அந்நியர்களும் அறிந்திரா வானவூர்திகளும் (ALIENS & UFO)

கனி விமலநாதன்


அறிவியற் தொடர் - 7

அந்நியர்களின் மரபணுப் பரிசோதனை

வறிய இணைப்பென ஒன்றில்லை எனக் கூறும் யூஎவடஓலோயிற்றுகள், மனிதர்களுக்கான தோன்றலின் முழுமைக்கான காரணமாக ஏலியன்களின் ஆதி அல்லது முதல் மனிதர்களிற் செய்த மரபணுப் பரிசோதனையைக் கூறுகின்றார்கள். அதனைத்தான் இனிப் பார்க்கப் போனிறோம். அதற்கு முன்னர் இன்னொரு அந்நியர்களின் பதிவினைப் பார்ப்போம்.

1971ம் ஆண்டு ஓகஸ்து மாதம் 17ம் திகதி அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல் எனும் இடத்தில் யோன் கொட்யஸ் என்பவரும் பேற் றேட்றிகஸ் என்பவரும் அதிகாலை 2 மணியளவில் தமது வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்கள். வழியில் அவர்களது வாகனத்திற்கு முன் இரண்டு வித்தியாசமான, ஒருநாளுமே அவர்கள் கண்டிராத பிராணிகளைக் கண்டார்கள். அவை மிகவும் சுருக்கங்கள் கொண்ட, மூளையின் அமைப்பில் இருந்தன. மிகவும் பெரியனவான அவ்விசித்திரப் பிராணிகளை ஆச்சரியமாக உற்றுப் பார்த்துவிட்டு இருவரும் வீடு திரும்பினார்கள். வீடு திரும்பியவர்கள் தாம் இரண்டு மணித்தியாலங்களைத் தொலைத்து விட்டதை அதாவது தாமதமாக வந்ததை அறிந்து கொண்டார்கள். அதனையிட்டு அவர்கள் பெரிது படுத்தவில்லை. ஆனால், தொடர்ந்து வந்த நாட்களில் அவர்கள் நித்திரையின்றி அவதியுற்றார்கள்.

தோடர்ந்து வந் நித்திரையின்மையால் அவதிப்பட்ட அவர்கள், ஈற்றில், சில வருடங்களின் பின்னர் கொட்யஸ் அவரது வைத்தியர்களினால் மனோவசியச் சிகிட்சைக்குட்படுத்தப்பட்டார். மனோவசியச் சிகிட்சைக்குட்படுத்தப்பட்ட கொட்யஸ் ஆச்சரியமான பல விடயங்களை, மனோவசிய ஆழ்உறக்க நித்திரையின் போது கூறினார். இரண்டு மணித்தியாலங்களைத் தொலைத்திருந்த அந்தக் குறிப்பிட்டநாளில் அவர் உயர்ந்த, நரை நிறமுடைய மனிதர்களினால், அம்மனிதர்களினது விண்கலத்திற்குக் கடத்திச் செல்லப்பட்டிருந்தார். அவ்விண்கலத்தில் வைத்து அந்த வேற்றுக்கிரக மனிதர்களினால் பல விடயங்கள் கொட்யஸ் இற்கு கூறப்பட்டிருந்தது.

1.) சீரா றிரிகுல்லி என்ற நட்சத்திரக் கூட்டத்தைக் காட்டி அங்கிருந்துதான் தாம் வந்தவர்கள் என அந்த வேற்றுக் கிரக மனிதர்கள் கூறினார்கள்.

2.) ஒரு மெய்யிரம் - மில்லியன் வருடங்களின் முன்னர் புவியில்; அவர்கள் செய்த மரபணுப் பரிசோதனையின் விளைவாகத் தோன்றியவர்களே இன்று பூமியில் வாழும் மனிதர்கள்.

3.) மனிதர்களின் கண்டுபிடிப்புக்களான அணுஆயுதங்களினால் புவி ஒருகாலத்தில் புல் பூண்டுகளே கூட இல்லாத வெறும் கட்டாந்தரை போல ஆகிவிடும்.

து போன்ற சில தகவல்களை கொட்யஸ்சிற்கு அந்த வேற்றுக் கிரக மனிதர்கள் சொன்னதாக மனோவசியச் சிகிட்சையின் போது கொட்யஸ் கூறியிருந்தார். ('ஏலியன் என்சைக்குளோப்பீடியா' என்னும் புத்தகத்தில் உள்ள தகவல் இது.)

கொட்யஸ் மேலும் சில தடவைகள் வேற்றுகிரக மனிதர்களினால் கடத்தப்பட்டு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டார் எனக் கூறுகின்றார். அத்துடன் ஒவ்வொரு தடவையும் பல விடயங்கள் அறிவுறுத்தல்களாக இவரைக் கடத்திய ஏலியன்கள் கூறினார்களாம். சில எதிர்கால நிகழ்வுகள் கூட அவர்களினால் கூறப்பட்டு இருந்ததாம். அவை சரியானவையாக இருந்த போதிலும் கூட, ஏனோ அந்த வேற்றுக் கிரக மனிதர்கள் விடயத்தைத் தன்னால் நம்பமுடியவில்லை எனக் கொட்யஸ் கூறுகின்றார். ஆனால் வேற்றுக் கிரக மனிதர்கள் என்பது உண்மையான விடயம்தான் எனக் கூறும் ஆய்வாளர்கள் இச் சம்பவத்தைத் தங்களுக்கு ஓர் உறுதியான ஆதாரமாக எடுத்துக் கொள்கிறார்கள். கொட்யஸ் போன்றே மனோவசியச் சிகிட்சையின்போதான ஆழ் உறக்கநிலையில் ஏலியன்களால்; தாம் கடத்தப்பட்டோம் எனக்கூறும் சிலர் சாதாரண வேளைகளில் வேற்றுக் கிரக மனிதர்களை தங்களால் நம்பமுடியவில்லை என்கின்றார்கள். இது கொஞ்சம் முரணானது போலத் தெரிகின்றதல்லவா! இவர்கள் வேற்றுக் கிரக மனிதர்களின் வலிமையான மனோவசிய மூளைச் சலவைக்கு உட்படுத்தப்பட்டதன் விளைவாகவே இப்படியாகக் கூறுகின்றாhகள் என ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றாhகள். சரி. இனி மேலே செல்வோம்;.

மனிதராகிய நாமெல்லாம் வேற்றுக் கிரக மனிதர்களின் மரபணுப் பொறியியல் ஆய்வின் விளைவாகவே புவியிலே முழுமையானோம் என்பதைச் சரியென்றே வைத்துக் கொள்வோம். அப்படியாயின் சும்மா வெறுமனே ஆய்வு ஒன்றினைச் செய்துவிட்டு அப்படியேயே விட்டு விட்டுத் தம்வழியே அந்த அந்நியர்கள்; சென்றிருப்பார்கள் என்று எண்ணுகின்றீர்களா? அப்படியென்றால் அது ஆய்வுமில்லை, அதனால் யாருக்கும் எதுவித பயனும்; இல்லை. எனவே தமது ஆய்வின் விளைவு எப்படியுள்ளது என்று காலத்திற்குக் காலம் பார்ப்பார்கள் அல்லவா! தமது ஆய்வின் பயனாகத் புதிய மாற்றம் கொண்ட உயிரினங்கள் (அதாவது மனிதர்களாகிய நாங்கள்) புவியை எவ்விதம் பாவிக்கின்றார்கள்! புவியில் எவ்விதம் நடந்து கொள்கின்றார்கள் என்றெல்லாம் அறிய முற்படுவார்கள். அத்துடன் மனிதர்களாகிய எங்களில்; என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்றெல்லாம் கூட அறிய முற்படுவார்கள், இல்லையா!

இதற்காக அவர்கள் காலத்திற்குக் காலம் எமது பூமியை நோட்டம் விடுவார்கள், விடுகின்றார்கள் எனக் கூறுகின்றார்கள். இதற்காக பூமிக்கு பயணமாகி வரும் வேற்றுக் கிரக மனிதர்களின் வாகனங்கள் சில, நம்மவர்களின் கண்களில் பட்டுவிட என்ன நடக்கும் என்று எதிர்பார்க்கின்றீர்கள்? உயர்தொழில் நுட்பத்தில் இயங்கும் வேற்றுக் கிரக மனிதர்களின் விண்கலங்கள் நாம் முன்பின் அறிந்திராதவை. அவற்றின் செயற்படும் முறைகளைக் கூட நாம் அறிந்ததில்லை. ஆக அவ்விண்கலங்கள் எமக்கு அறிந்திரா வானூர்திகள்தான். இப்படியாகத்தான் இனம்தெரியாப் பறக்கும் பொருட்களுக்கும் புவியில் மனிதவினத்தின் கூர்ப்பிற்குமான தொடர்பைத் தொடர்புபடுத்துகிறார்கள்.

இந்த வேற்றுக் கிரக மனிதர்கள் வெறுமனே நோட்டம் விடுவதுடன் நின்று விடுவதில்லை. காலத்திற்குக் காலம் சிலரைக் கடத்திச் சென்று அவர்களை ஆய்வும் செய்கின்றார்கள். சூழலின் மாற்றத்துடன் அந்த வேற்றுக் கிரக மனிதர்களின் உற்பத்திகளின் விளைவுகளாகிய நாங்கள் எவ்விதம் மாற்றமடைகின்றோம், சூழல் மாற்றத்திற்கு ஏற்ப எவ்விதம் நடந்து கொள்கின்றோம் என்றெல்லாம் மிகக் கவனமாக அவதானிக்கின்றார்கள். இதற்காகத் தமது விண்கலங்களுக்கே மனிதர்களாகிய எங்களில் சிலரை, மிகச் சிலரைத் தெரிந்தெடுத்துக் கடத்திச் சென்று, ஆய்வுகள் செய்த பின்னர் விட்டுவிடுகின்றார்கள். இந்தக் கடத்தல், ஆய்வுகள் என்பன சில சமயங்களில் பரம்பரை பரம்பரையாகவும் நிகழ்கின்றது எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். இது ஒருவேளை பரம்பரையின் ஊடாக மரபணுக்களின் (DNA) வடிவங்களில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை அறிவதற்காகவாக இருக்கலாம் என்பது நமது ஆய்வாளர்களது எண்ணம். இந்த வகையில் அமைந்ததுதான் ஆரம்பத்தில் கூறிய பிரபலமான பாரனி கில், பெற்றி கில் தம்பதிகளின் வேற்றுக் கிரக மனிதர்களின் அனுபவம் என்கிறார்கள்.

இந்த மரபணுப் பொறிமுறை, மூளைவிகாரம் என்பன கொள்கையளவில் ஏற்றுக் கொள்ளக் கூடியவைதான். இக்கருத்தினை அடிப்படையாகக் கொண்டு பல ஆங்கிலத் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. ஒருவேளை நீங்களும் கூட அவற்றினைப் பார்த்திருப்பீர்கள். இக்கருத்தினை அடிப்படையாகக் கொண்ட எனது நாவல்தான் 'விந்தை மனிதர்கள்'.

ஆனாலும் சிலர் இது போதாது என்கின்றார்கள். இதனை உங்களால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளதா? இல்லையெனில் இதற்கு மாற்றாக எதையாவது கூறப்போகின்றீர்களா?

தொடர்ந்து, இது தொடர்பிலேயே இன்னொரு சுவாரசியமான அறிவியற் பகுதியை அடுத்த தடவையில் பார்ப்போம்.





 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்