அந்நியர்களும் அறிந்திரா வானவூர்திகளும்
(ALIENS & UFO)
கனி விமலநாதன்
அறிவியற் தொடர் -
14
சென்ற தடவையில், அனுனாக்கி பற்றியும், கோமோ சேப்பியன்களை நிருபுவினர்
தோற்றுவித்தார்கள் என்ற செய்தியையும் தந்திருந்தேன் அல்லவா. அத்துடன்
இரண்டு படங்களையும் மாதிரியாகக் காட்டியிருந்தேன். அவற்றைப்
பார்த்திருப்பீர்கள் ஆயினும், மீண்டும் அப்படங்களை மாதிரியாக இங்கே
தந்திருக்கிறேன். ஏனெனில், இப்படங்களில் நீங்கள் பார்த்தவற்றை மீட்டுப்
பார்க்கப் போகிறோம். (அனுனாக்கி, அனுநாக்கி எழுத்துப் பேதம் வேண்டாம்.
இரண்டு வகையிலும் நம்மவர்கள் எழுதுகிறார்கள்.)
இப்படங்கள் ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னர் சுமேரியர்கள் தங்களது களிமண்
தகடுகளில் பதித்து வைத்தவையாகும். இவை போன்ற பல படங்கள் உள்ளன. முதலாவது
படத்தில் அனுனாக்கியைக் காட்டியிருக்கிறார்கள். இரண்டாவது படம்
அவர்களின் மரபணுப் பொறிமுறையிற்கான அடையாளப் படமாகும். அனுனாக்கியின்
படத்தைப் பார்த்தால் சிறகுகள் இருந்தாலும் அலங்காரமான தாடியமைப்பு,
கவர்ச்சியான பிடரி மயிரமைப்பு, தலையில் அழகான முடியென ஒரு அரச தோரணை
தெரிகிறதல்லவா! அது அப்படியோ இருக்கட்டும். இன்னொரு விடயத்தையும்
நீங்கள் கண்டு ஆச்சரியப்பட்டிருப்பீர்கள். அது அவரது வலது கையின்
மணிக்கட்டிற் கட்டியிருக்கும் பொருள்தான். இக்காலத்தில் நாங்கள்
பாவிக்கும் கைக்கடிகாரம் போன்றுள்ளதல்லவா! இதன்படி, நிபிறுவினர்
கைக்கடிகாரத்தைப் பாவித்திருப்பார்ளோ என எண்ண வேண்டியுள்ளது. இது
நிபிறுவினர் நேரத்தைப் பற்றி நன்கறிந்வர்களாக இருந்திருக்கிர்கள்
என்பதைக் காட்டுகின்றது. (இந்தக் களிமண் தகடுகள் 1835களிற்
கண்டெடுக்கப்பட்டவை. அக்காலத்தில் உலகினரில் அதிகமானோரிடம்;
கைக்கடிகாரப் பழக்கம் இருந்திருக்குமோ தெரியாது.)
இரண்டாவது படத்தைப் பாருங்கள். இருபுறமும் உதவியாளர்கள் போன்று
நிற்பவர்கள்தான் ஆச்சரியப்படுத்துகிறார்கள். அவர்கள் இருவரும்
கிளிமூக்குக் கொண்ட பறவை முகத்தவர்களாகத் தென்படுகின்றனர். ஒருவேளை
நிபிறுவினர் பறவை முகத்தவரோ அல்லது பறவைகளின் முகம் போன்ற கவசம் அணியும்
பழகமுள்ளவர்களோ என ஐமிச்சப்படும்படியாக உள்ளது. ஏனெனில் சில அனுனாக்கிப்
படங்களில் அனுனாக்கியும் பறவை முகத்தவராகத்தான் தென்படுகிறார். இனி,
அவ்விரு உதவியாளர்களதும் இடதுகைகளைப் பாருங்கள். அதென்ன, ஐயாயிரம் ஆண்டு
முன்னராக அவர்கள் கைகளிற் கைப்பை வைத்திருக்கிறார்கள்! இப்படியாகப் பல
ஆச்சரியங்களை நிபிறுவினரின் படங்களிற் காணலாம்.
இனி, நிபிறுவினர் புவியில் மேற்கொண்ட
Genetic Engineering என்கிற
மரபணுப் பொறிமுறையைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்வோம். இதுதான்
மனிதர்கள் தோன்றுவதற்குக் காரணமாக இருந்திருக்கிறது. அதற்காக
உயிரினங்கள் எல்லாவற்றிலும் காணப்படுகின்ற சில அடிப்படை அமைப்புகளுக்கு
ஒத்ததான சில விடயங்களைத் தெரிந்து கொள்வோம். எங்களின் வசதிக்காக,
அவற்றினைத் தனித்தனியாக எழுதுகின்றேன்.
1) மனிதர்களாகிய நாங்கள் பல்லாயிரக்கணக்கான, குட்டிக் குட்டிக்
கலங்களினால்
(CELLS)
ஆனவர்கள். சராசரியாக ஒவ்வொரு
மனிதருக்கும் 37.2 திரில்லியன் கலங்கள் உள்ளனவென விஞ்ஞானிகள்
கணித்துள்ளார்கள்.
(37.2 திரில்லியன் என்பது எண்ணில் 37,200,000,000,000,000 என்பதாகும்.
ஆடடா! இவ்வளவு எண்ணிக்கையிலான கலங்களா எங்கள் உடம்பில் உள்ளது.
ஆப்படியானால் ஒரு கலம் எவ்வளவு சிறியதாக இருக்கும் என எண்ணுகின்றீர்களா?)
2) இந்தச் சிறிய கலங்கள் ஒவ்வொன்றின் நடுவிலும் 'கரு'
(nucleus)
எனவொன்று இருக்கும்.
3) இக் கருவினுள் நிறமூர்த்தங்கள் என்கிற அமைப்பொன்று இருக்கிறது.
இதனைத்தான் குறோமசோம்
(Chromosome)
என்கிறார்கள்.
4) இந்த நிறமூர்த்தம் என்ற குறோமசோம், டீஎன்ஏ
(DNA – Deoxyribonucleic Acid)
என்பதனால் ஆனது. இந்த டீஎன்ஏ
என்பதை அதன் அமைப்பினுக்கு ஒப்ப, இருபுரி மரபணு எனலாம். இந்த டீஎன்ஏ
சில இரசாயனப் பொருட்களின், வௌ;வேறு ஒழுங்குகளினாலான சேர்க்கையினால் ஆனது.
(கலம் ஒன்றினுள் உள்ள டீஎன்ஏயின் நீளம் 1.6 மீற்றர் என்கிறார்கள். 1.6
மீற்றரும் சுருட்டி மடக்கி சின்னஞ் சிறிய, குட்டிக் கலத்தின்
கருவுக்குள் வைக்கப்பட்டு இருக்கின்றது. ஆகா! என்னே அதிசயம் இந்த
இயற்கையின் விளையாட்டு! என எண்ணுகின்றீர்களா? ஆம், அது அப்படித்தான்.
இன்னமும் ஆச்சரியங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றைப் பாருங்கள். எங்களின்
உடம்பில் உள்ள கலங்கள் எல்லாவற்றிலும், இயற்கை மடித்து வைத்திருக்கும்
இருக்கும் ;டீஎன்ஏ'க்கள் எல்லாவற்றையும் நிமிர்த்தி, ஒன்றாக இணைத்து
விட்டால் எவ்வளவு நீளத்திற்கு போகும் தெரியுமா? இங்கிருந்து கதிரவனின்
(சூரியனின்) தூரத்தைப் போல் ஒன்ரரை மடங்கு நீளத்திற்குப் போகும்
என்கிறார்கள்.)
5) இனி, முன்னர் குறிப்பிட்ட நிறமூர்த்தங்கள் என்கிற குறோமசோம் என்பது
பல 'ஜீன்'களைக் (பநநெ) கொண்டிருக்கும்.
6) இந்த ஜீன் என்பதுதான் எங்களின் பரம்பரை அலகு
(BASIC UNIT)
ஆகும்
(படத்தில்,
கலம், கலத்தில் உள்ள கரு, நிறமூர்;த்தம், டீஎன்ஏ, ஜீன் என்கிற பரம்பரை
அலகு என்பவற்றின் தொகுப்பினைக் காணலாம்.)
இவற்றினைத் தொகுத்துச் சுருக்கமாக இன்னொரு விதத்திற் பார்ப்போம்.
எங்களின் கலமொன்றின் கருவில் உள்ள குறோமசோம்ஸ் என்கிற நிறமூர்த்தங்களில்
எங்களின் பரம்பரை அலகுகள் என்ற ஜீன்கள் உள்ளன. இந்தப் பரம்பரை அலகுகளில்
இரசாயன அடிப்படைகளைக் கொண்ட டீஎன்ஏ இருக்கிறது. இந்த டீஎன்ஏ, எங்களின்
பரம்பரை இயல்புகளைக் காவுகின்றன. ஆக, குறோமசோம்ஸ், ஜீன்ஸ், டீஎன்ஏ
என்பன ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தவை ஆகும்.
இவ்வளவு உயிரியல் விடயங்களுடன் நிருபுவினரின் அறிவியற்
தொழிற்பாட்டினையும் தெரிந்து கொள்வோம். எல்லா உயிரினங்களுக்கும் இந்த
நிறமூர்த்தங்கள் சோடிகளாகக் காணப்படும். கோமோ சேப்பியன்களாகிய மனிதர்கள்
எங்களுக்கு 23 சோடி நிறமூர்த்தங்கள் உள்ளன. அதாவது மொத்தம் 46
நிறமூர்;த்தங்கள் இருக்கின்றன. கோமோ இரெக்ரஸ்சுகளுக்கு 24 நிறமூர்த்தச்
சோடிகள் (48 நிறமூர்த்தங்கள்) இருந்தன. (சிம்பன்சிகள், கொரில்லா,
மனிதக்குரங்குகள், என்பவற்றிக்கு 48 நிறமூர்த்தங்கள் இருக்கின்றன.
நியாண்டர்தல்கள், டினோவியன்கள் என்பவற்றிக்கும் கூட, 48
நிறமூர்த்தங்கள்தான் இருந்திருக்கின்றன.)
நிபிறுவினர் கோமோ இரெக்ஸ்சுகளில் என்ன செய்தார்கள் என்றால், இரண்டு சோடி
நிறமூர்த்தங்களை எடுத்துப் பொருத்தமாக ஒரு சோடி நிறமூர்த்தமாக இணைத்து
விட்டார்கள். இப்படி நிறமூர்த்தங்களை இணைப்பதை ஆங்கிலத்திற்
Fuse
பண்ணுவது என்பார்கள். இதனைத்தான்
மரபணு மாற்றப் பொறிமுறை என்கிறார்கள். இப்படிச் செய்ததினால் இப்போது 23
சோடி நிறமூர்த்தங்களைக் கொண்ட புதிய ஒரு உயிரினமாக, அம்மாற்றத்துக்கு
உள்ளான கோமோ இரெக்ஸ்சுகள் மாறிவிடுகின்றன. அந்தப் புதிய உயிரினம்தான்
கோமோ சேப்பியன்களாகிய நாங்கள் (மனிதர்கள்).
இவ்விபரங்களின்படி பார்த்தால், ஏலியன்கள் என்ற வேற்றுக்கிரக மனிதர்கள்
இருக்கிறார்கள், அவர்களினால்தான் புவியிலே மனிதர்கள் தோன்றினார்கள்
என்று ஆகிறது. இதனைத்தான் 'அந்நாள் அந்நியர்கள்' பற்றி ஆராயும்
ஆய்வாளர்கள் வலிமையாகக் கூறுகின்றார்கள். அந்த வேற்றுக்கிரக மனிதர்கள்
பற்றிய உறுதிப்பாடுகள் எதுவும் இல்லாத போதிலும், நிபிறுவில் இருந்து
வந்த வேற்றுக்கிரக மனிதர்கள் பற்றி 'அந்நாள் அந்நியர்கள்' ஆய்வளர்கள்
கூறுவதையும் பார்ப்போம்.
இம்முறை ஏராளமான உயிரியல் விடயங்களைக் கடந்து வந்ததினால், நிபிறுவினர்
பற்றி, களிமண் தகடுகளை ஆதாரம் காட்டி, அந்நாள் அந்நியர்கள் ஆய்வாளர்கள்
கூறும் அந்தச் சுவையான கதையினை அறிந்து கொள்வதற்கு அடுத்த
தமிழ்ஆதேர்ஸ்.கொம் வரும்வரை காத்திருக்கத்தான் வேண்டியிருக்கிறது.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|