அந்நியர்களும் அறிந்திரா வானவூர்திகளும் (ALIENS & UFO)

கனி விமலநாதன்


அறிவியற் தொடர் - 18

சென்ற தடவையில் 'கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி முகிழ்த்த தமிழ்' என்ற பதத்திற்கான கருத்துகளும், அது தொடர்பாக எங்களின் பேராசிரியர் என்னிடம் கேட்ட கேள்வி பற்றியும் எழுதி, அதற்கு நான் கூறிய பதிலை இம்முறை தருவதாகவும் கூறியிருந்தேன் அல்லவா. அவ்விடத்தில் இருந்து தொடர்கிறேன்.

அது, விளம்பரம் பத்திரிகையில் 'அந்நியர்கள்' என்ற தலைப்பில் வேற்றுக் கிரகவாசிகள் பற்றிக் கட்டுரைகளைத் தொடராக நான் எழுதிக் கொண்டிருந்த காலம். எனது சிந்தனை வேறுபல கோள்களையும் அவற்றில் உயிரினங்களுக்கள் வாழ்வதற்கான சாத்தியங்கள் பற்றியும் ஆய்நது கொண்டிருந்தது. அதனால் பேராசியருக்கு பதிலழிப்பது எனக்கு இலகுவானதாக இருந்தது. நான் பதிலளித்தேன், 'அறிவியல் வழியிற் பார்த்தால் இக்கூற்று பொருத்தமானது. எமது புவி தோன்றுவாற்குப் பல்வாயிரம் ஆண்டு முன்னராகப் பிரபஞ்சத்தில் (புவியில்) எங்கேயோ ஓரிடத்தில் இப்போதுள்ள புவியின் தன்மையுடைய கோள் ஒன்று இருந்து, அங்கு மனிதர்கள் போன்ற உயிரினம் தோன்றியிருக்கலாம். அவர்கள் தங்களது வழக்கில் கொண்டிருந்த மொழி தமிழாக இருக்கலாம். அவர்கள் தங்களின் அறிவியல் மேம்பாட்டால் எங்கள் புவியிற்கு வந்து தமிழை எங்களுக்குத் தந்திருந்தால், இக் கூற்று மிகப் பொருத்தமானதாக இருக்கும். அப்படியாகச் சிந்திக்கக் கூடியதான பதிவுகள் எங்களிடம் உள்ளது. குறிப்பாக முழுமுதற் கடவுளான சிவன்தான் தமிழை எங்களுக்குத் தந்தார் என்பது பரவலாக எம்மிடையே அழிக்க முடியாத கருத்தாக உள்ளது.' எனக் கூறினேன்.

பேராசிரியரின் முகம் பொலிவுற்றது. இது அவர் முதன்முதலாகக் கேட்கும் கருத்தாக இருந்தாலும் சட்டென பகுத்தாயக் கூடியதான அவரது அறிவியல் ஞானம், எனது கூற்றினை ஏற்றுக் கொண்டதோ தெரியாது, ஆனால் புரிந்து கொண்டதைக் காட்டிக் கொடுத்தது. நான் விட்டவிடத்தில் இருந்து தொடர்வது போலத் தனது கருத்தையும் கூறினார். 'கனி சொல்வதையும் கருத்தில் எடுக்கலாம்தான். சிவபெருமான் எங்கிருந்து வந்தார் என்பதனையும், அவரின் ஆணைப்படி எங்களுக்குத் தமிழைக் கொண்டு வந்த குறுமுனி அகத்தியனின் வேறுபாடன உருவத்தையும் நினைத்துப் பாருங்கள்' என்று கூறிவிட்டு அவை பற்றிய தெளிவுகளை வகுப்பில் எடுத்துக் கூறினார்.

எனது உடலின் பொருந்தாமை, ஒத்துழையாமை போன்ற காரணங்களினால் என்னால் அவ்வகுப்பைத் தொடரமுடியமற் போனது ஒருபுறமிருந்தாலும். 'னல் தோன்றி.....' என்ற சொற்தொடர் குறித்துப் பெருமைப்படக் கூறிய பின்னனி ஒன்றுள்ளது என்பதை சிலர் அறிந்து கொண்டார்கள் என்ற நிறைவு என்னிடம் இன்றும் உள்ளது. அவர்களால் மாத்திரமல்ல, இதனை வாசிக்கும் உங்களால் கூட எனக்கு மன நிறைவு ஏற்படும், ஏற்படுகிறது. இந்தவிடத்தில் எச் காடியின் 'டீஎன்ஏ ஒல் த கோட்ஸ்' என்ற புத்தகத்தில் சிவபெருமான் பற்றிய அசரது கருத்தினையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இப்புத்தகம் 2014ல்தான் வெளிவந்தது என்பதையும் நீங்கள் அறிவீர்கள். ஆனால் 2007லேயே எங்கள் வகுப்பில் இது பற்றிக் கலந்துரையாடி இருக்கிறோம்.

இந்நாட்களில் வேற்றுலக வாசிகளுடனான தொடர்புகளுக்கான பல முயற்சிகள் நடைபெறுகின்றன. ஆம்முயற்சிகளில் எல்லாம் தொடர்பாடல்களுக்காக, விபர விளக்கங்களுக்காக உலகின் பலமொழிகளிற் செய்திகள் அனுப்பப்படுகின்ற. அவற்றில் எல்லாம் எங்களயின் தமிழுக்கு முக்கிய இடமளிக்கப்படுகின்றது. அதற்கான அடிப்படைகளில் முக்கியமான ஒன்றாக இருப்பதும் 'கல் தோன்றி முன் தோன்றாக் காலத்தே முன் தோன்றி முகிழ்த தமிழ்' என்னற கூற்றுத்தான் என்பதை மறக்க வேண்டாம். எமது தமிழையிட்டுப் பூரிப்படையுங்கள், பெருமை கொள்ளுங்கள், உறவுகளே!

அந்நியர்களும் அறிந்திரா வானவூர்திகளும் என்ற தலைப்பின் கீழான எங்களின் அறிவியற் தேடலின் 'மனிதக் கூர்ப்பு' என்ற விடயத்தின் இணைப்புப் பகுதியாகப் பல விபரங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டு வருகிறேன். மறந்து விடாதீர்கள், இது ஒரு பல்கோணப் பார்வையில் உள்ள அறிவியற் பகுதி. எங்களது சிந்தனை ஓட்டங்களைத் தட்டிவிடக் கூடிய ஒரு பகுதி.

உலகின் முதல்மொழியான தமிழை மறந்து அல்லது அதனை விலத்தித் தங்களின் சிந்தனை ஓட்டங்களை ஓடவிட்ட உலகின் அறிஞர்களின் ஆய்வுகள் பற்றிப் பார்த்தோம். ஹோமரின் 'இலியட்' வழியிலே ஓடிப் பார்த்து அந்நாள் அறிவியற் கூறுகளைத் தேடும் அறிஞர்கள், ஏதிலிகளாக இருக்கும் எங்களின் பக்கம் திரும்பிப் பார்ப்பதே இல்லை எனலாம். இன்று நாமிருக்கும் தாழ்நிலையால், இவ்வினம் அன்றொரு நாள் அறிவியல் நிலையில் உச்சத்தில் இருந்தவர்கள் என்று எண்ண முடியாது நிற்கிறார்களோ என்று எண்ணிடத் தோன்றுகிறது. அங்காங்கே இடைக்கிடை சி.வி.இராமன், இராமானுயர், சந்திரசேகர் போன்ற எம்மவர்கள் சிலர் மேலை நாட்டவரின் புருவங்களை உயரவைத்தாலும், அவர்கள் வெளிப்படுத்திய விடயங்கள் மேலை நாட்டவரின் அறிவியலின் வெளிப்பாடுகளின் விரிவுகளாக இருந்தனவே தவிர எமது தமிழின் அறிவியற் செழிப்பினை எடுத்துக் காட்டுபவையாக இருக்கவில்லை.

எல்லாம் சரி, எங்களது பதிவுகளாக வேற்றுக்கிரக மனிதர்கள் பற்றிய பதிவுகள் எதும் இல்லையா என்றொரு கேள்வி எழுகின்றது. அந்தச் சிந்தனை எங்களவர்களிடம் இல்லை என்றில்லை. உள்ளவர்களும் இருக்கிறார்கள். அவர்களின் சில விடயங்களைத் தருகின்றேன். முதலில் குமரிக்கண்டம் பற்றிய சிந்தனை ஓட்டத்தைப் பார்ப்போம். கடலில் அமிழ்ந்து போன குமரிக்கண்டத்தில் அன்றிருந்தவர்கள் வேற்றுக்கிகரகவாசிகளுடனும் தொடர்பில் இருந்தார்கள் என்றொரு ஊகம் சிலரிடம் உள்ளது. (ஒருவேளை அவர்கள் நிபுறுவினராகக் கூடவிருக்கலாம்.) இந்த எண்ணத்தின் அடிப்படையில் அண்மையில் 'கண்டம்' என்றொரு திரைப்படம் வந்தததை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆச்சரியமான சிந்தனை ஓட்டம் அந்தக் கதையினை எழுதியவரிடம் இருந்திருக்கிறது. குமரிக்கண்டத்தவர்கள் உயர் தொழில்நுட்பத்துடன், வேற்றுக்கிரக மனிதர்களுடன் தொடர்பில் இருந்திருக்கிறார்களோ என எண்ணும் வகையில் சுவைபட அப்படத்திற் கூறியிருக்கிறார். எங்களது யாழ்ப்பாணப் பகுதியின் கடலில் இருந்து மீட்கப்படும் (மீனவன் ஒருவனின் வலையிற் சிக்கிய பழுதுபடாத) உடலிலை உயிர்ப்பித்து ஆய்வு செய்வதாக அமைகிறது படம். இவ்வுயிர்ப்பித்த மனிதனின் புரியாத நடவடிக்கைகளும், படத்தின் முடிவில் அம்மனிதன் யூஎவ்ஓ மாதிரியான விமானத்தில் விண்ணிற்குப் பறந்து செல்கிறான். அதனது தொடர்ச்சியும் இருக்கின்றது போன்றதான முடிவுடன் படம் முடிவடைகிறது.

இதேபோலவே க. சுதாகரன்; எழுதிய '6174' என்ற அழகிய நாவலில் குமரிக்கண்ட அழிவின் போது நடந்த கதை ஒன்றினை, கதையின் ஆரம்பமாகக் கொண்டு, தனது கற்பனையின் வடிவில் அதனைச் சுவைபடக் கூறியிருக்கிறார். 6174 என்ற எண்ணின் சிறப்பினைப் பின்னனியில் வைத்துக் கதை பின்னப்பட்டுள்ளது. கோலங்கள் போடுவதின் இரகசியம் போன்ற எமது பழக்க வழக்கங்களின் தார்ப்பரியங்களை விபரித்துக் கூறினாலும் 'எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்' என்பதனை மெலிதாக வலியுறுத்தியிருக்கிறார். அவரது கதையில் நிபுறுவினரின் சாயல் இருக்கின்றதோ என நினைக்கக் கூடியதாகவும் உள்ளது. அவரின் அச்சிந்தனை ஓட்டம், சுமேரியர்களின் களிமண் தகடுகளின் வழியில் வந்திருக்குமோ எனவும் எண்ணத் தோன்றுகிறது. இது, அவர் கற்பனையில் வடித்த ஏலியன்களின் நீண்ட காது என்பவற்றில் இருந்து ஊகிக்கலாம். வுhசித்தவர்களைப் பிரமிக்க வைத்த கதை என்பதையும் கூறுகின்றேன். ரோறொன்ரோவின் நூலகங்களில் இதனைப் பெறலாம்.

எனது படைப்புக்களான 'வியத்தகு விண்வெளி விபத்து', 'விந்தை மனிதர்கள்' என்பவையும் அந்நியர்கள், அறிந்திராத வானவூர்திகள் என்பவை பற்றிய நாவல்கள்தான் இவை கூட, நூலகங்களில் பெறக் கூடியன. ஆர்வமுள்ளோர் வாசித்துப் பார்க்கலாம்.

நான் முன்னரே குறிப்பிட்டிருந்தபடி, சுமேரியர்கள் உண்மையிலே தமிழர்கள் ஆக இருந்திருப்பின் சுமேரியக் களிமண் தகடுகள், அதையொட்டி வந்த பாபிலோனியர்கள், மேவியர்கள், அசீரியர்கள் போன்றவர்களின் களிமண் தகட்டுப் பதிவுகளில் உள்ளவை எல்லாம் குமரிக்கண்டத்தவரின் சொத்துக்களாக இருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஏன் இன்னமும் கூறுவதென்றால் எபிரேயர்களாகிய யூதர்களின் கதைகள் கூடத் தமிழர்களின் கதைகளின், வரலாறுகளின் திரிவுகள்தான் என்றும் கூடக் கருதலாம். ஆதன், ஆதமு, ஆதாம் என்ற பெயர் வடிவங்களைப் பாருங்கள். ஈவ் என்கிற ஏவாள் என்பது கூட, தமிழ்ப் பெயரின் திரிபெனக் கூறுபவர்களும் உண்டு.

இவற்றுடன் இன்று முடித்துக் கொள்கிறேன். அடுத்த தடiவையும் சுவையான இதன் தொடர்ச்சியாக, தாய்வழிச் சமுதாயம் என்பதன் பார்வையுடன் சந்திக்கிறேன்.

அன்புடன்,
கனி.




 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்