அந்நியர்களும் அறிந்திரா வானவூர்திகளும்
(ALIENS & UFO)
கனி விமலநாதன்
அறிவியற் தொடர் -
17
சென்ற
தடவையில் என்கி பற்றி இன்னொரு சுவையான விபரமுண்டு, இம்முறை கூறுகின்றேன்
என்றேனல்லவா. ஆந்த சுவையான விடத்தில் இருந்து இன்று தொடங்குவோம்.
அனுவிற்கு, தனது இடத்திற்குப் போட்டியாக எங்கே தனது மகன் என்கி
வந்திடுவானோ என்ற பயமும் இருந்தது. உண்மையில் அனு, என்கியை புவியிற்கு
அனுப்பியது அலலுவின் கண்டுபிடிப்புகளுக்காக மட்டுமல்ல. தனது அரசியல்
அதிகாரப் பாதுகாப்பிற்குமாகத்தான். தன்னை விடத் திறமைசாலியான என்கி,
எங்கே நிபுறுவின் புதிய 'அனு'வாக வந்து விடுவானோ என்ற அச்சமும் அவருக்கு
இருந்தது. அதனால், தங்கம் புவியில் இருப்பது உறுதியாக்கப்பட்டால், அதனை
எடுத்து நிபுறுவுக்கு அனுப்பும் முயற்சியில் என்கியைப் புவியிலேயே
தங்கவைத்து, நிபுறுவில் தனது பதவியிற்கு வில்லங்கங்கள் எதுவும்
வந்திடாதபடி செய்திடலாம் என்ற எண்ணமும் இருந்தது, அப்படியேதான் நடந்தது.
புவியில் என்கியின் இருப்பினை உறுதிய்படுத்துவதற்காக, என்லில்
(ENLIL)
என்பவனைப் என்கியிற்குத் துணையாக
இருக்கும் வண்ணம் பின்னர் புவியிற்கு அனுப்புகின்றார். இந்த என்லில்
என்பவனும் அனுவின் மகன்தான். என்கியும் என்லில்லும் அனுவின் வௌ;வேறு
மனைவிகளுக்குப் பிறந்த பிள்ளைகள். அவனுக்கும் நிபுறுவின் தலைவராகும் (அனுவாகும்)
தகமையிருந்தது. இப்படியாக நிபுறுவின் அதிபர் அனு, தனது பதவியைப்
பாதுகாப்பாகத் தக்கவைத்துக் கொள்வதற்கும், நிபுறுவின் தேவைகளைத்
தீர்த்துக் கொள்வதற்குமாய் இராசதந்திர வேலைகளில் ஈடுபடுகிறார்.
புவியில் தங்களை முன்னிலைப்படுத்துவதில் என்கியும் என்லில்லும்
போட்டியிடுகிறார்கள் என்கி சுமேரியப் பகுதிகளிலும் எலில் ஆபிரிக்கப்
பகுதிகளிலும் தங்களது இடங்களை அமைத்துக் கொண்டு தொழிற்படுகிறார்கள்.
இந்தப் போட்டியானது அவர்களின் பரம்பரை பரம்பரையாக நடக்கின்றது புவியில்.
ஈற்றில் என்கியின் கை ஓங்கிய பின்னர், என்கி தன்னைப் புவியின் அனுவாக
அறிவித்து விட்டு, காரியங்களைத் தொடங்குகின்றார். அதன் பின்னராகத்தான்
தங்கத்தை எடுப்பதற்கான வேலைகளில்; மும்மரமாக ஈடுபட்டு மரபணுப்
பரிசோதனைகளில் ஈடுபட்டு, இறுதியில் கோமோ இhரக்ஸ்சசுகளில் இருந்து கோமோ
சேப்பியன்களாகிய எங்களை, மனிதர்களைத் தோற்றுவிக்கிறார். ஆரம்ப நாட்களில்
என்கியின் முயற்சிகளில் என்லில் மிகத் துணையாக இருக்கிறார். என்கியுடன்
இணைந்து என்லில் மரபணுப் பொறிமுறை விவகாரங்களில் முழுமையாகச்
செயற்பட்டார். முதலிற் தோற்றுவிக்கப்பட்டது, ஆதாமல்ல, ஏவாள்தான் எனவும்
இதிற் குறிப்பிடப்பட்டுள்ளது.
என்கி – என்லில் இருவரதும் முயற்சியில் தோற்றுவிக்கப்பட்ட கோமோ
சோப்பியன்கள் ஆகிய எங்களின் இனம் மட்டுமே புவியின் சூழலுக்குத் தாக்குப்
பிடித்து வாழத் தொடங்கியது. ஏன்கியும் என்லில்லும் தங்களது மரபணுப்
பொறிமுறை முறையாற் தோற்றுவித்த மற்றப் பல்லுரு (அல்லது ஈருரு)
உயிரினங்களால், அவை உடல்வலு மிக்கவையாக இருந்தாலும் புவியில் வாழ
முடியாமற் கால ஓட்டத்தில் மெதுமெதுவாக முற்றாகவே அழிந்து விட்டன.
இப்பல்லுருப் பிராணிகளை, கோமோ சேப்பியன்களான மனிதர்களும் பார்த்து,
வியந்தும் பயந்தும் இருக்கிறார்கள். இப்படியான உயிரினங்கள்
அனுனாக்கியர்களுக்குக் கட்டுப்பட்டும் இருந்ததால், அவைகளும்
கடவுள்களுடன் இணைத்துப் பார்க்கப்பட்டன என்றொரு ஊகமும் உண்டு.
காலத்திற்குக் காலம் வானில் இருந்து வந்த நிபிறுவினரை அனுனாக்கிகள் (தேவர்கள்
- கடவுள்கள்) என அழைத்துக் கொண்டார்கள். அவ்வனுனாக்கிகள் எல்லாருக்குத்
பெரியவராகிய என்கியை கடவுள்களின் முதன்மையானர் எனக் கூறி, அவருக்குச்
சிறப்பான மரியாதையையும் செலுத்தினார்கள்.
கோமோ சேப்பியன்களுக்கு- மனிதர்களுக்கு அடங்கி வாழுகின்ற இயல்பு அன்றும்
இருக்கவில்லை. காலத்திற்குக் காலம், நிருபுவினரின் அடிமைகளாக இருந்து,
அவர்களின் கட்டுப்பாடுகள் பிடிக்காமல் அவர்களிடம் இருந்து தப்பி ஓடிக்
காடுகளில் ஒளித்து வாழ்ந்த கோமோ சேப்பியன்களும் உண்டு. இப்படியாகத்
தப்பி ஓடியவர்களில் இருந்துதான் பிந்நாட்களில் வேறுவேறான மனிதக்
குழுக்கள் தோன்றின என்ற கருத்தையும் சில ஆய்வாளர்கள் முன்வைக்கிறார்கள்.
ஏச்.
காடியின் 'டிஎன்ஏ ஒவ் த கோட்ஸ் என்ற நூலில் உள்ள விபரங்களின்
அடிப்படையிலேயேயே மேலே உள்ள விபரங்களை – கதையினைக் கூறினேன். இன்னமும்
பல ஆச்சரியமான விடயங்களை அந்நூல் தன்னுள் அடக்கியுள்ளது. நான் தந்த
விபரங்கள் அந்நூலின் மொழிபெயர்ப்பு அல்ல. இவ்விபரங்களின்
பொருத்தப்பாட்டினை எடுத்துக் கொள்வதும் விடுவதும் உங்களைப் பொறுத்தது.
ஆனால், 'அந்நியர்களும் அறிந்திராத வானவூர்த்திகளும்' என்ற பதத்திற்கு
வலுவூட்டுவனவாக இந்நூலின் விபரங்கள் இருப்பதை யாரும் மறுக்க முடியாது.
குறிப்பாக ஏலியன்கள், யூஎவ்ஓக்கள் என்பவை பற்றிய உறுதிப்பாட்டிற்காகவும்
மனிதக் கூர்ப்பின தவறிய இணைப்புப் பற்றிய பார்வைக்காகவும் இந்த நீண்ட
கதையினை, இன்னொரு நீண்ட கதையின் சுருக்கமாகத் தந்தேன். படத்தைப்
பாருங்கள், பலவகையான விமானங்கள் உள்ளது தெரியும். ஊண்மைதான எனக் கேட்கத்
தோன்றுகிறதா?
அந்நூலில், பழைய நாகரிகங்களின் வல்லமைமிக்க கடவுள்களை இந்த
அனுனாக்கிகளுடனேயே இணைத்துப் பார்க்கிறார்கள். ஹேக்குலிஸ், தோர், கேரா,
இஸ்தர் போன்ற, கிரேக்க, உரோமக் கடவுள்களின் காதற் செயற்பாடுகள், போர்த்
தன்மைகள் போன்றவற்றிக்கும் நிபுறுவினரையே காரணம் காட்டுகிறார்கள்.
மேலும் எங்களிடையே வணக்கத்துக்குள்ளாகிக் கொண்டிருக்கும் இருக்கும்
விஷ;ணு, சிவன், பிரமா போன்ற கடவுள்களையும், அவர்களின் வலிமைமிக்க
செயல்கள், போதனைகள், தத்துவங்கள் போன்றவற்றையும் நிபுறுவின்
அனுனாக்கிகளாகப் ஏன் பார்க்கக் கூடாது என்னும் விதத்திலும் இந்நூலில்;
குறித்துக் காட்டப்பட்டுள்ளது. ஆயர்பாடிக் கண்ணனின் கோபியர்களுடனான
லீலைகளைக் கூட, என்கியின் செயற்பாடுகளுடன் இந்நூலாசிரியர் இணைத்துப்
பார்க்கிறார். தமிழர்களுக்குத் தமிழைக் கற்பித்த சிவனும்
இந்நூலாசிரியரின் பார்வையில் இருந்ர் தப்பவில்லை. எப்படியெனப் பாருங்கள்.
அந்நூலில் 30ம் பக்கத்தில் 'Shiva
the scholar and the ascetic’
என்று குறிப்பிடுகிறார். இப்படிப் பார்க்கையில் 'கல்தோன்றி, மண்
தோன்றாக் காலத்தே முன் தோன்றிய தமிழ்' என்ற பதம் உண்மையானதாகப்
பொருத்தப்பாடானதாக இருக்குமோ என்ற எண்ணமும் எழுகிறதல்லவா.
'கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி முகிழ்த தமிழ்'
'கல்தோன்றி மண் தோன்றாக் காலத்திற்கு முன் தோன்றி முகிழ்த்த தமிழ்'
என்ற விடயம் சார்பான ஒரு சுவையான அனுபவம் எனக்குண்டு. அதனை இவ்விடத்திற்
கூற விரும்புகிறேன்.
2007ம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ரொறொன்ரோ வளாகத்தில் தமிழில்
முதுமாணிப் பட்டத்திற்கான வகுப்பில் இணைந்து படித்துக் கொண்டு வந்தேன்.
விஞ்கானமாணியான நான் அவ்வகுப்பில் இணைவதற்கான கல்வித் தகுதியைப்
பெற்றிருந்தேன். தமிழின் (உலகினதும் கூட) மிகப் பழைய இகை;கண நூலான
தொல்காப்பியம் பற்றிய வகுப்பு நடந்து கொண்டிருந்தது. தமிழ்ப்
பற்றுள்ளவரும் தெளிவான சிந்தனை உடையவருமான எங்களின் விரிவுரையாளர் ஒரு
பேராசிரியர் ஆகும். தேல்காப்பியத்தின் எழுத்ததிகாரம் பற்றித் தனது
விரிவுகளைக் விரிவுபடுத்திக் கொண்டிருக்கையில், 'கல்தோன்றி மண் தோன்றாக்
காலத்தே முன்தோன்றி முகிழ்த் தமிழ்' என்ற பதம் எப்படியோ வகுப்பில் வந்து
விட்டது. அத்துடன் வகுப்பில் அது பற்றிய அலசலும் சுவாரசியமாக நடைபெறத்
தொடங்கியது. வகுப்பில் இருந்த எல்லோரும் தங்கள் தங்கள் கருத்துகளைக்
கூறினார்கள். தமிழ் மிகப் பழைய மொழிதான், அதற்காக இப்படி
மிகைப்படுத்திக் கூறுவதென்பது கொஞ்சம் அதிகப்படியான கூற்றுத்தான் என்று
சிலது (கிட்டத்தட்ட எல்லோரதும்) கருத்தாகவும் இருந்தது. எங்களிலொருவர்
'இப்படியாக மிகைப்படுத்தி மற்ற மொழியாளர்களிடம் கூறுவதென்பது வெக்கமான
ஒன்று' எனவும் கூறினார். எல்லா மாணவர்களுமே கலைமாணிப் பட்டதாரிகள்.
அவ்வேளையில் மௌனமாக இருந்து எல்லோரது கருத்துகளையும் செவிமடுத்து
உள்வாங்கிக் கொண்டிருந்த என்னைப் பார்த்து, எங்களது பேராசிரியர் 'என்ன
கனி, பேசாமல் இருக்கிறீர்கள், நீங்கள் என்ன சொல்லுறீங்கள்?' என என்னைப்
பார்த்துக் கேட்டார்.
நான் என்ன பதில் கூறினேன் என்பதில் இருந்து அடுத்த தடவை தொடர்கிறேன்.
ஏன்ன சரிதானே!
அன்புடன்,
கனி.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|