ஓமந்தூராரின் வரலாற்றைத் தேடி ஒரு நெடும்
பயணம்!
எஸ்.ராஜகுமாரன்
சில
ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அரசியல் தலைவர்களின் வரலாறுகளை வாசித்துக்
கொண்டிருந்தேன். அதில் தமிழ் நாட்டுத்தலைவர்களில் 'ஓ.பி,ஆர்' என்பவரைப்
பற்றி அங்கொன்றும் இங்கொன்றுமாக சில தவல்கள் கண்ணில்பட்டன. அதில் ஒரு
குறிப்பு இது: 1947ல் சென்னை மாகாண முதலமைச்சராக ஓமந்தூர் பி.ராமசாமி
ரெட்யாரை தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர்களும், டில்லி மேலிட காங்கிரஸ்
தலைவர்களும், டில்லி மேலிட காங்கிரஸ் கட்சித் தலைவர்களும்
தேர்ந்தெடுக்க முடிவு செய்து அவரிடம் தகவலைத் தெரிவித்தார். ஆனால் அவர்
உடனே மாகாண முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த முடிவைப்
பரிசீலிக்க மூன்று மாதகாலம் அவகாசம் எடுத்துக் கொண்டார். ஆதன் பின்னரே
சில நிபந்தனைகளுடன் முதலமைச்சர் பொறுப்பேற்க ஒப்புக்கொண்டார்.
இந்தச்செய்தி என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. புதவி நாற்காலியைத் தேடி
அலையும் (அலைக்கடித்த) இந்திய அரசியல் தலைவர்களில் இப்படி ஒருவரா?
அவரைக்குறித்த தவல்களைத் தேடித் தொடங்கினேன். அவரைப் பற்றி 1976ல்
எழுத்தாளர் 'சோமால' 'விவசாய முதலமைச்சர்' என ஒரு நூல் எழுதியிருப்பதை
அறிந்தேன். மறுபதிப்பு இல்லாத அந்நூலைத் தேடி தமிழ்நாட்டின் பல பழைய
நூலங்களுக்கும் அலைந்தேன். இறுதியில் சென்னை 'உ.வே.கா நூலகத்தில்'
அந்நூலின் ஒரு பழுப்பேறிய பிரதி இருந்தது. அவர்களிடம் அனுமதி பெற்று
அதில் ஒரு ஜெராக்ஸ் பிரதி எடுத்துக் கொண்டேன்.
அவருடைய ஓமந்தூர் குடும்பத்தினர் பற்றி விசாரித்து அவர்களைச்
சந்தித்தேன். சென்னை மாகான அரசியல் பதிப்புகளைக் பற்றி ஒருசில பழைய
ஆங்கில நூல்களை வாசித்தேன். எல்லாவற்றையும் தொகுத்து 'ஓமந்தூரார் -
2013ல் விகடன் பிரசுரம்' அதை வெளியிட்டது. அப்பொழுதான் ஓமத்தூராரைப்
பற்றி ஆபூவமான அரசியல் வரலாறு வெளி உலகத்துக்கு வெளிச்சமானது'.
அவ்வாண்டு சென்னை புத்தகக்கண்காட்சியில் சிறந்த 5 நூல்களில் ஒன்றாக
விற்பனையில் அந்நூல் சாதனை படைத்தது!.
அவரைப்பற்றிய தனிவாழ்க்கையும் பொது வாழ்கையும் எனக்குள் பல கேள்விகளை
எழுப்பிக் கொண்டே இருந்தன. 100 சதவிகித அரசியல் நேர்மையாளர்.
அப்பழுக்கற்ற தனிமனித தூய்மையாளர் என வாழ்ந்து மறைந்த ஒரு மாமனிதனுக்கு
தமிழக அரசியல் வரலாற்றில் - இந்திய அரசியல் வரலாற்றில் சிறு இடம் கூட
இல்லையே ஏன்? காங்கிரஸ் கட்சியின் தமிழக வரலாற்றில், காமராஜருக்கு 'ரோல்
மாடலாக' இருந்த ஒரு தலைவருக்கு, அவருக்கு இருக்கும் ஒரு பதிவுகளில் பாதி
கூட ஓமத்தூராருக்கு இல்லையே ஏன்?
'இந்திய வரலாறு – காந்திக்குப் பிறகு'
(India
After Gandhi)
என்றும்; புகழ்பெற்ற, ஓமந்
வரவாற்று நூலை ஆர்வமுடன் வாசித்தேன், ஓமந்தூராரைப் பற்றிய குறிப்புகள்
ஏதும் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன். ஆதன் ஆசிரியர் திரு.ராமச்சந்திரா
குஹா ஒரு சிறந்த வரலாற்றாய்வாளர். ஆனால் அதிலும் ஏமாற்றமே மிஞ்சியது. 'ஹைதராபாத்
சமஸ்தான மீட்பு நடவடிக்கையைப் பற்றி எழுதும்போது, ஓரிடத்தில்
எழுதுகிறார் இப்படி: 'சென்னை மாகாண முதலமைச்சரும் இதுபற்றி டில்லி
அரசாங்கத்துக்கு எச்சரித்துச் கொண்டிருந்தார்'.
ஆனால் உண்மை வேறு, சுதந்திரத்குப் பிறகான இந்திய வரலாற்றில் 500க்கும்
மேற்பட்ட சமஸ்தானங்களை ஒருங்கிணைந்து, இந்தியாவை ஒன்றுபட்ட தேசமாக
உருவாக்கியதில் சர்தார் வல்லபாய் பட்டேலின் பங்களிப்பு மகத்தானது.
அதுவும் இந்திய அரசியலில் குறைக்கப்பட்ட வரலாறுதான்! அதில் ஹைதராபாத்
சமஸ்தானம் மிகப்பெரும் தலைவலியாக உருவெடுத்தது. அது, ஒரு கட்டத்தில்
பாகிஸ்தானுடன் இணைக்கப்படும் அபாயகரமான சூழலை நெருங்கியது. வல்லபாய்
பட்டேலுடன் இணைந்து, அந்தச்சதியை முடியடித்து ஹைதராபாத்தை
மீட்டெடுத்ததில் ஓமத்தூராரின் பங்களிப்பு மகத்தனானது.
புத்தகம் என்பது ஒரு ஊடகம். இன்று காட்சி ஊடகம் புத்தகத்தை விட
வீரியமாக உள்ளது. காட்சி ஊடகத்தின் எல்லைகள் நீண்டு விரிவடைந்துள்ளது.
அதனால் இன்றைய இந்தியாவின் இளைய தலைமுறையினரின் கவனத்துக்கு
ஓமத்தூராரின் ஒப்பற்ற வாழ்கையை ஒரு ஆவணப்படமாக உருவாக்க முடிவு செய்தேன்.
ஓமத்தூரார் பற்றிய ஒளிப்படங்கள், வீடியோ படங்களைத் தேடத் தொடங்கினேன்.
ஓமந்தூராரின் மேல் அன்பும் மரியாதையும் கொண்டிருந்த சிலரிடம் என்
எண்ணத்தை வெளிப்படுத்தினேன். சில ஆண்டுகள் முயற்சிக்குப் பின்
‘C.P.R.A’
என்ற அமைப்பினர் ஆவணப்பட
உருவாக்கத்துக்கு ஒரு சிறுதொகையை அளிக்க முன்வந்தனர்.
ஆறுமாத காலம் ஒளிப்படம், வீடியோ, அவரைப்பற்றிய ஆவணங்கள் தேடல், ஆறு மாத
காலம் படப்பிடிப்பு என முழுமையடைந்து தற்பொழுது ஓமந்தூரார்
முதல்வர்களின் முதல்வர்' என்ற எனது நூலின் பெயரிலேயே அந்த ஆவணப்படத்தை
நிறைவு செய்து வெளியிட்டுள்ளேன்.
முதலமைச்சர் ஆன உடன் ஓமந்தூரார் கட்டாயமாகத் தவிர்த்த, முதலமைச்சர்
அலுவலக சம்பிரதாயங்களில் ஒன்று – பத்திரிகை பேட்டிகளைத் தவிர்த்தது.
அதனால் அவர் குறித்த புகைப்படங்களும், வீடியோ பதிவுகளும் இல்லை. 'முதலமைச்சரும்,
மந்திரிகளும், சட்ட மன்ற உறுப்பினர்களும் மக்கள் பனி ஆற்ற மட்டுமே
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்' என்பது அவரின் உறுதியான அரசியல்
நிலைப்பாடு.
ஆனால் அதுதான் இன்றைய தலைமுறைக்கு அவரை அறிமுகப்படுத்த தடையாக
அமைந்துள்ளது. அவருக்கு புகைப்படங்களோ வீடியோ பதிவகளோh இல்லாமல்
போனதுக்கு அதுவே காரணம். இருப்பினும் நான் மனம் தளரவில்லை. ஏதேனும்
கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர் குறித்த தேடலைத் தொடர்ந்தேன். சில
அபூர்வமாக புகைப்படங்கள் கிடைத்தன. அவை குறித்த சரியான தகவல்கள்
கிடைக்கவில்லை. அவற்றை இந்த ஆவணப்படத்தில் இணைத்துள்ளேன்.
அவரின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பு தமிழக அரசின் பாடத்திட்டத்தில்
இடம்பெற வேண்டும். சென்னையில் அவருக்கு சிலைவைக்கவேண்டும். பாராளுமன்ற
இந்தியத்தலைவர்களின் வரிசையில் அவரது படம் இடம் பெற வெண்டும் என்ற
கேறிக்கைகளை ஆவணப்படத்தில் பதிவு செய்துள்ளேன்.
வரலாற்றை எழுதுபவர்கள் சிலவற்றை மறைக்கலாம். புதுதைக்கலாம். ஆனால் காலம்
அதை அனுமதிக்காது. மீண்டும் புதைத்தவரலாறுகள் பூமியில் மேல் எழுப்பும்!
இது ஓமத்தூராரின் வாழ்க்கை வரலாற்றில் இப்போது நிஜமாகியுள்ளது.
இத்தகைய மறைக்கப்பட்ட வரலாறுகளை நூலாகவும், ஆவணப்படமாகவும் ஆக்கும் எனது
கலை இலக்கியப் பாதையில் தொடர்ந்து நடக்கிறேன் நம்பிக்கையின்
வழித்துணையோடு!.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|