எம்.ஜி.ஆர் என்னும் ஜீவ நதி - 2
முனைவர் செ.இராஜேஸ்வரி
தன்மானம் ஊட்டும் தந்தையாக எம் ஜி ஆர்
‘சாதாரணமாக நான்கைந்து வயது குழந்தைகள் கூட வீட்டில் நான் தான் எம் ஜி
ஆர் நீதான் நம்பியார் என்று சொல்லிக்கொண்டு விளையாடுகிற காட்சியை
எங்கும் காணலாம், ஒவ்வொரு வீட்டிலும் நடந்த நடக்கக்கூடிய நிகழ்ச்சி இது.
குழந்தை பருவத்தில் ஹீரோயிஸத்தை அவர்கள் மனதில் உண்டாக்கியவர் எம் ஜி
ஆர். ஒவ்வொரு குழந்தையும் தன்னை ஒரு ஹிரோஎவாக நினைக்க வைத்த பெருமை எம்
ஜி ஆரையே சேரும். நான் ஒரு நடிகையாக அல்ல ஒரு குழந்தைக்கு தாயாக இருந்து
சொல்கிறேன். குழந்தைகளுக்கு எதைச சொல்ல வேண்டுமோ அதை சொல்லி பதிய வைக்க
வேண்டும். அந்த வகையில் எம் ஜி ஆரை எவ்வளவு போற்றினாலும் தகும்.
குழந்தைகள் மத்தியில் இப்படித்தான் இருக்க வேண்டும் இப்படித்தான் வாழ
வேண்டும் என்ற இமேஜ் கிரியேட் செய்ததற்காக அவருக்கு நன்றி கூற வேண்டும்’
இவ்வாறு எம் ஜி ஆரை பாராட்டி நன்றி தெரிவித்தவர் நடிகை இலட்சுமி. இது
அவரது கருத்து மட்டும் அல்ல. நாட்டில் பலருடைய கருத்தும் ஆகும்.
ஹீரோவாக ஒருவர் தன்னை கருதிக்கொள்வதற்கும் செயல்படுவதற்கும் உறுதுணையாய்
நிற்பது அவரிடம் உள்ள அபரிமிதமான தன மான உணர்ச்சியே ஆகும். சுய மரியாதை
இயக்கத்தை சார்ந்த எம் ஜி ஆர் தன படங்களில் தனக்கும் தனது வழியில் வர
வேண்டும் என்று கருதிய சிறார்களுக்கும் வசனம் மற்றும் பாடல்கள் மூலமாக
தன்மான உணர்ச்சியை ஊட்ட முயன்றார். தந்தையாக அவர் நடித்த படங்களில்
பாடிய பாடல்களில் இருந்து தன மகனை வளர்ப்பதில் காட்டுகின்ற அக்கறை
குறித்து அறியலாம்.
எம் ஜி ஆர் தன பாடல்களில் சிறார்களுக்குப் பெற்றோரை போற்றுதல்; தமிழ்
மொழிப் பற்று; சுய மரியாதை; பகுத்தறிவு; சாதி மத பேதம் வெறுத்தல்;
போன்ற திராவிட இயக்க கருத்துக்களை வலியுறுத்தினார். குசந்தைகளுக்கு எம்
ஜி ஆர் தன படங்கள் முலமாக ஹீரோ இமேஜில் ஆர்வம் ஊட்டினார். ஹிரோ என்றாலே
தோல்வி இல்லாதவன் எதையும் திட்டமிட்டு செயலாற்றி வெற்றி காண்பவன் வலிமை
குறைந்தோரை பாதுகாப்பவன் வீரதீர சாகசங்கள் செய்பவன் என்பதால் பிள்ளைகள்
அவர் படத்தை பார்க்க விரும்பினர் அவரும் அந்த வாய்ப்பை நன்கு பயன்
படுத்திக்கொண்டு நல்ல பல கருத்துக்களை அவர்கள் மனதில் ஆழமாகப் பதித்தார்.
குழந்தை வளர்ப்பு
ஒரு குழந்தை எப்படி இருக்க வேண்டும் அதனிடம் என்னென்ன கருத்துக்களைச்
சொல்லி வளர்க்க வேண்டும் எனபதை எம் ஜி ஆர் பாட்டுக்கள உணர்த்துகின்றன,
. எம் ஜி ஆர் தந்தையாக போவதாக அறிந்தவுடன் தன் மகன் எப்படி இருக்க
வேண்டும் என்று பணம் படைத்தவனில் ஒரு கற்பனை செய்கிறார். அந்த கற்பனையை
போல கண்ணன் என் காதலனில் ஒரு தாயும் [ஜெயலலிதா] தான் ஒரு மகனை பெற்றதும்
அதை தந்தை [எம் ஜி ஆர்] எவ்வாரெல்லாம் கவனிப்பார் என்று ஒரு கனவு
காண்கிறாள். இவற்றுடன். தந்தை என்ற பொறுப்பில் இருந்து வேட்டைக்காரன்
மற்றும் நான் ஏன் பிறந்தேன் படங்களில் எம் ஜி ஆர் தன பிள்ளைகளுக்கு
பாட்டின் முலமாக என்ன கருத்து சொல்கிறார் என்பதையும் காணலாம். ஒவ்வொரு
பிள்ளையையும் இலட்சியத்தோடு வளர்த்து இநநாட்டுக்கும் தாய்மொழிக்கும்
சேவையாற்றும் தலைமகனாக அவனை உருவாக்கும் பணியில் ஒவ்வொரு தந்தையும்
ஆற்ற வேண்டிய கடமை பற்றி எம் ஜி ஆரின் பாடல்கள் சொல்கின்றன.
வீரத்தை ஊட்டும் தந்தை பொறுப்பில் எம் ஜி ஆர்
எம் ஜி ஆர் தான் நடித்த படங்களில் இரண்டு படங்களில் மட்டுமே பேசி
விளையாடும் வயதுடைய குழந்தைக்கு தந்தையாக நடித்தார். வேட்டைக்காரன்
படத்தில் இவர் மகன் ராஜாவிடம் இவர் செல்லம் கொடுக்கும் தந்தையாகவும்
கண்டிப்பு காட்டும் தந்தையாகவும் நடித்தார். முன்று வயது மகனான் ராஜாவை
காசநோய் பீடித்த தாயிடம் இருந்து பிரித்து வளர்க்க வேண்டி இருப்பதால்
கை குழந்தையாக இருந்த காலம் முதல் அவரே அவனை வளர்த்து வருவார். அப்போது
அவனுக்கு ஒரு பாட்டு பாடி உறங்க வைக்கும் போது அப்பாட்டில் குழந்தைக்கு
வேண்டிய நல்ல வாழ்வியல் கருத்துக்களை எடுத்துரைப்பார். இக்காட்சி.ஒரு
தாயோ தந்தையோ தன் குழந்தையிடம் பேசி தூங்க வைக்கும் நிகழ்ச்சியை
போன்றதாகும். அப்போது அவர்
வெள்ளிநிலா முற்றத்திலே விளக்கெரிய விளக்கெரிய
உள்ளமெனும் தாமரையில் உனைஎடுத்து கொண்டு வந்தேன் எனத்தான் அன்பை
வெளிப்படுத்திய பின்பு வரும் வரிகள்
வேலேடுக்கும் மார்பிலே வீரம் செறிந்த மண்ணிலே
பால் குடிக்க வந்தவனே நடையை காட்டு
பகைவர்களை வென்று வரும் படையை காட்டு
என்று ஆண் பிள்ளைக்கு வீரம் வேண்டும் என்பதையும் அவன் மண்ணின் மாண்பு
அத்தகையது என்பதையும் ஊட்டி வளர்க்க வேண்டும் என்ற கருத்தை இப்பாட்டு
வரிகளின் மூலமாக உணர்த்துகிறார். அடுத்ததாக மொழிப்பற்றை ஊட்டும் வகையில்
திருக்குறளின் மாண்பை தன் மகனுக்கு சொல்கிறார்.
முக்கனியின் சாறெடுத்து முத்தமிழின் தேனெடுத்து
முப்பா லே கலந்து எப்போதும் இனித்திருப்பாய்
என்கிறார் ஆக ஒரு ஆண் மகனுக்கு சிறு வயதிலேயே வீரம் புகட்டப்படவேண்டும்
அவனுக்கு தன மண், மொழி, மரபு பற்றிய பெருமிதம் ஊட்டப்பட வேண்டும் என்று
இந்த பாட்டு, நாட்டில் உள்ள அனைத்து தாய்மாருக்கும் தந்தைமாருக்கும்
எடுத்துக்காட்டுகிறது.
பாரதிதாசன் பாடிய ஆண்பால் தாலாட்டுக்கு நிகர்த்த பெருமை உடையது இப்பாடல்.
[பாட்டை கவிஞர் எழுதினார்; பாடியவர் வேறொருவர்; இதில் இவருடைய பங்கு
என்ன இருக்கிறது? இது ஒரு குழுவேலை தானே என்று சிலர் நினைக்கலாம். ஆனால்
எம் ஜி ஆர் பாடல்களில் என்ன கருத்து இருக்க வேண்டும் அதற்கு எப்படி இசை
அமைய வேண்டும் எவ்வாறு பாட வேண்டும் என எல்லாவற்றையும் முழுக்க முழுக்க
எம் ஜி ஆர் மட்டுமே முடிவு செய்கிறார் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்]
இந்த படத்தில் இந்த எஸ்டேட்டை பாதுகாக்கும் பொறுப்பு நாளை தன மகனுக்கு
இருப்பதால் காட்டுக்குள் போய்வர பயம் இல்லாமல் துணிச்சலாநவநாக அவன் வளர்
வேண்டும் அப்படித்தான் நான் அவனை வளர்க்க போகிறேன் என்பார். அந்த
சிறுவனுக்கு வீட்டுக்குள்ளேயே புலி வேட்டையை கற்று கொடுத்து விளையாட்டு
காட்டுவார். அவன் வைத்து விளையாட கரடிக்குட்டி கொண்டு வருவார்.
வீட்டுக்கு புலி வந்த பொது எம் ஜி ஆர் அதனை தேடி காட்டுக்குள் போஎன பொது
அவர் மகன் புலியை பிடிக்க போகிறேன் என்பான. ஆக வீட்டு ஸூழ்நிலைக்கு
ஏற்ப பிள்ளைகளுக்கு வீரமும் விவேகமும் இருக்க வேண்டும் என்பது இந்த
படத்தில் எம் ஜி ஆர் தன மகனை வளர்ப்பதான் மூலமாக அறியலாம். எனவே
வவனுக்கு பாடும் தாலாட்டில் வீரம் பொங்கும்.
நான் ஏன் பிறந்தேன் படத்தில் இவருக்கு மகளாக நான்கு வயது பேபி இந்திரா
நடித்திருப்பார். ஆனால் அவரிடம் இவர் தனியாக தந்தை என்ற பொறுப்புடன்
பேசும் காட்சிகள் இல்லை. ஆனால் தன தங்கை மக்களுடன் இந்திராவையும்
சேர்த்து வைத்துக்கொண்டு இவர் பாடும் பாட்டு குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த பாடலில் வீரம் விவேகம் போன்ற கருத்துக்கள் இல்லாமல் நற்பண்பு,
நம்பிக்கை மற்றும் சேவை மனப்பான்மை பற்றி பாடியிருப்பார். படத்தின்
கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் ஏற்ப சிறுவர்களுக்கான பாட்டுக்களை அவர்
எழுதி வாங்கியுள்ளார்.
தம்பிக்கு ஒரு பாட்டு அன்பு
தங்கைக்கு ஒரு பாட்டு
வாழ்வில் நம்பிக்கை வளர்வதற்கு இங்கே
நான் சொல்லும் தமிழ் பாட்டு என தொடங்கும் பாடலில் வாழ்வில்
நம்பிக்கை ஊட்டும் வரி பல்லவியிலேயே அமைந்துவிட்டது. னிதராக வாழ்வதற்கு
நல்ல குணம் அவசியம் என்பதை அவர்களுக்கு உணர்த்தும் விதமாக ஒரு மேதையின்
வாழ்க்கை சம்பவம் ஒன்றை சுட்டிக் காட்டி பாடுவார். இது ஒரு தாலாட்டு
பாட்டு போன்ற இராகத்துடன் அமையாவிட்டாலும் இரவில் பாடி பிள்ளைகளை உறங்க
வைக்கும் பாட்டாக அமைந்தது.
மதத்தை ஒதுக்கி மனிதனை நேசிக்க சொல்லும் எம் ஜி ஆர்
ஒருவன்
தந்தையாகப் போகும் செய்தி கேட்டதும் அவன் மனம் கொள்ளும் உற்சாகம் தன
மகன் குறித்து அவனுடைய கற்பனைகளை பணம் படைத்தவன் படத்தில் வரும் பாட்டு
உணர்த்தும் இதுவும் பெற்றோருக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக அமைந்த பாடல்
ஆகும். தன பிள்ளையை வளர்க்க வேண்டிய முறையை ஒரு வீட்டு பெரியவர் போல
இந்தப் பாட்டில் கற்று தருகிறார்.
எனக்கொரு மகன் பிறப்பான் -அவன்
என்னை போலவே இருப்பான்
தனக்கொரு பாதை வகுக்காமல் – என்
தலைவன் வழியிலே நடப்பான்
இந்தப் பல்லவி ஒருவனின் மகன் தன தந்தை செல்லும் வழியில் பயணிக்க
வேண்டும் என்பதை காட்டுகிறது. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பது
அவ்வையின் வாக்கு. அதன்படி தந்தை பின்பற்றும் தலைவனையே மகனும்
பின்பற்றுவான் என்று உறுதிபட சொல்வதாக இப்பாடல் அமைந்துள்ளது. இளையோரை
திமுகவை பின்பற்ற வைக்கும் முயற்சியில் இதுவும் ஒன்றாகும். இவர் தலைவன்
என்று அண்ணாவை சொல்கிறார் என்பது அனைவருக்கும் புரியும்.
ஒரு சிறந்த ஆண்மகன் எப்படி இருக்க வேண்டும் என்று கற்பனை செய்கிறார்.
அனைவருடனும் அண்ணன் தம்பியாக ஒற்றுமையுடன் வாழா வேண்டும் ,நமக்குள்
பிரிவினைகள் கூடாது. இரண்டு வரி கொண்டு மூன்று நெறி கண்ட திருக்குறளின்
வழியில் வாழ வேண்டும். அவன் மற்றவருக்கு நம்பிக்கை நட்சத்திரமாக திகழ
வேண்டும். இது மிகவும் முக்கியமான கருத்து ஆகும். ‘நாளை வருகின்ற வாழ்வு
நமக்கென்று ஏழை முகம் பார்த்து சொல்வான்’ என்ற வரி விரைவில் திமுக
ஆட்சிக்கு வரும்; அப்போது ஏழைகளின் வாழ்வு சிறக்கும் என்ற கட்சி
பிரச்சாரத்தையும் உள்ளடக்கியதாகும்.
மற்ற நடிகரின் படங்களில் நம்பிக்கை ஊட்டும் பாடல்கள்
எழுதப்பட்டிருக்கும் ஆனால் படத்தின் முடிவில் அந்த நம்பிக்கை அற்று
போய்விடும் அவர் தோற்று போய்விடுவார். அல்லது இறந்துவிடுவார். நிஜ
வாழ்வில் அவருக்கும் அந்த பாட்டுக்கும் தொடர்பில்லாமல் இருக்கும். ஆனால்
எம் ஜி ஆர் பாடல்களில் வரும் தன்னம்பிக்கை கருத்து படத்தின் முடிவில்
மெய்ப்பிக்கப்படும். அது தான் பெரிய வேறுபாடாகும். நல்லவன் வாழ்வான்
என்ற கருத்து மெய்ப்பிக்கப்படுவதால் அவரை பலரும் விரும்பினர். தன சொந்த
வாழ்விலும் அதை அவர் நிரூபித்து காட்டினார். அவர் ஒரு வெற்றி திருமகனாக
வாழ்க்கையின் இறுதி வரை இருந்தார் , இன்றும் அவரது வெற்றி குறித்து
பலரும் ஆராய்கின்றனர் ; வியந்து போகின்றனர்.
தன்மான உணர்ச்சி எதற்கு தேவை?
ஈ.வே. இராமசாமி பெரியார் 1925இல் சுய மரியாதை இயக்கத்தை தோற்றுவித்தார்.
பின்பு அதை 1944இல் திராவிட இயக்கமாக மாற்றினார். இந்த இயக்கம்
தொஎந்றுவதற்காந காரணத்தை நாம் அறிந்தால் மட்டுமே திராவிட இயக்கங்களின்
ஐம்பதாண்டு கால அரசியல் வெற்றியையும் தேவையையும் புரிந்துகொள்ள முடியும்.
பெரியார் சுய மரியாதையை அதாவது தன்மானமத்தை வலியுறுத்தி இயக்கம்
தொடன்கியிருக்காவிடில் இன்றும் ஒடுக்கப்பட்ட பட்டியல் சாதியினரும்
பிற்படுத்தப்பட்ட சாதியினரும் கல்வி அறிவில்லாமல் உடை உடுக்கவும்
உணவுண்ணவும் வீடுகள் கட்டி குடியிருக்கவும் உரிமையில்லாமல்
ஒடுங்கிகிடந்து இருப்போம். அக்காலத்தில் பெண்களுக்கு ஜாக்கெட் அணியும்
உரிமை இல்லை. வெள்ளி வெண்கல பாத்திரங்கள் பயன்படுத்தும் உரிமை பிராமணர்
குடும்பங்களுக்கு மட்டுமே இருந்தது. திண்ணை வைத்து வீடு கட்டி வாசல்
வைக்கும் இருக்கும் உரிமை அனைவருக்கும் கொடுக்கப்படவில்லை. வீட்டின்
வாசல் இரண்டடி உயரம் மட்டுமே இருக்க வேண்டும். உழைப்பாளி வர்க்கத்தினர்
முட்டிக்கு மேலே மட்டுமே உடை உடுத்த வேண்டும். மேல்துண்டு அணியும் உரிமை
கிடையாது இதனால் தான் திராவிட முன்னேற்ற கழகம் உதயமானதும்
கட்சிக்காரர்கள் தோளில் நீளமான துண்டை அணிந்தனர்,
குமரி மாவட்டத்தில் பெண்கள் மேலாடை அணியகூடாது என திருவாங்கூர்
சமஸ்தானத்தில் சட்டம் இருந்ததால் தோள் சீலை போராட்டம் என்ற பெரிய
போராட்டம் நடந்தது. மேலே தோளில் சேலையோ துண்டோ போட்ட பெண்கள் தீ வைத்து
கொல்லப்பட்டனர் அவர்களின் மார்பு அறுத்து எறியப்பட்டது அவர்கள் பாலியல்
வன்முறைக்கு உள்ளானார்கள் இதனால் பலர் கிறிஸ்தவ சமயத்தில் சேர்ந்தனர்.
பெண்களை அரை நிர்வானமாக்கும் மதம் எங்களுக்கு வேண்டாம் என அவர்கள் மதம்
மாறினர். மதத்தின் பெயரால் சுய மரியாதையை இழந்த மனிதர்கள் வாழ்ந்த காலம்
ஆதலால் எம் ஜி ஆர் தன திராவிட இயக்கத்தின் கருத்துக்களை சமூக
சீர்திருத்த நோக்கில் தன பாடல்களில் புகுத்தினார்.
உன் நரம்போடு தான் பின்னி வளரனும் தன்மான
உணர்ச்சி
என்று அரசிளங்குமரியில் அவர் பாடுவதற்கு காரணம் அனைத்து சிறார்களும்
அவர்கள் காலத்திலாவது மதமென்னு பேய் பிடியாதிருக்க வேண்டும் என்ற
வள்ளலாரின் கருத்தின் வழியில் மதத்தை விட்டொழித்து மான மிகு வீரர்களாக
உருவாக வேண்டும் என்பதே ஆகும்.
வாழ்வில் வெற்றி பெற முதல் வழி தன்னம்பிக்கையும் கடின உழைப்பும் ஆகும்
என்பதை தன ஒவ்வொரு பாட்டிலும் காட்சியிலும் சுட்டிக் காட்டியவர் எம் ஜி
ஆர். அவர் கையெழுத்திடும் போதும் ;உழைப்பவரே உயர்ந்தவர் என்று எழுதி கை
எழுத்திடுவார்.
தன மகன் எப்படி இருப்பான் என்று கற்பனை செய்யும் பாட்டில் இன்னொரு
முக்கிய கருத்தும் சொல்லப்பட்டிருக்கிறது. அக்காலகட்டத்தில் இந்தி
திணிப்பை எதிர்த்து தமிழ் ஆர்வலர்கள் மத்திய மாநில அரசுகளோடு போராடி
வந்தனர். அப்போது பலரும் தாய்மொழியாம் தமிழுக்காக தன இன்னுயிரை ஈந்தனர்.
இந்தக் கருத்தையும் பாட்டில் சேர்த்துள்ளார் எம் ஜி ஆர்.
உயிரை தமிழுக்கும் உடலை மண்ணுக்கும்
உதவும் நாள் கண்டு துடிப்பான்
சுற்றி பகை வந்து சூழும் திரு நாளில்
வெற்றி தோள் தட்டி முடிப்பான்
தமிழுக்காக தன உயிரை கொடுக்க வேண்டும் நாட்டிற்காக தன உடலை அர்ப்பணிக்க
வேண்டும் அவனே சிறந்த ஆண்மகன் என்ற வரைவிலக்கணத்தை இப்பாட்டின் மூலம்
வகுத்து தருகிறார்.
இவ்வாறு ஒரு பாட்டிலேயே ஒரு சிறந்த ஆண் குழ்ந்தை எப்படி இருக்க வேண்டும்
அதை எப்படி வளர்க்க வேண்டும் என்று பாடம் புகட்டுகிறார் வாத்தியார்.
தாயின் கனவில் தந்தையாக வந்து பரஸ்பர மரியாதை
வலியுறுத்தல்
தந்தையாக கனவு கானும்போதும் தந்தையான பிறகும் குழ்ந்தை வளர்ப்பில்
அக்கறை காட்டுவது பற்றிய பாடல்களை அடுத்து கால் ஊனமுற்ற ஒரு தாய் தன
கனவில் தன கணவன் தன பிள்ளைக்கு ஒரு தந்தையாக தன பொறுப்பை நிறைவேற்றுவது
குறித்து கனவு காண்பதாக அமைந்த பாட்டிலும் தந்தையின் பொறுப்புணர்ச்சி
விளக்கப்படுகிறது. நல்ல வழியை பிள்ளைகளுக்கு காட்ட வேண்டியது ஒரு
தகப்பனின் கடமை பிள்ளைகள் நாம் சொல்லும் அறிவுரைக்கு காதை மூடிக்கொள்வர்
ஆனால் கண்களை விரித்து பார்த்து நமது நடைமுறைகளை நம்பிக்கையை
பின்பற்றுவர். அவர்கள் எதிர்பார்ப்பது நல்ல முன் மாதிரிகள் எனவே எம் ஜி
ஆர் தன தலைவனை அறிஞர் அண்ணாவை நல்ல முன் மாதிரியாக குழந்தைக்கு
காட்டுகிறார். அண்ணாவின் வழியில் நடந்தால் அவன் மானமிகு மனிதனாக தன்மான
சிங்கமாக வருவான். தாய்மொழ்ளியை நேசிப்பான். எல்லோஎரையும் சாதி மத
பேதமின்றி உடன்பிறப்பாக கருதுவான். மதத்தை மதிக்காமல் மனிதனை மதிப்பான்.
கண்ணன் என் காதலன் படத்தில் வரும் கனவு பாட்டில் குழந்தையை குளிப்பாட்டி
சீராட்டி பாராட்டும் எம் ஜி ஆர் தன மகன்
சரித்திரம் புகழ்ந்திடும் அறிஞரின் வழி நடப்பான்
என்கிறார். அதற்கு அந்த தாய்
இருப்பதை கொடுப்பதில் தகப்பனின் பேர் எடுப்பான்
என்கிறாள். தன மகன் தந்தையை போல் வள்ளலாக வருவான் என்று மகிழ்கிறாள்.
ஒரு குழந்தையிடம் தந்தை மற்றும் புகுந்த வீட்டாரை பற்றி ஒரு தாய்
உயர்வாக மட்டுமே பேச வேண்டும்; இழிவாகப் பேச கூடாது என்பதற்கு இந்த வரி
ஒரு நல்ல சான்று. இந்தப்பாட்டில் குஜந்தையின் தந்தை அதன் தாயைப்
புகழ்வதும் அந்த தாய் தன கணவனை புகழ்வதுமாக ஒரு ஆதர்ச தம்பதியாக அந்த
பெற்றோர் திகழ்வர். இன்றைக்கு பல குடும்பங்களில் தந்தையை தாய்மார்
கேவலமாக பேசுவதும் அதை பார்த்து பிள்ளைகளும் அப்பாவை மரியாதை இல்லாமல்
பேசுவதும் சகஜமாகிவிட்டது. இது தவறான போக்காகும். தாய் தந்தைக்கு
இடையில் பரஸ்பர அன்பும் மதிப்பும் மிகவும் முக்கியம் என்பதை இந்தப்
பாடல் நமக்கு உணர்த்துகிறது.
இவை தவிர இன்னும் சில படங்களில் கைக்குழந்தையிடம் எம் ஜி ஆர் பாடும்
பாட்டுக்கள் உண்டு. அவற்றை குறித்து வேறு தலைப்புகளில் காணலாம்.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|