி.

'எனக்கு ஒரு பொம்மை வாங்கித் தரியா'

'த்ர்ரேன்'......

'எப்ப வாங்கித் த்ரே?'

'நீ அந்தப் பணக்காரக் கொழந்தையைப் பார்த்துட்டு ஒன்னொன்னும் கேட்டா நா எங்கேடி போவேன்?'

விளையாட்டு உலகம்! மற்றும் கேள்விகள் நிறைந்த உலகம்

குழந்தைகளின் உலகம் முழுவதும் விளையாட்டுகள் நிறைந்தது. எல்லா செய்திகளையும், எல்லாவற்றையும் விளையாட்என் அடிப்படையிலேயே பார்க்கின்றனர் குழந்தைகள்.

பசி, தாகம், வெயில், பனி, குளிர் எல்லாவற்றையும் பொருட்படுத்தாது விளையாட்டினை மையமாக கொண்டே அவர்களின் உலகம் பயனித்துக் கொண்டிருக்கின்றது.

வுpளையாட்டு உலகத்தில் தற்போது 'பொம்மைகள்' மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. தன்னிடம் பல பொம்மைகள் இருப்பதை குழந்தைகள் கர்வமாக எண்ணும் மனப்பாங்கினைக் காண முடிகின்றது.

'அந்தப் பிரம்புப் பெட்டியைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வந்து திண்ணை மீது வைத்து விட்டு, முக்கி முனகித் தானும் திண்ணையில் ஏறிப் பெட்டியைத் திறந்து எல்லாவற்றையும் கொட்டிய ராணி 'ஹை.... எவ்வளவோ சொப்பு!' என்று ஆச்சர்யத்தில் கூவிய குரவைக் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள்.

கேள்விகள் நிறைந்த உலகம்

குழந்தைகள் வாய் பேச ஆரம்பித்த உடன் வார்த்தைகளை அறிய வினா எழுப்புவர். வுளர வளர கேள்வி கேட்டு அனைத்தையும் அறிய முயலுகின்றனர். சில நேரங்களில் அவர்களின் வினா பெற்றோர், ஆசிரியர்இ மூத்தோர் அனைவரையும் அதிசயிக்கும் வண்ணம் வினாக்களை எழுப்புகின்றனர்.

ஆராயும் மனப்பாங்கில் குழந்தைகள் இருப்பதே இதன் அடிப்படையாகும். இந்தப் பழக்கத்தை ஆரோக்யமாக அதிகப்படுத்தினால் குழந்தைகளின் அறிவுத் திறன் வளர்ச்சி அடையும்.

இக்கதையின் இரு குழந்தைகளும் கேள்விகளை கேட்கின்றனர். பெரிய வீட்டுக் குழந்தை ஏழைக்குழந்தையிடம் பல வினாக்களை கேட்டு வியக்க வைக்கிறாள். வீடு எங்கே? ஏன் சட்டை போடலை? தம்பி பாப்பாவா? தங்கச்சி பாப்பாவா? உனக்கு பொம்மை இருக்கா? ஏன்று அடுக்கடுக்காய் வினாக்களைத் தொடுக்கிறாள்.

'ஆமா எனக்கு தந்தை இல்லே? ......
எங்கே இருக்கு?'

'எங்கே உங்க வீதிலேயா?

உங்க வீடு எங்கே'.......

ஏழை வீட்டுக் குழந்தையும் தன் அம்மாவிடம் நமக்கு ஏன் சட்டை இல்லை? செருப்பு இல்லை? என்று கேள்விகள் கேட்கிறாள்.

இவ்வாறு குழந்தைகள் 'யதார்த்த உலகில்' விளையாட்டும் வினாக்களையும் கொண்டு பட்டாம்பூச்சியாய் வலம் வருகின்றனர். வளர வளரவே பேதங்களும், அறியாமைகளும் குடியேறுகின்றன.

கு.அழகிரிசாமி(ராஜா வந்திருக்கிறார்)

இவர் கோவில்பட்டி அருகே உள்ள இடைச்சேவல் சத்திரப்பட்டி கிராமத்தில் பிறந்தவர். 1943-ஆம் ஆண்டு ஆனந்த போதினியில் இவருடைய 'உறக்கம் கொல்லுமா' என்ற முதல் சிறுகதை வெளியிடப்பட்டது. 1970-இல் அன்பளிப்பு சிறுகதைத்தொகுப்பிற்காகச் சாகித்ய அகாடமி விருதினைப் பெற்றார்.

கதைக்கரு

பணக்கார வீட்டுக்குழந்தையும் அருகில் உள்ள ஏழைக்குழந்தைகளையும் காண்பித்து, ஏழைகள் வாழ்க்கையில் அமையும் சிறு சிறு விசயங்களையும் கொண்டாடும் இயல்பையும் இக்கதை காட்டுகிறது. ஏழைகள் பெயர் அளவிலும் சிறு சிறு மகிழ்ச்சியான தருணங்களையும் ராஜாவாக கொண்டாடுகின்றனர் என்பதை கதைக்கருவாகக் கொண்டுள்ளது.

கதைப்பின்னல்

ஜமீன் வீட்டுப்பையன், அருகிலுள்ள ஏழை வீட்டுக்குழந்தைகளும் ஒரே பள்ளியில் படிக்கின்றனர். அவர்களுக்கு இடையில் விளையாட்டுத்தனமான போட்டிகள் நடைபெறுகின்றன. போட்டிருக்கும் சட்டையில் ஆரம்பித்து புத்தகத்தின் போட்டா போட்டிகள் தொடர்ந்து வீட்டிலிருக்கும் பொருள்கள் யாவையும் கொண்டு போட்டி போடுகின்றனர். ஜமீன் வீட்டுப் பையன் ஒருவன்இ ஏழை வீட்டுக் குழந்தைகள் மூவர். மூன்று குழந்தைகளும் ஒருவருக்கொருவர் அன்போடு இருக்கின்றனர். தனது அண்ணன் தோல்வியடையாது காக்கின்றனர்.

வீடு போகும் வரை போட்டிகள் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. சில்க் சட்டை, கதர்சட்டை, மாடு, கோழி என்றெல்லாம் தொடர்ந்த போட்டி இறுதியில் ஏழை வீட்டுப் பையன் வெற்றி பெறுகிறான்.

ஜமீன் வீட்டுக்கு தீபாவளிக்காக மருமகன் ராஜா வருகிறார். ஏற்பாடுகள், கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. விடிந்தால் தீபாவளி. இரவு ஏழை வீட்டினருகில் ஒரு அனாதை பையன் நிற்கிறான். உடம்பு முழுவதும் சொரி, சிரங்கு, அழுக்கு. ஏழைக்குழந்தைகளின் அம்மா இக்குழந்தையையும் வீட்டிற்கு அழைத்து வருகின்றாள்.

கதை முடிவு

புதிய குழந்தையை ஏற்றுக்கொண்டு, அவனையும் குளிப்பாட்டி, உணவு கொடுத்து, ஆடை தந்து, அவனை ஏற்றுக் கொள்கின்றனர். மறுநாள் ஜமீன் வீட்டுக்கு 'ராஜா' மருமகன் வந்திருக்கிறார் என்று ஜமீன் குழந்தை குறிப்பிடுகிறான். ஏழை வீட்டிலும் அக்குழந்தைகள் 'எங்கள் வீட்டுக்கும் ராஜா வந்திருக்கிறான்' என்பதாய் கதை முடிகின்றது.

போட்டிகளில் ஆர்வம் காட்டும் குழந்தைகள்:

குழந்தைகள் மனம் ஆர்வம் நிறைந்ததாய் இருக்கும். ஏப்போதும் உடன் பயில்பவர்கள், உடன் இருப்பவர்கள், நண்பர்கள் போன்றவர்களிடம் ஒப்பிட்டு கொண்டே இருப்பார்கள். போட்டிகளுடனே வளருவார்கள். போட்டி மனப்பான்மையே குழந்தைகளிடம் மேலோங்கி இருக்கும். ஏந்த ஒரு வேலையையும் போட்டியுடன் செய்யும் போது அவர்கள் விரைந்து முடிக்கின்றனர்.

ஏனக்கு சில்க் சட்டை இருக்கே! உனக்கு இருக்கா? என்று கெட்டிக்காரத்தனமாகக் கேட்டான் ராமசாமி.

'ராமசாமி தன் ஐந்தாம் வகுப்பிற்குரிய இந்திய தேச சரித்திரபாட புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டான். தன்னிடமுள்ள ஒரு சிவிக்ஸ் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டான். இருவரும் 'பாடப்போட்டியை' ஆரம்பித்து விட்டார்கள்!

விட்டுக் கொடுக்காத தன்மை

குழந்தைகளின் மனம் அடம் நிறைந்ததாய் இருக்கும். ஏழைக்குழந்தைகள் தன் அண்ணாவை விட்டுக் கொடுக்காமல் அன்பு காட்டுகின்றனர். 'அன்புடையார் எல்லாம் உடையார்' என்கிநார் வள்ளுவர். அன்பு நிறைந்த ஏழைக் குழந்தைகள் தன் வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டே நிறைவடைகின்றனர். அன்பு இருப்பதால் அக்குழந்தைகள் மன நிறைவுடன் இருக்கின்றர். விருப்பமானவர்களை குழந்தைகளை எப்போதும் விட்டுத் தர மாட்டார்கள். இது இக்கதையில் வெளிப்படுகின்றது.

அண்ணன் பதில் சொல்லாமல் தயங்கும் நேரத்தில் முதல் வகுப்பு படிக்கும் பெண் பதில் கூறி அண்ணனை வெற்றியடையச் செய்கிறாள்.

';எனக்கு சில்க் சட்டை இருக்கே! ஏன்ற ராமசாமியின் கேள்விக்கு, அண்ணன் தயங்குவதைப் பார்த்து

ஐயோ! சில்க் சட்டை எதுக்காம்? ஷீம் லேசா சருகு மாதிரி இருக்கும். சீக்கிரம் கிழிஞ்சு போகும். (செல்லையாவின் சட்டையைக்காட்டி) இதுதான் கனமாயிருக்கு ரொம்ப நாளைக்கு கிழியாம இருக்கும். நல்லாப் பாரு! என்று மிகமிகப் பரிகாசமாகச் சொல்லி விட்டுச் செல்லையாவின் பக்கத்தில் வந்து நின்றாள்'.

புதுமை விரும்பும் எண்ணம்

குழந்தைகள் எப்போதும் ஏதேனும் ஒரு புதுமையை விரும்புகின்றனர். பண்டிகை எனில் புது ஆடை, புதுப்பொருள் போன்றவற்றில் ஆர்வம் உள்ளவர்களாய் இருக்கின்றனர். புது ஆடை, போடும் வரை அவர்களின் மனம் குதூகலமாய் இருக்கின்றனர். மிகுந்த இன்பம் அடைகின்றனர். இக்கதையிலும் குழந்தைகள் தீபாவளி பண்டிகைக்கான துணியினை எதிர்பார்த்து ஆர்வமுடன் இருக்கின்றனர்.

'ஐயா வரலையாம்மா?' என்று கேட்டாள். அவன் குரலில் சோகம் ததும்பி, ஏமாற்றம் இழையோடிருந்தது.

தாயம்மாள் 'அந்தப் பெட்டியைத் திறந்து பாரு மங்கம்மா' என்றாள்.

மூவருமே ஓடிப்போய்ப் பெட்டியைத் திறந்தனர்.

பெட்டிக்குள்ளே இருந்த ஜவுளிப் பொட்டணத்தை வெளியே எடுத்து அவிழ்த்துப் பார்த்தனர். மறுநாள் விடிந்த பிறகு ஆரம்பமாகும் தீபாவளி, குழந்தைகளுக்கு அப்பொழுதே ஆரம்பித்துவிட்டது. ஒரே குதூகலம்!

கற்றுக் கொடுக்கும் குழந்தைகள்

குழந்தைகள் மிகப்பெரிய செயல்களை நமக்கு அழகாகக் கற்பிக்கின்றனர். அவர்களின் கள்ளம் கபட மில்லாத மனம், அறியாமை, அன்பு, குதூகலம் கொண்ட இருப்பதால் எப்போதும் புதுமையாய் இருக்கின்றனர்.

இக்கதையில் வரும் குழந்தைகளும் சில சௌ;திகளைக் கற்றுத் தருகின்றனர்.

'குழந்தைகள் துணிகளைப் பார்த்தவுடன் அம்மாவிற்கு துணி இல்லை என்றவுடன் 'உனக்கு இல்லையா?' என்கின்றனர். அன்பு ஆச்சர்யம் தருகின்றது. அநாதையாய் வரும் சிறுவனை முதலில் துரத்துகின்றனர். அருவருப்பான அவன் தோற்றத்தையும், எச்சில் இலை சாப்பிடும் அவன் இயல்பையும் கண்டு ஏற்கவில்லை. அவனுக்கு யாரும் இல்லை, என்று அன்னை சொன்ன உடன் குடும்பத்தில் ஒருவருவராய் ஏற்று அன்பு காட்டுகின்றனர்.

துங்களுக்கு ஆடைகள் இருக்கிறது. புதியதாக வந்தவனுக்கு ஆடை இல்லை. தன் தங்கைக்காக இருப்பதை அவனுக்குத் தரலாம் என்று சின்னப் பொண்ணு அம்மாவிடம் சொல்லும் கணம் 'நம்மை கண் கலங்கச் செய்கிறது'. குழந்தைகளிடம் இருந்து கள்ளம் கபடம் இல்லாத அன்பைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

'புதுத்துணிகளுக்கு மஞ்சள் வைத்து செல்லையாவும் உடுத்திக் கொண்டான். தம்பையாவும் உடுத்திக் கொண்டான். மங்கம்மாளும் பாவாடையும் சட்டையும் போட்டு;க் கொண்டாள். ராஜா......

'தாயம்மாளுக்குத் திக்குத் திசை தெரியவில்லை. எனடனைச் சோதிக்கத்தான் வந்திருக்கேடா நீ!' என்றாள் தாயம்மாள்.

ஆப்போத மங்கம்மாள் எழுந்து வந்து அம்மாவின் கன்னங்களில் தன் உள்ளங்கைகளை வைத்து.....
இப்புறம் ஏதோ ரகசியத்தைச் சொல்வது போலச் சொன்னாள்;

'பாவம்! அவனுக்கு அந்தத் துண்டைக்குடு அம்மா?'.

தொகுப்புரை:

இரு கதைகளும் குழந்தைகளின் உலகங்களை காட்டுவதாய் அமைந்துள்ளது. 'பொம்மை' இல்லாத குழந்தை தன் தம்பியை பொத்தையாக்கி மகிழ்கிறது. ராஜா வசதி அளவில் இல்லையெனினும் பெயரிலும்இ அன்பிலும் ராஜாவாய் கொண்டாடுகின்றனர் ஏழைக்குழந்தைகள். காசுஇ பணம்இ செல்வாக்குஇ பொருள்கள் இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்ட உலகமாய் இருப்பதை இக்கதைகளின் வழியே அறிய முடிகிறது. ஏதிர்பார்ப்பில்லா அன்பு, கள்ளங்கபடமில்லாத மனம்இ எப்போதும் குதூகலம் நிறைந்த மனம்இ போட்டிகள் நிறைந்த மனப்பாங்குஇ அரவணைப்பிந்கு ஏங்கும் மனம் இவைகளைக் கொண்டு 'விளையாட்டுகள்' நிறைந்த உலகமாய் குழந்தைகளின் உலகம் அமைகின்றது என்பதை ஜெயகாந்தன், கு.அழகிரிசாமியின் கதைகள் உணர்த்துகின்றன.

அடிக்குறிப்பு:
1. பக்:65 புதுமைப்பித்தன் முதல் இறையன்பு வரை நியூசென்சரி புக் ஹவுஸ்.
2. பக்:69 புதுமைப்பித்தன் முதல் இறையன்பு வரை நியூசென்சரி புக் ஹவுஸ்.
3. பக்:70 புதுமைப்பித்தன் முதல் இறையன்பு வரை நியூசென்சரி புக் ஹவுஸ்.
4. பக்:64 புதுமைப்பித்தன் முதல் இறையன்பு வரை நியூசென்சரி புக் ஹவுஸ்.
5. பக்:76 புதுமைப்பித்தன் முதல் இறையன்பு வரை நியூசென்சரி புக் ஹவுஸ்.
6. பக்:68 புதுமைப்பித்தன் முதல் இறையன்பு வரை நியூசென்சரி புக் ஹவுஸ்.
7. பக்:62 புதுமைப்பித்தன் முதல் இறையன்பு வரை நியூசென்சரி புக் ஹவுஸ்.
8. பக்:60 புதுமைப்பித்தன் முதல் இறையன்பு வரை நியூசென்சரி புக் ஹவுஸ்.
9. பக்:92 புதுமைப்பித்தன் முதல் இறையன்பு வரை நியூசென்சரி புக் ஹவுஸ்.
 


முனைவர் செ.சரசுவதி
உதவிப்பேராசிரியர்
தமிழ்த்துறை
காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
சத்தியமங்கலம்.



 


 

 

 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்