பெண் இனம் போற்றும் பெருந்தலைவர் எம்.ஜி.ஆர்
(தொடர் - 2)
முனைவர் செ.இராஜேஸ்வரி
தாய்மார்களின்
தலைமகனாகப் போற்றப்பட்ட எம்ஜிஆர்
உலகமெங்கும்
பரவியிருக்கும் தமிழினத் தாய்மார்கள் தங்களின் தலைப் பிள்ளையாக எம்ஜிஆரை
கருதுவதற்கு பல காரணங்கள் உண்டு. எம்ஜிஆர் தன் தாயைத் தெய்வமாக
மதித்தவர்; தன் தாய்க்கு ஒரு கோயிலை எழுப்பி தினமும் வீட்டை விட்டு
கிளம்பும் போது அந்தக் கோயிலின் வாசலில் சில நிமிடம் நின்று தன் தாயை
வணங்கி விட்டுத்தான் அவர் தன் வேலைகளை கவனிக்க செல்வார்.
திமுகவும் அண்ணா திமுகவும் ஒன்றிணைய முயற்சிகள் எடுக்கப்பட்டபோது
திடீரென்று அதனை மறுத்த எம்ஜிஆர் தன் தாய் கனவில் வந்து திமுகவுடன் சேர
வேண்டாம் என்று தனக்கு உத்தரவிட்டதாக பொதுக் கூட்ட மேடையில் அறிவித்தார்.
இதைப்போலவே ஜெயலலிதா அண்ணா திமுகவில் பல இன்னல்களை அனுபவித்த போது
எந்தச் சூழ்நிலையிலும் கட்சியை விட்டு விலகக் கூடாது என்று தன் தாயின்
படத்தின் மீது எம்ஜிஆர் தன்னிடம் சத்தியம் வாங்கியதாகவும் அதனால்
கட்சியில் தொடர்ந்து இருப்பதாகவும் ஜெயலலிதா ஒரு முறை
தெரிவித்திருந்தார்.
எம் ஜி ஆர் தன் தாயைத் தெய்வமாக மதிப்பதை உண்மை என உணர்ந்த தமிழ் மக்கள்
அவர் தனிக் கட்சி ஆரம்பித்த பிறகு அவருக்கு ஆதரவு அளிக்கும் விதமாக
தங்களின் பெண் குழந்தைகளுக்கு எம்ஜிஆரின் தாயார் பெயரை அதிக அளவில்
சூட்டினர். 1972க்குப் பிறகு பிறந்த பெண் குழந்தைகளுக்கு சத்தியா,
சத்தியப் பிரியா, சத்தியலட்சுமி என்ற பெயர்கள் சூட்டப்பட்டு இருப்பது
ஆவணங்களில் காணப்படும் உண்மையாகும்.
எம்ஜிஆரின் தாய்ப்பற்றை உணர்ந்த தமிழ் இன மக்கள் தமிழின தாய்மார் அவர்
தன் வயிற்றில் பிறந்திருக்கக் கூடாதா என்று ஏங்கி அவரை தனது தலைமகனாக
போற்றினர். நீரும் நெருப்பும் படத்தில் ''கடவுள் வாழ்த்து பாடும் இளம்
காலை நேரக் காற்று'' என்ற எனத் தொடங்கும் பாடலில் முதல் பல்லவியாக
இடம்பெற்றிருக்கும் வரிகள் எம்ஜிஆரின் தாயை தெய்வமாக போற்றி வணங்கும்
கொள்கையைப்,
தாயின் வடிவில் வந்து என் தெய்வம் கண்ணில் தெரியும் அவள்
தாள் பணிந்து நின்றாள் நம் தொழிலில் மேன்மை விளங்கும்
என்ற இந்த வரிகள் வெறும் திரைக்காகப் பாடப்பட்டவை அல்ல. தாய் வழிபாடு
என்பது அவருடைய வாழ்வின் அன்றாட நடைமுறையாகும்.
எம்ஜிஆரின் தாய்ப்பற்று கண்டு போற்றிய தமிழினத் தாய்மார் அவரைத் தன்
குடும்பத்தில் ஒருவராக கருதி எங்க வீட்டுப்பிள்ளை எம்ஜிஆர் என்று அன்பு
பாராட்டினர். மாணிக்கவாசகர் சிவபெருமானைப் பற்றி பாடும்போது ''பால்
நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து'' இறைவன் தன்னிடம் அன்பு
செலுத்துவதாக கூறுவார். தன் குழந்தைக்கு இந்நேரம் பசிக்குமே என்று
குழந்தையின் பசியை நினைத்து அதற்கு பாலூட்டுவாள் ஒரு தாய்.
நல்ல தாயின் நல்ல மகனுக்கு உதாரணமாக திகழ்ந்தவர் எம் ஜி ஆர். ஒரு தாயின்
அனைத்து எதிர்பார்ப்புகளையும் அவர் நிறைவேற்றினார். ஒரு தாயின்
எதிர்பார்ப்பு தன் குழந்தை பசியாற வேண்டும்; தன் பிள்ளை நல்லவனாக வளர
வேண்டும்; ஊரார் போற்றும் உத்தமனாக திகழவேண்டும்; அவன் வல்லவனாக இருக்க
வேண்டும்இ யாரிடமும் அவன் தோல்வியடையக் கூடாதுஇ அவமானப்படக் கூடாது;
அவன் வெற்றித் திருமகனாக விளங்க வேண்டும்இ தீய பழக்கங்களுக்கு
ஆட்படக்கூடாது, பெரியவர்களின் ஆசி பெறுகின்றவனாக அவர்களை மதித்து
நடக்கின்றவனாக இருக்க வேண்டும்; பின்வரும் சந்ததியினருக்கு
முன்மாதிரியாக திகழ வேண்டும்; இளைஞர்களுக்கு வழிகாட்டும் நல்லவனாக
விளங்க வேண்டும்; பெண்களை கண்ணியத்துடன் நோக்கும் சிறந்த பண்புடையவனாக
திகழ வேண்டும், என்பவை ஆகும். இவை அனைத்தும் ஒருங்கே பெற்றவர் எம் ஜி
ஆர் என்பதால் அவர் தமிழினத் தாய்மாரின் இலட்சிய மகனாக்த் திகழ்ந்தார்.
தன்னுடைய மகன் எம் ஜி ஆரை போல இருக்க வேண்டுமென்பது தாய்மாரின்
இலட்சியக் கனவாக இருந்தது.
ஒரு தாய் தன் மகனிடம் கொண்டிருக்கும் பொதுவான எதிர்பார்ப்பாக்கு அப்பால்
இன்னும் சில உலக்ப்பூர்வமான விஷ்யனக்ளும் உண்டு. அவையாவன, அவன் முறையான
வழியில் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும்; தன் வாழ்நாளை மகிழ்ச்சியாகக்
கழிக்க வேண்டும்; தான் சம்பாதித்த பணத்தை நல்ல முறையில் செலவிட வேண்டும்;
ஒரு தாயின் மேற்கூறிய ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் ஒருங்கே
நிறைவேற்றியவர் எம்ஜிஆர். தன் படங்களில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும்
மேற்கூறிய அனைத்துப் பண்புகளும் பெற்றவராக தமிழக தாய்மார்கள்
போற்றப்பட்டார்.
எனவே தமிழின தாய்மார்கள் அவர் மீது கொண்டிருந்த அபரிமிதமான ஒருமித்த
நம்பிக்கை இன்றளவும் அவருக்கு அழியாப் புகழைப் பெற்றுத் தந்துள்ளது.
ஜாதி மத இன பேதமின்றி அவர் மக்களை ஆரம்பம் முதல் இறுதிவரை நேசித்ததால்
மக்களும் இன்று அவரை அவ்வாறு நேசிக்கின்றனர். அவரை எவரும் ஜாதி இனம்
மதம் என்ற குறுகிய வட்டத்துக்குள் சிக்கை வைக்கவில்லை அவர்
தமிழினத்தாருடன் வாழ்ந்திருந்தாலும் அவர் மனித குலத்தின் பொது சொத்து
ஆவார். அவர் இரக்க குணம் கொன்டவராக மனித நேயம் மிக்கவராக இருந்ததால்
ஜாதி மத இனங்களுக்கு அப்பாற்பட்டு அவருடைய உதவிக் கரங்கள் நீண்டன.
மனிதன் என்ற ஒரே அடிப்படையில் அவர் மக்களை கவர்ந்தாரே தவிர சாதி இன மத
அடையாலங்களால் அவர் ஒருபோதும் ஈர்க்கப்படவில்லை. தாய்மை ஓர் உலக பொதுப்
பண்பு அது போல அனித நேயமும் உலக பொதுப் பண்பு எம் ஜி ஆரும் ஓர் உலகத்
தாய் ஸ்தானத்தில் வைத்து போற்றப்படுகிறார். அவர் தாய்க்கு தலை மகனாக
மட்டுமல்ல தாய்மாருக்கெல்லாம் சிறந்த தாயாகவும் வழிகாட்டியாகவும் கூட
விளங்கினார். முந்தைய தொடரில் எம் ஜி ஆரின் பிள்ளை வளர்ப்பு முறைகள்
பற்றி வாசித்திருப்பீர்கள்.
அவ்வையார் பாடியதுபோல ''இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி' என்ற வாக்குக்கேற்ப எம் ஜி ஆர் வாழ்ந்து வந்தார்.
வள்ளுவரது 'ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்இ உயிரினும் ஓம்பப் படும்'
என்ற குறளின் வழியில் அவர் தன் வாழ்க்கையில் உடலை பேணுவதிலும் மனநலத்தை
காப்பதிலும் மிகுந்த கட்டுப்பாடுகளை கொண்டு வாழ்ந்து வந்தார். மனம் போன
படி நடக்கும் பழக்கம் அவருக்கு என்றும் இருந்ததில்லை. அவர் மட்டுமல்ல
அவர் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் அவர் பின்பற்றி வந்த
உடற்பயிற்சியையும் உணவுக்கட்டுப்பாடுகளையும் பின்பற்றினர். தான் மட்டும்
நல்லவனாக வல்லவனாக இருந்தால் போதாது தன்னைச் சுற்றி இருப்பவரும் அவ்வாறு
இருக்க வேண்டும் என்பதில் எம்ஜிஆர் செலுத்திய அக்கறை அவர் காட்டிய அன்பு
தமிழகத் தாய்மார்களின் மனங்களில் பால் வார்க்கும் வகையில் சத்துணவு
திட்டத்தையும் பெரிய தனியார் கல்வி நிறுவனங்களில் கூட இலவசக்
கல்வியையும் மாணவர்களுக்கு வழங்கியது.
எம்ஜிஆர் நடித்த படங்கள் ஒரு தாய் தன் பிள்ளைக்கு செய்ய வேண்டிய கடமையை
செய்தன அவருடைய படங்கள் குழந்தைகளுக்குப் பாடமாக அமைந்தன. அவர் படம்
திரையிடப்படும் திரையரங்குகள் சமுதாயக் கல்வி கூடங்களாக மாறிவிட்டன. ஒரு
குழந்தையிடம் திருடக்கூடாது; பொய் சொல்லக்கூடாது; பெரியவர்களை மதிக்க
வேண்டும்; பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்று ஒரு தாய் கற்பிக்க
வேண்டிய போதனைகளை எல்லாம் அவருடைய படங்கள் பாடல்களாகவும் காட்சிகளாகவும்
கற்பித்து சிறுவர்களின் மனதில் பசுமரத்தாணி போல பதிந்து விட்டன. தமிழகத்
தாய்மார்களீன் பிள்ளை வளார்ப்பு கடமையை எம் ஜி ஆர் தனி ஒருவனாக இருந்து
தன் படங்கள் மூலமாக நிறைவேற்றினார்.
இன்றைக்கு எம்ஜிஆர் ரசிகர்களாக இருக்கும் பலர் எம்ஜிஆரை தன்
வழிகாட்டியாகக் கொண்டு நான் மது அருந்துவதில்லை சிகரெட் பிடிப்பதில்லை
பெற்ற தாயை தெய்வமாகக் கருதி என் வீட்டில் வைத்து பாதுகாக்கின்றேன்
கவனிக்கிறேன் என்று பெருமையோடு கூறுகின்றனர்க் ஒரு தாய் செய்ய வேண்டிய
கடமைகளை எல்லாம் எம்ஜிஆர் செய்த படங்களின் மூலமாகவும் நடித்தோம் தன்
வாழ்க்கையின் மூலமாகவும் வாழ்ந்தும் காட்டி விட்டார். அவருடைய நடிப்பும்
அவருடைய வாழ்க்கையும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து இருந்த
காரணத்தால் ஒரு தாயின் ஸ்தானத்தில் இருந்து தன் ரசிகர்களை குழந்தைகளாகக்
கருதி அவர்களுக்கு நற்போதனைகளை அவ்வழியில் தானும் வாழ்ந்து காட்டி
மக்களுக்கு முன்மாதிரியாக இருந்ததால் அவரை ஒரு தாயாகவோ தாயின்
பதிலியாகவோ ஜளரடிளவவைரவந ழக ய அழவாநசஸ தமிழினத் தாய்மார் போற்றுகின்றனர்.
எம்ஜிஆரின் படங்கள் தாய்மாரின் ஆதரவு பெற்று அவர்களின் குழந்தைகளின்
ஆதரவைப் பெற்றதால் தமிழ் திரையுலகில் அவர் நடித்த காலம் வரை அவரது
படங்களே மிகப்பெரிய வசூல் சாதனையை செய்தன. 1977இல் முதலமைச்சர் ஆகும்
வரை எம்ஜிஆர் திரையுலகில் ஏக போக சக்கரவர்த்தியாக கோலோச்சி வந்தார்.
1977 வரை ஒரு கோடி ரூபாய் வசூல் செய்த படங்கள் மொத்தம் 13. அவற்றில்
பிரம்மாண்ட தயாரிப்பான அவ்வையார் மற்றும் சந்திரலேகாவை விலக்கி விட்டால்
மீதி 11 படங்களும் எம்ஜிஆர் நடித்த படங்கள் மட்டுமே. வேறு யார் நடித்த
படமும் ஒரு கோடி ரூபாய் வசூல் செய்யவில்லை. தமிழினத் தாய்மார்இ இளைஞர்இ
அவர்தம் குழந்தைகள் என இந்த முப்பெரும் பிரிவினரின் ஆதரவைப் பெற்ற
எம்ஜிஆர் நடித்து கோடிக்கணக்கில் வசூலித்த படங்களின் பட்டியலை காண்போம்.
இப்பட்டியல் பாக்யா இதழில் வெளியிடப்பட்டதாகும். 1956இல் மதுரை வீரன்
ஒரு கோடியே 10 லட்சம் வசூலித்தது. இப்படம் அவரை வசூல் சக்கரவர்த்தி
ஆக்கியது. 1958-ல் நாடோடி மன்னன் ஒரு கோடியே 20 இலட்சம் ; 1965ல் எங்க
வீட்டுப் பிள்ளை ஒரு கோடியே 35 லட்சம்; 1968இல் குடியிருந்த கோவில் ஒரு
கோடி ரூபாய்; 1969இல் அடிமைப்பெண் ஒரு கோடியே 40 லட்சம்; 1970இல்
மாட்டுக்கார வேலன் ஒரு கோடியே 35 லட்சம்; 1971 இல் ரிக்க்ஷாக்காரன் ஒரு
கோடியே 40 லட்சம்; 1973 இல் உலகம் சுற்றும் வாலிபன் ஒரு கோடியே 90
லட்சம்; 1974இல் இதயக்கனி ஒரு கோடியே 50 லட்சம் ; 1977இல் இன்று போல்
என்றும் வாழ்க ஒரு கோடியே 10 லட்சம்; அதே ஆண்டில் வெளிவந்த அவரது
மற்றொரு படமான மீனவ நண்பன் ஒரு கோடியே 15 லட்சம் வசூலித்தது. இப்பாடியல்
காட்டும் விவரங்கள் வேறு எவர் நடித்த படங்களும் கோடி ரூபாய் வசூலிக்க
வில்லை என்பதை தெளிவுபடுத்துகிறது. மேலும் உலகம் சுற்றும் வாலிபன் படம்
மூன்று நான்கு கோடி வசூலித்ததாக கூறுவோரும் உண்டு. ஆனால்
ஆதாரப்பூர்வமான ஆவணங்களின்படி மேற்கூறிய வசூல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய பெரும் வெற்றியை தமிழ் திரையுலகில் பெறுவதற்காக எம்ஜிஆர்
தொடர்ந்து எடுத்துக்கொண்ட முயற்சிகள் ஏராளம்.
எம் ஜி ஆர் பெண்களின் மனம் கோணாதபடி தன் பாத்திரப்படைப்பை அமைத்து
கொண்டார். எக்காரணம் கொண்டும் அவர் தவறான பழக்க வழக்கங்களை திரையில்
காட்ட வில்லை பெண்கள் ரசிக்கும் வகையில் மட்டுமே அனைத்து காட்சிகள்
அமைக்க பட்டனவே தவிர அவர்கள் வெறுத்து ஒதுக்கும் வகையிலும் ஆபாசம் எனக்
கருதி கண்ணை மூடிக் கொள்ளும் வகையில் அவருடைய படத்தில் எந்தக்
காட்சியும் இடம் பெறாது. திரவுபதிஇ சந்திரம்திஇ நல்ல தங்காள் பட்ட
துயரங்களூக்கெல்லாம் அவர்கள் குடும்பத்தின் ஆண் உறுப்பினர்கள் காரணம்
என்பதால் எம் ஜி ஆர் தன் படங்களீன் பெண்களை கண்ணீர் விட வைக்கும்
காட்சிகளை வைக்க மாட்டார். அவர் ஒரு பாதுகாவலனாக இருந்து பெனண்களீன்
நமபிக்கையை பெற்றார். அவர் படத்தில் நல்லவனுக்கு அழிவு வருவதும்
கிடையாது; கெட்டவர்கள் வாழ்ந்து மகிழ்ந்ததும் கிடையாது. இதனால் ஏழை
மக்களுக்கும் நல்லவர்களுக்கும் வாழ்வில் நல்ல நிலைமை வரும் அவர்களுக்கு
தீமை ஏற்படாது என்ற நல்ல நம்பிக்கையை எம்ஜிஆர் தனது படங்கள் வாயிலாகத்
தெரிவித்தார்.
எம்ஜிஆர் படத்தை பார்த்து திரும்பும் பெண்கள் தங்கள் பிள்ளைகளைப்
பார்த்து எம்ஜிஆரைப் போன்று நீ நல்லவனாக இருக்க வேண்டும் என்று சொல்லி
வளர்த்தார்கள். மற்றவர்கள் படத்துக்கு போய்விட்டு வரும் தாய்மார் இவரைப்
போல் நீ இரு என்று சொன்னால் அவரைப் போல நீ சிகரெட் குடி மது குடி
என்பதும் சேர்ந்து அதில் அர்த்தமாகிவிடும். எனவே தமிழின தாய்மார்கள்
தங்களுடைய பிள்ளைகள் எம்ஜிஆரை போல நல்லவனாக இருக்க வேண்டும் என்று
விரும்பியதால் எம்ஜிஆரையும் தன்னுடைய பிள்ளையாகவே கருதினர். இவ்வாறு
கருதியவர்கள் ஏழைகளும் ஏதிலிகளும் மட்டும் அல்லர். பிரப்ல குடும்பத்தை
சேர்ந்த பெண்களும் எம் ஜி ஆர் தன் மகனாகக் கருதினர். இவர்களைப் பற்றி
அடுத்த கட்டுரையில் காண்போம்.
கொடி காத்த குமரனின் துணைவியார் ராமாயி
அம்மா எம்.ஜி.ஆரைப்பற்றி கூறியது.
முனைவர் செ.இராஜேஸ்வரி
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்